உங்களுக்காக ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து நீங்களும் உங்களுடைய பதிவுகளை இங்கே பதிவு செய்ய முடியும்.
-
'குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..
இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்..
பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்..
தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்.. அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.
'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்..
ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?
பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம்.
இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள். அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?
சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா?
சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.
மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல், பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள்.
தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.
•குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.
•ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது..
•அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது..
•தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது..
• மற்றவர்களை மன்னிப்பது..
•தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது..
போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம்.
இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் புத்திசாலித்தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை.
எனவே, 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்......❤'குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்.. இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்.. பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்.. தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்.. அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை. 'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்.. ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்? பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம். இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள். அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா? சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா? சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள். மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல், பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள். தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள். •குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். •ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது.. •அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது.. •தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது.. • மற்றவர்களை மன்னிப்பது.. •தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது.. போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம். இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் புத்திசாலித்தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை. எனவே, 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்......❤0 Comments ·0 Shares ·54 Views ·0 Reviews -
அரசமர இலையின் அற்புத பயன்கள்...
நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும். அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம்.
அரசமரம்
அரசமரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் வீட்டின் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது. ஆனால் நாம் அரசமர இலைகளை சமையலுக்கு பயன்படும் பொருளாக மட்டுமே அறிவோம்.
சளி மற்றும் காய்ச்சல்
தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் அரசமர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.
ஆஸ்துமா
அரசமர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையதுதான். அரசமர இலைகளையும், காய்களையும் எடுத்து காயவைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர் அவற்றை சமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த பொடியை நீருடன்கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் விரைவில் அற்புத பலனையளிக்கும்.
கண்வலி
அரசமரத்து இலைகளின் பால் கண்வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். கண்வலி இருக்கும்போது அரசமர இலைகளை கசக்கி அதனை கண்களில் ஊற்றினால் சில நிமிடங்களில் வலி குறைய தொடங்கும்.
பல் ஆரோக்கியம்
அரசமரத்தின் கொளுந்து இலைகள் அல்லது புதியதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்குவது பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு பற்களை பாக்டீரிய தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
பாம்புக்கடி
ஒருவேளை பாம்புக்கடித்துவிட்டால் அரசமர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் கொடுத்தால் அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது.
மஞ்சள் காமாலை
இளஞ்சிவப்பான அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தக்கூடியது.
சருமபாதுகாப்பு
இதன் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில் இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்தும் குடிக்கலாம்.
கல்லீரல் பாதுகாப்பு
சில இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை செய்வது மிகச்சிறந்த பலனையளிக்கும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலை குணமாக்க இது சிறந்த மருந்து. சிறிதளவு அரசமர இலையின் தூள், சோம்பு மற்றும் வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும். இதனை பாலுடன் கலந்து தூங்க செல்லும்முன் குடிக்கவும். சிலமணி நேரங்களிலியே உடனடி நிவாரணத்தை உணரலாம்.
இதய ஆரோக்கியம்
சில மென்மையான இலைகளை எடுத்துக்கொண்டு அதனை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். காலையில் தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் அது இதயம் படபடப்பாய் உணர்வதை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்.
வயிற்றுப்போக்கு
சில கொளுந்து அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது கொத்தமல்லி தழைகளை சேர்த்து பின் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து வாயில் போட்டு மென்றால்வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வை பெறலாம்.
சர்க்கரைநோய்
சர்க்கரைநோய் பிரச்சினை உள்ளவர்கள் அரசமர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்துவர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு தானாக குறையும்.
இரத்த சுத்திகரிப்பு
சிறிதளவு அரசமர விதை தூளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். இரைப்பை சார்ந்த கோளாறுகள் உள்ளவர்கள் இதில் கசாயம் தயாரித்து அதனுடன் தென் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.அரசமர இலையின் அற்புத பயன்கள்... நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும். அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம். அரசமரம் அரசமரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் வீட்டின் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது. ஆனால் நாம் அரசமர இலைகளை சமையலுக்கு பயன்படும் பொருளாக மட்டுமே அறிவோம். சளி மற்றும் காய்ச்சல் தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் அரசமர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும். ஆஸ்துமா அரசமர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையதுதான். அரசமர இலைகளையும், காய்களையும் எடுத்து காயவைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர் அவற்றை சமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த பொடியை நீருடன்கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் விரைவில் அற்புத பலனையளிக்கும். கண்வலி அரசமரத்து இலைகளின் பால் கண்வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். கண்வலி இருக்கும்போது அரசமர இலைகளை கசக்கி அதனை கண்களில் ஊற்றினால் சில நிமிடங்களில் வலி குறைய தொடங்கும். பல் ஆரோக்கியம் அரசமரத்தின் கொளுந்து இலைகள் அல்லது புதியதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்குவது பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு பற்களை பாக்டீரிய தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்கிறது. பாம்புக்கடி ஒருவேளை பாம்புக்கடித்துவிட்டால் அரசமர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் கொடுத்தால் அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது. மஞ்சள் காமாலை இளஞ்சிவப்பான அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தக்கூடியது. சருமபாதுகாப்பு இதன் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில் இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்தும் குடிக்கலாம். கல்லீரல் பாதுகாப்பு சில இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை செய்வது மிகச்சிறந்த பலனையளிக்கும். மலச்சிக்கல் மலச்சிக்கலை குணமாக்க இது சிறந்த மருந்து. சிறிதளவு அரசமர இலையின் தூள், சோம்பு மற்றும் வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும். இதனை பாலுடன் கலந்து தூங்க செல்லும்முன் குடிக்கவும். சிலமணி நேரங்களிலியே உடனடி நிவாரணத்தை உணரலாம். இதய ஆரோக்கியம் சில மென்மையான இலைகளை எடுத்துக்கொண்டு அதனை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். காலையில் தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் அது இதயம் படபடப்பாய் உணர்வதை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும். வயிற்றுப்போக்கு சில கொளுந்து அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது கொத்தமல்லி தழைகளை சேர்த்து பின் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து வாயில் போட்டு மென்றால்வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வை பெறலாம். சர்க்கரைநோய் சர்க்கரைநோய் பிரச்சினை உள்ளவர்கள் அரசமர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்துவர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு தானாக குறையும். இரத்த சுத்திகரிப்பு சிறிதளவு அரசமர விதை தூளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். இரைப்பை சார்ந்த கோளாறுகள் உள்ளவர்கள் இதில் கசாயம் தயாரித்து அதனுடன் தென் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.0 Comments ·0 Shares ·89 Views ·0 Reviews -
ஒரு ஊர்ல ரெண்டு திருடனுங்க
இருந்தானுங்க . ஒருநாள் பெரிய
மாம்பழ தோட்டத்துல திருடிட்டு
இருக்குறப்போ அந்த தோட்டத்தோட
முதலாளி அங்க வந்துட்டு இருக்குறத
பார்க்குறானுங்க ..
இவனுங்க மாம்பழங்களை திருடுறத
அந்த முதலாளியும் பார்த்துட்டு
அவங்கள துரத்துறாரு..
"அசிங்கமா கெட்ட வார்த்தைங்கள
சொல்லி திட்டிட்டு துரத்த" இவனுங்க
வேகமா ஓடிட்டே இருக்கானுங்க..
ரெண்டு பேரும் தூரமா ஒரு சுடுகாடு
இருக்குறத பார்த்துட்டு அதுக்குள்ள
போயிட்டா தப்பிச்சிரலாம்னு நெனச்சு
அங்க போறானுங்க..🫠
கதவு மூடி இருக்குறத பார்த்ததும்,
உடனே ரெண்டு பேரும் சுவர் எகிறி
குதிச்சு உள்ள போறானுங்க. அப்போ
ரெண்டு மாம்பழம் அந்த கதவுக்கு
பக்கத்துல கீழே விழுந்துடுது..
உள்ள ஓடி போன இவனுங்க ஒரு
கல்லறைக்கு பின்னாடி மறைஞ்சிட்டு
திருடிட்டு வந்தத சரியா பங்கு போட
ஆரம்பிக்குறானுங்க..
" ஒண்ணு உனக்கு இன்னோன்னு
எனக்குனு "..
ஒரு குடிகாரன் அந்த சுடுகாட்டுக்கு பக்கமா போயிட்டு இருக்குறான்..
அப்போ அவனுக்கு இந்த குரல்
கேட்குது, " ஒண்ணு உனக்கு இன்னோன்னு எனக்குனு ".. !
பயந்து போன அவன் " ரெண்டு
பேய்ங்கதான் செத்த பிணத்தை
பங்கு போடுதுனு" நெனச்சிட்டு அங்கிருந்து வேகமா ஓடி போறான்..
தலை தெறிக்க ஓடி போனவன்,
ஒரு போலி சாமியார்கிட்ட இதுபோல
சுடுகாட்டுல ரெண்டு பேய் பிணத்தை
பங்கு போடுதுனு சொல்ல..
"கவலைப்படாதே மகனே நான் வந்து பார்க்கிறேன்"னு சாமியார் சொல்றார்.
கூடவே துணைக்கு ஒரு நாயையும் கூட்டிட்டு போறாரு..
இப்போ மூன்று பேரும் சுடுகாட்டுல
வந்து அங்க இருக்குற கதவுக்கு
பக்கத்துல நிற்குறாங்க..
கூட வந்த நாய் தூரத்துல ஒரு
பெண் நாய் இருக்குறத உத்து பார்க்குது. இத அந்த சாமியாரும் சரி.. அந்த குடிகாரனும் கவனிக்கல.
அந்த நேரத்துல திரும்பும் அந்த குரல் சத்தமா கேட்குது , " ஒண்ணு உனக்கு
இன்னொன்னு எனக்குனு " ..
போலி சாமியாரும் அந்த குடிகாரனும்
பயத்தோட நிற்க, திரும்ப அதே குரல் கேட்குது அது என்னனா ..
" கதவுக்கு பக்கத்துல ரெண்டு இருக்கே அதையும் எடுத்துக்கலாம்
ஒண்ணு உனக்கு இன்னோன்னு
எனக்கு"னு..
அதே நேரம் தூரத்துல வர பெண்
நாய பார்த்து இந்த நாய் ஊளையிட
நாய் கண்ணுக்கு பேய் தெரியும்னு
நெனச்சிட்டு.. அந்த சாமியாரும் குடிகாரனும் 'அய்யோ அம்மா'னு
கத்திக்கிட்டே துண்ட காணோம்
துணிய காணோம்னு தலை தெறிக்க
வேகமா ஓடுறாங்க அங்கிருந்து..
இத எல்லாத்தையும் ஒரு பேய் பார்த்துட்டு சிரிச்சிட்டு இருக்குது..
" அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் "😂 ஒரு ஊர்ல ரெண்டு திருடனுங்க இருந்தானுங்க . ஒருநாள் பெரிய மாம்பழ தோட்டத்துல திருடிட்டு இருக்குறப்போ அந்த தோட்டத்தோட முதலாளி அங்க வந்துட்டு இருக்குறத பார்க்குறானுங்க ..🙃 இவனுங்க மாம்பழங்களை திருடுறத அந்த முதலாளியும் பார்த்துட்டு அவங்கள துரத்துறாரு.. 🤬 "அசிங்கமா கெட்ட வார்த்தைங்கள சொல்லி திட்டிட்டு துரத்த" இவனுங்க வேகமா ஓடிட்டே இருக்கானுங்க..🏃♂️ ரெண்டு பேரும் தூரமா ஒரு சுடுகாடு இருக்குறத பார்த்துட்டு அதுக்குள்ள போயிட்டா தப்பிச்சிரலாம்னு நெனச்சு அங்க போறானுங்க..🫠 கதவு மூடி இருக்குறத பார்த்ததும், உடனே ரெண்டு பேரும் சுவர் எகிறி குதிச்சு உள்ள போறானுங்க. அப்போ ரெண்டு மாம்பழம் அந்த கதவுக்கு பக்கத்துல கீழே விழுந்துடுது.. 🤗 உள்ள ஓடி போன இவனுங்க ஒரு கல்லறைக்கு பின்னாடி மறைஞ்சிட்டு திருடிட்டு வந்தத சரியா பங்கு போட ஆரம்பிக்குறானுங்க.. " ஒண்ணு உனக்கு இன்னோன்னு எனக்குனு ".. 🍋🍋😋 ஒரு குடிகாரன் அந்த சுடுகாட்டுக்கு பக்கமா போயிட்டு இருக்குறான்.. 🍻🍾 அப்போ அவனுக்கு இந்த குரல் கேட்குது, " ஒண்ணு உனக்கு இன்னோன்னு எனக்குனு ".. ! 🤭 பயந்து போன அவன் " ரெண்டு பேய்ங்கதான் செத்த பிணத்தை பங்கு போடுதுனு" நெனச்சிட்டு அங்கிருந்து வேகமா ஓடி போறான்.. 😂 தலை தெறிக்க ஓடி போனவன், ஒரு போலி சாமியார்கிட்ட இதுபோல சுடுகாட்டுல ரெண்டு பேய் பிணத்தை பங்கு போடுதுனு சொல்ல.. 😝 "கவலைப்படாதே மகனே நான் வந்து பார்க்கிறேன்"னு சாமியார் சொல்றார். கூடவே துணைக்கு ஒரு நாயையும் கூட்டிட்டு போறாரு.. 😁 இப்போ மூன்று பேரும் சுடுகாட்டுல வந்து அங்க இருக்குற கதவுக்கு பக்கத்துல நிற்குறாங்க.. 😬 கூட வந்த நாய் தூரத்துல ஒரு பெண் நாய் இருக்குறத உத்து பார்க்குது. இத அந்த சாமியாரும் சரி.. அந்த குடிகாரனும் கவனிக்கல. அந்த நேரத்துல திரும்பும் அந்த குரல் சத்தமா கேட்குது , " ஒண்ணு உனக்கு இன்னொன்னு எனக்குனு " .. 🤣 போலி சாமியாரும் அந்த குடிகாரனும் பயத்தோட நிற்க, திரும்ப அதே குரல் கேட்குது அது என்னனா .. 😨😰 " கதவுக்கு பக்கத்துல ரெண்டு இருக்கே அதையும் எடுத்துக்கலாம் ஒண்ணு உனக்கு இன்னோன்னு எனக்கு"னு.. 😨😨 அதே நேரம் தூரத்துல வர பெண் நாய பார்த்து இந்த நாய் ஊளையிட நாய் கண்ணுக்கு பேய் தெரியும்னு நெனச்சிட்டு.. அந்த சாமியாரும் குடிகாரனும் 'அய்யோ அம்மா'னு கத்திக்கிட்டே துண்ட காணோம் துணிய காணோம்னு தலை தெறிக்க வேகமா ஓடுறாங்க அங்கிருந்து..🤣 இத எல்லாத்தையும் ஒரு பேய் பார்த்துட்டு சிரிச்சிட்டு இருக்குது..🤭😬 " அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " 🤣🤣🔥🤸♂️0 Comments ·0 Shares ·81 Views ·0 Reviews -
பல் சொத்தை வருவது ஏன்? தடுக்க வழிமுறைகள் என்ன?
முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் சொல் போகும்' என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பல்லின் அமைப்பு
பல்லானது வேதி அமைப்பில் கால்சியம், பாஸ்பரஸ் தாதுகளால் ஆனது. ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற மேற்பகுதிக்கு மகுடம் (Crown) என்று பெயர். பல், ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதிக்கு வேர் (Root) என்று பெயர். பல் ஈறின் அடிப்பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லுக்குள்ளும் நடுவில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் செல்கின்றன. இந்தப் பகுதிக்குப் பல் கூழ் (Pulp) என்று பெயர். இதைச் சுற்றி டென்டைன் (Dentine) எனும் பகுதியும், அதற்கும் வெளியே வெள்ளை நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் அமைந்திருக்கும் எனாமல் (Enamel) எனும் கடினமான பகுதியும் உள்ளன.
பல் சொத்தை
பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.
பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். காபி, தேநீர் போன்றவற்றை அதிகமாகக் குடிப்பது, புகைபிடிப்பது, பான்மசாலா/வெற்றிலை பாக்குப் போடுவது போன்ற பழக்கங்களால் பற்களில் காரை படியும். இதில் பாக்டீரியாக்கள் சந்தோஷமாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழுந்து, பற்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.
குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவார்கள். அப்போது பற்களின் மேல் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் பல் சொத்தை வரலாம்.
அறிகுறி என்ன?
சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி அல்லது கோடு தெரியும். அங்குக் குழி விழும். காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், கழுத்து வலி, காது வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.
சிகிச்சை என்ன?
முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும்.
எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘ஃபில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ (Root canal treatment) செய்யப்பட வேண்டும்.
ரூட் கனால் சிகிச்சை
இந்தச் சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழைத் துப்புரவாக அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’ (Gutta-percha resin), ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் (Eugenol) கலந்த வேதிப்பொருளைக் கொண்டு நிரப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தப் பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித் தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்குப் பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
செயற்கை பல்
சிலர் சொத்தை விழுந்த பல்லை எடுத்து விடுகின்றனர். ஆனால், பதிலுக்கு அந்த இடத்தில் செயற்கைப் பல்லைக் கட்டுவதில்லை. இது தவறு. இதனால் அருகில் உள்ள பற்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பற்கள் பக்கத்தில் சாய்ந்துவிடலாம். இடைவெளி அதிகமாகிவிடலாம். அப்போது நாக்கை அடிக் கடி கடித்துக்கொள்ள வேண்டி வரும். பல பற்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பேச்சு குழறும்.
சொத்தையைத் தடுக்க வழி
# காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
# ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் 'டிசென்சடைசிங்' பற்பசையைப் பயன்படுத்தலாம்.
# பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.
# கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.
# பல் துலக்கியைப் பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.
# ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும்.
# குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.
# தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.
# வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.
# பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
# காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
# வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
# குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.
# குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன.
# குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.
# தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.
# நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.
# ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்பல் சொத்தை வருவது ஏன்? தடுக்க வழிமுறைகள் என்ன? முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் சொல் போகும்' என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். பல்லின் அமைப்பு பல்லானது வேதி அமைப்பில் கால்சியம், பாஸ்பரஸ் தாதுகளால் ஆனது. ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற மேற்பகுதிக்கு மகுடம் (Crown) என்று பெயர். பல், ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதிக்கு வேர் (Root) என்று பெயர். பல் ஈறின் அடிப்பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லுக்குள்ளும் நடுவில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் செல்கின்றன. இந்தப் பகுதிக்குப் பல் கூழ் (Pulp) என்று பெயர். இதைச் சுற்றி டென்டைன் (Dentine) எனும் பகுதியும், அதற்கும் வெளியே வெள்ளை நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் அமைந்திருக்கும் எனாமல் (Enamel) எனும் கடினமான பகுதியும் உள்ளன. பல் சொத்தை பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன. பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். காபி, தேநீர் போன்றவற்றை அதிகமாகக் குடிப்பது, புகைபிடிப்பது, பான்மசாலா/வெற்றிலை பாக்குப் போடுவது போன்ற பழக்கங்களால் பற்களில் காரை படியும். இதில் பாக்டீரியாக்கள் சந்தோஷமாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழுந்து, பற்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும். குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவார்கள். அப்போது பற்களின் மேல் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் பல் சொத்தை வரலாம். அறிகுறி என்ன? சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி அல்லது கோடு தெரியும். அங்குக் குழி விழும். காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், கழுத்து வலி, காது வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும். சிகிச்சை என்ன? முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும். எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘ஃபில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ (Root canal treatment) செய்யப்பட வேண்டும். ரூட் கனால் சிகிச்சை இந்தச் சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழைத் துப்புரவாக அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’ (Gutta-percha resin), ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் (Eugenol) கலந்த வேதிப்பொருளைக் கொண்டு நிரப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தப் பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித் தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்குப் பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. செயற்கை பல் சிலர் சொத்தை விழுந்த பல்லை எடுத்து விடுகின்றனர். ஆனால், பதிலுக்கு அந்த இடத்தில் செயற்கைப் பல்லைக் கட்டுவதில்லை. இது தவறு. இதனால் அருகில் உள்ள பற்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பற்கள் பக்கத்தில் சாய்ந்துவிடலாம். இடைவெளி அதிகமாகிவிடலாம். அப்போது நாக்கை அடிக் கடி கடித்துக்கொள்ள வேண்டி வரும். பல பற்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பேச்சு குழறும். சொத்தையைத் தடுக்க வழி # காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். # ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் 'டிசென்சடைசிங்' பற்பசையைப் பயன்படுத்தலாம். # பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது. # கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது. # பல் துலக்கியைப் பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது. # ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும். # குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும். # தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும். # வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும். # பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். # காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது. # வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். # குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது. # குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன. # குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும். # தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும். # நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும். # ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்💔0 Comments ·0 Shares ·111 Views ·0 Reviews -
ஒரு இளைஞன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான்.
அது ஒரு பழைய புத்தகக் கடை.
ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு.
பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு...
தலை நிறையா வெள்ளை முடி.
சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு..
இளைஞனுக்கு ஒரே பயம்.
இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான்.
கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி.
இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான். “பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு.
இளைஞன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான்.
தாத்தா அவனை கோபமா பார்த்தார்.
“இந்த புத்தகம் பயங்கரமானது.
இதோட விலை ரூ. #500
ஆனா இந்த புத்தகத்தை வாங்கி படிச்சவங்கள பேய்கள் சும்மா விடாது.
இதைப் படிச்ச இரண்டு பேர் இருதயம் வெடிச்சு செத்துட்டாங்க.
நீ இந்த புத்தகத்தைப் படி.
ஆனா ஒரு நிபந்தனை.
கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காத”.
இளைஞன் புத்தகத்துடன் வீடு திரும்பினான்.
நிசப்தமான இரவு. 11 மணி.
இளைஞன் புத்தகம் முழுவதும் படித்து விட்டான்.
கடைசி பக்கம் மட்டும் படிக்கவில்லை.
மேஜையில் அந்த புத்தகம் காற்றில் ஒவ்வொரு பக்கமாக புரண்டது.
கடைசி பக்கம் படிக்கலாமா வேண்டாமா என்ற பயம் கலந்த ஆசை அவனுக்கு.
விதி அவனையும் விடவில்லை.
காற்று புத்தகத்தை புரட்டி கடைசி பக்கத்தை நெருங்கியது.
இளைஞனுக்கு பயத்தால் வியர்த்தது.
கடைசி பக்கத்தை படித்த இளைஞனின் இருதயம் வெடித்தது
அதில் இருந்த ஒரு வரியால்.......
.
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?????
?
?
?
?
?
?
விலை ரூ.#15ஒரு இளைஞன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான். அது ஒரு பழைய புத்தகக் கடை. ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு. பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு... தலை நிறையா வெள்ளை முடி. சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு.. இளைஞனுக்கு ஒரே பயம். இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான். கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி. இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான். “பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு. இளைஞன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான். தாத்தா அவனை கோபமா பார்த்தார். “இந்த புத்தகம் பயங்கரமானது. இதோட விலை ரூ. #500 ஆனா இந்த புத்தகத்தை வாங்கி படிச்சவங்கள பேய்கள் சும்மா விடாது. இதைப் படிச்ச இரண்டு பேர் இருதயம் வெடிச்சு செத்துட்டாங்க. நீ இந்த புத்தகத்தைப் படி. ஆனா ஒரு நிபந்தனை. கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காத”. இளைஞன் புத்தகத்துடன் வீடு திரும்பினான். நிசப்தமான இரவு. 11 மணி. இளைஞன் புத்தகம் முழுவதும் படித்து விட்டான். கடைசி பக்கம் மட்டும் படிக்கவில்லை. மேஜையில் அந்த புத்தகம் காற்றில் ஒவ்வொரு பக்கமாக புரண்டது. கடைசி பக்கம் படிக்கலாமா வேண்டாமா என்ற பயம் கலந்த ஆசை அவனுக்கு. விதி அவனையும் விடவில்லை. காற்று புத்தகத்தை புரட்டி கடைசி பக்கத்தை நெருங்கியது. இளைஞனுக்கு பயத்தால் வியர்த்தது. கடைசி பக்கத்தை படித்த இளைஞனின் இருதயம் வெடித்தது அதில் இருந்த ஒரு வரியால்....... . ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ????? ? ? ? ? ? ? விலை ரூ.#150 Comments ·0 Shares ·101 Views ·0 Reviews
More Stories