• மானங்கெட்ட உலகமடா எதையும் சரியாக விசாரிக்காம இப்படியா அடித்து துன்புறுத்துவாங்கள் ஒரு சில இந்திய காட்டுமிராண்டி மீனவர்களால்
    யாழ்ப்பாணம் மீனவர் மீது கொடூர தாக்குதல்
    கடல் கொள்ளையர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தி
    தமிழக பொலிஸ் கைது செய்து அழைத்து சென்றுள்ளது.
    என்னோட நாட்டுக்குள் அத்துமீறும் நீ கடல் கொள்ளையனா?
    இல்லை இலங்கை மீனவன் கடல் கொள்ளையனா?
    இந்த மீனவர் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்க.
    இலங்கை கடல் தொழில் அமைச்சர் கண்களுக்கு செல்லும் வரைக்கும்.
    இந்த செய்தியை கொண்டு சேருங்கள்
    மானங்கெட்ட உலகமடா எதையும் சரியாக விசாரிக்காம இப்படியா அடித்து துன்புறுத்துவாங்கள் ஒரு சில இந்திய காட்டுமிராண்டி மீனவர்களால் யாழ்ப்பாணம் மீனவர் மீது கொடூர தாக்குதல் கடல் கொள்ளையர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தி தமிழக பொலிஸ் கைது செய்து அழைத்து சென்றுள்ளது. என்னோட நாட்டுக்குள் அத்துமீறும் நீ கடல் கொள்ளையனா? இல்லை இலங்கை மீனவன் கடல் கொள்ளையனா? இந்த மீனவர் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்க. இலங்கை கடல் தொழில் அமைச்சர் கண்களுக்கு செல்லும் வரைக்கும். இந்த செய்தியை கொண்டு சேருங்கள்
    0 Kommentare ·0 Geteilt ·131 Ansichten ·0 Bewertungen
  • மனிதன் மிருகத்தைக்கூட விட்டுவைக்கவில்லை ஏமாற்றுவதில்
    மனிதன் மிருகத்தைக்கூட விட்டுவைக்கவில்லை ஏமாற்றுவதில்
    0 Kommentare ·0 Geteilt ·597 Ansichten ·2 Plays ·0 Bewertungen
  • என்னதான் அதிகமான வாக்கு செலுத்தினாலும் காசு கொடுத்து வாங்கிய வாக்கு தான் பெருமைப்பட ஒன்னுமே இல்லை...
    என்னதான் அதிகமான வாக்கு செலுத்தினாலும் காசு கொடுத்து வாங்கிய வாக்கு தான் பெருமைப்பட ஒன்னுமே இல்லை...
    0 Kommentare ·0 Geteilt ·612 Ansichten ·0 Bewertungen
  • மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள்.

    மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

    மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன.

    பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil

    பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம்,

    இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA

    அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன.

    அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன.

    வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது.

    ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway
    மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

    இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China
    சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது.

    அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia
    ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது.

    மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள். மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம், இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன. வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது. ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது. அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது. மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    0 Kommentare ·0 Geteilt ·8KB Ansichten ·0 Bewertungen
  • ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Kommentare ·0 Geteilt ·11KB Ansichten ·0 Bewertungen
  • கிரிக்கெட் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிவதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டுவது என்பது தனி ஒரு கலை!

    2015 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தில்ஷன் செய்த அந்த தரமான சம்பவம் இன்றும் நம் கண்களுக்குள் நிற்கிறது.

    மிட்செல் ஜான்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வது என்பதே பலருக்கு சவாலாக இருந்த காலத்தில், அந்த ஓவரை தில்ஷன் தன் ஆளுமையால் கட்டிப்போட்டார்.

    முதல் பந்தை மிட்-ஆப் திசையில் தட்டிவிட்டு பவுண்டரியை கணக்கைத் தொடங்கியவர், அடுத்தடுத்த பந்துகளில் கார்னர், கவர்ஸ், மற்றும் தனக்கே உரித்தான ஷாட்கள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடித்தார்.

    ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டைத் தொடும்போது ஆஸ்திரேலிய அணியின் முகத்தில் தெரிந்த அந்த திகைப்பு, திலஷனின் பேட்டிங் வலிமைக்குச் சாட்சி.

    பவுலர்கள் லைன் மற்றும் லென்த்தை மாற்றினாலும், தில்ஷன் அன்று வேறொரு மனநிலையில் இருந்தார். ஒரு ஓவரில் ஆறு ஃபோர்கள் அடிப்பது என்பது வெறும் டைமிங் மட்டுமல்ல, அது பந்துவீச்சாளரின் தன்னம்பிக்கையை மொத்தமாகச் சிதைக்கும் ஒரு யுத்தி.

    கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை!

    #cricket #tamilcricket #NationalChampionship #Dilshan #cricketlovers
    கிரிக்கெட் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிவதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டுவது என்பது தனி ஒரு கலை! 2015 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தில்ஷன் செய்த அந்த தரமான சம்பவம் இன்றும் நம் கண்களுக்குள் நிற்கிறது. மிட்செல் ஜான்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வது என்பதே பலருக்கு சவாலாக இருந்த காலத்தில், அந்த ஓவரை தில்ஷன் தன் ஆளுமையால் கட்டிப்போட்டார். முதல் பந்தை மிட்-ஆப் திசையில் தட்டிவிட்டு பவுண்டரியை கணக்கைத் தொடங்கியவர், அடுத்தடுத்த பந்துகளில் கார்னர், கவர்ஸ், மற்றும் தனக்கே உரித்தான ஷாட்கள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடித்தார். ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டைத் தொடும்போது ஆஸ்திரேலிய அணியின் முகத்தில் தெரிந்த அந்த திகைப்பு, திலஷனின் பேட்டிங் வலிமைக்குச் சாட்சி. பவுலர்கள் லைன் மற்றும் லென்த்தை மாற்றினாலும், தில்ஷன் அன்று வேறொரு மனநிலையில் இருந்தார். ஒரு ஓவரில் ஆறு ஃபோர்கள் அடிப்பது என்பது வெறும் டைமிங் மட்டுமல்ல, அது பந்துவீச்சாளரின் தன்னம்பிக்கையை மொத்தமாகச் சிதைக்கும் ஒரு யுத்தி. கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை! #cricket #tamilcricket #NationalChampionship #Dilshan #cricketlovers
    0 Kommentare ·0 Geteilt ·11KB Ansichten ·0 Bewertungen
  • 🌿 செல்லுலைட் (Cellulite) – எளிய விளக்கம்

    செல்லுலைட் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றம்.
    இது வெறும் கொழுப்பு அல்லது எடை அதிகம் இருப்பதால் மட்டும் வருவது இல்லை.

    👉 இது உண்மையில்:

    • இரத்த ஓட்டம் குறைவது
    • லிம்ப் (Lymph) திரவம் தேங்குவது
    • தோல் கீழ் திசுக்கள் இறுக்கம் அடைவது
    • உடலுக்குள் உள்ள அழற்சி (inflammation)

    இதனால் உருவாகும் ஒரு நிலை.

    ---

    🔍 நாம் வெளியில் பார்க்குவது

    தோலில்:

    • குழிகள்
    • ஆரஞ்சு தோல் போல uneven texture

    ஏன் வருகிறது?

    • கொழுப்பு செல்கள் மேலே தள்ளும்
    • இணைப்பு திசுக்கள் (connective tissue) கீழே இழுக்கும்
    • நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கும்

    ➡️ இதனால் தோலில் குழிகள் தெரிகிறது.

    ---

    🧬 தோலுக்குள் என்ன நடக்கிறது?

    • கொழுப்பு செல்கள் பெரிதாகும்
    • லிம்ப் நாளங்கள் அடைபடும்
    • இரத்த நாளங்கள் சுருங்கும்
    • ஆக்ஸிஜன் சரியாக செல்லாது

    ➡️ இங்குதான் செல்லுலைட் ஆரம்பமாகிறது.

    ---

    💚 லிம்ப் சிஸ்டம் (Lymph system) முக்கியம்

    லிம்ப் சிஸ்டம் உடலின் குப்பை அகற்றும் அமைப்பு 🧹

    அது:

    • அதிக நீரை வெளியேற்றும்
    • கழிவுகளை நீக்கும்
    • அழற்சியை குறைக்கும்
    • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்

    ⚠️ இதற்கு இதயம் போல pump இல்லை.

    அது இயங்க வேண்டுமெனில்:

    • உடல் இயக்கம்
    • ஆழ்ந்த மூச்சு
    • நீர் அதிகம் குடித்தல்
    • மன அமைதி

    தேவை.

    ---

    🚫 லிம்ப் ஓட்டம் மந்தமாக இருந்தால்:

    • நீர் தேங்கும்
    • கொழுப்பு செல்கள் வீங்கும்
    • அழற்சி அதிகரிக்கும்
    • தோல் கடினமாகும்

    ➡️ இதுவே செல்லுலைட்.

    ---

    👗 ஏன் தொடை & இடுப்பில் அதிகம்?

    ஏனெனில்:

    • Gravity காரணமாக திரவம் கீழே தேங்கும்
    • நீண்ட நேரம் உட்கார்வது
    • இப்பகுதியில் கொழுப்பு அதிகம்
    • பெண்கள் ஹார்மோன் (estrogen) அதிகம்
    • லிம்ப் பாதை நீளம் அதிகம்

    ➡️ அதனால் மெலிந்த பெண்களுக்கும் செல்லுலைட் இருக்கும்.

    ---

    ⚖️ செல்லுலைட் = எடை பிரச்சனை இல்லை

    நீங்கள்:

    • எடை குறைத்தாலும்
    • தினமும் exercise செய்தாலும்
    • நல்ல உணவு சாப்பிட்டாலும்

    செல்லுலைட் இருக்கலாம்.

    ஏனெனில் இது:

    • திரவ அழுத்தம்
    • தோல் திசு இறுக்கம்
    • லிம்ப் அடைப்பு
    • இரத்த ஓட்டம்
    • உடல் அழற்சி

    இவற்றால் வருகிறது – கொழுப்பால் மட்டும் இல்லை.

    ---

    🧠 ஹார்மோன் & மன அழுத்தம்

    அதிக stress & hormone imbalance:

    • தோல் திசுக்களை கடினமாக்கும்
    • லிம்ப் நாளங்களை சுருக்கும்
    • நீர் தேங்க வைக்கும்

    ➡️ செல்லுலைட் ஒரு உடல் சிக்னல் – குறை இல்லை.

    ---

    🧴 கிரீம்கள் ஏன் முழுமையாக வேலை செய்யாது?

    கிரீம்கள்:

    • தோலை மென்மையாக்கும்
    • மேல்மட்ட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

    ஆனால்:

    • ஆழமான லிம்ப் அடைப்பை சரி செய்யாது
    • உள்ளழற்சியை நீக்காது

    உண்மையான மாற்றம் உள்ளிருந்து தான்.

    ---

    🌿 உண்மையான தீர்வு

    உதவி செய்ய வேண்டியது:

    • லிம்ப் drainage
    • உடல் stretching / massage
    • ஆழ்ந்த மூச்சு
    • நீர் அதிகம்
    • அழற்சி குறைக்கும் உணவு
    • மன அமைதி

    இதனால்:

    • நீர் தேக்கம் குறையும்
    • கொழுப்பு மென்மையாகும்
    • தோல் மென்மையாகும்

    ---

    🤍 முடிவு

    செல்லுலைட்:

    ❌ உடல் குறை இல்லை
    ✅ உடல் உதவி கேட்கும் ஒரு அறிகுறி

    👉 அது ஒரு செய்தி… தவறு இல்லை.
    👉 உடல் பழுதில்லை… சுமை அதிகமாகியுள்ளது.

    உடலை எதிர்க்காமல் கவனித்தால், அது நிச்சயம் நல்ல பதில் தரும் 💚

    ---

    #CelluliteAwareness
    #LymphaticHealth
    #WomenHealthTamil
    #BodyScience
    #SkinHealth
    #NaturalHealing
    #TamilHealthTips
    #WellnessTamil
    #HormoneHealth
    #HealthyBodyMind
    #NoBodyShaming
    #RealWomenRealBodies
    #InflammationAwareness
    #SelfCareTamil
    #HealthEducation
    🌿 செல்லுலைட் (Cellulite) – எளிய விளக்கம் செல்லுலைட் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றம். இது வெறும் கொழுப்பு அல்லது எடை அதிகம் இருப்பதால் மட்டும் வருவது இல்லை. 👉 இது உண்மையில்: • இரத்த ஓட்டம் குறைவது • லிம்ப் (Lymph) திரவம் தேங்குவது • தோல் கீழ் திசுக்கள் இறுக்கம் அடைவது • உடலுக்குள் உள்ள அழற்சி (inflammation) இதனால் உருவாகும் ஒரு நிலை. --- 🔍 நாம் வெளியில் பார்க்குவது தோலில்: • குழிகள் • ஆரஞ்சு தோல் போல uneven texture ஏன் வருகிறது? • கொழுப்பு செல்கள் மேலே தள்ளும் • இணைப்பு திசுக்கள் (connective tissue) கீழே இழுக்கும் • நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கும் ➡️ இதனால் தோலில் குழிகள் தெரிகிறது. --- 🧬 தோலுக்குள் என்ன நடக்கிறது? • கொழுப்பு செல்கள் பெரிதாகும் • லிம்ப் நாளங்கள் அடைபடும் • இரத்த நாளங்கள் சுருங்கும் • ஆக்ஸிஜன் சரியாக செல்லாது ➡️ இங்குதான் செல்லுலைட் ஆரம்பமாகிறது. --- 💚 லிம்ப் சிஸ்டம் (Lymph system) முக்கியம் லிம்ப் சிஸ்டம் உடலின் குப்பை அகற்றும் அமைப்பு 🧹 அது: • அதிக நீரை வெளியேற்றும் • கழிவுகளை நீக்கும் • அழற்சியை குறைக்கும் • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் ⚠️ இதற்கு இதயம் போல pump இல்லை. அது இயங்க வேண்டுமெனில்: • உடல் இயக்கம் • ஆழ்ந்த மூச்சு • நீர் அதிகம் குடித்தல் • மன அமைதி தேவை. --- 🚫 லிம்ப் ஓட்டம் மந்தமாக இருந்தால்: • நீர் தேங்கும் • கொழுப்பு செல்கள் வீங்கும் • அழற்சி அதிகரிக்கும் • தோல் கடினமாகும் ➡️ இதுவே செல்லுலைட். --- 👗 ஏன் தொடை & இடுப்பில் அதிகம்? ஏனெனில்: • Gravity காரணமாக திரவம் கீழே தேங்கும் • நீண்ட நேரம் உட்கார்வது • இப்பகுதியில் கொழுப்பு அதிகம் • பெண்கள் ஹார்மோன் (estrogen) அதிகம் • லிம்ப் பாதை நீளம் அதிகம் ➡️ அதனால் மெலிந்த பெண்களுக்கும் செல்லுலைட் இருக்கும். --- ⚖️ செல்லுலைட் = எடை பிரச்சனை இல்லை நீங்கள்: • எடை குறைத்தாலும் • தினமும் exercise செய்தாலும் • நல்ல உணவு சாப்பிட்டாலும் செல்லுலைட் இருக்கலாம். ஏனெனில் இது: • திரவ அழுத்தம் • தோல் திசு இறுக்கம் • லிம்ப் அடைப்பு • இரத்த ஓட்டம் • உடல் அழற்சி இவற்றால் வருகிறது – கொழுப்பால் மட்டும் இல்லை. --- 🧠 ஹார்மோன் & மன அழுத்தம் அதிக stress & hormone imbalance: • தோல் திசுக்களை கடினமாக்கும் • லிம்ப் நாளங்களை சுருக்கும் • நீர் தேங்க வைக்கும் ➡️ செல்லுலைட் ஒரு உடல் சிக்னல் – குறை இல்லை. --- 🧴 கிரீம்கள் ஏன் முழுமையாக வேலை செய்யாது? கிரீம்கள்: • தோலை மென்மையாக்கும் • மேல்மட்ட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆனால்: • ஆழமான லிம்ப் அடைப்பை சரி செய்யாது • உள்ளழற்சியை நீக்காது உண்மையான மாற்றம் உள்ளிருந்து தான். --- 🌿 உண்மையான தீர்வு உதவி செய்ய வேண்டியது: • லிம்ப் drainage • உடல் stretching / massage • ஆழ்ந்த மூச்சு • நீர் அதிகம் • அழற்சி குறைக்கும் உணவு • மன அமைதி இதனால்: • நீர் தேக்கம் குறையும் • கொழுப்பு மென்மையாகும் • தோல் மென்மையாகும் --- 🤍 முடிவு செல்லுலைட்: ❌ உடல் குறை இல்லை ✅ உடல் உதவி கேட்கும் ஒரு அறிகுறி 👉 அது ஒரு செய்தி… தவறு இல்லை. 👉 உடல் பழுதில்லை… சுமை அதிகமாகியுள்ளது. உடலை எதிர்க்காமல் கவனித்தால், அது நிச்சயம் நல்ல பதில் தரும் 💚 --- #CelluliteAwareness #LymphaticHealth #WomenHealthTamil #BodyScience #SkinHealth #NaturalHealing #TamilHealthTips #WellnessTamil #HormoneHealth #HealthyBodyMind #NoBodyShaming #RealWomenRealBodies #InflammationAwareness #SelfCareTamil #HealthEducation
    0 Kommentare ·0 Geteilt ·12KB Ansichten ·0 Bewertungen
  • பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!!

    2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

    விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார்.

    மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார்.

    ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள்.

    அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது

    ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார்.
    என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார்.

    எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது....

    தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

    அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!! 2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார். ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள். அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார். என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார். எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது.... தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    0 Kommentare ·0 Geteilt ·10KB Ansichten ·0 Bewertungen
  • குழந்தைகளின் சளி மற்றும் இருமலுக்கு ஒரு அற்புதமான இயற்கை 'ஆன்டி-வைரஸ்' தீர்வு! ✨🛡️

    ​தேவையான பொருட்கள்

    ​🧅 பெரிய வெங்காயம் - 1 (தோல் நீக்கியது)
    📌 கிராம்பு - 5 முதல் 10 வரை

    ​எளிமையான செய்முறை & பயன்கள்

    ​🌿 தயாரிப்பு: ஒரு பெரிய வெங்காயத்தின் தோலை நீக்கி, அதை இரண்டாக நறுக்கி அதன் மேல் கிராம்புகளை அழகாகச் சொருகி வையுங்கள்.

    ​🌙 பயன்படுத்தும் முறை: உங்கள் செல்லக் குழந்தை உறங்கும் இடத்திற்கு அருகே (குழந்தைக்கு எட்டாத உயரத்தில்) ஒரு தட்டில் வைத்துவிடவும்.

    ​🌬️ இயற்கை சுத்திகரிப்பு: வெங்காயத்தின் 'சல்பர்' மற்றும் கிராம்பின் மருத்துவக் குணங்கள் காற்றில் பரவி, ஒரு இயற்கை ஏர்-பியூரிஃபையர் போலச் செயல்படும்.

    ​🩺 சுவாச மேன்மை: இது சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைச் சீராக்கி, தொந்தரவில்லாத சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கும்.

    ​🦠 வைரஸ் எதிர்ப்பு: காற்றில் பரவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இந்த மணத்திற்கு உண்டு.

    ​😴 ஆழ்ந்த உறக்கம்: சளி மற்றும் மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகள் இரவு முழுவதும் எவ்வித இடையூறும் இன்றி நிம்மதியாக உறங்க இது பெரிதும் உதவும்.

    ​#ColdRemedy #NaturalHealing #KidsHealth #HomeRemedies #OnionCloveRemedy #CoughRelief #HealthyKids #Ayurveda #ParentingTips #Immunity
    #FluRemedy #HolisticHealth #NaturalCure #Wellness #HealthTips #BabyCare #ViralRemedy #OrganicLiving #HealthyHome #TraditionalMedicine
    #SafeRemedy
    குழந்தைகளின் சளி மற்றும் இருமலுக்கு ஒரு அற்புதமான இயற்கை 'ஆன்டி-வைரஸ்' தீர்வு! ✨🛡️ ​தேவையான பொருட்கள் ​🧅 பெரிய வெங்காயம் - 1 (தோல் நீக்கியது) 📌 கிராம்பு - 5 முதல் 10 வரை ​எளிமையான செய்முறை & பயன்கள் ​🌿 தயாரிப்பு: ஒரு பெரிய வெங்காயத்தின் தோலை நீக்கி, அதை இரண்டாக நறுக்கி அதன் மேல் கிராம்புகளை அழகாகச் சொருகி வையுங்கள். ​🌙 பயன்படுத்தும் முறை: உங்கள் செல்லக் குழந்தை உறங்கும் இடத்திற்கு அருகே (குழந்தைக்கு எட்டாத உயரத்தில்) ஒரு தட்டில் வைத்துவிடவும். ​🌬️ இயற்கை சுத்திகரிப்பு: வெங்காயத்தின் 'சல்பர்' மற்றும் கிராம்பின் மருத்துவக் குணங்கள் காற்றில் பரவி, ஒரு இயற்கை ஏர்-பியூரிஃபையர் போலச் செயல்படும். ​🩺 சுவாச மேன்மை: இது சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைச் சீராக்கி, தொந்தரவில்லாத சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கும். ​🦠 வைரஸ் எதிர்ப்பு: காற்றில் பரவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இந்த மணத்திற்கு உண்டு. ​😴 ஆழ்ந்த உறக்கம்: சளி மற்றும் மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகள் இரவு முழுவதும் எவ்வித இடையூறும் இன்றி நிம்மதியாக உறங்க இது பெரிதும் உதவும். ​#ColdRemedy #NaturalHealing #KidsHealth #HomeRemedies #OnionCloveRemedy #CoughRelief #HealthyKids #Ayurveda #ParentingTips #Immunity #FluRemedy #HolisticHealth #NaturalCure #Wellness #HealthTips #BabyCare #ViralRemedy #OrganicLiving #HealthyHome #TraditionalMedicine #SafeRemedy
    0 Kommentare ·0 Geteilt ·12KB Ansichten ·0 Bewertungen
  • ஒரு புதிய ஆய்வில், பகலில் தினமும் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்கும் (nap) பெரியவர்கள், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறுகிய நேரம் தூங்குபவர்கள் அல்லது தூங்காதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆபத்து அதிகமாக உள்ளது.
    வயது, இரவில் தூங்கும் தரம், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை கணக்கில் எடுத்த பிறகும் இந்த தொடர்பு தொடர்ந்துள்ளது. அதாவது, நீண்ட நேர பகல் தூக்கம் நல்ல ஓய்வை காட்டுவதற்குப் பதிலாக, உடலில் ஏதோ சீர்கேடு இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

    நிபுணர்கள் கூறுவதாவது:

    இரவில் சரியாக தூங்காமல் இருப்பது

    தூக்கத்தில் மூச்சு தடை (Sleep Apnea)

    உடலில் சக்தி மாற்றச் செயல்களில் (metabolism) சீர்கேடு

    போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடல் அடிக்கடி நீண்ட நேரம் தூங்கச் சொல்கிறது.

    இதனால்:

    இரத்த அழுத்த கட்டுப்பாடு பாதிக்கலாம்

    சர்க்கரை அளவு சீராக இருக்காமல் போகலாம்

    இதயத்திற்கு மெதுவாக அழுத்தம் அதிகரிக்கலாம்

    முக்கியமாக:
    பிரச்சனை “பகல் தூக்கம்” அல்ல…
    👉 ஏன் உடலுக்கு அடிக்கடி நீண்ட தூக்கம் தேவைப்படுகிறது என்பதே முக்கியம்.

    ஆனால்,

    ✅ 30 நிமிடத்திற்குள் இருக்கும் குறுகிய தூக்கம் – பாதுகாப்பானது
    ✅ கவனம் அதிகரிக்க உதவும்
    ✅ மனநிலையை நல்லதாக மாற்றும்

    ஆனால்,

    ⚠️ அடிக்கடி நீண்ட நேரம் தூங்கினால்
    ⚠️ தூங்கிய பிறகும் சோர்வாக இருந்தால்

    👉 உங்கள் இரவு தூக்கத்தின் தரத்தையும்
    👉 இதய ஆரோக்கியத்தையும்
    ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    முடிவாக:
    இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க,
    👉 தொடர்ந்து நல்ல இரவு தூக்கம் பெறுவதுதான் சிறந்த வழி.

    ---

    #Viral
    #TrendingNow
    #BreakingNews
    #HealthTips
    #DidYouKnow
    #Lifestyle
    #DailyUpdate
    #Awareness
    #Facts
    #Motivation

    ஒரு புதிய ஆய்வில், பகலில் தினமும் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்கும் (nap) பெரியவர்கள், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறுகிய நேரம் தூங்குபவர்கள் அல்லது தூங்காதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆபத்து அதிகமாக உள்ளது. வயது, இரவில் தூங்கும் தரம், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை கணக்கில் எடுத்த பிறகும் இந்த தொடர்பு தொடர்ந்துள்ளது. அதாவது, நீண்ட நேர பகல் தூக்கம் நல்ல ஓய்வை காட்டுவதற்குப் பதிலாக, உடலில் ஏதோ சீர்கேடு இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். நிபுணர்கள் கூறுவதாவது: இரவில் சரியாக தூங்காமல் இருப்பது தூக்கத்தில் மூச்சு தடை (Sleep Apnea) உடலில் சக்தி மாற்றச் செயல்களில் (metabolism) சீர்கேடு போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடல் அடிக்கடி நீண்ட நேரம் தூங்கச் சொல்கிறது. இதனால்: இரத்த அழுத்த கட்டுப்பாடு பாதிக்கலாம் சர்க்கரை அளவு சீராக இருக்காமல் போகலாம் இதயத்திற்கு மெதுவாக அழுத்தம் அதிகரிக்கலாம் முக்கியமாக: பிரச்சனை “பகல் தூக்கம்” அல்ல… 👉 ஏன் உடலுக்கு அடிக்கடி நீண்ட தூக்கம் தேவைப்படுகிறது என்பதே முக்கியம். ஆனால், ✅ 30 நிமிடத்திற்குள் இருக்கும் குறுகிய தூக்கம் – பாதுகாப்பானது ✅ கவனம் அதிகரிக்க உதவும் ✅ மனநிலையை நல்லதாக மாற்றும் ஆனால், ⚠️ அடிக்கடி நீண்ட நேரம் தூங்கினால் ⚠️ தூங்கிய பிறகும் சோர்வாக இருந்தால் 👉 உங்கள் இரவு தூக்கத்தின் தரத்தையும் 👉 இதய ஆரோக்கியத்தையும் ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. முடிவாக: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, 👉 தொடர்ந்து நல்ல இரவு தூக்கம் பெறுவதுதான் சிறந்த வழி. --- #Viral #TrendingNow #BreakingNews #HealthTips #DidYouKnow #Lifestyle #DailyUpdate #Awareness #Facts #Motivation
    0 Kommentare ·0 Geteilt ·11KB Ansichten ·0 Bewertungen
  • ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்?

    அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

    ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது.
    எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு.

    இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார்.

    ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது.

    ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார்.

    AV KrishnaRao
    ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்? அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது. எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு. இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார். ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது. ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார். AV KrishnaRao
    0 Kommentare ·0 Geteilt ·10KB Ansichten ·0 Bewertungen
  • களைப்போடு வந்த அப்பா
    கடப்பினிலே சாத்தி வைக்கக்
    களவாடிச் சென்று நாமும்
    கலை பயின்ற நினைவிருக்கா?

    முக்கோணக் கம்பியது
    முழங்காலைப் பதம் பார்க்க
    அப்போதும் நிறுத்தாமல்
    அயராது பழகினோமே!!

    அப்பாவின் ஈருருளி
    அழகான முதல் பயிற்சி
    தப்பியவர் யாருமுண்டோ?
    தழும்புகள் ஏதுமின்றி

    ஒற்றைக்கால் மிதியில் வைத்து
    மற்றக்கால் மண்ணிலூன்றி
    தத்தித் தத்தி உருட்டியபின்
    சற்றுக் கொஞ்சம் தேர்ச்சி பெற்று

    உயரமான இடத்திற்கு
    உருட்டியே கொண்டு சேர்த்து
    ஒற்றைக் கால் உதவியோடு
    ஒரே தாவில் ஏறிக் குந்தி

    உயரமான இடமிருந்து
    உருண்டோடி வரும்போது
    உலகத்தையே வெல்வது போல்
    உள்ளுக்குள்ள ஓர் நினைப்பு

    வழமைபோல் நானும் ஓர்நாள்
    வருகின்றேன் தேரிலேறி
    எட்டாத காலிரண்டை
    இரு புறமும் தொங்கவிட்டு

    கடவுளே முருகா அன்று
    காலமே சரியில்லை போல்
    குருட்டு நாய் ஒன்று மெல்லக்
    குறுக்கறுத்து வந்திடவே

    பயத்திலே கண்ணிரண்டும்
    பம்பரமாய்ச் சுழன்றபடி
    நிறுத்தவும் முடியாமல்
    நிலை தவறி மோதுகின்றேன்

    வீரென்று ஓலமிட்டு
    வீட்டு நாய் அலறியோட
    அடுப்படி வேலைகளை
    அரைகுறையாய்ப் போட்டபடி
    அடிப்பதற்குத் தேடுகின்றாள்
    அன்பான எனது அம்மா

    மரத்தால விழுந்தவனை
    மாடு வந்து முட்டுவதா
    எடுத்தேன் பார் ஓட்டம் நான்
    எதிர் வீட்டு வேலி தாண்டி

    அழகான நினைவு தந்த
    அப்பாவின் மிதிவண்டி
    ஆயிரம் முறை விழுந்தும்
    அலுக்காத மிதிவண்டி

    நாகரிக வளர்ச்சியினால்
    நாதியற்றுப் போயிரிச்சி
    பின்புறச் சுவரினிலே
    பெருமூச்சு விட்டபடி
    பழகிடத்தான் யாருமின்றி
    பயனற்றுக் கிடக்கிறது
    களைப்போடு வந்த அப்பா கடப்பினிலே சாத்தி வைக்கக் களவாடிச் சென்று நாமும் கலை பயின்ற நினைவிருக்கா? முக்கோணக் கம்பியது முழங்காலைப் பதம் பார்க்க அப்போதும் நிறுத்தாமல் அயராது பழகினோமே!! அப்பாவின் ஈருருளி அழகான முதல் பயிற்சி தப்பியவர் யாருமுண்டோ? தழும்புகள் ஏதுமின்றி ஒற்றைக்கால் மிதியில் வைத்து மற்றக்கால் மண்ணிலூன்றி தத்தித் தத்தி உருட்டியபின் சற்றுக் கொஞ்சம் தேர்ச்சி பெற்று உயரமான இடத்திற்கு உருட்டியே கொண்டு சேர்த்து ஒற்றைக் கால் உதவியோடு ஒரே தாவில் ஏறிக் குந்தி உயரமான இடமிருந்து உருண்டோடி வரும்போது உலகத்தையே வெல்வது போல் உள்ளுக்குள்ள ஓர் நினைப்பு வழமைபோல் நானும் ஓர்நாள் வருகின்றேன் தேரிலேறி எட்டாத காலிரண்டை இரு புறமும் தொங்கவிட்டு கடவுளே முருகா அன்று காலமே சரியில்லை போல் குருட்டு நாய் ஒன்று மெல்லக் குறுக்கறுத்து வந்திடவே பயத்திலே கண்ணிரண்டும் பம்பரமாய்ச் சுழன்றபடி நிறுத்தவும் முடியாமல் நிலை தவறி மோதுகின்றேன் வீரென்று ஓலமிட்டு வீட்டு நாய் அலறியோட அடுப்படி வேலைகளை அரைகுறையாய்ப் போட்டபடி அடிப்பதற்குத் தேடுகின்றாள் அன்பான எனது அம்மா மரத்தால விழுந்தவனை மாடு வந்து முட்டுவதா எடுத்தேன் பார் ஓட்டம் நான் எதிர் வீட்டு வேலி தாண்டி அழகான நினைவு தந்த அப்பாவின் மிதிவண்டி ஆயிரம் முறை விழுந்தும் அலுக்காத மிதிவண்டி நாகரிக வளர்ச்சியினால் நாதியற்றுப் போயிரிச்சி பின்புறச் சுவரினிலே பெருமூச்சு விட்டபடி பழகிடத்தான் யாருமின்றி பயனற்றுக் கிடக்கிறது
    0 Kommentare ·0 Geteilt ·5KB Ansichten ·0 Bewertungen
Weitere Ergebnisse
Idaivelai.com https://idaivelai.com