• உலக மகா உருட்டு.. தண்ணீரில் எரியும் அடுப்பு.. I created Hydrogen for cooking😎😎
    https://www.youtube.com/watch?v=HAFcD6jHJl4
    உலக மகா உருட்டு.. தண்ணீரில் எரியும் அடுப்பு.. I created Hydrogen for cooking😎😎 https://www.youtube.com/watch?v=HAFcD6jHJl4
    0 Reacties ·0 aandelen ·407 Views ·0 voorbeeld
  • எத்தகைய எதிர்ப்புகள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் சாட்சியங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு கொண்டு இருக்க வேண்டும் அது நீதி கிடைக்குதோ இல்லையோ என்பதற்கு அப்பாற்பட்டு.
    நேற்று இரவு விஷமிகளால் இடிக்கப்பட்ட செம்மணி தமிழின அழிப்பின் சாட்சியம் “அணையா விளக்கு” மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.
    எத்தகைய எதிர்ப்புகள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் சாட்சியங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு கொண்டு இருக்க வேண்டும் அது நீதி கிடைக்குதோ இல்லையோ என்பதற்கு அப்பாற்பட்டு. நேற்று இரவு விஷமிகளால் இடிக்கப்பட்ட செம்மணி தமிழின அழிப்பின் சாட்சியம் “அணையா விளக்கு” மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.
    0 Reacties ·0 aandelen ·439 Views ·0 voorbeeld
  • நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

    உடலின் ஆரோக்கியத்திற்கு தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.

    தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்தணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.

    இதய நோய்கள் நீங்கும்
    தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

    கண் பிரச்சனை நீங்கும்
    கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

    பசியின்மை பிரச்சனை நீங்கும்
    பசியின்மையால் அவதிப்படுபவர்களும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் இப்பிரச்சினையை சரிசெய்யலாம்.

    சிறுநீர பிரச்சினை நீங்கும்
    தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறி தொண்டைப்புண்ணும் குணமாகும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்.
    நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? உடலின் ஆரோக்கியத்திற்கு தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்தணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும். இதய நோய்கள் நீங்கும் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். கண் பிரச்சனை நீங்கும் கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும். பசியின்மை பிரச்சனை நீங்கும் பசியின்மையால் அவதிப்படுபவர்களும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் இப்பிரச்சினையை சரிசெய்யலாம். சிறுநீர பிரச்சினை நீங்கும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறி தொண்டைப்புண்ணும் குணமாகும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்.
    0 Reacties ·0 aandelen ·419 Views ·0 voorbeeld
  • காலை அலாரம் ஏன் இதயத்திற்கு ஆபத்தானது? நரம்பியல் நிபுணர் விளக்கம்

    காலையில் வேலை செல்பவர்கள் மற்றும் பாடசாலை செல்பவர்கள் காலையில் அலாரத்தில் சத்தம் வைத்து எழுந்திருப்பார்கள்.

    ஆனால், இந்த வழக்கமான செயல் மூளைக்கும் இதயத்திற்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

    இதை நரம்பியல் நிபுணர் கூறுகிறார். இப்படி அலார சத்தத்திற்கு மன அழுத்த ஹார்மோன்கள், இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இது பற்றிய முழு விபரத்தை பதிவில் பார்க்கலாம்.

    மனித உடல்கள் ஒரு உள் கடிகாரத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இது சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படுகிறது. இது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சிகளை வழிநடத்துகிறது.

    தூக்கம் முடிந்ததும், மூளை இயற்கையாகவே உடலை விழித்தெழும்படி சமிக்ஞை கொடுக்கிறது.

    இந்த மென்மையான எழுச்சிதான் இதயத்தை சீராகவும் மனதை விழிப்புடனும் வைத்திருக்கிறது. ஆனால் நாம் கடிகாரத்தில் சத்தம் வைத்து எழும் போது இந்த செயற்பாடு சீர் குலையும்.

    மன அழுத்தம் – அலாரங்கள் “மன அழுத்த ஹார்மோன்” கார்டிசோலின் கூர்மையான உயர்வைத் தூண்டும் என்று நரம்பியல் நிபுணர் கூறுகிறார்.

    கார்டிசோல் (Cortisol) என்பது உடலில் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் வகையில் அண்ணீரகச் சுரப்பியால் (adrenal gland) சுரக்கப்படும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும்.

    காலையில் கார்டிசோலின் அளவு படிப்படியாக அதிகரித்து, உடல் புத்துணர்ச்சியுடன் உணர உதவுகிறது. ஆனால் ஒரு அலாரம் உடலை விழித்தெழச் செய்யும்போது, ​​கார்டிசோல் திடீரென உயர்ந்து மன அழுத்தத்தை உண்டாககும். இதனால் இதய ஆரோக்கியம் பாதிப்படையும்.

    இதய அழுத்தம் – திடீரென திடுக்கிட்டு விழிப்பது சில நொடிகளில் இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன.

    ஏற்கனவே இதயப் பிரச்சினைகள் உள்ள ஒருவருக்கு, இந்த அதிகரிப்பு ஆபத்தானதாக மாறும். இதய பிரச்சனைகள் இல்லாத மக்கள் கூட தொடர்ச்சியான தினசரி அதிர்ச்சியில் எழும்பினால் அது நாளடைவில் ஆபத்தாக மாறும்.

    தூக்க மந்தநிலை – அலாரம் ஒலிகள் இதயத்தை அழுத்துவது மட்டுமல்லாமல், மூளையையும் குழப்புகின்றன. ஆழ்ந்த தூக்க நிலைகளிலிருந்து எழுந்திருப்பது மனதை “தூக்க செயலற்ற தன்மை” என்று அழைக்கப்படும் ஒரு மூடுபனி நிலையில் அழைத்து செல்லும்.

    பல மணிநேர ஓய்வு இருந்தபோதிலும், காலை நேரங்களில் சில நேரங்களில் சோர்வாகவும் மந்தமாகவும் உணர இதுவே காரணம்.

    இதை கட்டுப்படுத்தப்படாவிட்டால், நாள்பட்ட தூக்க செயலற்ற தன்மை நாள் முழுவதும் மனநிலை, உற்பத்தித்திறன் மற்றும் அறிவாற்றல் செயல்திறனை பாதிக்கிறது.
    காலை அலாரம் ஏன் இதயத்திற்கு ஆபத்தானது? நரம்பியல் நிபுணர் விளக்கம் காலையில் வேலை செல்பவர்கள் மற்றும் பாடசாலை செல்பவர்கள் காலையில் அலாரத்தில் சத்தம் வைத்து எழுந்திருப்பார்கள். ஆனால், இந்த வழக்கமான செயல் மூளைக்கும் இதயத்திற்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதை நரம்பியல் நிபுணர் கூறுகிறார். இப்படி அலார சத்தத்திற்கு மன அழுத்த ஹார்மோன்கள், இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இது பற்றிய முழு விபரத்தை பதிவில் பார்க்கலாம். மனித உடல்கள் ஒரு உள் கடிகாரத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இது சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படுகிறது. இது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சிகளை வழிநடத்துகிறது. தூக்கம் முடிந்ததும், மூளை இயற்கையாகவே உடலை விழித்தெழும்படி சமிக்ஞை கொடுக்கிறது. இந்த மென்மையான எழுச்சிதான் இதயத்தை சீராகவும் மனதை விழிப்புடனும் வைத்திருக்கிறது. ஆனால் நாம் கடிகாரத்தில் சத்தம் வைத்து எழும் போது இந்த செயற்பாடு சீர் குலையும். மன அழுத்தம் – அலாரங்கள் “மன அழுத்த ஹார்மோன்” கார்டிசோலின் கூர்மையான உயர்வைத் தூண்டும் என்று நரம்பியல் நிபுணர் கூறுகிறார். கார்டிசோல் (Cortisol) என்பது உடலில் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் வகையில் அண்ணீரகச் சுரப்பியால் (adrenal gland) சுரக்கப்படும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும். காலையில் கார்டிசோலின் அளவு படிப்படியாக அதிகரித்து, உடல் புத்துணர்ச்சியுடன் உணர உதவுகிறது. ஆனால் ஒரு அலாரம் உடலை விழித்தெழச் செய்யும்போது, ​​கார்டிசோல் திடீரென உயர்ந்து மன அழுத்தத்தை உண்டாககும். இதனால் இதய ஆரோக்கியம் பாதிப்படையும். இதய அழுத்தம் – திடீரென திடுக்கிட்டு விழிப்பது சில நொடிகளில் இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஏற்கனவே இதயப் பிரச்சினைகள் உள்ள ஒருவருக்கு, இந்த அதிகரிப்பு ஆபத்தானதாக மாறும். இதய பிரச்சனைகள் இல்லாத மக்கள் கூட தொடர்ச்சியான தினசரி அதிர்ச்சியில் எழும்பினால் அது நாளடைவில் ஆபத்தாக மாறும். தூக்க மந்தநிலை – அலாரம் ஒலிகள் இதயத்தை அழுத்துவது மட்டுமல்லாமல், மூளையையும் குழப்புகின்றன. ஆழ்ந்த தூக்க நிலைகளிலிருந்து எழுந்திருப்பது மனதை “தூக்க செயலற்ற தன்மை” என்று அழைக்கப்படும் ஒரு மூடுபனி நிலையில் அழைத்து செல்லும். பல மணிநேர ஓய்வு இருந்தபோதிலும், காலை நேரங்களில் சில நேரங்களில் சோர்வாகவும் மந்தமாகவும் உணர இதுவே காரணம். இதை கட்டுப்படுத்தப்படாவிட்டால், நாள்பட்ட தூக்க செயலற்ற தன்மை நாள் முழுவதும் மனநிலை, உற்பத்தித்திறன் மற்றும் அறிவாற்றல் செயல்திறனை பாதிக்கிறது.
    0 Reacties ·0 aandelen ·643 Views ·0 voorbeeld
  • கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால் விபரீதம்

    கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

    பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு மற்றும் குழந்தையின் நடைப்பயிற்சியில் சிரமங்கள் ஏற்படுதல் போன்ற பல செயல்பாடுகளை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அத்துடன், கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் தோல் வெண்மையாக மாறுகின்றது. இந்த பாதரசம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள் என்று நிபுணர் தெரிவித்தார்.

    பெண்களின் கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் மிக வேகமாக இருப்பதால், கிரீம்களில் உள்ள பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோலில் உறிஞ்சப்படுவது விரைவாக நிகழ்கிறது.

    இதனால், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால், அந்த கிரீம்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்ய சமர்ப்பிக்கப்படுவதில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
    கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால் விபரீதம் கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார். பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு மற்றும் குழந்தையின் நடைப்பயிற்சியில் சிரமங்கள் ஏற்படுதல் போன்ற பல செயல்பாடுகளை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் தோல் வெண்மையாக மாறுகின்றது. இந்த பாதரசம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள் என்று நிபுணர் தெரிவித்தார். பெண்களின் கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் மிக வேகமாக இருப்பதால், கிரீம்களில் உள்ள பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோலில் உறிஞ்சப்படுவது விரைவாக நிகழ்கிறது. இதனால், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால், அந்த கிரீம்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்ய சமர்ப்பிக்கப்படுவதில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
    0 Reacties ·0 aandelen ·631 Views ·0 voorbeeld
  • மஞ்சள் காமாலை நோய்: மருத்துவரின் விரிவான விளக்கம்

    மஞ்சள் காமாலை குறித்து பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லாவின் பதிவில் இருந்து, பூரண விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    மஞ்சள் காமாலையில் கண்கள் மஞ்சள் பூத்து சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறி நாளடைவில் உடல் முழுவதும் குறிப்பாக முகம் எலுமிச்சை நிறத்தில் மாற்றும்.

    மஞ்சள் காமாலை என்பது நாம் நினைப்பது போல நோய் இல்லை மாறாக அது நோயின் அறிகுறியாகும்.நமது ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீம் எனும் இரும்பு மூலப் பொருள் சிதைவுண்டு அழியும் போது இறுதியாக உண்டாகும் உயிர் வேதியியல் பொருள் – பிலிருபின் ஆகும்.

    இந்த பிலிருபின் ரத்தத்தில் உள்ள ஆல்புமினுடன் இணைந்து பயணித்து கல்லீரலை அடையும் கரையாத தன்மை கொண்ட இணைவுறா பிலிருபினை கல்லீரல் தன்னகத்தே கொண்ட நொதியைக் கொண்டு இணைவுற்ற பிலிருபினாக மாற்றி அமைக்கிறது.

    நமது உடலைப் பொருத்தவரை இணைவுறா பிலிருபினுக்கு இணைவுற்ற பிலிருபினை விட நச்சுத்தன்மை அதிகம்.

    இணைவுற்ற பிலிருபின் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்தில் அமிழ்த்தப்பட்டு நாம் கழிக்கும் மலத்தின் வழியாகவும் சிறுநீரின் வழியாகவும் வெளியேற்றப்படும். இதனால் தான் மலத்தின் நிறமும் சிறுநீரின் நிறமும் மஞ்சள் நிறத்தில் உள்ளது.

    கல்லீரலுக்கு வந்து இணைவுறாத (Unconjugated Bilirubin ) நிலையில் இருக்கும் பிலிருபின் – மறைமுக பிலிருபின் (InDirect bilirubin) என்றழைக்கப்படும் கல்லீரலில் இணைவுற்ற பிலிருபின் (Conjugated bilirubin ) அல்லது நேரடி பிலிருபின் ( Direct Bilirubin) என்றழைக்கப்படும்.

    அனைவரும் தவறாக நினைப்பது என்னவென்றால் மஞ்சள் காமாலை வந்து விட்டாலே அது கல்லீரலில் பிரச்சனையாகத் தான் இருக்கும் என்று.

    ஆனால் அவ்வாறின்றி மஞ்சள் காமாலை மூன்று விதமாக ஏற்படலாம்.

    ( கல்லீரலுக்கு வருவதற்கு முன்பே இணைவுறா பிலிருபின் அதிகமாவது )

    இதை PRE HEPATIC JAUNDICE என்கிறோம் சிவப்பு அணுக்கள் சிதைவுற்று உற்பத்தி ஆகும் பிலிருபின் அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆவதால் ஏற்படலாம்

    – குருதி சிதைவுறுவதால் தோன்று ரத்த சோகை ( Hemolytic anemia)

    – ரத்த கட்டிகள் (Hematoma) ஏற்பட்டு அங்கிருந்து ரத்த அணுக்கள் சிதைவுற்று பிலிருபின் அளவுகள் கூடலாம் இந்த வகையில் இணைவுறா பிலிருபின் மட்டும் அதிகமாகும்.

    இரண்டாவது வகை
    கல்லீரலில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுவது

    – இதை HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம் கல்லீரலால் சரியான அளவில் பிலிருபினை கிரகிக்க இயலாமை இது கில்பர்ட் சிண்ட்ரோம் என்ற மரபணு பிரச்சனையில் இருக்கும்.

    பிலிருபின் இணைவுறும் வினையை சரியாக கல்லீரலினால் புரிய இயலாமையினால் ஏற்படுவது இது கல்லீரலைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்களான

    ஹெப்பாடைடிஸ் – ஏ
    ஹெப்பாடைடிஸ் – பி
    ஹெப்பாடைடிஸ் – சி தொற்று ஏற்படும் போதும் சிரோசிஸ் எனும் கல்லீரல் சுருக்க நோய் மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோய் மது அருந்தாதவர்களில் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு படிதலால் ஏற்படும் அழற்சி போன்றவற்றில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் இணைவுறாத பிலிருபினும் இணைவுற்ற பிலிருபினும் ஒரு சேர அதிகமாகும்.

    மூன்றாவது வகை

    கல்லீரலில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் கல்லீரலை விட்டு பித்தத்துடன் வெளியேற்றப்படும் பிலிருபின் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் முறையாக வெளியேற இயலாமையால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும்.

    இதை Post HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம் பித்தப் பை கற்கள் பித்த நீர் செல்லும் குழாயை அடைப்பது, ( choledocholithiasis) புற்று நோய் கட்டி தோன்றி பித்த நீர் குழாயை அடைத்துக் கொள்வது, ( carcinoma) குறுகிய & நீண்ட கால கணைய அழற்சி நோய் ( acute & chronic pancreatitis) பித்த நீர் செல்லும் குழாய் குறுகிக் கொள்ளுதல் ( Strictures) அஸ்காரிஸ் போன்ற புழுத் தொற்றுகள் ஏற்படுவதால் பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவது

    மேற்சொன்ன மூன்று காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மட்டுமே கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதையும் முதல் மற்றும் மூன்றாவது வகை காரணங்களுக்கும் கல்லீரலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறிய வைக்கவே இந்தப் பதிவு நமதூர்களில் மஞ்சள் காமாலை என்ற அறிகுறி தோன்றிவிட்டாலே உடனே நாட்டு மருந்து சிகிச்சை எடுத்து விட்டு முறையான சிகிச்சைகளுக்கு வராமல் நாட்களைக் கடத்தும் போக்கு உள்ளதைக் காண முடிகிறது.

    நவீன மருத்துவத்தில் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போது அந்த அறிகுறி தோன்றியதற்கான மெய்யான காரணம் அறிந்து அதன் பிறகே சிகிச்சை அளிக்கப்படும் மஞ்சள் காமாலை நான் முன்பே கூறிய மூன்று வகைகளுள் எந்த வகையை சேர்ந்தது என்பதை முழு உடல் பரிசோதனை மற்றும் சில பரிசோதனைகள் செய்து கண்டறிய முடியும்.

    பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை என்பது வளர்ச்சி அடையாத கல்லீரலால் பிலிருபின் முழுமையாக இணைவுற இயலாமையால் ஏற்படுவதாகும் அதே நேரத்தில் பிறவிக்குறைபாட்டாலோ பிலிருபின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாலோ ரத்த அணுக்கள் அதிகமாக சிதைவுறும் தன்மையாலோ மஞ்சள் காமாலை தோன்றலாம்.

    அதற்கு முறையான ரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். சிறார் மற்றும் இளைய வயதில் ஹெப்படைடிஸ் ஏ தொற்றின் மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை தோன்றும் எனினும் இன்ன பிற வைரஸ்களான ஹெப்படைடிஸ் பி, சி போன்றவை தொற்றை ஏற்படுத்தியிருக்கின்றனவா? என்பதை கட்டாயம் அறிய வேண்டும்.

    காரணம் ஹெப்படைடிஸ் ஏ வுக்கு சிகிச்சை தேவையில்லை ஆனால் பி மற்றும் சி உடனடியாக சிகிங்சை அளிக்கப்படவேண்டிய வைரஸ் தொற்றுகள் ஆகும்.

    முதியவர்களில் மஞ்சள் காமாலை ஏற்படும் போது அது பித்தப்பை கற்கள், புற்று நோய் கட்டி , ஏதேனும் மருந்தின் பக்க விளைவாக இருக்கலாம் மது அருந்துபவர்களிடத்தில் மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு அது முற்றும் போது மஞ்சள் காமாலை தோன்றும் மேற்சொன்ன பல காரணங்களில் எது மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்

    குழந்தைகளிடத்தில் அதிலும் சிசுக்களில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தாமதம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலை உண்டாகி மரணம் சம்பவிக்கும் பெரியவர்களிடத்திலும் மஞ்சள் காமாலையின் உண்மையான காரணத்தை அறியாமல் தவறான சிகிச்சைகளை கொடுத்துக் கொண்டிருந்தால் பிலிருபின் விஷத்தன்மையை எட்டி மூளைக்கு ஏறி மரணம் சம்பவிக்கும்

    இனியேனும் நம்மில் யாருக்கேனும் மஞ்சள் காமாலை தோன்றினால் முறையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி எந்த காரணத்தால் ஏற்பட்டது என்பதை அறிந்து விரைவான முறையான சிகிச்சை பெறுவதே சிறந்த வழி

    நன்றி

    பரூக் அப்துல்லா

    பொதுநல மருத்துவர்
    மஞ்சள் காமாலை நோய்: மருத்துவரின் விரிவான விளக்கம் மஞ்சள் காமாலை குறித்து பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லாவின் பதிவில் இருந்து, பூரண விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். மஞ்சள் காமாலையில் கண்கள் மஞ்சள் பூத்து சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறி நாளடைவில் உடல் முழுவதும் குறிப்பாக முகம் எலுமிச்சை நிறத்தில் மாற்றும். மஞ்சள் காமாலை என்பது நாம் நினைப்பது போல நோய் இல்லை மாறாக அது நோயின் அறிகுறியாகும்.நமது ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீம் எனும் இரும்பு மூலப் பொருள் சிதைவுண்டு அழியும் போது இறுதியாக உண்டாகும் உயிர் வேதியியல் பொருள் – பிலிருபின் ஆகும். இந்த பிலிருபின் ரத்தத்தில் உள்ள ஆல்புமினுடன் இணைந்து பயணித்து கல்லீரலை அடையும் கரையாத தன்மை கொண்ட இணைவுறா பிலிருபினை கல்லீரல் தன்னகத்தே கொண்ட நொதியைக் கொண்டு இணைவுற்ற பிலிருபினாக மாற்றி அமைக்கிறது. நமது உடலைப் பொருத்தவரை இணைவுறா பிலிருபினுக்கு இணைவுற்ற பிலிருபினை விட நச்சுத்தன்மை அதிகம். இணைவுற்ற பிலிருபின் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்தில் அமிழ்த்தப்பட்டு நாம் கழிக்கும் மலத்தின் வழியாகவும் சிறுநீரின் வழியாகவும் வெளியேற்றப்படும். இதனால் தான் மலத்தின் நிறமும் சிறுநீரின் நிறமும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. கல்லீரலுக்கு வந்து இணைவுறாத (Unconjugated Bilirubin ) நிலையில் இருக்கும் பிலிருபின் – மறைமுக பிலிருபின் (InDirect bilirubin) என்றழைக்கப்படும் கல்லீரலில் இணைவுற்ற பிலிருபின் (Conjugated bilirubin ) அல்லது நேரடி பிலிருபின் ( Direct Bilirubin) என்றழைக்கப்படும். அனைவரும் தவறாக நினைப்பது என்னவென்றால் மஞ்சள் காமாலை வந்து விட்டாலே அது கல்லீரலில் பிரச்சனையாகத் தான் இருக்கும் என்று. ஆனால் அவ்வாறின்றி மஞ்சள் காமாலை மூன்று விதமாக ஏற்படலாம். ( கல்லீரலுக்கு வருவதற்கு முன்பே இணைவுறா பிலிருபின் அதிகமாவது ) இதை PRE HEPATIC JAUNDICE என்கிறோம் சிவப்பு அணுக்கள் சிதைவுற்று உற்பத்தி ஆகும் பிலிருபின் அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆவதால் ஏற்படலாம் – குருதி சிதைவுறுவதால் தோன்று ரத்த சோகை ( Hemolytic anemia) – ரத்த கட்டிகள் (Hematoma) ஏற்பட்டு அங்கிருந்து ரத்த அணுக்கள் சிதைவுற்று பிலிருபின் அளவுகள் கூடலாம் இந்த வகையில் இணைவுறா பிலிருபின் மட்டும் அதிகமாகும். இரண்டாவது வகை கல்லீரலில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுவது – இதை HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம் கல்லீரலால் சரியான அளவில் பிலிருபினை கிரகிக்க இயலாமை இது கில்பர்ட் சிண்ட்ரோம் என்ற மரபணு பிரச்சனையில் இருக்கும். பிலிருபின் இணைவுறும் வினையை சரியாக கல்லீரலினால் புரிய இயலாமையினால் ஏற்படுவது இது கல்லீரலைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்களான ஹெப்பாடைடிஸ் – ஏ ஹெப்பாடைடிஸ் – பி ஹெப்பாடைடிஸ் – சி தொற்று ஏற்படும் போதும் சிரோசிஸ் எனும் கல்லீரல் சுருக்க நோய் மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோய் மது அருந்தாதவர்களில் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு படிதலால் ஏற்படும் அழற்சி போன்றவற்றில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் இணைவுறாத பிலிருபினும் இணைவுற்ற பிலிருபினும் ஒரு சேர அதிகமாகும். மூன்றாவது வகை கல்லீரலில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் கல்லீரலை விட்டு பித்தத்துடன் வெளியேற்றப்படும் பிலிருபின் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் முறையாக வெளியேற இயலாமையால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும். இதை Post HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம் பித்தப் பை கற்கள் பித்த நீர் செல்லும் குழாயை அடைப்பது, ( choledocholithiasis) புற்று நோய் கட்டி தோன்றி பித்த நீர் குழாயை அடைத்துக் கொள்வது, ( carcinoma) குறுகிய & நீண்ட கால கணைய அழற்சி நோய் ( acute & chronic pancreatitis) பித்த நீர் செல்லும் குழாய் குறுகிக் கொள்ளுதல் ( Strictures) அஸ்காரிஸ் போன்ற புழுத் தொற்றுகள் ஏற்படுவதால் பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவது மேற்சொன்ன மூன்று காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மட்டுமே கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதையும் முதல் மற்றும் மூன்றாவது வகை காரணங்களுக்கும் கல்லீரலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறிய வைக்கவே இந்தப் பதிவு நமதூர்களில் மஞ்சள் காமாலை என்ற அறிகுறி தோன்றிவிட்டாலே உடனே நாட்டு மருந்து சிகிச்சை எடுத்து விட்டு முறையான சிகிச்சைகளுக்கு வராமல் நாட்களைக் கடத்தும் போக்கு உள்ளதைக் காண முடிகிறது. நவீன மருத்துவத்தில் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போது அந்த அறிகுறி தோன்றியதற்கான மெய்யான காரணம் அறிந்து அதன் பிறகே சிகிச்சை அளிக்கப்படும் மஞ்சள் காமாலை நான் முன்பே கூறிய மூன்று வகைகளுள் எந்த வகையை சேர்ந்தது என்பதை முழு உடல் பரிசோதனை மற்றும் சில பரிசோதனைகள் செய்து கண்டறிய முடியும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை என்பது வளர்ச்சி அடையாத கல்லீரலால் பிலிருபின் முழுமையாக இணைவுற இயலாமையால் ஏற்படுவதாகும் அதே நேரத்தில் பிறவிக்குறைபாட்டாலோ பிலிருபின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாலோ ரத்த அணுக்கள் அதிகமாக சிதைவுறும் தன்மையாலோ மஞ்சள் காமாலை தோன்றலாம். அதற்கு முறையான ரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். சிறார் மற்றும் இளைய வயதில் ஹெப்படைடிஸ் ஏ தொற்றின் மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை தோன்றும் எனினும் இன்ன பிற வைரஸ்களான ஹெப்படைடிஸ் பி, சி போன்றவை தொற்றை ஏற்படுத்தியிருக்கின்றனவா? என்பதை கட்டாயம் அறிய வேண்டும். காரணம் ஹெப்படைடிஸ் ஏ வுக்கு சிகிச்சை தேவையில்லை ஆனால் பி மற்றும் சி உடனடியாக சிகிங்சை அளிக்கப்படவேண்டிய வைரஸ் தொற்றுகள் ஆகும். முதியவர்களில் மஞ்சள் காமாலை ஏற்படும் போது அது பித்தப்பை கற்கள், புற்று நோய் கட்டி , ஏதேனும் மருந்தின் பக்க விளைவாக இருக்கலாம் மது அருந்துபவர்களிடத்தில் மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு அது முற்றும் போது மஞ்சள் காமாலை தோன்றும் மேற்சொன்ன பல காரணங்களில் எது மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் குழந்தைகளிடத்தில் அதிலும் சிசுக்களில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தாமதம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலை உண்டாகி மரணம் சம்பவிக்கும் பெரியவர்களிடத்திலும் மஞ்சள் காமாலையின் உண்மையான காரணத்தை அறியாமல் தவறான சிகிச்சைகளை கொடுத்துக் கொண்டிருந்தால் பிலிருபின் விஷத்தன்மையை எட்டி மூளைக்கு ஏறி மரணம் சம்பவிக்கும் இனியேனும் நம்மில் யாருக்கேனும் மஞ்சள் காமாலை தோன்றினால் முறையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி எந்த காரணத்தால் ஏற்பட்டது என்பதை அறிந்து விரைவான முறையான சிகிச்சை பெறுவதே சிறந்த வழி நன்றி பரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர்
    0 Reacties ·0 aandelen ·901 Views ·0 voorbeeld
  • காரத்திற்கு மட்டுமல்ல… பச்சை மிளகாய் சாப்பிடுவதன் நன்மைகள்

    நாம் உணவுகளில் பச்சை மிளகாயை காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை சாப்பிடுவதால் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.

    பச்சை மிளகாயில் விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருக்கின்றன, இது நாள்பட்ட தொற்று நோய்களிலிருந்து காப்பதுடன் வயதாவதை தடுக்கிறது.

    விட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, பக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

    கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது, பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொள்வதால் கண் ஆரோக்கியம் மேம்படும்.

    பச்சை மிளகாயில் உள்ள Capsaicin, கொழுப்பின் அளவை குறைப்பதால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும், குறிப்பாக ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

    மேலும் Capsaicin, வலி நிவாரணியாகும், நாள்பட்ட வலிநிலைகளை நிர்வகிப்பதில் சிறந்ததாகும், ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் உடலில் சரியான ரத்த ஓட்டம் இருக்கும், இதனால் உடலின் பல்வேறுபட்ட திசுக்களுக்கு சரியான அளவில் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப்பெறும்.
    காரத்திற்கு மட்டுமல்ல… பச்சை மிளகாய் சாப்பிடுவதன் நன்மைகள் நாம் உணவுகளில் பச்சை மிளகாயை காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை சாப்பிடுவதால் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. பச்சை மிளகாயில் விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருக்கின்றன, இது நாள்பட்ட தொற்று நோய்களிலிருந்து காப்பதுடன் வயதாவதை தடுக்கிறது. விட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, பக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது, பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொள்வதால் கண் ஆரோக்கியம் மேம்படும். பச்சை மிளகாயில் உள்ள Capsaicin, கொழுப்பின் அளவை குறைப்பதால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும், குறிப்பாக ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது. மேலும் Capsaicin, வலி நிவாரணியாகும், நாள்பட்ட வலிநிலைகளை நிர்வகிப்பதில் சிறந்ததாகும், ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் உடலில் சரியான ரத்த ஓட்டம் இருக்கும், இதனால் உடலின் பல்வேறுபட்ட திசுக்களுக்கு சரியான அளவில் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப்பெறும்.
    0 Reacties ·0 aandelen ·555 Views ·0 voorbeeld
  • நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை ஒன்னா சாப்பிடுங்க… உடலில் இந்த மாற்றங்கள் உறுதி!

    பொதுவாகவே நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

    ஆனால் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையை இணைப்பதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து பலரும் அறிந்திருப்பதற்காக வாய்ப்புகள் குறைவு.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

    நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டும் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் உங்கள் உடலை குணப்படுத்தும், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. இந்த கலவை உண்மையில் மந்திரம் செய்யும் என்றால் மிகையாகாது.

    இதுக்குறித்து குளோபல் பப்ளிக் ஹெல்த் நியூட்ரிஷன் யுகே & தேசிய நீரிழிவு கல்வியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான தீப்சிகா ஜெயின் அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கக்கூடிய உணவுகள் மற்றும் உணவுச் சேர்க்கைகள் குறித்து பகிர்ந்துக்கொள்வது வழக்கம்.

    அந்தவகையில் அண்மையில் நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் அற்புத 3 நன்மைகள் குறித்து இவர் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் குறிப்பிடுகையில், “நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை சேர்த்து எடுக்கும் போது, அது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேற்படுத்துவதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது. காரணம் நெல்லிக்காயில் வைட்டமின் சி செரிந்து காணப்படுவதுடன், கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த இரண்டு பொருட்களின் கலவையானது தலைமுடியை வலுப்படுத்த துணைப்புரிவதுடன், கூந்தல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.

    நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செய்ல்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் பெரிதும் துணைப்புரியும் ஏனெனில் இவை இரண்டிலும் நார்ச்சத்து செரிந்து காணப்படுவதால், இது இரத்த சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்க விடாமல் தடுக்கும். இந்த இரண்டின் கலவை நீரிலிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

    மேலும் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவற்றை இணைத்து சாப்பிடும் போது , அவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுவதிலும் சரும பொலிவை அதிகரிப்பதிலும் ஆற்றல் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
    நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை ஒன்னா சாப்பிடுங்க… உடலில் இந்த மாற்றங்கள் உறுதி! பொதுவாகவே நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான். ஆனால் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையை இணைப்பதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து பலரும் அறிந்திருப்பதற்காக வாய்ப்புகள் குறைவு.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டும் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் உங்கள் உடலை குணப்படுத்தும், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. இந்த கலவை உண்மையில் மந்திரம் செய்யும் என்றால் மிகையாகாது. இதுக்குறித்து குளோபல் பப்ளிக் ஹெல்த் நியூட்ரிஷன் யுகே & தேசிய நீரிழிவு கல்வியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான தீப்சிகா ஜெயின் அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கக்கூடிய உணவுகள் மற்றும் உணவுச் சேர்க்கைகள் குறித்து பகிர்ந்துக்கொள்வது வழக்கம். அந்தவகையில் அண்மையில் நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் அற்புத 3 நன்மைகள் குறித்து இவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை சேர்த்து எடுக்கும் போது, அது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேற்படுத்துவதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது. காரணம் நெல்லிக்காயில் வைட்டமின் சி செரிந்து காணப்படுவதுடன், கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த இரண்டு பொருட்களின் கலவையானது தலைமுடியை வலுப்படுத்த துணைப்புரிவதுடன், கூந்தல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது. நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செய்ல்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் பெரிதும் துணைப்புரியும் ஏனெனில் இவை இரண்டிலும் நார்ச்சத்து செரிந்து காணப்படுவதால், இது இரத்த சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்க விடாமல் தடுக்கும். இந்த இரண்டின் கலவை நீரிலிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். மேலும் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவற்றை இணைத்து சாப்பிடும் போது , அவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுவதிலும் சரும பொலிவை அதிகரிப்பதிலும் ஆற்றல் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
    0 Reacties ·0 aandelen ·656 Views ·0 voorbeeld
  • வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிங்க…உடலில் இந்த அற்புதங்கள் நிகழும்!

    இந்திய சமையலில் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கின்றது. பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தாலும், உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது.

    இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. செரிமான ஆற்றலை அதிகரிக்கும் அதன் நன்கு அறியப்பட்ட நன்மைகளுக்காக, உணவுகளை சமைக்கும் போது அதை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறோம்.

    ஆனால் இதில் கூந்தல் வளர்ச்சி தொடக்கம் உடல் எடையை கட்டுப்படுத்து வரையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.

    காலையில் கறிவேப்பிலை நீரைக் குடிப்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதன் மருத்துவ பயன்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

    கறிவேப்பிலை நீரில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக இருப்பதால், கறிவேப்பிலை நீரான உங்கள் நாளைத் தொடங்குவதற்கு ஒரு ஆரோக்கியமாக ஆரம்பமாக இருக்கும்.

    ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பானம், உடலை உற்சாகப்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுவதாக மருத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    எந்தவொரு ஆக்ஸிஜனேற்ற நிறைந்த மூலப்பொருளும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், இதனால் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை வலுவாக குறைக்க முடியும்.

    ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுபடுத்தும்.

    மேலும் இது கூந்தல் வளர்ச்சியை தூண்டி, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலை கொடுக்கும். இந்த கறிவேப்பிலை தண்ணீரை தொடர்ச்சியாக பருகி வருவதால், எடை இழப்பிற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

    மேலும் முன்கூட்டியே கூந்தல் நரைப்பதைத் தடுக்கிறது, மேலும் உச்சந்தலையை வளர்க்கிறது, முடியை பளபளப்பாகவும், துடிப்பாகவும், மீள்தன்மையுடனும் வைத்திருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.

    செரிமானத்திற்கு உதவுகிறது கறிவேப்பிலையில் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் செரிமான நொதிகள் உள்ளன. “கறிவேப்பிலை நீர் ஒரு லேசான மலமிளக்கியாகவும் செயல்படுகிறது, செரிமான அமைப்பை மெதுவாகத் தூண்டுவதன் மூலம் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

    அதன் இயற்கையான பண்புகள் குடலில் கடுமையான அல்லது திடீர் விளைவுகளை ஏற்படுத்தாமல் மலச்சிக்கலைப் போக்குவதில் சிறப்பாக செயல்படுவதுடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
    வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிங்க…உடலில் இந்த அற்புதங்கள் நிகழும்! இந்திய சமையலில் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கின்றது. பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தாலும், உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. செரிமான ஆற்றலை அதிகரிக்கும் அதன் நன்கு அறியப்பட்ட நன்மைகளுக்காக, உணவுகளை சமைக்கும் போது அதை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் கூந்தல் வளர்ச்சி தொடக்கம் உடல் எடையை கட்டுப்படுத்து வரையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது. காலையில் கறிவேப்பிலை நீரைக் குடிப்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதன் மருத்துவ பயன்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். கறிவேப்பிலை நீரில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக இருப்பதால், கறிவேப்பிலை நீரான உங்கள் நாளைத் தொடங்குவதற்கு ஒரு ஆரோக்கியமாக ஆரம்பமாக இருக்கும். ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பானம், உடலை உற்சாகப்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுவதாக மருத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எந்தவொரு ஆக்ஸிஜனேற்ற நிறைந்த மூலப்பொருளும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், இதனால் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை வலுவாக குறைக்க முடியும். ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுபடுத்தும். மேலும் இது கூந்தல் வளர்ச்சியை தூண்டி, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலை கொடுக்கும். இந்த கறிவேப்பிலை தண்ணீரை தொடர்ச்சியாக பருகி வருவதால், எடை இழப்பிற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் முன்கூட்டியே கூந்தல் நரைப்பதைத் தடுக்கிறது, மேலும் உச்சந்தலையை வளர்க்கிறது, முடியை பளபளப்பாகவும், துடிப்பாகவும், மீள்தன்மையுடனும் வைத்திருப்பதற்கு காரணமாக இருக்கின்றது. செரிமானத்திற்கு உதவுகிறது கறிவேப்பிலையில் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் செரிமான நொதிகள் உள்ளன. “கறிவேப்பிலை நீர் ஒரு லேசான மலமிளக்கியாகவும் செயல்படுகிறது, செரிமான அமைப்பை மெதுவாகத் தூண்டுவதன் மூலம் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. அதன் இயற்கையான பண்புகள் குடலில் கடுமையான அல்லது திடீர் விளைவுகளை ஏற்படுத்தாமல் மலச்சிக்கலைப் போக்குவதில் சிறப்பாக செயல்படுவதுடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
    0 Reacties ·0 aandelen ·612 Views ·0 voorbeeld
  • உயிரை விட ரீல்ஸ் முக்கியமா..? 😡😡😱😱😱😱😱😱😱😱😡😡😡😡
    இராமநாதபுரம்: இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக ஆபத்தை விலைகொடுத்து வாங்குவது போன்று பாம்பன் பாலத்தின் மையத்தில் இருந்து கடலில் குதித்துள்ளார்
    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், ஆபத்தான செயலை செய்த இளைஞர் யார்? என போலீசார் விசாரணை
    உயிரை விட ரீல்ஸ் முக்கியமா..? 😡😡😱😱😱😱😱😱😱😱😡😡😡😡 இராமநாதபுரம்: இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக ஆபத்தை விலைகொடுத்து வாங்குவது போன்று பாம்பன் பாலத்தின் மையத்தில் இருந்து கடலில் குதித்துள்ளார் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், ஆபத்தான செயலை செய்த இளைஞர் யார்? என போலீசார் விசாரணை
    0 Reacties ·0 aandelen ·676 Views ·0 voorbeeld
Idaivelai.com https://idaivelai.com