• ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Reacties ·0 aandelen ·13K Views ·0 voorbeeld
  • ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்?

    அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

    ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது.
    எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு.

    இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார்.

    ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது.

    ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார்.

    AV KrishnaRao
    ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்? அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது. எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு. இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார். ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது. ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார். AV KrishnaRao
    0 Reacties ·0 aandelen ·11K Views ·0 voorbeeld
  • ஆர்வமானவர்கள் வீட்டில், அமைதியானவர்கள் பள்ளியில்:
    குழந்தைகளின் "இரட்டை இயல்புகளை" புரிந்துகொள்வது எப்படி?
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

    பெற்றோர்கள் பலர் சொல்வார்கள்,

    "என் குழந்தை வீட்டில் மிகவும் ஆர்வமாகவும், உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுபவனாகவும் இருக்கிறார்."

    ஆனால் பள்ளியில், அதே குழந்தை அமைதியாக, reserved ஆக, Quiet ஆக இருக்கும்.

    இதற்கு

    "குழந்தையிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது"
    என்று அர்த்தமில்லை.
    இதற்கு

    "குழந்தை வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறது"

    என்று தான் அர்த்தம்.

    "A child's behavior is a language, not a label. Listen to what their silence is also saying."

    பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த இரட்டை இயல்புகளை நன்றாக புரிந்துகொள்ள சில

    key points:

    1. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் (Adaptability):
    வீடு என்பது பாதுகாப்பான, பரிச்சயமான, சுதந்திரமான இடம்.
    பள்ளி என்பது விதிகள், கட்டமைப்பு, பலரின் கண்கள் உள்ள இடம்.
    சில குழந்தைகள் இயற்கையாகவே ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப தங்கள் நடத்தையை சரி செய்து கொள்கிறார்கள்.

    2. அமைதி என்பது புரிதலின் இன்மை அல்ல:
    Quiet ஆன குழந்தை கவனமாக கேட்கக்கூடும்.
    பாடத்தை புரிந்திருக்கலாம், ஆனால் சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.
    எல்லா கற்றலும் பேசி வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை.

    3. நம்பிக்கை (Confidence) வெவ்வேறு குழந்தைகளில் வெவ்வேறு வடிவத்தில் தெரியும்:
    சிலர் பேசி தங்கள் confidence-ஐ காட்டுவர்.
    சிலர் கவனித்தல், சிந்தித்தல், தங்கள் பணியை சிறப்பாக செய்தல் மூலம் காட்டுவர்.
    இரண்டும் சரியான வடிவங்கள்தான்.

    4. "வீட்டில் இருக்கும்போது போல இரு" என்று கட்டாயப்படுத்தாமல் இருங்கள்:
    "நீ வீட்டில் இப்படி இல்லையே!" போன்ற வார்த்தைகள் குழந்தையை குழப்பும்.
    ஒவ்வொரு குழந்தையின் உணர்ச்சி மற்றும் வளர்ச்சியின் வேகம் வேறு.
    பள்ளியில் confidence வர நேரம் பிடிக்கும்.

    5. வெளிப்பாட்டுக்கு முன் நம்பிக்கையை (Trust) கட்டியெழுப்புங்கள்:
    குழந்தைகளின் உணர்ச்சி பாதுகாப்பினை (Emotional Safety) உணரும்போது தான் அதிகம் பேசுவார்கள்.
    அழுத்தம் கொடுப்பதை விட மெதுவான ஊக்குவிப்பு நல்லது.
    Trust தான் வெளிப்பாட்டிற்கான சாவியை திறக்கும்.

    6. உடல் மொழி (Body Language) மற்றும் எழுத்து பணியை கவனியுங்கள்:
    சில குழந்தைகள் எழுதுதல், வரைதல் அல்லது செயல்கள் மூலம் தங்களின் கருத்தை சிறப்பாக தெரிவிப்பார்கள்.
    அவர்களின் பணி, கவனம், முயற்சியைக் கவனியுங்கள்.
    அவை அவர்களின் குரலை விட அதிகம் சொல்லும்.

    7. வாய்மொழி பதில்களுக்கு முன் தயாராகும் நேரம் (Preparation Time) கொடுங்கள்:
    சில குழந்தைகளுக்கு பேசுவதற்கு முன் சிந்திக்க நேரம் தேவை.
    முதலில் ஜோடிகளாக பகிர்ந்து கொள்ள அல்லது மனதளவில் பயிற்சி செய்ய அனுமதியுங்கள்.
    இது படிப்படியாக confidence-ஐ வளர்க்கும்.

    8. ஆர்வமான பங்கேற்பை மட்டும் போற்றாதீர்கள்; முயற்சியை போற்றுங்கள்:
    கேட்பது, முயற்சிப்பது, சிறிய அளவில் பேச முயல்வது போன்றவற்றை பாராட்டுங்கள்.
    வகுப்பில் மட்டும் உரக்க பேசுவோரை மட்டுமே பாராட்டாதீர்கள்.
    ஒவ்வொரு முயற்சியும் முக்கியம்.

    9. வீடு - பள்ளி இடையே திறந்த உறவை (Open Communication) பேணுங்கள்:
    பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் கவனிப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    குழந்தையின் இரு பக்கங்களையும் புரிந்துகொள்வது முழுமையான படத்தைத் தரும்.
    Teamwork தான் வளர்ச்சியை ஆதரிக்கும்.

    10. வளர்ச்சி வரும் என நம்புங்கள் (Trust The Growth):
    பல quietஆன குழந்தைகள் நேரம் கொடுத்தால் மலர்வார்கள்.
    உரத்த குரலில் அல்ல, ஆனால் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் (Clear & Confident) மாறுவார்கள்.
    வளர்ச்சி என்பது ஒரு process, race அல்ல.

    Final Thought:
    இரட்டை இயல்புகள் கொண்ட குழந்தைகள் என்பது குழப்பமடைந்த குழந்தைகள் அல்ல.
    அவர்கள் மாற்றத்திறனுள்ள குழந்தைகள் (Adaptable Children).

    நாம் அவர்களைப் புரிந்துகொண்டு, ஆதரித்து, நேரம் கொடுக்கும்போது, அவர்கள் தழைத்து வளர்வார்கள் (Thrive).

    #ParentingTips #ChildBehavior #TamilParenting #Education #ChildPsychology #அறிவுரை #குழந்தைவளர்ப்பு #பள்ளிச்சூழல்
    ஆர்வமானவர்கள் வீட்டில், அமைதியானவர்கள் பள்ளியில்: குழந்தைகளின் "இரட்டை இயல்புகளை" புரிந்துகொள்வது எப்படி? ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ பெற்றோர்கள் பலர் சொல்வார்கள், "என் குழந்தை வீட்டில் மிகவும் ஆர்வமாகவும், உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுபவனாகவும் இருக்கிறார்." ஆனால் பள்ளியில், அதே குழந்தை அமைதியாக, reserved ஆக, Quiet ஆக இருக்கும். இதற்கு "குழந்தையிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது" என்று அர்த்தமில்லை. இதற்கு "குழந்தை வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறது" என்று தான் அர்த்தம். "A child's behavior is a language, not a label. Listen to what their silence is also saying." பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த இரட்டை இயல்புகளை நன்றாக புரிந்துகொள்ள சில key points: 1. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் (Adaptability): வீடு என்பது பாதுகாப்பான, பரிச்சயமான, சுதந்திரமான இடம். பள்ளி என்பது விதிகள், கட்டமைப்பு, பலரின் கண்கள் உள்ள இடம். சில குழந்தைகள் இயற்கையாகவே ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப தங்கள் நடத்தையை சரி செய்து கொள்கிறார்கள். 2. அமைதி என்பது புரிதலின் இன்மை அல்ல: Quiet ஆன குழந்தை கவனமாக கேட்கக்கூடும். பாடத்தை புரிந்திருக்கலாம், ஆனால் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். எல்லா கற்றலும் பேசி வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை. 3. நம்பிக்கை (Confidence) வெவ்வேறு குழந்தைகளில் வெவ்வேறு வடிவத்தில் தெரியும்: சிலர் பேசி தங்கள் confidence-ஐ காட்டுவர். சிலர் கவனித்தல், சிந்தித்தல், தங்கள் பணியை சிறப்பாக செய்தல் மூலம் காட்டுவர். இரண்டும் சரியான வடிவங்கள்தான். 4. "வீட்டில் இருக்கும்போது போல இரு" என்று கட்டாயப்படுத்தாமல் இருங்கள்: "நீ வீட்டில் இப்படி இல்லையே!" போன்ற வார்த்தைகள் குழந்தையை குழப்பும். ஒவ்வொரு குழந்தையின் உணர்ச்சி மற்றும் வளர்ச்சியின் வேகம் வேறு. பள்ளியில் confidence வர நேரம் பிடிக்கும். 5. வெளிப்பாட்டுக்கு முன் நம்பிக்கையை (Trust) கட்டியெழுப்புங்கள்: குழந்தைகளின் உணர்ச்சி பாதுகாப்பினை (Emotional Safety) உணரும்போது தான் அதிகம் பேசுவார்கள். அழுத்தம் கொடுப்பதை விட மெதுவான ஊக்குவிப்பு நல்லது. Trust தான் வெளிப்பாட்டிற்கான சாவியை திறக்கும். 6. உடல் மொழி (Body Language) மற்றும் எழுத்து பணியை கவனியுங்கள்: சில குழந்தைகள் எழுதுதல், வரைதல் அல்லது செயல்கள் மூலம் தங்களின் கருத்தை சிறப்பாக தெரிவிப்பார்கள். அவர்களின் பணி, கவனம், முயற்சியைக் கவனியுங்கள். அவை அவர்களின் குரலை விட அதிகம் சொல்லும். 7. வாய்மொழி பதில்களுக்கு முன் தயாராகும் நேரம் (Preparation Time) கொடுங்கள்: சில குழந்தைகளுக்கு பேசுவதற்கு முன் சிந்திக்க நேரம் தேவை. முதலில் ஜோடிகளாக பகிர்ந்து கொள்ள அல்லது மனதளவில் பயிற்சி செய்ய அனுமதியுங்கள். இது படிப்படியாக confidence-ஐ வளர்க்கும். 8. ஆர்வமான பங்கேற்பை மட்டும் போற்றாதீர்கள்; முயற்சியை போற்றுங்கள்: கேட்பது, முயற்சிப்பது, சிறிய அளவில் பேச முயல்வது போன்றவற்றை பாராட்டுங்கள். வகுப்பில் மட்டும் உரக்க பேசுவோரை மட்டுமே பாராட்டாதீர்கள். ஒவ்வொரு முயற்சியும் முக்கியம். 9. வீடு - பள்ளி இடையே திறந்த உறவை (Open Communication) பேணுங்கள்: பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் கவனிப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் இரு பக்கங்களையும் புரிந்துகொள்வது முழுமையான படத்தைத் தரும். Teamwork தான் வளர்ச்சியை ஆதரிக்கும். 10. வளர்ச்சி வரும் என நம்புங்கள் (Trust The Growth): பல quietஆன குழந்தைகள் நேரம் கொடுத்தால் மலர்வார்கள். உரத்த குரலில் அல்ல, ஆனால் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் (Clear & Confident) மாறுவார்கள். வளர்ச்சி என்பது ஒரு process, race அல்ல. Final Thought: இரட்டை இயல்புகள் கொண்ட குழந்தைகள் என்பது குழப்பமடைந்த குழந்தைகள் அல்ல. அவர்கள் மாற்றத்திறனுள்ள குழந்தைகள் (Adaptable Children). நாம் அவர்களைப் புரிந்துகொண்டு, ஆதரித்து, நேரம் கொடுக்கும்போது, அவர்கள் தழைத்து வளர்வார்கள் (Thrive). #ParentingTips #ChildBehavior #TamilParenting #Education #ChildPsychology #அறிவுரை #குழந்தைவளர்ப்பு #பள்ளிச்சூழல்
    0 Reacties ·0 aandelen ·4K Views ·0 voorbeeld
  • ஆண்வர்க்கம் எவ்வளவு மோசமானது?
    மோசம்னா மோசம் அப்படி ஒரு மோசம்

    வருஷம் ரெண்டு செட் உள்ளாடைகளோடயே காலம் கழிக்கும் . ஜட்டி பனியனில் பாச்சா ,எலி பூனை போரளவுக்கு ஓட்டை இருந்தாலும் மாத்த நினைக்காது

    ஆனால் மனைவி குழந்தைகளுக்கு கணக்கு பாக்காது .வருஷம் ரெண்டு தடவை கட்டுற பட்டுசேலை பத்தாயிரத்துக்கு வாங்கி குடுக்கும்

    ஒரு நல்ல செருப்பு வாங்காது ஆனால் ஆறு மாசத்துக்கு மனைவி குழந்தைகள் கொலுசு மாத்தி கொடுக்கும்

    வாரம் மூணு நாளும் அஞ்சு நாளும் கூட வெளியே வேலை பார்த்துட்டு வார லீவுல கறிக்கஞ்சி சாப்பிட்டுட்டு தூங்கி திங்கள் கிழமை காலையிலே பிள்ளைகள்ட்ட கூட சொல்லிக்காம வேலைக்கு ஓடும் ஜென்மம்

    ரெண்டாயிரம் ,மூவாயிரத்துக்கு சின்ன குஞ்சுகளுக்கு டிரஸ் எடுத்துட்டு மூணு பேண்ட் 1000 ரூபாய்க்கும் ,150 ரூபாய் பனியன் மூணும் எடுத்து நிக்கும் .

    காலேஜ் போற பொண்ணுக்கு ஸ்கூட்டர் 1 லட்சம் ,பையனுக்கு 2 லட்சம் பைக் வாங்கி கொடுத்து பெட்ரோலுக்கும் கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு மாத பாஸ் வாங்குறதுக்கு கார்ப்பரேஷன் டிப்போல நிக்கும் .

    35 000 ரூபாய்க்கு பிள்ளைங்களுக்கும் ,சமையல் நிகழ்ச்சி பாக்க மனைவிக்கு 15 000 ரூபாய்க்கு போன் வாங்கி குடுத்துட்டு 1000 ஓவா பட்டன் செல் தேஞ்சு போனதை உத்து பாத்து நம்பர் அமுக்கும் .

    கடையிலே போயி கட்டிங் ஷேவிங் பண்ணினா மாசம் 400 ரூபாய் போகும்னு சின்ன கத்திரிக்கோலும் 35 ரூபாய் டையும் வாங்கி வீட்டிலே வச்சே டை அடிக்கும்.முன்னாடி பளிச்சுன்னும் பின்னாடி புளிச்சுன்னும் இருக்கும் .மீசையிலே அடிச்சு அனுமார் வாயாட்டம் இருக்கும் .

    நல்லவேளை மாஸ்க் காப்பாத்துது

    .6 ரூபாய் ப்ளேடை வச்சு தோல் பிஞ்சு போரளவுக்கு 10 தடவைக்கு வறட்டு வரட்டுன்னு ஷேவிங் பண்ணும் .

    அஞ்சு ரூபாய் டீக்கடையா தேடி பார்த்து டீ குடிக்கும் .ரெண்டு ரூபாய் சில்லரைக்கும் சண்டை போடும் .20 ரூபாய் சில்லறை எந்நேரமும் வச்சுருக்கும்

    இதெல்லாம் என்ன ஜென்மமோ ?இந்த ஆம்பளைங்களே சுத்த மோசம் .

    என்ன சொல்றிங்க ?

    ஆண்வர்க்கம் எவ்வளவு மோசமானது? மோசம்னா மோசம் அப்படி ஒரு மோசம் வருஷம் ரெண்டு செட் உள்ளாடைகளோடயே காலம் கழிக்கும் . ஜட்டி பனியனில் பாச்சா ,எலி பூனை போரளவுக்கு ஓட்டை இருந்தாலும் மாத்த நினைக்காது ஆனால் மனைவி குழந்தைகளுக்கு கணக்கு பாக்காது .வருஷம் ரெண்டு தடவை கட்டுற பட்டுசேலை பத்தாயிரத்துக்கு வாங்கி குடுக்கும் ஒரு நல்ல செருப்பு வாங்காது ஆனால் ஆறு மாசத்துக்கு மனைவி குழந்தைகள் கொலுசு மாத்தி கொடுக்கும் வாரம் மூணு நாளும் அஞ்சு நாளும் கூட வெளியே வேலை பார்த்துட்டு வார லீவுல கறிக்கஞ்சி சாப்பிட்டுட்டு தூங்கி திங்கள் கிழமை காலையிலே பிள்ளைகள்ட்ட கூட சொல்லிக்காம வேலைக்கு ஓடும் ஜென்மம் ரெண்டாயிரம் ,மூவாயிரத்துக்கு சின்ன குஞ்சுகளுக்கு டிரஸ் எடுத்துட்டு மூணு பேண்ட் 1000 ரூபாய்க்கும் ,150 ரூபாய் பனியன் மூணும் எடுத்து நிக்கும் . காலேஜ் போற பொண்ணுக்கு ஸ்கூட்டர் 1 லட்சம் ,பையனுக்கு 2 லட்சம் பைக் வாங்கி கொடுத்து பெட்ரோலுக்கும் கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு மாத பாஸ் வாங்குறதுக்கு கார்ப்பரேஷன் டிப்போல நிக்கும் . 35 000 ரூபாய்க்கு பிள்ளைங்களுக்கும் ,சமையல் நிகழ்ச்சி பாக்க மனைவிக்கு 15 000 ரூபாய்க்கு போன் வாங்கி குடுத்துட்டு 1000 ஓவா பட்டன் செல் தேஞ்சு போனதை உத்து பாத்து நம்பர் அமுக்கும் . கடையிலே போயி கட்டிங் ஷேவிங் பண்ணினா மாசம் 400 ரூபாய் போகும்னு சின்ன கத்திரிக்கோலும் 35 ரூபாய் டையும் வாங்கி வீட்டிலே வச்சே டை அடிக்கும்.முன்னாடி பளிச்சுன்னும் பின்னாடி புளிச்சுன்னும் இருக்கும் .மீசையிலே அடிச்சு அனுமார் வாயாட்டம் இருக்கும் . நல்லவேளை மாஸ்க் காப்பாத்துது .6 ரூபாய் ப்ளேடை வச்சு தோல் பிஞ்சு போரளவுக்கு 10 தடவைக்கு வறட்டு வரட்டுன்னு ஷேவிங் பண்ணும் . அஞ்சு ரூபாய் டீக்கடையா தேடி பார்த்து டீ குடிக்கும் .ரெண்டு ரூபாய் சில்லரைக்கும் சண்டை போடும் .20 ரூபாய் சில்லறை எந்நேரமும் வச்சுருக்கும் இதெல்லாம் என்ன ஜென்மமோ ?இந்த ஆம்பளைங்களே சுத்த மோசம் . என்ன சொல்றிங்க ?
    0 Reacties ·0 aandelen ·4K Views ·0 voorbeeld
  • அப்பா… ஏன் எப்போதும் பின்னால்?

    (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து)

    1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்…
    அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்…
    இருவரும் சமம்.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் எப்போதும் பின்னால்?

    2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்…
    அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்…
    இருவருமே சம உழைப்பு.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்தங்குகிறார்?

    3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்…
    அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்…
    அன்பு இருவரிடமும் சமம்.
    ஆனால் ஏன்
    தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது?

    4️⃣ போனில் பேசினால்
    முதலில் “அம்மா”…
    கஷ்டம் வந்தால்
    அழைக்கும் முதல் குரல் “அம்மா”…

    உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும்
    நீங்கள் நினைப்பது “அப்பா”…
    ஆனால் அவர் ஒருபோதும்
    உங்களை நினைக்கவில்லையா என்று
    வருத்தப்பட்டதே இல்லை.
    அப்படியிருக்க,
    தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்?

    5️⃣ அலமாரியில்
    அம்மாவின் கலர்புல் புடவைகள்…
    குழந்தைகளின் நிறைய உடைகள்…
    ஆனால்
    அப்பாவின் உடைகள் மிகக் குறைவு.

    அவர் தன் தேவையை
    ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்னால்?

    6️⃣ அம்மாவுக்கு
    நிறைய தங்க நகைகள்…
    அப்பாவுக்கு
    திருமணத்தில் போட்ட
    ஒரே ஒரு மோதிரம்.

    அம்மா குறைவைக் குறித்து
    சில நேரம் சொல்வார்…
    அப்பா?
    ஒருபோதும் இல்லை.

    7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக
    அப்பா
    தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்…
    ஆனால்
    அங்கீகாரம் என்ற இடத்தில்
    அவர் ஏன் எப்போதும்
    பின்தள்ளப்படுகிறார்?

    8️⃣ “இந்த மாதம்
    காலேஜ் கட்டணம்…”
    “பண்டிகைக்கு
    புது உடை வாங்கித் தருங்கள்…”

    அம்மா சொல்வார்…
    அப்பா கேட்பார்…
    ஆனால்
    அப்பா தன் உடையைப் பற்றி
    ஒருபோதும் யோசிப்பதில்லை.

    9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்…
    சில குழந்தைகள் சொல்வார்கள்:
    “அம்மா வீட்டு வேலைகளுக்கு
    இன்னும் பயன்படுவார்…”
    “அப்பா என்ன செய்ய முடியும்?”

    இந்த கேள்வி
    எத்தனை தந்தைகளின்
    மனதை உடைத்திருக்கும்…

    🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு.
    முதுகெலும்பு எங்கே இருக்கிறது?
    👉 நம் உடலின் பின்னால்.

    அதை நாம்
    தினமும் பார்க்க மாட்டோம்…
    ஆனால்
    அது இல்லையென்றால்
    நாம் நின்றுகூட இருக்க முடியாது.

    👉 ஒருவேளை…
    👉 இதனால்தான்
    👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ…



    அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️

    இன்று ஒருமுறை
    👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்…
    👉 பேசுங்கள்…
    👉 நன்றி சொல்லுங்கள்…

    அவர் கேட்க மாட்டார்.
    ஆனால்
    அவரின் கண்கள் பேசும்.
    அப்பா… ஏன் எப்போதும் பின்னால்? (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து) 1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்… அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்… இருவரும் சமம். அப்படியிருக்க, அப்பா ஏன் எப்போதும் பின்னால்? 2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்… அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்… இருவருமே சம உழைப்பு. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்தங்குகிறார்? 3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்… அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்… அன்பு இருவரிடமும் சமம். ஆனால் ஏன் தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது? 4️⃣ போனில் பேசினால் முதலில் “அம்மா”… கஷ்டம் வந்தால் அழைக்கும் முதல் குரல் “அம்மா”… உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் நீங்கள் நினைப்பது “அப்பா”… ஆனால் அவர் ஒருபோதும் உங்களை நினைக்கவில்லையா என்று வருத்தப்பட்டதே இல்லை. அப்படியிருக்க, தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்? 5️⃣ அலமாரியில் அம்மாவின் கலர்புல் புடவைகள்… குழந்தைகளின் நிறைய உடைகள்… ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு. அவர் தன் தேவையை ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்னால்? 6️⃣ அம்மாவுக்கு நிறைய தங்க நகைகள்… அப்பாவுக்கு திருமணத்தில் போட்ட ஒரே ஒரு மோதிரம். அம்மா குறைவைக் குறித்து சில நேரம் சொல்வார்… அப்பா? ஒருபோதும் இல்லை. 7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக அப்பா தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்… ஆனால் அங்கீகாரம் என்ற இடத்தில் அவர் ஏன் எப்போதும் பின்தள்ளப்படுகிறார்? 8️⃣ “இந்த மாதம் காலேஜ் கட்டணம்…” “பண்டிகைக்கு புது உடை வாங்கித் தருங்கள்…” அம்மா சொல்வார்… அப்பா கேட்பார்… ஆனால் அப்பா தன் உடையைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. 9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்… சில குழந்தைகள் சொல்வார்கள்: “அம்மா வீட்டு வேலைகளுக்கு இன்னும் பயன்படுவார்…” “அப்பா என்ன செய்ய முடியும்?” இந்த கேள்வி எத்தனை தந்தைகளின் மனதை உடைத்திருக்கும்… 🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு. முதுகெலும்பு எங்கே இருக்கிறது? 👉 நம் உடலின் பின்னால். அதை நாம் தினமும் பார்க்க மாட்டோம்… ஆனால் அது இல்லையென்றால் நாம் நின்றுகூட இருக்க முடியாது. 👉 ஒருவேளை… 👉 இதனால்தான் 👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ… ⸻ அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️ இன்று ஒருமுறை 👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்… 👉 பேசுங்கள்… 👉 நன்றி சொல்லுங்கள்… அவர் கேட்க மாட்டார். ஆனால் அவரின் கண்கள் பேசும்.
    0 Reacties ·0 aandelen ·3K Views ·0 voorbeeld
  • யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!..

    பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம

    தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு.

    தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது

    அன்றைய இளைஞர் கூட்டம்.

    ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது.

    இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு.

    லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர்.

    61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது.

    டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார்.

    கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!..

    கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார்.

    எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும்.

    சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம்.

    அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை.

    - இது ஒரு இணைய தள பதிவு!
    யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!.. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு. தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது அன்றைய இளைஞர் கூட்டம். ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது. இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு. லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர். 61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது. டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார். கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!.. கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார். எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும். சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம். அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை. - இது ஒரு இணைய தள பதிவு!
    0 Reacties ·0 aandelen ·3K Views ·0 voorbeeld
  • கழுகுக்கும் பருந்துக்கும் வித்தியாசம் என்ன? பட ஆதாரத்துடன் விளக்கம் தருக.

    கழுகு, பருந்து ஆகிய இரு பறவைகளுமே மிகப்பெரிய இரை தேடும் பறவைகள்.
    1.சிற்றினம்

    கழுகு

    கழுகில் 70 சிற்றினங்கள் உள்ளன.
    இதை தரை & கடல்வாழ் கழுகுகள் என இரு வகையாகப் பிரிக்கலாம்.
    ஆண் இனத்தை விட பெண் இனம் பெரியவை.
    பருந்து

    250 சிற்றினங்கள் உள்ளன.
    இதிலும் ஆண் இனத்தை விட பெண் இனமே பெரியது.
    2.நிறங்கள்

    கழுகு

    காப்பி, மஞ்சள், கருமை, சாம்பல் நிறங்களில் காணப்படும்.
    வழுக்கை தலையுள்ள கழுகுகளுக்கு தலை & வால் பகுதிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
    கால்கள் பொதுவாக லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
    பருந்து

    தலைப்பகுதி பெரும்பாலும் சாம்பல் நிறம் அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
    3.சிற்றினம்

    கழுகு

    4.6–6.7 கிலோ எடை
    நீளம் - 87–100 செ.மீ.
    பருந்து

    100 கிராம் முதல் 2 கிலோ எடை
    நீளம் - 45–65 செ.மீ.
    4.இறக்கை

    கழுகு

    200–220 செ.மீ.
    அதிகபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகம்
    பாயும் வேகம் - 320 கி.மீ /மணி.
    பருந்து

    150 செ.மீ.
    அதிகபட்ச வேகம் - 190 கி.மீ. / மணி
    பாயும் வேகம் - 240 கி.மீ. / மணி.
    5.கூடு

    கழுகு

    நீருக்கு அருகில் உள்ள உயரமான மரங்களில் பெரிய குச்சிகளைக் கொண்டு கூடு கட்டும்.
    கூடு 3மீ அகலமும் 4மீ உயரம் வரையும் இருக்கும்.
    பருந்து

    சதுப்பு நிலங்களின் தரைப்பகுதிகள், கிளைகளில் கூடுகட்டும்.
    6.வேட்டை

    கழுகு

    வலிமையானவற்றையே வேட்டையாடும்.
    பருந்து

    எலி, முயல் போன்ற புல்வெளி உயிரினங்களைப் பிடித்து உண்ணும்.
    7.தாக்கும் தன்மை

    கழுகு

    வானிலிருந்தே இரையைப் பார்த்து தரையிறங்காமலே வேட்டையாடும்.
    பருந்து

    குறிப்பிட்ட இடங்களில் இரையை திடீரென தாக்கிப் பிடித்து உண்ணும்.
    8.எல்லை

    கழுகு

    20–200 ச.கி.மீ. பரப்பளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
    பருந்து

    1–4 ச.கி.மீ. பரப்பளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
    9.உயிர் வாழும் காலம்

    கழுகு

    காட்டுக் கழுகு 32 வயது வரையும், தனிப்பட்ட முறையில் வளர்க்கப்படுவது 46 வயது வரையும் வாழும்.
    பருந்து

    பொதுவாக ஒரு சில 25 வயது வரையும், வளர்க்கப்படுவது 29 வயது வரையும் வாழும்.

    அருண்
    கழுகுக்கும் பருந்துக்கும் வித்தியாசம் என்ன? பட ஆதாரத்துடன் விளக்கம் தருக. கழுகு, பருந்து ஆகிய இரு பறவைகளுமே மிகப்பெரிய இரை தேடும் பறவைகள். 1.சிற்றினம் கழுகு கழுகில் 70 சிற்றினங்கள் உள்ளன. இதை தரை & கடல்வாழ் கழுகுகள் என இரு வகையாகப் பிரிக்கலாம். ஆண் இனத்தை விட பெண் இனம் பெரியவை. பருந்து 250 சிற்றினங்கள் உள்ளன. இதிலும் ஆண் இனத்தை விட பெண் இனமே பெரியது. 2.நிறங்கள் கழுகு காப்பி, மஞ்சள், கருமை, சாம்பல் நிறங்களில் காணப்படும். வழுக்கை தலையுள்ள கழுகுகளுக்கு தலை & வால் பகுதிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். கால்கள் பொதுவாக லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். பருந்து தலைப்பகுதி பெரும்பாலும் சாம்பல் நிறம் அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். 3.சிற்றினம் கழுகு 4.6–6.7 கிலோ எடை நீளம் - 87–100 செ.மீ. பருந்து 100 கிராம் முதல் 2 கிலோ எடை நீளம் - 45–65 செ.மீ. 4.இறக்கை கழுகு 200–220 செ.மீ. அதிகபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகம் பாயும் வேகம் - 320 கி.மீ /மணி. பருந்து 150 செ.மீ. அதிகபட்ச வேகம் - 190 கி.மீ. / மணி பாயும் வேகம் - 240 கி.மீ. / மணி. 5.கூடு கழுகு நீருக்கு அருகில் உள்ள உயரமான மரங்களில் பெரிய குச்சிகளைக் கொண்டு கூடு கட்டும். கூடு 3மீ அகலமும் 4மீ உயரம் வரையும் இருக்கும். பருந்து சதுப்பு நிலங்களின் தரைப்பகுதிகள், கிளைகளில் கூடுகட்டும். 6.வேட்டை கழுகு வலிமையானவற்றையே வேட்டையாடும். பருந்து எலி, முயல் போன்ற புல்வெளி உயிரினங்களைப் பிடித்து உண்ணும். 7.தாக்கும் தன்மை கழுகு வானிலிருந்தே இரையைப் பார்த்து தரையிறங்காமலே வேட்டையாடும். பருந்து குறிப்பிட்ட இடங்களில் இரையை திடீரென தாக்கிப் பிடித்து உண்ணும். 8.எல்லை கழுகு 20–200 ச.கி.மீ. பரப்பளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். பருந்து 1–4 ச.கி.மீ. பரப்பளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 9.உயிர் வாழும் காலம் கழுகு காட்டுக் கழுகு 32 வயது வரையும், தனிப்பட்ட முறையில் வளர்க்கப்படுவது 46 வயது வரையும் வாழும். பருந்து பொதுவாக ஒரு சில 25 வயது வரையும், வளர்க்கப்படுவது 29 வயது வரையும் வாழும். அருண்
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • #வீட்டை_விட்டு_ஓடிப்_போய் #திருமணம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்..

    அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் வேண்டாம் எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்.. என் கூட பிறந்தது இரண்டு அக்கா தங்கச்சி நான் ஒருவன் மட்டுமே நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்திருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் என் ஊரைச் சேர்ந்த ஒரு நர்சிங் படிக்கும் மாணவியுடன் காதல் வந்து.. நான் படித்து முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தேன் மாதம் 15 ஆயிரம் சம்பளம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு ரூம் எடுத்திருந்தோம் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அதுபோக சாப்பாட்டு செலவுக்கு.

    நான் வேலை செய்யும் கம்பெனி நல்ல ஓவர் டைம் கிடைக்கும் ஆனால் நான் ஓவர் டைம் செய்ய மாட்டேன். நான் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவேன். காரணம் என் காதலியிடம் பேச வேண்டும் என்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பேன்...

    இரண்டு மாதம் வேலை செய்வேன். 10 நாள் லீவு எடுத்து வந்து என் காதலியே அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி பார்க் பீஜ் என்று பல இடங்களில் சுற்றுவோம்.. ஹோட்டல் சாப்பிடவும்.
    காதலிக்கு தேவையான துணிமணிகளை வாங்கி கொடுப்பேன் பிறந்தநாள் கிப்ட் வாங்கி கொடுப்பேன் அவளுக்காகவே நான் வேலை செய்தேன்... என் குடும்பத்துக்கும் என் அக்கா பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய மாட்டேன்... என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் என் காதலி மட்டும்தான்..

    இருவீட்டுஎதிர்ப்பையும் மீறி நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் அவள் சம்மதத்துடன்.

    திருமணம் செய்த கையோடு அவளை நான் சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டேன் நான் 15000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் தனியாக ரூம் எடுக்க வேண்டுமென்றால் 7500 வாடகை கொடுக்க வேண்டும்... அதுபோக சாப்பாடு செலவு இருக்கிறது. நான் வாங்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பத்தாமல் ஓவர் டைம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் நான் ஆளாகி உள்ளேன்..

    காதலிக்கும் போது அஞ்சு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விடுவேன் இப்போது ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறேன் என் மனைவி என்னிடம் சண்டை போடுகிறாள்..
    நீ சரியாக என்னிடம் பாசங்க காட்ட மாட்டேங்கிறாய், அன்பாய் இருக்க மாட்டாக லேட்டா வீட்டுக்கு வருகிறாய்.

    நம் இருவரும் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தோம் அப்படி இருக்க வேண்டும்.

    என்னை பீஜ்க்கு கூட்டிட்டு போ பார்க்குகு கூப்பிட்டு போ சினிமா பார்க்க கூப்பிட்டு போ வெளியே சுத்த வேண்டும் என்று சொல்கிறாள். நான் வாங்கும் 15 ஆயிரம் சம்பளத்தில் நான் என்ன செய்வது?

    காதலிக்கும் போது மாசம் ஆயிரம் ரூபாய் தான் ரூம் வாடகை 14,000 மிச்சம் இருக்கும் சாப்பாடு செலவு வேற இப்போது ஓவர் டைம் பார்க்கிறேன் ஆனால் கையில் காசு மிச்சமும் இல்லை.. ஆனால் இவள் ஊர் சுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் இப்போது மாசமா வேற இருக்கிறாள் .

    எங்க அம்மா அப்பாவிடம் பேசி உன்னை எங்க வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொன்னால் இல்லை நான் உன் கூட தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள்.😭😭
    எனக்கு #செத்து கூட போயிடலாமா என்று தோன்றுகிறது.அண்ணா.

    ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்பு எந்த பொறுப்பும் கிடையாது ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு எல்லா பொறுப்பும் வந்து விடுகிறது தன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா நான் என்ன செய்வது...???
    #வீட்டை_விட்டு_ஓடிப்_போய் #திருமணம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.. அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் வேண்டாம் எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்.. என் கூட பிறந்தது இரண்டு அக்கா தங்கச்சி நான் ஒருவன் மட்டுமே நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்திருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் என் ஊரைச் சேர்ந்த ஒரு நர்சிங் படிக்கும் மாணவியுடன் காதல் வந்து.. நான் படித்து முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தேன் மாதம் 15 ஆயிரம் சம்பளம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு ரூம் எடுத்திருந்தோம் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அதுபோக சாப்பாட்டு செலவுக்கு. நான் வேலை செய்யும் கம்பெனி நல்ல ஓவர் டைம் கிடைக்கும் ஆனால் நான் ஓவர் டைம் செய்ய மாட்டேன். நான் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவேன். காரணம் என் காதலியிடம் பேச வேண்டும் என்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பேன்... இரண்டு மாதம் வேலை செய்வேன். 10 நாள் லீவு எடுத்து வந்து என் காதலியே அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி பார்க் பீஜ் என்று பல இடங்களில் சுற்றுவோம்.. ஹோட்டல் சாப்பிடவும். காதலிக்கு தேவையான துணிமணிகளை வாங்கி கொடுப்பேன் பிறந்தநாள் கிப்ட் வாங்கி கொடுப்பேன் அவளுக்காகவே நான் வேலை செய்தேன்... என் குடும்பத்துக்கும் என் அக்கா பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய மாட்டேன்... என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் என் காதலி மட்டும்தான்.. இருவீட்டுஎதிர்ப்பையும் மீறி நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் அவள் சம்மதத்துடன். திருமணம் செய்த கையோடு அவளை நான் சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டேன் நான் 15000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் தனியாக ரூம் எடுக்க வேண்டுமென்றால் 7500 வாடகை கொடுக்க வேண்டும்... அதுபோக சாப்பாடு செலவு இருக்கிறது. நான் வாங்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பத்தாமல் ஓவர் டைம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் நான் ஆளாகி உள்ளேன்.. காதலிக்கும் போது அஞ்சு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விடுவேன் இப்போது ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறேன் என் மனைவி என்னிடம் சண்டை போடுகிறாள்.. நீ சரியாக என்னிடம் பாசங்க காட்ட மாட்டேங்கிறாய், அன்பாய் இருக்க மாட்டாக லேட்டா வீட்டுக்கு வருகிறாய். நம் இருவரும் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தோம் அப்படி இருக்க வேண்டும். என்னை பீஜ்க்கு கூட்டிட்டு போ பார்க்குகு கூப்பிட்டு போ சினிமா பார்க்க கூப்பிட்டு போ வெளியே சுத்த வேண்டும் என்று சொல்கிறாள். நான் வாங்கும் 15 ஆயிரம் சம்பளத்தில் நான் என்ன செய்வது? காதலிக்கும் போது மாசம் ஆயிரம் ரூபாய் தான் ரூம் வாடகை 14,000 மிச்சம் இருக்கும் சாப்பாடு செலவு வேற இப்போது ஓவர் டைம் பார்க்கிறேன் ஆனால் கையில் காசு மிச்சமும் இல்லை.. ஆனால் இவள் ஊர் சுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் இப்போது மாசமா வேற இருக்கிறாள் . எங்க அம்மா அப்பாவிடம் பேசி உன்னை எங்க வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொன்னால் இல்லை நான் உன் கூட தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள்.😭😭 எனக்கு #செத்து கூட போயிடலாமா என்று தோன்றுகிறது.அண்ணா. ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்பு எந்த பொறுப்பும் கிடையாது ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு எல்லா பொறுப்பும் வந்து விடுகிறது தன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா நான் என்ன செய்வது...???
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • “இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்.
    ‘அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?’ என்று கேட்டபோது,
    ‘அப்பாவுடன்’ என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.”

    ராஜஸ்தானின் பலோதி என்ற சிறிய நகரம். அங்கே அனாமிகா பிஷ்னோய் என்ற பெயரை அறியாதவர்கள் மிகக் குறைவு. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள், லைக்குகள், கருத்துகள்… அதுதான் அனாமிகாவின் உலகம். ஆனால் திரையின் அந்தச் சிரிப்புக்குப் பின்னால், யாரும் காணாத கண்ணீரும் பயமும் நிறைந்த ஒரு கதை மறைந்திருந்தது.

    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அனாமிகாவும் மகிராமும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு ஐந்து வயது. காலம் மாறியதை உணராமல் பழைய சிந்தனைகளில் வாழ்ந்த மகிராமுக்கு, அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. அவள் ரீல்ஸ் செய்வதும், வீடியோக்கள் பதிவிடுவதும், அதற்கு கிடைக்கும் ரீச்சும் அவனை கலக்கமடையச் செய்தது.

    இதனால் அந்த வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. “இதை நிறுத்த வேண்டும்” என்று அவன் கட்டளையிட்டான். ஆனால் அனாமிகாவுக்கு அது தனது சுதந்திரத்தின் கேள்வி. ஒருநாள் கோபத்தில் மகிராம் அவளின் கைப்பேசியை எறிந்து உடைத்தான். ஆனால் தோல்வியை ஏற்க அனாமிகா தயாராக இல்லை. தோழியின் உதவியுடன் புதிய கைப்பேசி வாங்கி, தனது கனவுகளுடன் அவள் முன்னேறினாள்.

    பிரச்சினைகள் எல்லை மீறியபோது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிரிந்தனர். அனாமிகா குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள். அவள் சொந்தமாக ஒரு துணிக்கடை தொடங்கி, அதோடு அழகு சாதனப் பொருட்களையும் விற்றாள். அவள் பொருளாதாரமாக முன்னேறி, புகழ் பெற்றாள். அனாமிகாவின் இந்த வளர்ச்சி மகிராமுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் விவாகரத்து நோட்டீஸ் வந்ததும், அவனுக்குள் இருந்த பகை தீவிரமடைந்தது.

    அப்படியே அந்த நாள் வந்தது. 2024 பிப்ரவரி 24.

    மகிராம் முன்பே எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை ஏற்பாடு செய்தான். அந்த நாள் காலை குழந்தைகளைப் பார்க்க வந்தான். குழந்தைகளிடம் எந்த கோபமும் இல்லாதது போலவே நடந்துகொண்டான். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்.
    “அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?” என்று கேட்டபோது,
    “அப்பாவுடன்” என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.
    அன்புடன் முத்தமிட்டு, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டான்.

    அங்கிருந்து நேராக அவன் குறிவைத்தது அனாமிகாவின் கடைதான். நேரம் மதியத்துக்கு அருகில். கடையில் கூட்டம் குறைந்த நேரத்தை பார்த்து உள்ளே நுழைந்தான். கவுன்டரிலுள்ள நாற்காலியில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனாமிகா.

    ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று, அனாமிகாவை நோக்கி சுட்டான். மிக அருகிலிருந்து, நேருக்கு நேர் சுடப்பட்டதில், நாற்காலியில் உட்கார்ந்தபடியே அனாமிகா உயிரிழந்தாள். இன்ஸ்டாகிராமில் லட்சங்களை சிரிக்க வைத்த அந்த முகம், ரத்தத்தில் நனைந்தது.

    வெடிச்சத்தம் கேட்டு மக்கள் ஓடிவரும் நேரத்தில், மகிராம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த கொடூரச் செயல், நாட்டையே உலுக்கியது. இறுதியில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மகிராம் கைது செய்யப்பட்டான்.

    ஆனால் மீதமிருந்தது இரண்டு கேள்விகள்தான். மகிராமை பயந்து, அனாமிகாவின் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க தயங்கினர். தந்தை சிறையில், தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.
    ஒரு ரீலில் தொடங்கி, துப்பாக்கிக் குழலில் முடிந்த ஒரு தாம்பத்தியத்தின் சோகமான நினைவாக, அந்தக் குழந்தைகள் மட்டுமே எஞ்சினர்.

    Vijith Kumar
    “இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். ‘அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?’ என்று கேட்டபோது, ‘அப்பாவுடன்’ என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.” ராஜஸ்தானின் பலோதி என்ற சிறிய நகரம். அங்கே அனாமிகா பிஷ்னோய் என்ற பெயரை அறியாதவர்கள் மிகக் குறைவு. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள், லைக்குகள், கருத்துகள்… அதுதான் அனாமிகாவின் உலகம். ஆனால் திரையின் அந்தச் சிரிப்புக்குப் பின்னால், யாரும் காணாத கண்ணீரும் பயமும் நிறைந்த ஒரு கதை மறைந்திருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அனாமிகாவும் மகிராமும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு ஐந்து வயது. காலம் மாறியதை உணராமல் பழைய சிந்தனைகளில் வாழ்ந்த மகிராமுக்கு, அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. அவள் ரீல்ஸ் செய்வதும், வீடியோக்கள் பதிவிடுவதும், அதற்கு கிடைக்கும் ரீச்சும் அவனை கலக்கமடையச் செய்தது. இதனால் அந்த வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. “இதை நிறுத்த வேண்டும்” என்று அவன் கட்டளையிட்டான். ஆனால் அனாமிகாவுக்கு அது தனது சுதந்திரத்தின் கேள்வி. ஒருநாள் கோபத்தில் மகிராம் அவளின் கைப்பேசியை எறிந்து உடைத்தான். ஆனால் தோல்வியை ஏற்க அனாமிகா தயாராக இல்லை. தோழியின் உதவியுடன் புதிய கைப்பேசி வாங்கி, தனது கனவுகளுடன் அவள் முன்னேறினாள். பிரச்சினைகள் எல்லை மீறியபோது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிரிந்தனர். அனாமிகா குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள். அவள் சொந்தமாக ஒரு துணிக்கடை தொடங்கி, அதோடு அழகு சாதனப் பொருட்களையும் விற்றாள். அவள் பொருளாதாரமாக முன்னேறி, புகழ் பெற்றாள். அனாமிகாவின் இந்த வளர்ச்சி மகிராமுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் விவாகரத்து நோட்டீஸ் வந்ததும், அவனுக்குள் இருந்த பகை தீவிரமடைந்தது. அப்படியே அந்த நாள் வந்தது. 2024 பிப்ரவரி 24. மகிராம் முன்பே எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை ஏற்பாடு செய்தான். அந்த நாள் காலை குழந்தைகளைப் பார்க்க வந்தான். குழந்தைகளிடம் எந்த கோபமும் இல்லாதது போலவே நடந்துகொண்டான். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். “அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?” என்று கேட்டபோது, “அப்பாவுடன்” என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள். அன்புடன் முத்தமிட்டு, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டான். அங்கிருந்து நேராக அவன் குறிவைத்தது அனாமிகாவின் கடைதான். நேரம் மதியத்துக்கு அருகில். கடையில் கூட்டம் குறைந்த நேரத்தை பார்த்து உள்ளே நுழைந்தான். கவுன்டரிலுள்ள நாற்காலியில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனாமிகா. ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று, அனாமிகாவை நோக்கி சுட்டான். மிக அருகிலிருந்து, நேருக்கு நேர் சுடப்பட்டதில், நாற்காலியில் உட்கார்ந்தபடியே அனாமிகா உயிரிழந்தாள். இன்ஸ்டாகிராமில் லட்சங்களை சிரிக்க வைத்த அந்த முகம், ரத்தத்தில் நனைந்தது. வெடிச்சத்தம் கேட்டு மக்கள் ஓடிவரும் நேரத்தில், மகிராம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த கொடூரச் செயல், நாட்டையே உலுக்கியது. இறுதியில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மகிராம் கைது செய்யப்பட்டான். ஆனால் மீதமிருந்தது இரண்டு கேள்விகள்தான். மகிராமை பயந்து, அனாமிகாவின் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க தயங்கினர். தந்தை சிறையில், தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர். ஒரு ரீலில் தொடங்கி, துப்பாக்கிக் குழலில் முடிந்த ஒரு தாம்பத்தியத்தின் சோகமான நினைவாக, அந்தக் குழந்தைகள் மட்டுமே எஞ்சினர். Vijith Kumar
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • ஆப்கானிஸ்தானின் பாக்திகா மாகாணத்தில் உள்ள ஒரு தொலைதூரப் பகுதியில் — வறுமை, நிச்சயமின்மை, பாதுகாப்பின்மை ஆகியவை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் இடத்தில் — ஒரு தந்தையின் அமைதியான தினசரி வாழ்க்கை இன்று பெரும் தியாகத்திற்கும் நம்பிக்கைக்கும் ஒரு சின்னமாக மாறியுள்ளது.

    மியா கான் ஒரு செல்வந்தர் அல்ல. அவருக்கு வாசிக்கவும் எழுதவும் தெரியாது. சொந்த நிலமில்லை, அதிகாரமில்லை, நாளை குறித்து எந்த உறுதியும் இல்லை. இருப்பினும், ஒரு நாளையும் தவற விடாமல், சிதைந்தும் தூசியும் நிறைந்த பாதைகளில் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார் — தனது மகள்கள் பாதுகாப்பாக பள்ளியை அடைய வேண்டும் என்பதற்காக.

    அந்தப் பயணம் எளிதானது அல்ல. பாதைகள் மோசமானவை, காலநிலை கடுமையானது, எரிபொருள் செலவு எப்போதும் ஒரு சவாலாகவே இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு காலையும் மியா விரைவாக புறப்படுகிறார். தனது மகள்களை அவர் “ஸ்வீடிஷ் கமிட்டி ஃபார் ஆப்கானிஸ்தான்” அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிக்கே அழைத்துச் செல்கிறார் — அந்தப் பகுதியில் இன்னும் பெண் குழந்தைகள் கல்வி பெறக்கூடிய அபூர்வமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பள்ளி அது.

    மகள்களை பள்ளியில் இறக்கிவிட்ட பின்பு மியா செய்வதுதான், அவரது அர்ப்பணிப்பின் ஆழத்தை உண்மையாக வெளிப்படுத்துகிறது.

    அவர் வீட்டிற்குத் திரும்புவதில்லை.

    அதற்கு பதிலாக, கடும் வெயிலோ கடும் குளிரோ எதுவாக இருந்தாலும், சுமார் நான்கு மணி நேரம் பள்ளி வாயிலுக்கு வெளியே தரையில் அமர்ந்து காத்திருப்பார் — அவர்கள் படிப்பை முடிக்கும் வரை. அதன் பிறகு, ஒவ்வொரு அடியிலும் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.

    மியாவுக்கு இது ஒரு துன்பம் அல்ல.
    இது ஒரு வாக்குறுதி.

    தான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் தனது மகள்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற வாக்குறுதி.
    தான் எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும், தனது பிள்ளைகள் வாசிக்கவும் எழுதவும் வேண்டும் என்ற உறுதி.
    பயம் அல்லது வறுமை அல்ல — கல்வியே அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்ற நம்பிக்கை.

    பெண் குழந்தைகளின் கல்வி உரிமை இன்னும் நிச்சயமற்றதாக இருக்கும் ஒரு நாட்டில், மியா கானின் தினசரி தியாகம் ஒரு அமைதியான தைரியச் செயலாக உயர்ந்து நிற்கிறது. அதிகாரமோ பதவியோ முறையான கல்வியோ இல்லாவிட்டாலும், அவரிடம் அதைவிட வலிமையான ஒன்று உள்ளது — தனது மகள்களின் கல்வி உரிமையில் உறுதியான நம்பிக்கை.

    உண்மையான வீரர்கள் என்றால் எப்போதும் மேடைகளில் நிற்பவர்கள் அல்லது படைகளை வழிநடத்துபவர்கள் மட்டுமல்ல என்பதை மியாவின் கதை நமக்கு நினைவூட்டுகிறது. சில நேரங்களில், அவர்கள் ஒரு பள்ளி வாயிலுக்கு வெளியே அமைதியாக அமர்ந்து காத்திருப்பவர்களாக இருப்பார்கள் — கனவுகளை பாதுகாத்து, ஒருபோதும் கைவிட மறுப்பவர்கள்.

    ஏனெனில், கல்வியில் நம்பிக்கை கொண்ட ஒரு பெற்றோருக்கு, பயணிக்கப்படும் ஒவ்வொரு கிலோமீட்டரும் அர்த்தமுள்ளதும் மதிப்புமிக்கதுமாகும்.

    நண்பன்
    ஆப்கானிஸ்தானின் பாக்திகா மாகாணத்தில் உள்ள ஒரு தொலைதூரப் பகுதியில் — வறுமை, நிச்சயமின்மை, பாதுகாப்பின்மை ஆகியவை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் இடத்தில் — ஒரு தந்தையின் அமைதியான தினசரி வாழ்க்கை இன்று பெரும் தியாகத்திற்கும் நம்பிக்கைக்கும் ஒரு சின்னமாக மாறியுள்ளது. மியா கான் ஒரு செல்வந்தர் அல்ல. அவருக்கு வாசிக்கவும் எழுதவும் தெரியாது. சொந்த நிலமில்லை, அதிகாரமில்லை, நாளை குறித்து எந்த உறுதியும் இல்லை. இருப்பினும், ஒரு நாளையும் தவற விடாமல், சிதைந்தும் தூசியும் நிறைந்த பாதைகளில் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார் — தனது மகள்கள் பாதுகாப்பாக பள்ளியை அடைய வேண்டும் என்பதற்காக. அந்தப் பயணம் எளிதானது அல்ல. பாதைகள் மோசமானவை, காலநிலை கடுமையானது, எரிபொருள் செலவு எப்போதும் ஒரு சவாலாகவே இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு காலையும் மியா விரைவாக புறப்படுகிறார். தனது மகள்களை அவர் “ஸ்வீடிஷ் கமிட்டி ஃபார் ஆப்கானிஸ்தான்” அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிக்கே அழைத்துச் செல்கிறார் — அந்தப் பகுதியில் இன்னும் பெண் குழந்தைகள் கல்வி பெறக்கூடிய அபூர்வமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பள்ளி அது. மகள்களை பள்ளியில் இறக்கிவிட்ட பின்பு மியா செய்வதுதான், அவரது அர்ப்பணிப்பின் ஆழத்தை உண்மையாக வெளிப்படுத்துகிறது. அவர் வீட்டிற்குத் திரும்புவதில்லை. அதற்கு பதிலாக, கடும் வெயிலோ கடும் குளிரோ எதுவாக இருந்தாலும், சுமார் நான்கு மணி நேரம் பள்ளி வாயிலுக்கு வெளியே தரையில் அமர்ந்து காத்திருப்பார் — அவர்கள் படிப்பை முடிக்கும் வரை. அதன் பிறகு, ஒவ்வொரு அடியிலும் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். மியாவுக்கு இது ஒரு துன்பம் அல்ல. இது ஒரு வாக்குறுதி. தான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் தனது மகள்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற வாக்குறுதி. தான் எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும், தனது பிள்ளைகள் வாசிக்கவும் எழுதவும் வேண்டும் என்ற உறுதி. பயம் அல்லது வறுமை அல்ல — கல்வியே அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்ற நம்பிக்கை. பெண் குழந்தைகளின் கல்வி உரிமை இன்னும் நிச்சயமற்றதாக இருக்கும் ஒரு நாட்டில், மியா கானின் தினசரி தியாகம் ஒரு அமைதியான தைரியச் செயலாக உயர்ந்து நிற்கிறது. அதிகாரமோ பதவியோ முறையான கல்வியோ இல்லாவிட்டாலும், அவரிடம் அதைவிட வலிமையான ஒன்று உள்ளது — தனது மகள்களின் கல்வி உரிமையில் உறுதியான நம்பிக்கை. உண்மையான வீரர்கள் என்றால் எப்போதும் மேடைகளில் நிற்பவர்கள் அல்லது படைகளை வழிநடத்துபவர்கள் மட்டுமல்ல என்பதை மியாவின் கதை நமக்கு நினைவூட்டுகிறது. சில நேரங்களில், அவர்கள் ஒரு பள்ளி வாயிலுக்கு வெளியே அமைதியாக அமர்ந்து காத்திருப்பவர்களாக இருப்பார்கள் — கனவுகளை பாதுகாத்து, ஒருபோதும் கைவிட மறுப்பவர்கள். ஏனெனில், கல்வியில் நம்பிக்கை கொண்ட ஒரு பெற்றோருக்கு, பயணிக்கப்படும் ஒவ்வொரு கிலோமீட்டரும் அர்த்தமுள்ளதும் மதிப்புமிக்கதுமாகும். நண்பன்
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • தன்னைச்சுடும் – ஒரு சிறுகதை

    ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

    அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .

    வாரம் ஒரு முறை முருங்கைக்காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் சுமந்து வெகுதூரம் நடந்து சென்றே... ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!

    முருங்கைக்காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!

    கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!

    இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!

    பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!

    கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!

    காரணம் கந்தசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

    ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

    சிறிது நேரத்தில்....

    பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ
    மட்டுமே இருந்தது !!

    அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!

    இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!

    அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!

    நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!

    நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!

    ‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...

    அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .

    வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!

    ‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .

    அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...

    ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

    ‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .

    மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....

    தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!

    இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

    அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!

    இது தான் உலகநியதி !!

    நாம் எதைத் தருகிறோமோ

    அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....

    நல்லதை தந்தால் நல்லது வரும்,...

    தீமையை தந்தால் தீமை வரும் !!

    வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,

    ஆனா....

    நிச்சயம் வரும் !!

    ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!

    மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
    தன்னைச்சுடும் – ஒரு சிறுகதை ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது . வாரம் ஒரு முறை முருங்கைக்காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் சுமந்து வெகுதூரம் நடந்து சென்றே... ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !! முருங்கைக்காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !! கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !! பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !! கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !! காரணம் கந்தசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்.... சிறிது நேரத்தில்.... பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது !! அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !! இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !! அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !! நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !! ‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ... அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது . வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !! ‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி . அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க... ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன். ‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, . மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது..... தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !! இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்... அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !! இது தான் உலகநியதி !! நாம் எதைத் தருகிறோமோ அதுதான் நமக்குத் திரும்ப வரும் .... நல்லதை தந்தால் நல்லது வரும்,... தீமையை தந்தால் தீமை வரும் !! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் , ஆனா.... நிச்சயம் வரும் !! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !! மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • ஒரு காய்கறிகடை லட்சுமி அம்மாள் காய்கறி வாங்க வந்திருக்கிறாள்.

    கத்தரிக்காய் என்ன விலையப்பா?

    நீங்களாமா மகாலட்சுமியாட்டம் வந்திருக்கீங்க!
    காலங்காத்தால எடுத்துக்கங்க அம்மா!

    விலை என்ன சொல்லு!

    விலையென்னம்மா பொல்லாத விலை. நீங்கதான் அம்மா காலையிலேயே முதல் போணி பண்றீங்க.
    உங்க ராசியான கையால் எடுத்துக்கோங்க!

    இருபது ரூபாயை கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்தோடு வீடு திரும்புகிறார்.

    அடுத்து ஒரு விளையாட்டு மைதானம்! ரமேஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
    அவன் பௌலிங் செய்கிறான்.
    பந்தை நன்கு தேய்த்து வீசப் போகும்போது தான் கவனித்தான். மைதானத்திற்குள் ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்த மூன்று பெண்கள் நுழைகிறார்கள்.
    இந்த இளம் பெண்கள் அங்கு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை கவனமாக பார்த்தபடி வந்தார்கள்.

    பிடித்தது சனி அங்கே பேட் செய்து கொண்டிருந்தவனுக்கு!
    ரமேஷ் முன்பைவிட வேகமாக ஓடி வந்து பந்தை எறிந்தான்.
    அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது மட்டை பிடித்தவன் கிளீன் போல்ட்டானான்.

    அந்தப் பெண்கள் கொஞ்சம் சும்மா இருக்கக் கூடாதா?
    கையைத் தட்டி ரமேஷின் பந்துவீச்சை பாராட்டினார்கள்.

    அடுத்து ஆட வந்தவனுக்கு தன்னை நோக்கி ரமேஷ் எப்படி பந்து வீசினான் என்றே தெரியாது.
    ஸ்டம்ப் உடைந்து நொறுங்கியது.

    அடுத்து ஒரு வீட்டு வேலை செய்யும் சரசுவிடம் வீட்டுக்கார அம்மாள் மரகதம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

    ஏமா சரசு!
    நீ கழுவின பாத்திரமா இது!
    ஆச்சரியமா இருக்கு!

    ஏம்மா! என்ன விஷயம்?

    இல்லை நீ கழுவின பாத்திரம்னா அப்படியே கண்ண மூடிக்கிட்டு பாலை காய்ச்சலாமே ஆனா இது உள்ள பாரு எப்படி இருக்கு!

    அதை கொண்டாங்க இப்படி! அதைத்தான் சொல்றது இந்த சரசு வேலை செய்றப்போ யாரும் தொந்தரவு பண்ணாதீங்கனு!

    வாங்கிச் சென்று மீண்டும் அதை துலக்கி பள பளவென்று கொண்டு வருகிறாள்.

    இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒற்றுமையை கவனித்திருக்கலாம். பிரச்சனை அதிகம் இன்றி மனமுவந்து சுறுசுறுப்பாக வேலை நடந்ததை பார்த்தோம்.

    உங்கள் கை ராசியான கை!

    நீங்கள் லட்சுமிகரம்!

    ஆகா நீ எப்படி பந்து வீசுகிறாய்.
    நாங்கள் ரசிக்கிறோம் என கைதட்டல் சொல்லாமல் சொல்லிய வார்த்தை.

    நம்ப முடியவில்லை உன் வேலையின் தரம் மிக உயர்ந்ததாயிற்றே!

    இந்த வார்த்தைகள் செய்ததுதான் மாயம்.
    ரமேஷின் பந்துவீச்சு வீரியம் பெற்றது. வேலை செய்யும் சரசு முகத்தைக் சுழிக்காமல் பாத்திரத்தை இரண்டாவது முறை கழுவிக் கொண்டு வந்தாள்.
    அதிக பேரம் பேசாமல் கத்தரிக்காய் வாங்க செய்தது.

    மாறாக முதலில் கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா! காலங்காத்தால வந்துட்டாங்க!
    என சொல்லி இருந்தாலோ,
    ஆஹா என கேலியாக பெண்கள் ரமேஷின் பந்துவீச்சு , ஓட்டத்தை கேலி செய்திருந்தாலோ, உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறன்னே தெரியல! எல்லா பாத்திரத்தையும் நாங்க ஒரு தரம் கழுவ வேண்டி இருக்குது என்று மரகதம்மாள் சொல்லி இருந்தாலோ வேலை நடந்து இருக்குமா?
    அடுத்த விக்கெட்டும் உடன் விழுந்திருக்குமா?

    பாராட்டு என்பதை மிகச் சிறந்த ஊட்டச்சத்து.
    மனிதர்களுக்கு பாராட்டும் தன்னை மதிக்கிறார்கள் என்ற எண்ணமும் எப்போதும் தேவை.

    அவ்வளவு ஏன் கடவுளுக்கே 108, 1008 என்று போற்றிகள் தேவைப்படவில்லையா?

    புகழ்ச்சி வேறு பாராட்டு வேறு.
    பாராட்டு என்பது யதார்த்தமானதாக இருக்க வேண்டுமே தவிர அந்த பாராட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது .
    பாராட்ட வேண்டும் என்பதற்காக சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது.

    பேப்பர் போடும் பையனிலிருந்து கோயில் குருக்கள் வரை நம்ம வீட்டு பெரியவர்கள் முதல் அலுவலக நண்பர் வரை எல்லோரையும் பாராட்ட வேண்டும்.

    இதில் நிறைய பலன் இருக்கிறது. நம்மை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். புன்னகைப்பார்கள்.
    நம்மை விரும்புவார்கள்.
    நம்மை ஒதுக்க மாட்டார்கள்.

    நாலு பேர் பையை தூக்கிக் கொண்டு கடையில் நிற்கும் போது சாருக்கு என்ன வேணும்னு கேட்டு முதல்ல போடு என்று கடைக்காரர் சொல்லலாம்.

    எங்கே உங்களை ரொம்ப நாளா காணும் என்று ஒரு இரண்டு நாட்கள் ஆனாலும் நண்பர்கள் கேட்பார்கள்.

    எல்லாம் எதனால்?

    இன்முகத்துடன் மற்றவர்களின் நல்ல குணங்களை வெளிப்படையாக சொல்வதனால் தானே!

    மாறாக நம்மில் சிலர் நம்மைப் பற்றி அதிகமாக நினைப்பதனால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி பேசி விடுகிறோம்.

    நீங்க அப்படி செஞ்சது நல்ல அல்ல!

    விலை கூட கொடுத்துட்டீங்க!

    ஏமாந்துட்டீங்க!

    தேவையா?
    மற்றவர்களை நல்லவற்றை சொல்லி மகிழ்விக்க சந்தர்ப்பங்கள் இருக்கையில் தவறுகளை தேடி சொல்லிக் காட்ட வேண்டாமே!

    ஆக முடிந்த அளவு மற்றவர்களை பாராட்டுங்கள்.
    கொஞ்சம் உண்மையாக யோசித்து எதார்த்தமாக பாராட்டுங்கள். சந்தோசமாக காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள்.

    "வாழ்க்கையை வெற்றி கொள்ள... மனிதர்களை புரிந்து கொள்ள..."
    ஒரு காய்கறிகடை லட்சுமி அம்மாள் காய்கறி வாங்க வந்திருக்கிறாள். கத்தரிக்காய் என்ன விலையப்பா? நீங்களாமா மகாலட்சுமியாட்டம் வந்திருக்கீங்க! காலங்காத்தால எடுத்துக்கங்க அம்மா! விலை என்ன சொல்லு! விலையென்னம்மா பொல்லாத விலை. நீங்கதான் அம்மா காலையிலேயே முதல் போணி பண்றீங்க. உங்க ராசியான கையால் எடுத்துக்கோங்க! இருபது ரூபாயை கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்தோடு வீடு திரும்புகிறார். அடுத்து ஒரு விளையாட்டு மைதானம்! ரமேஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் பௌலிங் செய்கிறான். பந்தை நன்கு தேய்த்து வீசப் போகும்போது தான் கவனித்தான். மைதானத்திற்குள் ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்த மூன்று பெண்கள் நுழைகிறார்கள். இந்த இளம் பெண்கள் அங்கு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை கவனமாக பார்த்தபடி வந்தார்கள். பிடித்தது சனி அங்கே பேட் செய்து கொண்டிருந்தவனுக்கு! ரமேஷ் முன்பைவிட வேகமாக ஓடி வந்து பந்தை எறிந்தான். அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது மட்டை பிடித்தவன் கிளீன் போல்ட்டானான். அந்தப் பெண்கள் கொஞ்சம் சும்மா இருக்கக் கூடாதா? கையைத் தட்டி ரமேஷின் பந்துவீச்சை பாராட்டினார்கள். அடுத்து ஆட வந்தவனுக்கு தன்னை நோக்கி ரமேஷ் எப்படி பந்து வீசினான் என்றே தெரியாது. ஸ்டம்ப் உடைந்து நொறுங்கியது. அடுத்து ஒரு வீட்டு வேலை செய்யும் சரசுவிடம் வீட்டுக்கார அம்மாள் மரகதம் பேசிக் கொண்டிருக்கிறாள். ஏமா சரசு! நீ கழுவின பாத்திரமா இது! ஆச்சரியமா இருக்கு! ஏம்மா! என்ன விஷயம்? இல்லை நீ கழுவின பாத்திரம்னா அப்படியே கண்ண மூடிக்கிட்டு பாலை காய்ச்சலாமே ஆனா இது உள்ள பாரு எப்படி இருக்கு! அதை கொண்டாங்க இப்படி! அதைத்தான் சொல்றது இந்த சரசு வேலை செய்றப்போ யாரும் தொந்தரவு பண்ணாதீங்கனு! வாங்கிச் சென்று மீண்டும் அதை துலக்கி பள பளவென்று கொண்டு வருகிறாள். இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒற்றுமையை கவனித்திருக்கலாம். பிரச்சனை அதிகம் இன்றி மனமுவந்து சுறுசுறுப்பாக வேலை நடந்ததை பார்த்தோம். உங்கள் கை ராசியான கை! நீங்கள் லட்சுமிகரம்! ஆகா நீ எப்படி பந்து வீசுகிறாய். நாங்கள் ரசிக்கிறோம் என கைதட்டல் சொல்லாமல் சொல்லிய வார்த்தை. நம்ப முடியவில்லை உன் வேலையின் தரம் மிக உயர்ந்ததாயிற்றே! இந்த வார்த்தைகள் செய்ததுதான் மாயம். ரமேஷின் பந்துவீச்சு வீரியம் பெற்றது. வேலை செய்யும் சரசு முகத்தைக் சுழிக்காமல் பாத்திரத்தை இரண்டாவது முறை கழுவிக் கொண்டு வந்தாள். அதிக பேரம் பேசாமல் கத்தரிக்காய் வாங்க செய்தது. மாறாக முதலில் கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா! காலங்காத்தால வந்துட்டாங்க! என சொல்லி இருந்தாலோ, ஆஹா என கேலியாக பெண்கள் ரமேஷின் பந்துவீச்சு , ஓட்டத்தை கேலி செய்திருந்தாலோ, உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறன்னே தெரியல! எல்லா பாத்திரத்தையும் நாங்க ஒரு தரம் கழுவ வேண்டி இருக்குது என்று மரகதம்மாள் சொல்லி இருந்தாலோ வேலை நடந்து இருக்குமா? அடுத்த விக்கெட்டும் உடன் விழுந்திருக்குமா? பாராட்டு என்பதை மிகச் சிறந்த ஊட்டச்சத்து. மனிதர்களுக்கு பாராட்டும் தன்னை மதிக்கிறார்கள் என்ற எண்ணமும் எப்போதும் தேவை. அவ்வளவு ஏன் கடவுளுக்கே 108, 1008 என்று போற்றிகள் தேவைப்படவில்லையா? புகழ்ச்சி வேறு பாராட்டு வேறு. பாராட்டு என்பது யதார்த்தமானதாக இருக்க வேண்டுமே தவிர அந்த பாராட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது . பாராட்ட வேண்டும் என்பதற்காக சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது. பேப்பர் போடும் பையனிலிருந்து கோயில் குருக்கள் வரை நம்ம வீட்டு பெரியவர்கள் முதல் அலுவலக நண்பர் வரை எல்லோரையும் பாராட்ட வேண்டும். இதில் நிறைய பலன் இருக்கிறது. நம்மை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். புன்னகைப்பார்கள். நம்மை விரும்புவார்கள். நம்மை ஒதுக்க மாட்டார்கள். நாலு பேர் பையை தூக்கிக் கொண்டு கடையில் நிற்கும் போது சாருக்கு என்ன வேணும்னு கேட்டு முதல்ல போடு என்று கடைக்காரர் சொல்லலாம். எங்கே உங்களை ரொம்ப நாளா காணும் என்று ஒரு இரண்டு நாட்கள் ஆனாலும் நண்பர்கள் கேட்பார்கள். எல்லாம் எதனால்? இன்முகத்துடன் மற்றவர்களின் நல்ல குணங்களை வெளிப்படையாக சொல்வதனால் தானே! மாறாக நம்மில் சிலர் நம்மைப் பற்றி அதிகமாக நினைப்பதனால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி பேசி விடுகிறோம். நீங்க அப்படி செஞ்சது நல்ல அல்ல! விலை கூட கொடுத்துட்டீங்க! ஏமாந்துட்டீங்க! தேவையா? மற்றவர்களை நல்லவற்றை சொல்லி மகிழ்விக்க சந்தர்ப்பங்கள் இருக்கையில் தவறுகளை தேடி சொல்லிக் காட்ட வேண்டாமே! ஆக முடிந்த அளவு மற்றவர்களை பாராட்டுங்கள். கொஞ்சம் உண்மையாக யோசித்து எதார்த்தமாக பாராட்டுங்கள். சந்தோசமாக காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள். "வாழ்க்கையை வெற்றி கொள்ள... மனிதர்களை புரிந்து கொள்ள..."
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
Zoekresultaten
Idaivelai.com https://idaivelai.com