ஒரு காய்கறிகடை லட்சுமி அம்மாள் காய்கறி வாங்க வந்திருக்கிறாள்.
கத்தரிக்காய் என்ன விலையப்பா?
நீங்களாமா மகாலட்சுமியாட்டம் வந்திருக்கீங்க!
காலங்காத்தால எடுத்துக்கங்க அம்மா!
விலை என்ன சொல்லு!
விலையென்னம்மா பொல்லாத விலை. நீங்கதான் அம்மா காலையிலேயே முதல் போணி பண்றீங்க.
உங்க ராசியான கையால் எடுத்துக்கோங்க!
இருபது ரூபாயை கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்தோடு வீடு திரும்புகிறார்.
அடுத்து ஒரு விளையாட்டு மைதானம்! ரமேஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அவன் பௌலிங் செய்கிறான்.
பந்தை நன்கு தேய்த்து வீசப் போகும்போது தான் கவனித்தான். மைதானத்திற்குள் ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்த மூன்று பெண்கள் நுழைகிறார்கள்.
இந்த இளம் பெண்கள் அங்கு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை கவனமாக பார்த்தபடி வந்தார்கள்.
பிடித்தது சனி அங்கே பேட் செய்து கொண்டிருந்தவனுக்கு!
ரமேஷ் முன்பைவிட வேகமாக ஓடி வந்து பந்தை எறிந்தான்.
அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது மட்டை பிடித்தவன் கிளீன் போல்ட்டானான்.
அந்தப் பெண்கள் கொஞ்சம் சும்மா இருக்கக் கூடாதா?
கையைத் தட்டி ரமேஷின் பந்துவீச்சை பாராட்டினார்கள்.
அடுத்து ஆட வந்தவனுக்கு தன்னை நோக்கி ரமேஷ் எப்படி பந்து வீசினான் என்றே தெரியாது.
ஸ்டம்ப் உடைந்து நொறுங்கியது.
அடுத்து ஒரு வீட்டு வேலை செய்யும் சரசுவிடம் வீட்டுக்கார அம்மாள் மரகதம் பேசிக் கொண்டிருக்கிறாள்.
ஏமா சரசு!
நீ கழுவின பாத்திரமா இது!
ஆச்சரியமா இருக்கு!
ஏம்மா! என்ன விஷயம்?
இல்லை நீ கழுவின பாத்திரம்னா அப்படியே கண்ண மூடிக்கிட்டு பாலை காய்ச்சலாமே ஆனா இது உள்ள பாரு எப்படி இருக்கு!
அதை கொண்டாங்க இப்படி! அதைத்தான் சொல்றது இந்த சரசு வேலை செய்றப்போ யாரும் தொந்தரவு பண்ணாதீங்கனு!
வாங்கிச் சென்று மீண்டும் அதை துலக்கி பள பளவென்று கொண்டு வருகிறாள்.
இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒற்றுமையை கவனித்திருக்கலாம். பிரச்சனை அதிகம் இன்றி மனமுவந்து சுறுசுறுப்பாக வேலை நடந்ததை பார்த்தோம்.
உங்கள் கை ராசியான கை!
நீங்கள் லட்சுமிகரம்!
ஆகா நீ எப்படி பந்து வீசுகிறாய்.
நாங்கள் ரசிக்கிறோம் என கைதட்டல் சொல்லாமல் சொல்லிய வார்த்தை.
நம்ப முடியவில்லை உன் வேலையின் தரம் மிக உயர்ந்ததாயிற்றே!
இந்த வார்த்தைகள் செய்ததுதான் மாயம்.
ரமேஷின் பந்துவீச்சு வீரியம் பெற்றது. வேலை செய்யும் சரசு முகத்தைக் சுழிக்காமல் பாத்திரத்தை இரண்டாவது முறை கழுவிக் கொண்டு வந்தாள்.
அதிக பேரம் பேசாமல் கத்தரிக்காய் வாங்க செய்தது.
மாறாக முதலில் கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா! காலங்காத்தால வந்துட்டாங்க!
என சொல்லி இருந்தாலோ,
ஆஹா என கேலியாக பெண்கள் ரமேஷின் பந்துவீச்சு , ஓட்டத்தை கேலி செய்திருந்தாலோ, உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறன்னே தெரியல! எல்லா பாத்திரத்தையும் நாங்க ஒரு தரம் கழுவ வேண்டி இருக்குது என்று மரகதம்மாள் சொல்லி இருந்தாலோ வேலை நடந்து இருக்குமா?
அடுத்த விக்கெட்டும் உடன் விழுந்திருக்குமா?
பாராட்டு என்பதை மிகச் சிறந்த ஊட்டச்சத்து.
மனிதர்களுக்கு பாராட்டும் தன்னை மதிக்கிறார்கள் என்ற எண்ணமும் எப்போதும் தேவை.
அவ்வளவு ஏன் கடவுளுக்கே 108, 1008 என்று போற்றிகள் தேவைப்படவில்லையா?
புகழ்ச்சி வேறு பாராட்டு வேறு.
பாராட்டு என்பது யதார்த்தமானதாக இருக்க வேண்டுமே தவிர அந்த பாராட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது .
பாராட்ட வேண்டும் என்பதற்காக சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது.
பேப்பர் போடும் பையனிலிருந்து கோயில் குருக்கள் வரை நம்ம வீட்டு பெரியவர்கள் முதல் அலுவலக நண்பர் வரை எல்லோரையும் பாராட்ட வேண்டும்.
இதில் நிறைய பலன் இருக்கிறது. நம்மை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். புன்னகைப்பார்கள்.
நம்மை விரும்புவார்கள்.
நம்மை ஒதுக்க மாட்டார்கள்.
நாலு பேர் பையை தூக்கிக் கொண்டு கடையில் நிற்கும் போது சாருக்கு என்ன வேணும்னு கேட்டு முதல்ல போடு என்று கடைக்காரர் சொல்லலாம்.
எங்கே உங்களை ரொம்ப நாளா காணும் என்று ஒரு இரண்டு நாட்கள் ஆனாலும் நண்பர்கள் கேட்பார்கள்.
எல்லாம் எதனால்?
இன்முகத்துடன் மற்றவர்களின் நல்ல குணங்களை வெளிப்படையாக சொல்வதனால் தானே!
மாறாக நம்மில் சிலர் நம்மைப் பற்றி அதிகமாக நினைப்பதனால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி பேசி விடுகிறோம்.
நீங்க அப்படி செஞ்சது நல்ல அல்ல!
விலை கூட கொடுத்துட்டீங்க!
ஏமாந்துட்டீங்க!
தேவையா?
மற்றவர்களை நல்லவற்றை சொல்லி மகிழ்விக்க சந்தர்ப்பங்கள் இருக்கையில் தவறுகளை தேடி சொல்லிக் காட்ட வேண்டாமே!
ஆக முடிந்த அளவு மற்றவர்களை பாராட்டுங்கள்.
கொஞ்சம் உண்மையாக யோசித்து எதார்த்தமாக பாராட்டுங்கள். சந்தோசமாக காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள்.
"வாழ்க்கையை வெற்றி கொள்ள... மனிதர்களை புரிந்து கொள்ள..."

0 Comments
·0 Shares
·421 Views
·0 Reviews