• எதே... 😎 ஆமா... 😉அதுக்கென்ன இப்ப... 😂🤣😏
    எதே... 😎 ஆமா... 😉அதுக்கென்ன இப்ப... 😂🤣😏
    0 Comments ·0 Shares ·564 Views ·0 Reviews
  • '🤣என்னா புள்ளே சௌக்கியமா??🤩'
    https://www.youtube.com/watch?v=75pVQLm6ntI
    '🤣என்னா புள்ளே சௌக்கியமா??🤩' https://www.youtube.com/watch?v=75pVQLm6ntI
    0 Comments ·0 Shares ·558 Views ·0 Reviews
  • இன்று தமிழீழ விடுதலைப் போராட்ட வீராங்கனை மாலதி அக்காவின் நினைவுநாள்.
    இன்று தமிழீழ விடுதலைப் போராட்ட வீராங்கனை மாலதி அக்காவின் நினைவுநாள்.
    0 Comments ·0 Shares ·565 Views ·0 Reviews
  • கரிகிப்போனது ரம்பின் நோபல் கனவு

    2025 ஆம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு வெனிசூலாவின் எதிர்க்கட்சித்தலைவரும் முக்கிய அரசியல்வாதியுமான சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
    கரிகிப்போனது ரம்பின் நோபல் கனவு 2025 ஆம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு வெனிசூலாவின் எதிர்க்கட்சித்தலைவரும் முக்கிய அரசியல்வாதியுமான சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
    0 Comments ·0 Shares ·715 Views ·0 Reviews
  • ஆட்டோக்கார அண்ணாவிடம் என்ன அண்ணா 200 ரூபாய் தானே எடுக்கிறனீங்க , இப்ப 500 ரூபாய் என்கிறீங்க ..

    தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ?

    கராஜ்கார அண்ணாவிடம் என்ன அண்ணா 3000 ரூபாயா ??

    தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ?

    சலூன்கார அண்ணா :- இனி முடிவெட்டி , தாடி ஒதுக்க 1100 ரூபாய்.

    ஏன் அண்ணா இப்படி அநியாயமாய் விலை கூட்டி வைச்சிருக்கிறீங்க ?

    தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ?

    ம்ம்…

    10 வருடமா தன்னோட முதலாளி அரிசி வாங்கலை என்ற விடயத்தை தான் எங்கே போய் சொல்ல என நடையை கட்டினான் #அவன
    ஆட்டோக்கார அண்ணாவிடம் என்ன அண்ணா 200 ரூபாய் தானே எடுக்கிறனீங்க , இப்ப 500 ரூபாய் என்கிறீங்க .. தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ? கராஜ்கார அண்ணாவிடம் என்ன அண்ணா 3000 ரூபாயா ?? தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ? சலூன்கார அண்ணா :- இனி முடிவெட்டி , தாடி ஒதுக்க 1100 ரூபாய். ஏன் அண்ணா இப்படி அநியாயமாய் விலை கூட்டி வைச்சிருக்கிறீங்க ? தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ? ம்ம்… 10 வருடமா தன்னோட முதலாளி அரிசி வாங்கலை என்ற விடயத்தை தான் எங்கே போய் சொல்ல என நடையை கட்டினான் #அவன்
    0 Comments ·0 Shares ·798 Views ·0 Reviews
  • வித்தான வீரமகள்…..
    ******************************
    காலநதியில்
    கரைந்தழியும் வாழ்வியல் முறையில்….
    காலம் காலமாய் உணர்வுகலந்த உரிமையோடு-வாழும் பெரும் பேறுபெற்றவர்கள்
    மண்ணுக்காய் துயில்கொள்ளும்
    மகோன்னத மாணிக்கங்கள்….

    யாழ்/கோப்பாய் வெளிக்காற்றில்
    பெண்மையின் அதியுச்ச மேன்மையுரைத்த
    தமிழ்த் தாயின் வீரமகள் நினைவுகளோடு……

    10.10.1987——-10.10.2025
    வித்தான வீரமகள்….. ****************************** காலநதியில் கரைந்தழியும் வாழ்வியல் முறையில்…. காலம் காலமாய் உணர்வுகலந்த உரிமையோடு-வாழும் பெரும் பேறுபெற்றவர்கள் மண்ணுக்காய் துயில்கொள்ளும் மகோன்னத மாணிக்கங்கள்…. யாழ்/கோப்பாய் வெளிக்காற்றில் பெண்மையின் அதியுச்ச மேன்மையுரைத்த தமிழ்த் தாயின் வீரமகள் நினைவுகளோடு…… 10.10.1987——-10.10.2025
    0 Comments ·0 Shares ·818 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·764 Views ·16 Plays ·0 Reviews
  • கற்களை சாப்பிடும் தீக்கோழிகள் ! எதுக்காக தெரியுமா?

    தீக்கோழிகள் ஆப்பிரிக்க சவன்னாவில் காணப்படும் தனித்துவமான தோற்றமுடைய பறவையினமாக அறியப்படுகின்றது.

    அவை மிக வேகமாக ஓடுவதுடன் உலகின் மிகப்பெரிய பறவையாகும் திகழ்கிறது. இது 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது.

    பறவையாக இருந்தும் பறக்கத்தெரியாத தீக்கோழி அதனுடைய கூட்டில் 100 முட்டைகளுக்கு மேல் இடுகின்றன.

    அதனுடைய ஒவ்வொரு முட்டையும் சுமார் ஆறு அங்குள்ள நீளமும் 15 முதல் 18 அங்குல சுற்றளவும் கொண்டுள்ளது.

    நெருப்பு கோழியால் தொடர்ந்து 45 நிமிடங்கள்வரையில் ஒரே வேகத்தில் ஓட முடியும். ஒரு மாத வயதுள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.

    தீக்கோழிகள் ஏன் கற்களை சாப்பிடுகின்றது?
    தீக்கோழிகள் கற்களை சாப்பிடுவதை அனைவருமே பார்த்திருப்பார்கள். ஆனால் அவை ஏன் கற்களை சாப்பிடுகின்றது என எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

    தீக்கோழிகளுக்கு பற்கள் கிடையாது. இவை செரிமானத்தை எளிதாக்குவதற்காக கற்களை விழுங்குகின்றது.

    அதற்கு பற்கள் இல்லாததால், அவற்றால் உணவை நன்கு மென்று துண்டாக்கி செரிக்க முடியாது. எனவே, இவை உணவை வயிற்றுக்குள் உணவை நன்றாக அரைக்க வேண்டும் என்பதற்காக கற்களை சாப்பிடுகின்றது.

    இந்த கற்கள் தசைப்பையில் (gizzard) தங்கி, உட்கொள்ளும் உணவை அரைத்து உடைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. அதனால் அதன் செரிமானம் எளிதாகின்றது.

    தீக்கோழைிகள் மட்டுமன்றி சில பறவைகளும் கோழிகளும் கூட செரிமானத்துக்காக கற்களை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
    கற்களை சாப்பிடும் தீக்கோழிகள் ! எதுக்காக தெரியுமா? தீக்கோழிகள் ஆப்பிரிக்க சவன்னாவில் காணப்படும் தனித்துவமான தோற்றமுடைய பறவையினமாக அறியப்படுகின்றது. அவை மிக வேகமாக ஓடுவதுடன் உலகின் மிகப்பெரிய பறவையாகும் திகழ்கிறது. இது 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது. பறவையாக இருந்தும் பறக்கத்தெரியாத தீக்கோழி அதனுடைய கூட்டில் 100 முட்டைகளுக்கு மேல் இடுகின்றன. அதனுடைய ஒவ்வொரு முட்டையும் சுமார் ஆறு அங்குள்ள நீளமும் 15 முதல் 18 அங்குல சுற்றளவும் கொண்டுள்ளது. நெருப்பு கோழியால் தொடர்ந்து 45 நிமிடங்கள்வரையில் ஒரே வேகத்தில் ஓட முடியும். ஒரு மாத வயதுள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. தீக்கோழிகள் ஏன் கற்களை சாப்பிடுகின்றது? தீக்கோழிகள் கற்களை சாப்பிடுவதை அனைவருமே பார்த்திருப்பார்கள். ஆனால் அவை ஏன் கற்களை சாப்பிடுகின்றது என எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். தீக்கோழிகளுக்கு பற்கள் கிடையாது. இவை செரிமானத்தை எளிதாக்குவதற்காக கற்களை விழுங்குகின்றது. அதற்கு பற்கள் இல்லாததால், அவற்றால் உணவை நன்கு மென்று துண்டாக்கி செரிக்க முடியாது. எனவே, இவை உணவை வயிற்றுக்குள் உணவை நன்றாக அரைக்க வேண்டும் என்பதற்காக கற்களை சாப்பிடுகின்றது. இந்த கற்கள் தசைப்பையில் (gizzard) தங்கி, உட்கொள்ளும் உணவை அரைத்து உடைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. அதனால் அதன் செரிமானம் எளிதாகின்றது. தீக்கோழைிகள் மட்டுமன்றி சில பறவைகளும் கோழிகளும் கூட செரிமானத்துக்காக கற்களை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
    0 Comments ·0 Shares ·780 Views ·0 Reviews
  • குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை தேவையா.. அதை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

    •குறட்டை பிரச்னையை கவனிக்காமல் விட்டால் நுரையீரல் சுருங்கிக் கொண்டே போகும். அவர்களுக்கு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். சுய நினைவை இழக்க நேரிடலாம்.

    Doctor: எனக்கு 50 வயதாகிறது. தினமும் இரவில் தூங்கும்போது அதிக குறட்டை விடுவதாக வீட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். என்னால் அதை உணர முடியவில்லை. குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை எல்லாம் கிடையாது என்கிறார்கள் சிலர். இதற்கு சிகிச்சை இருக்கிறதா, இதிலிருந்து நிரந்தரமாக மீள முடியுமா?

    பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

    குறட்டை பல காரணங்களால் வரலாம். தொண்டைக்கு மேல், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும். அதே போல தொண்டைக்குக் கீழ், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும். உடல் பருமன் காரணமாகவும் குறட்டை வரலாம்.

    மூக்கில் சதை வளர்ச்சி இருப்பதாகச் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை ‘டீவியேட்டடு நேசல் செப்டம்’ (deviated nasal septum) என்று சொல்வோம்.

    இதனாலும் குறட்டை வரலாம். டான்சில்ஸ் பிரச்னையும் இதற்கொரு காரணம். அசிடிட்டி பிரச்னையின் காரணமாகவோ,

    அதிகம் மது அருந்துவதாலோ சிலருக்கு குரல் நாண் ( Vocal Cord) வீங்கியிருக்கும். இவர்களுக்கு குரல் மாறும், குறட்டை அதிகமிருக்கும். உடல்பருமனால் வரும் குறட்டை சற்றே சீரியஸானது. அதாவது வயிற்றுக்குள் கொழுப்பு அதிகமிருக்கும்.

    சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை சுருக்க ஆரம்பிக்கும். நுரையீரலின் கொள்ளவு குறையும்போது, நம்மை அறியாமல் வாயைத் திறந்து மூச்சு விட ஆரம்பிப்போம். அப்போது நாக்கு உள்வாங்கி, தொண்டையை அடைக்கும். மூச்சுக் காற்றானது அதைத் தாண்டி, மேலும் கீழும் போகும்போது குறட்டையாக வெளியே வரும்.

    சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை சுருக்க ஆரம்பிக்கும்.

    குறட்டை பிரச்னை உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குள் போக மாட்டார்கள். அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வார்கள். மூளைக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். மறுநாள் அதிக களைப்புடன் உணர்வார்கள். உட்கார்ந்த நிலையிலேயே தூங்குவார்கள்.

    குறட்டை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, ‘ஸ்லீப் ஸ்டடி’ (sleep study) என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    அதில் அவர்களுக்கு ஸ்லீப் ஆப்னியா என்ற பாதிப்பு இருக்கிறதா, எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பார்கள். தேவைப்பட்டால் நுரையீரல் மருத்துவரைப் பார்க்கச் சொல்வார்கள். எடை அதிகமிருந்தால் எடையைக் குறைக்க அறிவுறுத்துவார்கள். மூக்கில் சதை வளர்ந்திருந்தால் இ.என்.டி மருத்துவரை அணுகச் சொல்வார்கள்.

    குறட்டை பிரச்னையை கவனிக்காமல் விட்டால் நுரையீரல் சுருங்கிக் கொண்டே போகும். அவர்களுக்கு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். சுய நினைவை இழக்க நேரிடலாம்.

    சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தால் குறட்டை பிரச்னையை 100 சதவிகிதம் குணப்படுத்திவிடலாம்.
    குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை தேவையா.. அதை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா? •குறட்டை பிரச்னையை கவனிக்காமல் விட்டால் நுரையீரல் சுருங்கிக் கொண்டே போகும். அவர்களுக்கு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். சுய நினைவை இழக்க நேரிடலாம். Doctor: எனக்கு 50 வயதாகிறது. தினமும் இரவில் தூங்கும்போது அதிக குறட்டை விடுவதாக வீட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். என்னால் அதை உணர முடியவில்லை. குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை எல்லாம் கிடையாது என்கிறார்கள் சிலர். இதற்கு சிகிச்சை இருக்கிறதா, இதிலிருந்து நிரந்தரமாக மீள முடியுமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். குறட்டை பல காரணங்களால் வரலாம். தொண்டைக்கு மேல், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும். அதே போல தொண்டைக்குக் கீழ், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும். உடல் பருமன் காரணமாகவும் குறட்டை வரலாம். மூக்கில் சதை வளர்ச்சி இருப்பதாகச் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை ‘டீவியேட்டடு நேசல் செப்டம்’ (deviated nasal septum) என்று சொல்வோம். இதனாலும் குறட்டை வரலாம். டான்சில்ஸ் பிரச்னையும் இதற்கொரு காரணம். அசிடிட்டி பிரச்னையின் காரணமாகவோ, அதிகம் மது அருந்துவதாலோ சிலருக்கு குரல் நாண் ( Vocal Cord) வீங்கியிருக்கும். இவர்களுக்கு குரல் மாறும், குறட்டை அதிகமிருக்கும். உடல்பருமனால் வரும் குறட்டை சற்றே சீரியஸானது. அதாவது வயிற்றுக்குள் கொழுப்பு அதிகமிருக்கும். சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை சுருக்க ஆரம்பிக்கும். நுரையீரலின் கொள்ளவு குறையும்போது, நம்மை அறியாமல் வாயைத் திறந்து மூச்சு விட ஆரம்பிப்போம். அப்போது நாக்கு உள்வாங்கி, தொண்டையை அடைக்கும். மூச்சுக் காற்றானது அதைத் தாண்டி, மேலும் கீழும் போகும்போது குறட்டையாக வெளியே வரும். சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை சுருக்க ஆரம்பிக்கும். குறட்டை பிரச்னை உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குள் போக மாட்டார்கள். அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வார்கள். மூளைக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். மறுநாள் அதிக களைப்புடன் உணர்வார்கள். உட்கார்ந்த நிலையிலேயே தூங்குவார்கள். குறட்டை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, ‘ஸ்லீப் ஸ்டடி’ (sleep study) என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதில் அவர்களுக்கு ஸ்லீப் ஆப்னியா என்ற பாதிப்பு இருக்கிறதா, எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பார்கள். தேவைப்பட்டால் நுரையீரல் மருத்துவரைப் பார்க்கச் சொல்வார்கள். எடை அதிகமிருந்தால் எடையைக் குறைக்க அறிவுறுத்துவார்கள். மூக்கில் சதை வளர்ந்திருந்தால் இ.என்.டி மருத்துவரை அணுகச் சொல்வார்கள். குறட்டை பிரச்னையை கவனிக்காமல் விட்டால் நுரையீரல் சுருங்கிக் கொண்டே போகும். அவர்களுக்கு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். சுய நினைவை இழக்க நேரிடலாம். சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தால் குறட்டை பிரச்னையை 100 சதவிகிதம் குணப்படுத்திவிடலாம்.
    0 Comments ·0 Shares ·831 Views ·0 Reviews
  • முடக்குவாதம் நீங்க புலி சிறுநீர்; சீன உயிரியல் பூங்காவில் விற்பனை

    வட இந்தியாவில் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் நோய் குணமாகும் என வதந்திச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், சீனாவில் புலியின் சிறுநீரைப் பருகினால், முடக்குவாதம், தசைவலி போகும் எனச் சொல்லி அவை விற்பனை செய்யப்படுவது பேசுபொருளாகி உள்ளது.

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Yaan Bifengxia என்ற வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகை புலியின் சிறுநீரை ஒயினுடன் கலந்து குடித்தால் முடக்குவாதம், தசை வலி, சுளுக்கு போன்ற நோய்கள் குணமாகும் என அந்தப் பூங்காவிற்குள் பாட்டிலில்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன்மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

    மேலும், சைபீரியன் புலியின் 250 கிராம் சிறுநீர் பாட்டில்கள் ஒவ்வொன்றும் 50 யுவான் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.600) விற்கப்பட்டுள்ளது. இதை, பார்வையாளர் ஒரு தனது எக்ஸ் தளத்தில் எடுத்து பகிர்ந்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் எதிர்வினையாற்றியுள்ளது. அதை வாங்கிய பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு பயனர், “என் அப்பாவுக்காக இதை வாங்கினேன். ஆனால் எந்த விளைவையும் காண முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “சிறுநீரில் பாக்டீரியா பரவாதா? இதைப் பற்றி யோசிப்பது மிகவும் நல்லது” என அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதையடுத்து, இவ்விவகாரம் அந்த நாட்டு ஊடகத்துறை வரை விவாதத்தில் இறக்கியது. இதுகுறித்து சீனாவில் உள்ள ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவ மருத்துவமனையின் மருந்தாளர் ஒருவர், “ஆதாரம் இல்லாமல் அதன் மதிப்பை மிகைப்படுத்துவது பாரம்பரிய சீன மருத்துவத்தை சிதைக்கிறது. மேலும் இது புலியின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கிறது. புலி சிறுநீர் ஒரு பாரம்பரிய மருந்து அல்ல. இதன் வாயிலாக எந்த மருத்துவ பயன்களும் நிரூபிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

    சீன மருத்துவ நூல்களில், புலி குறித்த மருத்துவக் குறிப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அத்தகைய வைத்திய முறைக்கு சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால், இவ்விவகாரமும் சீன அரசாங்க கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும் எனக் கூறப்படுகிறது.
    முடக்குவாதம் நீங்க புலி சிறுநீர்; சீன உயிரியல் பூங்காவில் விற்பனை வட இந்தியாவில் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் நோய் குணமாகும் என வதந்திச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், சீனாவில் புலியின் சிறுநீரைப் பருகினால், முடக்குவாதம், தசைவலி போகும் எனச் சொல்லி அவை விற்பனை செய்யப்படுவது பேசுபொருளாகி உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Yaan Bifengxia என்ற வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகை புலியின் சிறுநீரை ஒயினுடன் கலந்து குடித்தால் முடக்குவாதம், தசை வலி, சுளுக்கு போன்ற நோய்கள் குணமாகும் என அந்தப் பூங்காவிற்குள் பாட்டிலில்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன்மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், சைபீரியன் புலியின் 250 கிராம் சிறுநீர் பாட்டில்கள் ஒவ்வொன்றும் 50 யுவான் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.600) விற்கப்பட்டுள்ளது. இதை, பார்வையாளர் ஒரு தனது எக்ஸ் தளத்தில் எடுத்து பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் எதிர்வினையாற்றியுள்ளது. அதை வாங்கிய பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு பயனர், “என் அப்பாவுக்காக இதை வாங்கினேன். ஆனால் எந்த விளைவையும் காண முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “சிறுநீரில் பாக்டீரியா பரவாதா? இதைப் பற்றி யோசிப்பது மிகவும் நல்லது” என அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து, இவ்விவகாரம் அந்த நாட்டு ஊடகத்துறை வரை விவாதத்தில் இறக்கியது. இதுகுறித்து சீனாவில் உள்ள ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவ மருத்துவமனையின் மருந்தாளர் ஒருவர், “ஆதாரம் இல்லாமல் அதன் மதிப்பை மிகைப்படுத்துவது பாரம்பரிய சீன மருத்துவத்தை சிதைக்கிறது. மேலும் இது புலியின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கிறது. புலி சிறுநீர் ஒரு பாரம்பரிய மருந்து அல்ல. இதன் வாயிலாக எந்த மருத்துவ பயன்களும் நிரூபிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். சீன மருத்துவ நூல்களில், புலி குறித்த மருத்துவக் குறிப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அத்தகைய வைத்திய முறைக்கு சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால், இவ்விவகாரமும் சீன அரசாங்க கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும் எனக் கூறப்படுகிறது.
    0 Comments ·0 Shares ·897 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com