• ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Comments ·0 Shares ·7K Views ·0 Reviews
  • "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள்.
    "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான்.

    அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள்.
    சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை.
    அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்...

    சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....?

    நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான்.
    வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை.
    என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான்.

    சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன?

    அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட.

    முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார்.
    சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார்.

    சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்".

    அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம்.
    அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?"
    என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்..
    குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.

    "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள். "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான். அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள். சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை. அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்... சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....? நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான். வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை. என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான். சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன? அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட. முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார். சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார். சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்". அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம். அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?" என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்.. குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.
    0 Comments ·0 Shares ·3K Views ·0 Reviews
  • நாம் கட்டாயம் புரிந்து வைக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியல் உண்மைகள்
    பெண்கள் எப்போதுமே மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வேறு ஒன்றை சொல்லும் சுபாவம் கொண்டவர்கள்.

    அதாவது புரியும் படி சொல்வதானால், பெண்கள் பேசும் பேச்சுகளுக்கு நீங்கள் சொல்லுக்கு சொல் விடையோ, வரிக்கு வரி
    விளக்கமோ அளிக்க முற்படக்கூடாது. அது உங்களை முடிவில்லாத பிரச்சினைகளின் பால் அழைத்துச் செல்லும்.

    உதாரணமாக, அவள் உங்களிடம் "எனக்கு இன்று அலுப்பாக உள்ளது. வீட்டுக்குள் இருந்து போதுமாகிவிட்டது" என்று சொன்னால் "என்னை வெளியே கூட்டிச் செல்லுங்கள்" என்று சொல்ல வருகிறாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    அ‌ல்லது "இன்று சமைக்க அலுப்பாக உள்ளது" என்று சொன்னால் "வெளியே போய் சாப்பிடுவோமா" என்று கேட்கிறாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    அதாவது அவள் சொல்லும் வார்த்தைகளை விட அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.

    ஆனால் ஆண்கள் இதற்கு முற்றிலும் எதிர்மாற்றமானவர்கள். சொல்வதை நேரடியாக சொல்லும் சுபாவம் கொண்டவர்கள். ஆண் சொல்லும் வார்த்தைகளிலேயே அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை பட்டென்று தெரிவித்துவிடுவான்.

    உதாரணமாக அவன் "நான் இன்று களைப்பாக இருக்கிறேன்" என்று சொன்னால் அவனுக்கு இப்போது ஓய்வு தேவை என்பதுதான் அங்கே அர்த்தம்.

    வார்த்தைகளை புரிந்துகொள்வதில் தான் வாழ்க்கையே உள்ளது

    நாம் கட்டாயம் புரிந்து வைக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியல் உண்மைகள் பெண்கள் எப்போதுமே மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வேறு ஒன்றை சொல்லும் சுபாவம் கொண்டவர்கள். அதாவது புரியும் படி சொல்வதானால், பெண்கள் பேசும் பேச்சுகளுக்கு நீங்கள் சொல்லுக்கு சொல் விடையோ, வரிக்கு வரி விளக்கமோ அளிக்க முற்படக்கூடாது. அது உங்களை முடிவில்லாத பிரச்சினைகளின் பால் அழைத்துச் செல்லும். உதாரணமாக, அவள் உங்களிடம் "எனக்கு இன்று அலுப்பாக உள்ளது. வீட்டுக்குள் இருந்து போதுமாகிவிட்டது" என்று சொன்னால் "என்னை வெளியே கூட்டிச் செல்லுங்கள்" என்று சொல்ல வருகிறாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அ‌ல்லது "இன்று சமைக்க அலுப்பாக உள்ளது" என்று சொன்னால் "வெளியே போய் சாப்பிடுவோமா" என்று கேட்கிறாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அவள் சொல்லும் வார்த்தைகளை விட அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்வது அவசியமாகும். ஆனால் ஆண்கள் இதற்கு முற்றிலும் எதிர்மாற்றமானவர்கள். சொல்வதை நேரடியாக சொல்லும் சுபாவம் கொண்டவர்கள். ஆண் சொல்லும் வார்த்தைகளிலேயே அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை பட்டென்று தெரிவித்துவிடுவான். உதாரணமாக அவன் "நான் இன்று களைப்பாக இருக்கிறேன்" என்று சொன்னால் அவனுக்கு இப்போது ஓய்வு தேவை என்பதுதான் அங்கே அர்த்தம். வார்த்தைகளை புரிந்துகொள்வதில் தான் வாழ்க்கையே உள்ளது
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • அந்த எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேனைப் பார்த்தபோது, மருத்துவமனையின் ஏசி குளிரையும் மீறி என் முதுகுத்தண்டில் ஒரு நடுக்கம் பரவியது. அது கறுப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட ஒரு மரண சாசனம்.

    இந்த மருத்துவமனையில் என்னை ஒரு ஜாம்பவான் என்று சொல்வார்கள். என் பெயர் டாக்டர் சரவணன், ஓய்வு பெற்ற வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர். நாற்பது ஆண்டுகளை மனித உடல்களுக்குள்ளேயே கழித்தவன் நான். சென்னையின் தெருக்களை விட நம் உடலின் ரத்த நாளங்களின் வரைபடம் எனக்கு அத்தனை அக்குவேறாகத் தெரியும். துடிக்கும் இதயங்களை என் உள்ளங்கைகளில் தாங்கியிருக்கிறேன்; கூரை வரை பீய்ச்சி அடித்த ரத்தக் கசிவுகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறேன். ஆனால் அந்த ஸ்கேனைப் பார்த்தபோது, பல தசாப்தங்களில் முதல்முறையாக, நான் ஒரு மருத்துவனாக உணரவில்லை; ஒரு ஏமாற்றுக்காரனாக உணர்ந்தேன்.

    நோயாளி கௌரி. வயது இருபத்தி ஆறு. மின்சாரக் கட்டணம் செலுத்தவே இரண்டு ஷிப்டுகள் வேலை செய்யும் ஒரு தனித்து வாழும் தாய். காபி ஊற்றிக் கொண்டிருந்தபோது அப்படியே சரிந்து விழுந்திருக்கிறாள். அவள் மூளையில் இருந்த அந்த ரத்த நாள வீக்கம் (Aneurysm) வெறும் ஒரு நோய் அல்ல; அது ஒரு அரக்கன். ஒரு மலைப்பாம்பைப் போல அவளது மூளைத் தண்டின் மிக மென்மையான பகுதிகளை அது சுற்றியிருந்தது.

    "சரவணன், இது அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை," என்று நரம்பியல் துறைத் தலைவர் தலையை அசைத்தார். "நீ உள்ளே போனால், டேபிளிலேயே ரத்தக் கசிவு ஏற்பட்டு அவள் இறந்துவிடுவாள். அப்படியே விட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அது வெடித்துவிடும். எப்படிப் பார்த்தாலும் அவள் இறப்பது உறுதி."

    மருத்துவத் துறையில், அபாயங்களை எடைபோடவே நாங்கள் பழகியிருக்கிறோம். தோல்வி விகிதம் மற்றும் பொறுப்புகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். தர்க்கரீதியாகப் பார்த்தால்: இதைத் தொடாதே. அங்கிருந்து நகர்ந்துவிடு. இயற்கை அதன் வேலையைச் செய்யட்டும் என்றுதான் தோன்றியது.

    ஆனால் நான் கௌரியின் கண்களைப் பார்த்தேன். அங்கே அவளது நான்கு வயது சிறுமி, தேய்ந்து போன காலணிகளை அணிந்துகொண்டு, காத்திருப்பு அறையில் ஒரு புத்தகத்தில் வண்ணம் தீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். கௌரி இறந்தால், அந்தச் சிறுமி அனாதையாகிவிடுவாள். உடனே அறுவை சிகிச்சைக்கான நேரத்தை ஒதுக்கும்படி நிர்வாகத்திடம் சொன்னேன். நானே அந்த வழக்கைக் கையாளுவதாகக் கூறினேன். அனைவரும் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்தார்கள். ஒருவேளை நான் அப்படித் தான் இருந்தேனோ என்னவோ.

    அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு, என் அலுவலகத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். வெளியே நகரத்தின் விளக்குகள் மின்னின, ஆனால் உள்ளே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் பற்றி அந்த உலகம் கவலைப்படவில்லை. நான் பயந்திருந்தேன். பாறையைப் போல உறுதியாக இருக்கும் என் கைகள் லேசாக நடுங்கின. கடைசி முறையாக ஸ்கேன்களைப் பார்த்தேன். எந்த வழியும் தெரியவில்லை. எந்தப் பக்கம் தொடங்குவது என்று புரியவில்லை. அது ஒரு தற்கொலை முயற்சி போன்றது.

    நான் அறிவியலை நம்புபவன். கத்தரிக்கோலையும், தையல்களையும், ரத்த அழுத்தத்தையும் நம்புபவன். ஆனால் என் மேஜையில், மருத்துவ இதழ்களுக்குப் பின்னால், ஒரு சிறிய பழைய லேமினேட் செய்யப்பட்ட 'வைத்தீஸ்வரன்' படம் இருந்தது. நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது என் பாட்டி கொடுத்தது. "மருத்துவம் உடலைக் தான் குணப்படுத்தும், ஆனால் மனிதனை குணப்படுத்துவது அவன் மனதை குணப்படுத்துவது கடவுள் மட்டுமே" என்று அவர் சொல்வார்.

    நான் அந்தப் படத்தை எடுத்தேன். முறையான பிரார்த்தனை எதுவும் செய்யவில்லை. கௌரியின் ஃபைல் மீது என் கையை வைத்து, அந்தப் படத்தைப் பார்த்து இருட்டில் மெதுவாகப் பேசினேன்.

    "ஹே பிரபோ," என் குரல் தழுதழுத்தது. "இந்த ஒரு முறைக்கு என் கைகள் மட்டும் போதாது. நான் கீழே வேலை செய்யும் ஒரு மெக்கானிக் மட்டுமே. நாளை காலை, நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். என் கைகளை நான் உங்களுக்குத் தருகிறேன், ஆனால் உங்கள் ஞானத்தை எனக்குத் தாருங்கள். நீங்களே அந்த அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வேண்டும்."

    அடுத்த நாள் காலை, அறுவை சிகிச்சை அறை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அங்கு நிலவிய பதற்றம் காற்றில் கனத்தது. செவிலியர்கள் அமைதியாக நகர்ந்தார்கள்; மயக்க மருந்து நிபுணர் என் கண்களைப் பார்க்கத் தயங்கினார். நாங்கள் ஒரு மரணப் போராட்டத்திற்குள் நுழைகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.

    நாங்கள் அறுவை சிகிச்சையைத் தொடங்கினோம்.

    ஸ்கேனில் பார்த்ததை விட நிலைமை மோசமாக இருந்தது. ரத்த நாளத்தின் சுவர் காகிதத்தைப் போல மெல்லியதாக, ஆக்ரோஷமாகத் துடித்துக் கொண்டிருந்தது. ஒரு சிறிய தவறான மூச்சு அல்லது ஒரு மைக்ரோஸ்கோபிக் நடுக்கம் ஏற்பட்டால் கூட அது வெடித்துவிடும்.

    நான் மைக்ரோ-சிஸர்ஸை எடுத்தேன். அதுதான் அந்த முக்கியமான தருணம்.

    திடீரென்று, அந்த அறையே நிசப்தமானது. அமைதி மட்டுமல்ல, ஒரு முழுமையான வெற்றிடம் போன்ற நிசப்தம். மானிட்டர்களின் பீப் சத்தங்கள் பின்னணியில் மறைந்தன.

    ஒரு விசித்திரமான கதகதப்பு என் தோள்களில் பரவி, என் கைகள் வழியாக விரல் நுனிகளுக்குச் சென்றது. அது அட்ரினலின் (Adrenaline) அல்ல - எனக்கு அட்ரினலின் பற்றித் தெரியும், அது வேகமானது. இதுவோ... ஒரு முழுமையான, கனமான அமைதி.

    என் கைகள் மிக வேகமாக நகரத் தொடங்கின.

    ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன்: நான் அவற்றை இயக்கவில்லை. அவை நகர்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    நான் ஒருபோதும் பயிற்சி செய்யாத நுணுக்கமான முறைகளைச் செய்தேன். எழுபது வயது முதியவரால் முடியாத வேகம் மற்றும் துல்லியத்துடன் என் விரல்கள் நடனமாடின. மூளைத் தண்டிலிருந்து மில்லிமீட்டர் தொலைவில் இருக்கும் திசுக்களைச் சற்றும் தயக்கமின்றிப் பிரித்தேன். கண்ணுக்குத் தெரியாத இடங்களில் கூட, ஒரு உள்ளுணர்வு என்னை வழிநடத்த, கிளிப்புகளைப் பொருத்தினேன்.

    "பிபி (BP) சீராக இருக்கிறது," என்று மயக்க மருந்து நிபுணர் அதிர்ச்சியுடன் கிசுகிசுத்தார்.

    நான் பதில் சொல்லவில்லை. என்னால் முடியவில்லை. நான் ஒரு ஆழ்ந்த நிலையில் இருந்தேன். யாரோ ஒருவன் எனக்குப் பின்னால் நின்று, என் முழங்கைகளை வழிநடத்தி, என் மணிக்கட்டுகளை நிலைப்படுத்துவது போல உணர்ந்தேன்.

    வேறொரு மருத்துவர் அந்த இடத்திற்கு வந்துவிட்டது போன்ற ஒரு வலிமையான இருப்பை நான் உணர்ந்தேன்.

    நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு, கடைசி கருவியை தட்டில் போட்டேன்.

    "ரத்த நாள வீக்கம் நீக்கப்பட்டது," என்றேன். என் குரல் எனக்குத் தூரமாகக் கேட்டது. "தையல் போடுங்கள்."

    அந்த அறையே ஆர்ப்பரித்தது. செவிலியர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அங்கிருந்த மற்ற மருத்துவர்கள் மானிட்டர்களை நம்ப முடியாமல் பார்த்தார்கள். ஒரு சொட்டு ரத்தம் கூட வீணாகவில்லை. அது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகச் சரியாக இருந்தது.

    நான் என் அங்கிகளைத் துடைத்துவிட்டு, கைகழுவும் இடத்திற்குச் சென்றேன். கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். வழக்கமாக இது போன்ற ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் சோர்வடைந்து, வியர்வையில் நனைந்து, முதுகு வலியால் துடிப்பேன்.

    ஆனால் இப்போது நான் வியர்க்கவில்லை. அமைதியாக இருந்தேன். எனக்குச் சோர்வே தெரியவில்லை.

    என் சுருங்கிய, வயதான கைகளைப் பார்த்தேன். அவை இன்று ஒரு தாயைக் காப்பாற்றியிருக்கின்றன. ஒரு சிறுமி அனாதையாவதைத் தடுத்திருக்கின்றன. ஆனால் எனக்கு உண்மை தெரியும்.

    நான் என் அலுவலகத்திற்குச் சென்று, அந்த வைத்தீஸ்வரன் படத்தை எடுத்து மீண்டும் என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

    ஒரு வாரம் கழித்து கௌரியின் டிஸ்சார்ஜ் பேப்பர்களில் கையெழுத்திட்டேன். கௌரி தன் மகளின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தாள். கண்கள் பனிக்க அவள் எனக்கு நன்றி சொன்னாள், என்னை ஒரு 'கடவுள்' என்று அழைத்தாள்.

    நான் புன்னகைத்துத் தலையசைத்தேன். "நான் இதைத் தனியாகச் செய்யவில்லை," என்று அவளிடம் சொன்னேன்.

    நான் செவிலியர் குழுவைக் குறிப்பிடுவதாக அவள் நினைத்தாள். ஆனால் அந்த நாளில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் யார் என்று எனக்குத் தெரியும்.

    அறிவியலால் 'எப்படி' என்பதை விளக்க முடியும். ரத்த ஓட்டத்தையும் நரம்புகளையும் விளக்க முடியும். ஆனால் 'ஏன்' என்பதை அதனால் விளக்கவே முடியாது. ஒரு மனிதன், சாத்தியமற்ற ஒன்றை எதிர்கொள்ளும்போது, வழி இல்லாத இடத்தில் எப்படி ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான் என்பதை அறிவியலால் விளக்க முடியாது.

    சில நேரங்களில், நீங்கள் வெறும் ஒரு கருவிதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்தச் செவ்வாய்க்கிழமை, அறுவை சிகிச்சை அறை எண் 4-ல், 'மகா மருத்துவர்' பணியில் இருந்தார்.

    எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஸ்கேன் இருட்டாக இருந்தாலும், உலகம் முடிந்துவிட்டது என்று சொன்னாலும் சரியே. அற்புதங்கள் எப்போதும் மின்னலுடனும் இடியுடனும் வருவதில்லை. சில நேரங்களில், அவை ஒரு ஜோடி நிதானமான கைகள் மற்றும் ஒரு மௌனமான பிரார்த்தனையுடன் வருகின்றன.

    -மொழிபெயர்ப்பு பதிவு

    Karthikeyan selvaraj
    அந்த எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேனைப் பார்த்தபோது, மருத்துவமனையின் ஏசி குளிரையும் மீறி என் முதுகுத்தண்டில் ஒரு நடுக்கம் பரவியது. அது கறுப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட ஒரு மரண சாசனம். இந்த மருத்துவமனையில் என்னை ஒரு ஜாம்பவான் என்று சொல்வார்கள். என் பெயர் டாக்டர் சரவணன், ஓய்வு பெற்ற வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர். நாற்பது ஆண்டுகளை மனித உடல்களுக்குள்ளேயே கழித்தவன் நான். சென்னையின் தெருக்களை விட நம் உடலின் ரத்த நாளங்களின் வரைபடம் எனக்கு அத்தனை அக்குவேறாகத் தெரியும். துடிக்கும் இதயங்களை என் உள்ளங்கைகளில் தாங்கியிருக்கிறேன்; கூரை வரை பீய்ச்சி அடித்த ரத்தக் கசிவுகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறேன். ஆனால் அந்த ஸ்கேனைப் பார்த்தபோது, பல தசாப்தங்களில் முதல்முறையாக, நான் ஒரு மருத்துவனாக உணரவில்லை; ஒரு ஏமாற்றுக்காரனாக உணர்ந்தேன். நோயாளி கௌரி. வயது இருபத்தி ஆறு. மின்சாரக் கட்டணம் செலுத்தவே இரண்டு ஷிப்டுகள் வேலை செய்யும் ஒரு தனித்து வாழும் தாய். காபி ஊற்றிக் கொண்டிருந்தபோது அப்படியே சரிந்து விழுந்திருக்கிறாள். அவள் மூளையில் இருந்த அந்த ரத்த நாள வீக்கம் (Aneurysm) வெறும் ஒரு நோய் அல்ல; அது ஒரு அரக்கன். ஒரு மலைப்பாம்பைப் போல அவளது மூளைத் தண்டின் மிக மென்மையான பகுதிகளை அது சுற்றியிருந்தது. "சரவணன், இது அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை," என்று நரம்பியல் துறைத் தலைவர் தலையை அசைத்தார். "நீ உள்ளே போனால், டேபிளிலேயே ரத்தக் கசிவு ஏற்பட்டு அவள் இறந்துவிடுவாள். அப்படியே விட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அது வெடித்துவிடும். எப்படிப் பார்த்தாலும் அவள் இறப்பது உறுதி." மருத்துவத் துறையில், அபாயங்களை எடைபோடவே நாங்கள் பழகியிருக்கிறோம். தோல்வி விகிதம் மற்றும் பொறுப்புகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். தர்க்கரீதியாகப் பார்த்தால்: இதைத் தொடாதே. அங்கிருந்து நகர்ந்துவிடு. இயற்கை அதன் வேலையைச் செய்யட்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் நான் கௌரியின் கண்களைப் பார்த்தேன். அங்கே அவளது நான்கு வயது சிறுமி, தேய்ந்து போன காலணிகளை அணிந்துகொண்டு, காத்திருப்பு அறையில் ஒரு புத்தகத்தில் வண்ணம் தீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். கௌரி இறந்தால், அந்தச் சிறுமி அனாதையாகிவிடுவாள். உடனே அறுவை சிகிச்சைக்கான நேரத்தை ஒதுக்கும்படி நிர்வாகத்திடம் சொன்னேன். நானே அந்த வழக்கைக் கையாளுவதாகக் கூறினேன். அனைவரும் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்தார்கள். ஒருவேளை நான் அப்படித் தான் இருந்தேனோ என்னவோ. அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு, என் அலுவலகத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். வெளியே நகரத்தின் விளக்குகள் மின்னின, ஆனால் உள்ளே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் பற்றி அந்த உலகம் கவலைப்படவில்லை. நான் பயந்திருந்தேன். பாறையைப் போல உறுதியாக இருக்கும் என் கைகள் லேசாக நடுங்கின. கடைசி முறையாக ஸ்கேன்களைப் பார்த்தேன். எந்த வழியும் தெரியவில்லை. எந்தப் பக்கம் தொடங்குவது என்று புரியவில்லை. அது ஒரு தற்கொலை முயற்சி போன்றது. நான் அறிவியலை நம்புபவன். கத்தரிக்கோலையும், தையல்களையும், ரத்த அழுத்தத்தையும் நம்புபவன். ஆனால் என் மேஜையில், மருத்துவ இதழ்களுக்குப் பின்னால், ஒரு சிறிய பழைய லேமினேட் செய்யப்பட்ட 'வைத்தீஸ்வரன்' படம் இருந்தது. நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது என் பாட்டி கொடுத்தது. "மருத்துவம் உடலைக் தான் குணப்படுத்தும், ஆனால் மனிதனை குணப்படுத்துவது அவன் மனதை குணப்படுத்துவது கடவுள் மட்டுமே" என்று அவர் சொல்வார். நான் அந்தப் படத்தை எடுத்தேன். முறையான பிரார்த்தனை எதுவும் செய்யவில்லை. கௌரியின் ஃபைல் மீது என் கையை வைத்து, அந்தப் படத்தைப் பார்த்து இருட்டில் மெதுவாகப் பேசினேன். "ஹே பிரபோ," என் குரல் தழுதழுத்தது. "இந்த ஒரு முறைக்கு என் கைகள் மட்டும் போதாது. நான் கீழே வேலை செய்யும் ஒரு மெக்கானிக் மட்டுமே. நாளை காலை, நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். என் கைகளை நான் உங்களுக்குத் தருகிறேன், ஆனால் உங்கள் ஞானத்தை எனக்குத் தாருங்கள். நீங்களே அந்த அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வேண்டும்." அடுத்த நாள் காலை, அறுவை சிகிச்சை அறை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அங்கு நிலவிய பதற்றம் காற்றில் கனத்தது. செவிலியர்கள் அமைதியாக நகர்ந்தார்கள்; மயக்க மருந்து நிபுணர் என் கண்களைப் பார்க்கத் தயங்கினார். நாங்கள் ஒரு மரணப் போராட்டத்திற்குள் நுழைகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. நாங்கள் அறுவை சிகிச்சையைத் தொடங்கினோம். ஸ்கேனில் பார்த்ததை விட நிலைமை மோசமாக இருந்தது. ரத்த நாளத்தின் சுவர் காகிதத்தைப் போல மெல்லியதாக, ஆக்ரோஷமாகத் துடித்துக் கொண்டிருந்தது. ஒரு சிறிய தவறான மூச்சு அல்லது ஒரு மைக்ரோஸ்கோபிக் நடுக்கம் ஏற்பட்டால் கூட அது வெடித்துவிடும். நான் மைக்ரோ-சிஸர்ஸை எடுத்தேன். அதுதான் அந்த முக்கியமான தருணம். திடீரென்று, அந்த அறையே நிசப்தமானது. அமைதி மட்டுமல்ல, ஒரு முழுமையான வெற்றிடம் போன்ற நிசப்தம். மானிட்டர்களின் பீப் சத்தங்கள் பின்னணியில் மறைந்தன. ஒரு விசித்திரமான கதகதப்பு என் தோள்களில் பரவி, என் கைகள் வழியாக விரல் நுனிகளுக்குச் சென்றது. அது அட்ரினலின் (Adrenaline) அல்ல - எனக்கு அட்ரினலின் பற்றித் தெரியும், அது வேகமானது. இதுவோ... ஒரு முழுமையான, கனமான அமைதி. என் கைகள் மிக வேகமாக நகரத் தொடங்கின. ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன்: நான் அவற்றை இயக்கவில்லை. அவை நகர்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஒருபோதும் பயிற்சி செய்யாத நுணுக்கமான முறைகளைச் செய்தேன். எழுபது வயது முதியவரால் முடியாத வேகம் மற்றும் துல்லியத்துடன் என் விரல்கள் நடனமாடின. மூளைத் தண்டிலிருந்து மில்லிமீட்டர் தொலைவில் இருக்கும் திசுக்களைச் சற்றும் தயக்கமின்றிப் பிரித்தேன். கண்ணுக்குத் தெரியாத இடங்களில் கூட, ஒரு உள்ளுணர்வு என்னை வழிநடத்த, கிளிப்புகளைப் பொருத்தினேன். "பிபி (BP) சீராக இருக்கிறது," என்று மயக்க மருந்து நிபுணர் அதிர்ச்சியுடன் கிசுகிசுத்தார். நான் பதில் சொல்லவில்லை. என்னால் முடியவில்லை. நான் ஒரு ஆழ்ந்த நிலையில் இருந்தேன். யாரோ ஒருவன் எனக்குப் பின்னால் நின்று, என் முழங்கைகளை வழிநடத்தி, என் மணிக்கட்டுகளை நிலைப்படுத்துவது போல உணர்ந்தேன். வேறொரு மருத்துவர் அந்த இடத்திற்கு வந்துவிட்டது போன்ற ஒரு வலிமையான இருப்பை நான் உணர்ந்தேன். நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு, கடைசி கருவியை தட்டில் போட்டேன். "ரத்த நாள வீக்கம் நீக்கப்பட்டது," என்றேன். என் குரல் எனக்குத் தூரமாகக் கேட்டது. "தையல் போடுங்கள்." அந்த அறையே ஆர்ப்பரித்தது. செவிலியர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அங்கிருந்த மற்ற மருத்துவர்கள் மானிட்டர்களை நம்ப முடியாமல் பார்த்தார்கள். ஒரு சொட்டு ரத்தம் கூட வீணாகவில்லை. அது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகச் சரியாக இருந்தது. நான் என் அங்கிகளைத் துடைத்துவிட்டு, கைகழுவும் இடத்திற்குச் சென்றேன். கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். வழக்கமாக இது போன்ற ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் சோர்வடைந்து, வியர்வையில் நனைந்து, முதுகு வலியால் துடிப்பேன். ஆனால் இப்போது நான் வியர்க்கவில்லை. அமைதியாக இருந்தேன். எனக்குச் சோர்வே தெரியவில்லை. என் சுருங்கிய, வயதான கைகளைப் பார்த்தேன். அவை இன்று ஒரு தாயைக் காப்பாற்றியிருக்கின்றன. ஒரு சிறுமி அனாதையாவதைத் தடுத்திருக்கின்றன. ஆனால் எனக்கு உண்மை தெரியும். நான் என் அலுவலகத்திற்குச் சென்று, அந்த வைத்தீஸ்வரன் படத்தை எடுத்து மீண்டும் என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ஒரு வாரம் கழித்து கௌரியின் டிஸ்சார்ஜ் பேப்பர்களில் கையெழுத்திட்டேன். கௌரி தன் மகளின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தாள். கண்கள் பனிக்க அவள் எனக்கு நன்றி சொன்னாள், என்னை ஒரு 'கடவுள்' என்று அழைத்தாள். நான் புன்னகைத்துத் தலையசைத்தேன். "நான் இதைத் தனியாகச் செய்யவில்லை," என்று அவளிடம் சொன்னேன். நான் செவிலியர் குழுவைக் குறிப்பிடுவதாக அவள் நினைத்தாள். ஆனால் அந்த நாளில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் யார் என்று எனக்குத் தெரியும். அறிவியலால் 'எப்படி' என்பதை விளக்க முடியும். ரத்த ஓட்டத்தையும் நரம்புகளையும் விளக்க முடியும். ஆனால் 'ஏன்' என்பதை அதனால் விளக்கவே முடியாது. ஒரு மனிதன், சாத்தியமற்ற ஒன்றை எதிர்கொள்ளும்போது, வழி இல்லாத இடத்தில் எப்படி ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான் என்பதை அறிவியலால் விளக்க முடியாது. சில நேரங்களில், நீங்கள் வெறும் ஒரு கருவிதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்தச் செவ்வாய்க்கிழமை, அறுவை சிகிச்சை அறை எண் 4-ல், 'மகா மருத்துவர்' பணியில் இருந்தார். எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஸ்கேன் இருட்டாக இருந்தாலும், உலகம் முடிந்துவிட்டது என்று சொன்னாலும் சரியே. அற்புதங்கள் எப்போதும் மின்னலுடனும் இடியுடனும் வருவதில்லை. சில நேரங்களில், அவை ஒரு ஜோடி நிதானமான கைகள் மற்றும் ஒரு மௌனமான பிரார்த்தனையுடன் வருகின்றன. -மொழிபெயர்ப்பு பதிவு Karthikeyan selvaraj
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • சங்ககால Soup boy

    இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம்.

    விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது.

    “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு
    மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
    ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப
    இறுவரை வீழ்நரின் நடுங்கி"

    தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது.

    மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
    சங்ககால Soup boy இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம். விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது. “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல் ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப இறுவரை வீழ்நரின் நடுங்கி" தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது. மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • கணவனைப் பிரிந்த பெண்களின் நிலை
    இது தான்,..

    அன்பான கணவனாக அவன் இருந்து இருந்தால் ஒரு பெண் கவலை படுவாள்…. ஆனால் அன்பான கணவனை அவள் ஏன் பிரிய போகிறாள். மரணத்தால் வரும் பிரிவை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள முடியாது, அவன் அன்பானவனாக இருக்கும் பட்சத்தில்.

    கணவன் இறந்த பிறகு வரும் கண்ணீர், சில சமயம் ஆனந்த கண்ணீராக கூட இருக்காலம் என்று.

    இந்த உலகில், பெண்ணிற்கு என்று எதுவும் இல்லை.

    #காதலும் சரி, #காமமும் சரி…அவளின் பங்களிப்பு தேவை இல்லை, அதை பற்றி ஆண் யோசிப்பதும் இல்லை.

    இவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் சரி, இவர் காதலை சொன்னதும், அவள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவளுக்கு வேசி பட்டம் கொடுத்து விடுவார்கள், இல்லை என்றால் ஆசிட் வீச்சு.

    இல்லற வாழ்கையில் இன்னும் மோசம். இவர் கூப்பிட்டால் அவள் இணங்கி வர வேண்டும். அவளாக கூப்பிட்டால் அவ்வளவு தான், நெருப்பு துண்டாக அவன் வார்த்தை வந்து விழும், ஏன் எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா என்று?

    இதற்க்காகவே அவள் பயந்து, ஐயா ராசா…நீ கூப்பிடும் வரைக்கும் நான் காத்து இருக்கிறேன் என்பாள்.

    கணவனை பிரிந்தால் என்ன? விடுதலை உணர்வுடன், இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழலாம்…கஷ்டப்பட்டு வாழ்வதை விட.
    இந்த மாதிரி தான் பல பெண்கள் இருக்கிறார்கள்....
    கணவனைப் பிரிந்த பெண்களின் நிலை இது தான்,.. அன்பான கணவனாக அவன் இருந்து இருந்தால் ஒரு பெண் கவலை படுவாள்…. ஆனால் அன்பான கணவனை அவள் ஏன் பிரிய போகிறாள். மரணத்தால் வரும் பிரிவை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள முடியாது, அவன் அன்பானவனாக இருக்கும் பட்சத்தில். கணவன் இறந்த பிறகு வரும் கண்ணீர், சில சமயம் ஆனந்த கண்ணீராக கூட இருக்காலம் என்று. இந்த உலகில், பெண்ணிற்கு என்று எதுவும் இல்லை. #காதலும் சரி, #காமமும் சரி…அவளின் பங்களிப்பு தேவை இல்லை, அதை பற்றி ஆண் யோசிப்பதும் இல்லை. இவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் சரி, இவர் காதலை சொன்னதும், அவள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவளுக்கு வேசி பட்டம் கொடுத்து விடுவார்கள், இல்லை என்றால் ஆசிட் வீச்சு. இல்லற வாழ்கையில் இன்னும் மோசம். இவர் கூப்பிட்டால் அவள் இணங்கி வர வேண்டும். அவளாக கூப்பிட்டால் அவ்வளவு தான், நெருப்பு துண்டாக அவன் வார்த்தை வந்து விழும், ஏன் எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா என்று? இதற்க்காகவே அவள் பயந்து, ஐயா ராசா…நீ கூப்பிடும் வரைக்கும் நான் காத்து இருக்கிறேன் என்பாள். கணவனை பிரிந்தால் என்ன? விடுதலை உணர்வுடன், இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழலாம்…கஷ்டப்பட்டு வாழ்வதை விட. இந்த மாதிரி தான் பல பெண்கள் இருக்கிறார்கள்....
    0 Comments ·0 Shares ·690 Views ·0 Reviews
  • “இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்.
    ‘அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?’ என்று கேட்டபோது,
    ‘அப்பாவுடன்’ என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.”

    ராஜஸ்தானின் பலோதி என்ற சிறிய நகரம். அங்கே அனாமிகா பிஷ்னோய் என்ற பெயரை அறியாதவர்கள் மிகக் குறைவு. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள், லைக்குகள், கருத்துகள்… அதுதான் அனாமிகாவின் உலகம். ஆனால் திரையின் அந்தச் சிரிப்புக்குப் பின்னால், யாரும் காணாத கண்ணீரும் பயமும் நிறைந்த ஒரு கதை மறைந்திருந்தது.

    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அனாமிகாவும் மகிராமும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு ஐந்து வயது. காலம் மாறியதை உணராமல் பழைய சிந்தனைகளில் வாழ்ந்த மகிராமுக்கு, அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. அவள் ரீல்ஸ் செய்வதும், வீடியோக்கள் பதிவிடுவதும், அதற்கு கிடைக்கும் ரீச்சும் அவனை கலக்கமடையச் செய்தது.

    இதனால் அந்த வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. “இதை நிறுத்த வேண்டும்” என்று அவன் கட்டளையிட்டான். ஆனால் அனாமிகாவுக்கு அது தனது சுதந்திரத்தின் கேள்வி. ஒருநாள் கோபத்தில் மகிராம் அவளின் கைப்பேசியை எறிந்து உடைத்தான். ஆனால் தோல்வியை ஏற்க அனாமிகா தயாராக இல்லை. தோழியின் உதவியுடன் புதிய கைப்பேசி வாங்கி, தனது கனவுகளுடன் அவள் முன்னேறினாள்.

    பிரச்சினைகள் எல்லை மீறியபோது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிரிந்தனர். அனாமிகா குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள். அவள் சொந்தமாக ஒரு துணிக்கடை தொடங்கி, அதோடு அழகு சாதனப் பொருட்களையும் விற்றாள். அவள் பொருளாதாரமாக முன்னேறி, புகழ் பெற்றாள். அனாமிகாவின் இந்த வளர்ச்சி மகிராமுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் விவாகரத்து நோட்டீஸ் வந்ததும், அவனுக்குள் இருந்த பகை தீவிரமடைந்தது.

    அப்படியே அந்த நாள் வந்தது. 2024 பிப்ரவரி 24.

    மகிராம் முன்பே எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை ஏற்பாடு செய்தான். அந்த நாள் காலை குழந்தைகளைப் பார்க்க வந்தான். குழந்தைகளிடம் எந்த கோபமும் இல்லாதது போலவே நடந்துகொண்டான். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்.
    “அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?” என்று கேட்டபோது,
    “அப்பாவுடன்” என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.
    அன்புடன் முத்தமிட்டு, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டான்.

    அங்கிருந்து நேராக அவன் குறிவைத்தது அனாமிகாவின் கடைதான். நேரம் மதியத்துக்கு அருகில். கடையில் கூட்டம் குறைந்த நேரத்தை பார்த்து உள்ளே நுழைந்தான். கவுன்டரிலுள்ள நாற்காலியில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனாமிகா.

    ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று, அனாமிகாவை நோக்கி சுட்டான். மிக அருகிலிருந்து, நேருக்கு நேர் சுடப்பட்டதில், நாற்காலியில் உட்கார்ந்தபடியே அனாமிகா உயிரிழந்தாள். இன்ஸ்டாகிராமில் லட்சங்களை சிரிக்க வைத்த அந்த முகம், ரத்தத்தில் நனைந்தது.

    வெடிச்சத்தம் கேட்டு மக்கள் ஓடிவரும் நேரத்தில், மகிராம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த கொடூரச் செயல், நாட்டையே உலுக்கியது. இறுதியில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மகிராம் கைது செய்யப்பட்டான்.

    ஆனால் மீதமிருந்தது இரண்டு கேள்விகள்தான். மகிராமை பயந்து, அனாமிகாவின் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க தயங்கினர். தந்தை சிறையில், தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.
    ஒரு ரீலில் தொடங்கி, துப்பாக்கிக் குழலில் முடிந்த ஒரு தாம்பத்தியத்தின் சோகமான நினைவாக, அந்தக் குழந்தைகள் மட்டுமே எஞ்சினர்.

    Vijith Kumar
    “இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். ‘அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?’ என்று கேட்டபோது, ‘அப்பாவுடன்’ என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.” ராஜஸ்தானின் பலோதி என்ற சிறிய நகரம். அங்கே அனாமிகா பிஷ்னோய் என்ற பெயரை அறியாதவர்கள் மிகக் குறைவு. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள், லைக்குகள், கருத்துகள்… அதுதான் அனாமிகாவின் உலகம். ஆனால் திரையின் அந்தச் சிரிப்புக்குப் பின்னால், யாரும் காணாத கண்ணீரும் பயமும் நிறைந்த ஒரு கதை மறைந்திருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அனாமிகாவும் மகிராமும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு ஐந்து வயது. காலம் மாறியதை உணராமல் பழைய சிந்தனைகளில் வாழ்ந்த மகிராமுக்கு, அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. அவள் ரீல்ஸ் செய்வதும், வீடியோக்கள் பதிவிடுவதும், அதற்கு கிடைக்கும் ரீச்சும் அவனை கலக்கமடையச் செய்தது. இதனால் அந்த வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. “இதை நிறுத்த வேண்டும்” என்று அவன் கட்டளையிட்டான். ஆனால் அனாமிகாவுக்கு அது தனது சுதந்திரத்தின் கேள்வி. ஒருநாள் கோபத்தில் மகிராம் அவளின் கைப்பேசியை எறிந்து உடைத்தான். ஆனால் தோல்வியை ஏற்க அனாமிகா தயாராக இல்லை. தோழியின் உதவியுடன் புதிய கைப்பேசி வாங்கி, தனது கனவுகளுடன் அவள் முன்னேறினாள். பிரச்சினைகள் எல்லை மீறியபோது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிரிந்தனர். அனாமிகா குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள். அவள் சொந்தமாக ஒரு துணிக்கடை தொடங்கி, அதோடு அழகு சாதனப் பொருட்களையும் விற்றாள். அவள் பொருளாதாரமாக முன்னேறி, புகழ் பெற்றாள். அனாமிகாவின் இந்த வளர்ச்சி மகிராமுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் விவாகரத்து நோட்டீஸ் வந்ததும், அவனுக்குள் இருந்த பகை தீவிரமடைந்தது. அப்படியே அந்த நாள் வந்தது. 2024 பிப்ரவரி 24. மகிராம் முன்பே எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை ஏற்பாடு செய்தான். அந்த நாள் காலை குழந்தைகளைப் பார்க்க வந்தான். குழந்தைகளிடம் எந்த கோபமும் இல்லாதது போலவே நடந்துகொண்டான். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். “அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?” என்று கேட்டபோது, “அப்பாவுடன்” என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள். அன்புடன் முத்தமிட்டு, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டான். அங்கிருந்து நேராக அவன் குறிவைத்தது அனாமிகாவின் கடைதான். நேரம் மதியத்துக்கு அருகில். கடையில் கூட்டம் குறைந்த நேரத்தை பார்த்து உள்ளே நுழைந்தான். கவுன்டரிலுள்ள நாற்காலியில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனாமிகா. ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று, அனாமிகாவை நோக்கி சுட்டான். மிக அருகிலிருந்து, நேருக்கு நேர் சுடப்பட்டதில், நாற்காலியில் உட்கார்ந்தபடியே அனாமிகா உயிரிழந்தாள். இன்ஸ்டாகிராமில் லட்சங்களை சிரிக்க வைத்த அந்த முகம், ரத்தத்தில் நனைந்தது. வெடிச்சத்தம் கேட்டு மக்கள் ஓடிவரும் நேரத்தில், மகிராம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த கொடூரச் செயல், நாட்டையே உலுக்கியது. இறுதியில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மகிராம் கைது செய்யப்பட்டான். ஆனால் மீதமிருந்தது இரண்டு கேள்விகள்தான். மகிராமை பயந்து, அனாமிகாவின் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க தயங்கினர். தந்தை சிறையில், தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர். ஒரு ரீலில் தொடங்கி, துப்பாக்கிக் குழலில் முடிந்த ஒரு தாம்பத்தியத்தின் சோகமான நினைவாக, அந்தக் குழந்தைகள் மட்டுமே எஞ்சினர். Vijith Kumar
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா?
    'கோவிலுக்கு நேர்ந்திருந்தேன் அதான் மொட்டை போட்டேன்' என்று சொல்வார்கள்.
    'முடி வளர்றதாலதானே மொட்டை போட்டிருக்கே... விரலை வெட்டுவியா' என்று கிண்டலடிப்பார்கள்.
    ஆனால், முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா?
    மகாபாரத போர் நடக்கும் போது இறுதி நாளில் குரு துரோணாச்சாரியாவின் புதல்வன் அஸ்வத்தாமன் திரெளபதியின் ஐந்து குழந்தைகளையும் பாண்டவர்கள் என்று நினைத்து வெட்டி சாய்த்தான்.
    விடிந்ததும் குழந்தைகளைக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்தார்கள் பாண்டவர்கள்.
    இத்தகைய கொடூரச் செயலை செய்த பாதகனை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று அர்ஜுனன் சபதமிட்டான்.
    அன்று மாலையே கள்வன் அஸ்வத்தாமன் என்று தெரிந்து இழுத்துவரப்பட்டான்.
    குருவின் மகனா என்று பாண்டவர்களும், திரெளபதியும் அதிர்ந்து போனார்கள்.
    யாராக இருந்தால் என்ன.. இவன் தலையைக் கொய்யாமல் விடமாட்டேன் என்றான் அர்ஜுனன்.
    அர்ஜுனனை யாராலும் தடுக்க முடியவில்லை.
    அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் “அவன் தலையை எடுக்க வேண்டுமென்பதில்லை அர்ஜுனா.. அவன் சிகையை மழித்துவிடு.. அது அவன் மரணத்துக்கு ஈடானது” என்றார்.
    அதற்கு பிந்தைய நம் மூதாதையர்கள் தவறு செய்பவர்களை மொட்டை அடித்து செம்புள்ளி, கரும்புள்ளி வைத்து கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
    உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தாலோ...
    உங்களுக்கு மரண திசை நடக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டாலோ உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம் மொட்டை போடுவதாக முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
    _தலை போகும் பேராபத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வீர்கள்.
    பிறந்த குழந்தைக்கு 1, 3 என்னும் ஒற்றைப்பட வயதில் குலதெய்வ கோயிலில் பூஜை செய்து மொட்டை அடிப்பது வழக்கம்.
    விஞ்ஞான ரீதியாக கருவில் இருக்கும் குழந்தை இரத்தம், மலம், சிறுநீர் போன்ற அழுக்குகள் சூழ இருக்கும்.
    இந்த கழிவுகள் குழந்தையின் கேசம், மயிர் கால்கள் வழியாக வெளியேறுவதால் மொட்டை போடுவது அவசியமாகிறது.
    _இல்லையெனில் அக்கழிவுகள் வழியாக நோய்கள் பரவும் அபாயமும் உண்டு என்கிறது விஞ்ஞானம்.
    விஞ்ஞானத்திலும், மெய்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்கியமான வாழ்வுக்காகவே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
    இணையத்திலிருந்து...
    முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா? 'கோவிலுக்கு நேர்ந்திருந்தேன் அதான் மொட்டை போட்டேன்' என்று சொல்வார்கள். 'முடி வளர்றதாலதானே மொட்டை போட்டிருக்கே... விரலை வெட்டுவியா' என்று கிண்டலடிப்பார்கள். ஆனால், முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா? மகாபாரத போர் நடக்கும் போது இறுதி நாளில் குரு துரோணாச்சாரியாவின் புதல்வன் அஸ்வத்தாமன் திரெளபதியின் ஐந்து குழந்தைகளையும் பாண்டவர்கள் என்று நினைத்து வெட்டி சாய்த்தான். விடிந்ததும் குழந்தைகளைக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்தார்கள் பாண்டவர்கள். இத்தகைய கொடூரச் செயலை செய்த பாதகனை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று அர்ஜுனன் சபதமிட்டான். அன்று மாலையே கள்வன் அஸ்வத்தாமன் என்று தெரிந்து இழுத்துவரப்பட்டான். குருவின் மகனா என்று பாண்டவர்களும், திரெளபதியும் அதிர்ந்து போனார்கள். யாராக இருந்தால் என்ன.. இவன் தலையைக் கொய்யாமல் விடமாட்டேன் என்றான் அர்ஜுனன். அர்ஜுனனை யாராலும் தடுக்க முடியவில்லை. அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் “அவன் தலையை எடுக்க வேண்டுமென்பதில்லை அர்ஜுனா.. அவன் சிகையை மழித்துவிடு.. அது அவன் மரணத்துக்கு ஈடானது” என்றார். அதற்கு பிந்தைய நம் மூதாதையர்கள் தவறு செய்பவர்களை மொட்டை அடித்து செம்புள்ளி, கரும்புள்ளி வைத்து கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தாலோ... உங்களுக்கு மரண திசை நடக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டாலோ உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம் மொட்டை போடுவதாக முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள். _தலை போகும் பேராபத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வீர்கள். பிறந்த குழந்தைக்கு 1, 3 என்னும் ஒற்றைப்பட வயதில் குலதெய்வ கோயிலில் பூஜை செய்து மொட்டை அடிப்பது வழக்கம். விஞ்ஞான ரீதியாக கருவில் இருக்கும் குழந்தை இரத்தம், மலம், சிறுநீர் போன்ற அழுக்குகள் சூழ இருக்கும். இந்த கழிவுகள் குழந்தையின் கேசம், மயிர் கால்கள் வழியாக வெளியேறுவதால் மொட்டை போடுவது அவசியமாகிறது. _இல்லையெனில் அக்கழிவுகள் வழியாக நோய்கள் பரவும் அபாயமும் உண்டு என்கிறது விஞ்ஞானம். விஞ்ஞானத்திலும், மெய்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்கியமான வாழ்வுக்காகவே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இணையத்திலிருந்து...
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...
    புருஷனோட Contact லிஸ்ட்ல
    Super Women,
    Sweet Heart,
    Dream Girl,
    Princess,
    Lovely Lady...
    இந்த பேரையெல்லாம் பார்த்து வெறி ஆயிட்டா..
    இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா..
    முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட #அம்மா அட்டெண்ட் பண்ணாங்க..
    ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவனோட #தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...
    மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (#மனைவி) அவளோட நம்பரு...
    நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது #மகளோட நம்பரு...
    கடைசி நம்பருக்கு கால் பண்ணா #மாமியார் நம்பரு...
    மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி
    'அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமே'ன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5,000 டாலர் பணத்தையும் கொடுத்து "போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க.. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். இந்த வாரம் போய்ட்டு வாங்க"ன்னு வழி அனுப்பி வச்சா அந்த புண்ணியவதி..
    வெளிய வந்த நம்மாளு #Mechanicன்னு save பண்ணி வச்சிருந்த அவன் #ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...
    #Moral of The Story:
    இதுக்கு தான் சொல்றது Men Are Always Menன்னு...
    Facebook
    புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா... புருஷனோட Contact லிஸ்ட்ல Super Women, Sweet Heart, Dream Girl, Princess, Lovely Lady... இந்த பேரையெல்லாம் பார்த்து வெறி ஆயிட்டா.. இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா.. முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட #அம்மா அட்டெண்ட் பண்ணாங்க.. ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவனோட #தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு... மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (#மனைவி) அவளோட நம்பரு... நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது #மகளோட நம்பரு... கடைசி நம்பருக்கு கால் பண்ணா #மாமியார் நம்பரு... மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி 'அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமே'ன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5,000 டாலர் பணத்தையும் கொடுத்து "போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க.. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். இந்த வாரம் போய்ட்டு வாங்க"ன்னு வழி அனுப்பி வச்சா அந்த புண்ணியவதி.. வெளிய வந்த நம்மாளு #Mechanicன்னு save பண்ணி வச்சிருந்த அவன் #ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்... #Moral of The Story: இதுக்கு தான் சொல்றது Men Are Always Menன்னு... Facebook
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • வரலாற்றில் நிலை பெற்ற காதலர்கள் ரோமியோ – ஜூலியட் சிலிர்க்க வைக்கும் காதல் கதை..

    🔴🟢🔴

    இத்தாலிய நகரமான வெரோனா இரவிற்குள் கவிழ்ந்திருந்தது. காபுலத் பிரபுவின் வீட்டில் நடக்கும் இசைக் கச்சேரியை பனித்துகள் உறைந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தன வானத்து நட்சத்திரங்கள். பூலோகத்திற்கு வழி தவறி வந்துவிட்ட புனித தேவதையான ஜூலியட்டின் கரங்களைக் கைப்பற்றியிருந்தான் ஆடவன் ஒருவன். அவனுடைய முகத்தை மறைத்த துணியை விலகச்சொல்லி மூன்னூறு முறை இறைவனிடம் மன்றாடினாள் ஜூலியட். ஆகட்டும் பார்க்கலாம் என்றான் ஆண்டவன். அதுவரை தங்களைச் சுற்றி நடனம் புரிந்த கால்கள் ஓய்வின் உறைவிடத்திற்குச் சென்றும் அவன் விடவில்லை இவள் கையை.

    மதுவின் மயக்கத்தில் இவள் வீனஸ் தேவதையா என்றான் ஒருவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அற்புதப் பூ என்றான் மற்றொருவன். ஆதி அந்தம் இல்லா பெருவெளியில், இந்த உலகத்தை தங்கள் வசமாக்கும் குறிக்கோளுடன் நடனமாடினார்கள் முக்காடிட்ட முதல்வனும் ஜூலியட்டும். கச்சேரிக்குள் காட்டாறு போலப்பரவியது அந்தச் செய்தி. மாண்டேகு வம்சத்தின் வாரிசு ஒருவனின் வருகைச் செய்தி வதந்தியில்லை என்றான் தூதுவன். கூட்டம் கலைந்தது.

    நடுங்கும் குளிரில் நடந்து செல்லும் மக்களை மாடத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஜூலியட். கரம் பிடித்தவனின் உடல் சூடு இன்னும் உள்ளங்கையில் மிச்சமிருந்தது. முக்காடிட்ட முகம் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை எப்போது முழு நிலவாகும் என்னும்போது அவள் நெஞ்சு ஏறி இறங்கியது. இரவு தூக்கத்தின் மஞ்சம் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. வெரோனாவின் ஏதோவொரு தெருவில் அவன் தனக்காக நின்று கொண்டிருப்பான் என்ற ஜூலியட்டின் எண்ணத்தைப் பொய்யாக்கக் கூடாது என்பதற்காகவே தூரத்து இருளில் நின்று உப்பிரிகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ரோமியோ. கைகளை தந்தவளின் கன்னத்தை தடவாமல் வந்தது அவனை வாட்டியது. இத்தாலியக் குளிரிலும் இவனுக்கு வேர்த்தது. அங்கே சீனத்துப் பட்டு மெத்தையில் தலையணையோடு போர் புரிந்தாள் புனிதி. இருவரும் தூக்கத்தைத் தொலைத்தார்கள்.

    வலிய மனிதர்களின் கட்டளைக்கு காதல் என்றுமே கதவு திறந்ததில்லை. உள்ளங்கள் இடம் மாறுவதற்கு முகங்களே அவசியம் இல்லாதபோது முகவரி எதற்கு? காபுலத்தின் பரம வைரியான மாண்டேகுவின் மகன் ரோமியோ கனவுகளின் வழியே புது உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜூலியட்டின் உதட்டோரச் சிரிப்பில் வாழ்க்கை முழுவதும் சிறையிருக்கத் தயாரானான்.

    வரலாறு முழுவதும் காதல் இப்படியான வினோத முடிச்சுகளைப் போட்டவண்ணமே பயணித்திருக்கிறது. எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கும். நெருங்க முடியாத நெருப்பு வளையத்திற்குள் இருப்பவளைத்தான் இந்தக் காதலர்கள் தேடியிருக்கிறார்கள். கடினம் தான் காதலின் முதல் படி. அதுதான் உயிரைக் கொழுத்திக் காதல் வளர்க்கிறது. கையில் சிக்காத தங்கப்பதுமை ஒன்று தனதென்று ஆகிவிட்டால் குரங்கிடம் புத்தியை கடன் வாங்குகிறான் மனிதன். சமாதானத்திற்காக ஏங்கும் சண்டைகளும், சமாதனம் தரும் சலுகைகளுக்காக தூண்டப்படும் சண்டைகளுமே காதல். கடந்து போகும் ஆயிரம் முகங்களில் அவள் முகத்தினை மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்துவிட வைக்கிறது காதல்.

    அடுத்தநாள் இரவு பல்லாண்டுகளுக்குப் பின்னர் வந்ததாகத் தோனியது ரோமியோவிற்கு. காற்றினும் கடுகி நடந்தான் கயல்விழியாள் வீடு தேடி. வானத்து நிலவொன்று உப்பிரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கானவனின் வருகை அவளுடைய சிந்தையை வதைத்தது. சுவரோரம் பதுங்கி வந்த ரோமியோவைப் பார்த்து பூக்களின் மொழியில் புன்னகைத்தாள் ஜூலியட். காட்டுக்கொடி ஒன்றின் மீது கைவைத்தே மேலேறினான் காதலன். பதட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது உதடுகளுக்கு தன் உதட்டால் ஆறுதல் சொன்னான். இரவு ஆயிரம் கால்களுடன் இத்தாலியை விட்டு நீங்குவதாக இயற்கையை வாசைபாடினார்கள். காதுகளுக்கு ரகசியம் சொல்லச் சென்ற அவனுடைய உதடுகள் கன்னத்தில் கால்பதித்து நின்றன.

    இந்த ரகசிய பரிமாற்றங்கள் நாள்தோறும் நடந்தன. பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் இருட்டை வெளுத்தார்கள் இருவரும். எத்தனை நாள் இந்த வேஷம் என்று மார்பில் முகம்புதைத்து அழுதாள் ஜூலியட். கொலைகார ஊரில் ஒரே நல்லவரான லாரன்ஸ் பாதிரியாரிடம் காதலைப் போட்டுடைத்தான். இரு குடும்பத்திற்கும் உள்ள பகையைத் தீர்க்க பகடை உருட்டினார் பாதிரியார். அடுத்த நாள் இரவில், நிலவும் தூங்கும் பொழுதில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார் லாரன்ஸ்.

    அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய மணமக்களைப் பார்த்து விதி சிரித்தது. இரவிற்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் காபுலத் பிரபுவின் காதுகளை எட்டியிருந்தது. காபுலத் விசுவாசி ஒருவன் ரோமியோவை வாளால் வழிமறித்தான். உயிர் அவளிடம் இருக்கும் தைரியத்தில் வாள் வீசினான் ரோமியோ. காற்றைக் கிழித்து சுற்றிச் சுழன்ற வாள் எதிராளியின் தலையை தரையில் இறக்கி வைத்ததிற்குப் பின்னரே ரோமியோவின் உறைக்குத் திரும்பியது. கலவரக் காற்று பலமாக வீசியது.

    ரோமியோவை நாடு கடத்த உத்தரவிட்டான் காபுலத். காலம் கனியும் வரைக் காத்திரு என லாரன்சும் கண்ணசைக்கவே உடலின் பிரிவை ஒப்புக்கொண்டான். தீவு ஒன்றில் ஜூலியட்டின் நினைவுகளோடு தனித்து விடப்பட்டான் ரோமியோ. வீட்டில் சிறைபட்டாள் ஜூலியட். கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்தான் காபுலத். பாரிஸ் என்னும் ஆண்மகனை ஊருக்கு அழைத்து வந்தான்.

    உண்மை ஓய்வெடுக்கச் செல்லும்போது சூழ்ச்சி விழித்துக் கொள்கிறது. பரபரக்கும் கல்யாண ஏற்பாடுகளை கண்ணீரோடு பாதிரியாரிடம் விவரித்தாள் ஜூலியட். சிக்கலைத் தீர்க்க தன்னிடம் மருந்து இருக்கிறதென்றார் அவர். பாட்டிலில் பத்திரப்படுத்திய விசேஷ விஷம் ஒன்றினை அவள் கையில் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு மட்டுமே மரணத்தைத் தரும் அற்புதத்தை மேலாடையில் மறைத்துக்கொண்டாள் ஜூலியட். விழாகோலம் பூண்டது காபுலத் வீடு. விடிந்தால் கல்யாணம். வான வேடிக்கைகள் சந்திரனுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. யுகங்களாய் நீண்ட இரவின் விளிம்பில் கண்திறந்தான் கதிரவன். ஜூலியட்டின் தூக்கம் நிரந்தரமானது என்று காலையில் அலறினாள் தோழி ஒருத்தி. வெரோனா வெறிச்சோடியது. பூங்கொத்துகளை அவிழ்த்து மலர்வளையம் தயாரித்தார்கள். ஜூலியட்டின் மரணத்திற்குக் காரணம் காபுலத்தின் பாவப்பட்ட பகைதான் என வேரோனாவின் வாய்கள் முணுமுணுத்தன.

    அங்கே தீவில் பாறைகளில் அவளை ஓவியமாக வரைந்தால் ஒருவேளை வலிக்குமோ என தன்னுடம்பில் கிறுக்கினான் ரோமியோ. இன்பத்தை மட்டுமே அளித்த இரவுகள் இப்போது தூரதேசம் போயிருப்பதாகத் துடித்தான். முழு விவரத்தையும் ரோமியோவிடம் சொல்ல பாதிரியார் பயணித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரோமியோவின் நண்பன் ஒருவன் ஜூலியட் மண்ணுலகைத் துறந்தாள் என அரைகுறை சேதியிட்டான் ரோமியோவிடம்.

    வாழ்வதற்கான தகுதி நேற்றிரவே தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த ரோமியோ குதிரையில் புறப்பட்டான். தேவதையின் திருக்கால்களில் தன்னுயிர் போகவேண்டும் என கொடும் விஷம் ஒன்றினை வாங்கினான் வழியில். குதிரையின் குளம்பில் தீப்பொறி பறக்க வேரோனாவிற்கு வந்துசேர்ந்தான். கல்லறைத் தோட்டத்தில் விதைக்கப்பட இருந்த ஜூலியட்டின் உடலைக் கண்டான். தடுக்கவந்த வீரர்களின் விலா எலும்புகளை உடைத்தெறிந்தான். வெண்ணிற உடையில் இருந்தவளின் உடலெங்கும் முத்தமிட்டான். அவள் கன்னத்தை கண்ணீரால் நனைத்தான். துக்கம் அறிவிற்குத் திரை போட்டது. பதுக்கிவைத்த விஷத்தை ஒரே மிடறில் குடித்தான்.

    அவள் இனி எப்போதும் தனக்கில்லை என்பது எத்தனை பெரிய துயரம். நேற்றுவரை நினைவில் இனித்த நியாபகங்கள் நாளை உயிரை வாட்டும் என்று தெளிந்த பின்னர் எடுக்கப்படும் சாதாரண முடிவைத்தான் ரோமியோவும் எடுத்தான். ஆயுள் அதிகமிருந்தும் வாழ்க்கை கசப்பது எத்தனை கொடுமை? மரணத்தின் நிழலிலாவது அவள் மடியில் இளைப்பாறலாம் என நினைத்திருப்பான் ரோமியோ.

    சற்று நேரத்திற்கெல்லாம் தற்காலிக விடுப்பில் விண்வெளி சென்றிருந்த ஜூலியட் உடல் திரும்பினாள். எழுப்ப முடியாத தொலைவு சென்றுவிட்ட ரோமியோவை தன் பங்கிற்கு எழுப்பிப் பார்த்தாள். இமைக்காமல் தன்னைப் பார்க்கும் ரோமியோவின் கண்களில் கடந்த காலத்தைத் தெரிந்துகொண்டாள். குற்றவுணர்ச்சி பெரும் வேகத்துடன் பிரவகித்தது. அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு எச்சிலில் இருக்கும் விஷத்தை இரவல் கேட்டாள். ஒருதுளி மிச்சமில்லாமல் உண்டிருந்தான் ரோமியோ. தாளாத அழுகையிலும் தன்னருகே கிடந்த வாளினை எடுத்தாள். நெஞ்சில் குறிவைத்தவள் ஏனோ தயங்கி வயிற்றில் பாய்ச்சினாள் வாளை. அற்ப மனிதர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத காதல் கோட்டைக்கு குடியேறியது இந்த இளம் ஜோடி.

    இன்றும் எத்தனையோ ரோமியோவும் ஜூலியட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகில் காபுலத்திற்கும், மாண்டேகுவிற்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. காதலர்களைப் பிரித்து விட்டதாய் அவர்கள் நினைத்தாலும் காலம் அந்தக் காதலர்களை பெயரளவில் கூட பிரிப்பதில்லை. இன்றும் ரோமியோ தனியாகவோ ஜூலியட் தனியாகவோ அழைக்கப்பட்டதில்லை. நேற்று அல்ல, இன்று அல்ல, என்றும் அவர்கள் ரோமியோ – ஜூலியட் தான்.
    வரலாற்றில் நிலை பெற்ற காதலர்கள் ரோமியோ – ஜூலியட் சிலிர்க்க வைக்கும் காதல் கதை.. 🔴🟢🔴 இத்தாலிய நகரமான வெரோனா இரவிற்குள் கவிழ்ந்திருந்தது. காபுலத் பிரபுவின் வீட்டில் நடக்கும் இசைக் கச்சேரியை பனித்துகள் உறைந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தன வானத்து நட்சத்திரங்கள். பூலோகத்திற்கு வழி தவறி வந்துவிட்ட புனித தேவதையான ஜூலியட்டின் கரங்களைக் கைப்பற்றியிருந்தான் ஆடவன் ஒருவன். அவனுடைய முகத்தை மறைத்த துணியை விலகச்சொல்லி மூன்னூறு முறை இறைவனிடம் மன்றாடினாள் ஜூலியட். ஆகட்டும் பார்க்கலாம் என்றான் ஆண்டவன். அதுவரை தங்களைச் சுற்றி நடனம் புரிந்த கால்கள் ஓய்வின் உறைவிடத்திற்குச் சென்றும் அவன் விடவில்லை இவள் கையை. மதுவின் மயக்கத்தில் இவள் வீனஸ் தேவதையா என்றான் ஒருவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அற்புதப் பூ என்றான் மற்றொருவன். ஆதி அந்தம் இல்லா பெருவெளியில், இந்த உலகத்தை தங்கள் வசமாக்கும் குறிக்கோளுடன் நடனமாடினார்கள் முக்காடிட்ட முதல்வனும் ஜூலியட்டும். கச்சேரிக்குள் காட்டாறு போலப்பரவியது அந்தச் செய்தி. மாண்டேகு வம்சத்தின் வாரிசு ஒருவனின் வருகைச் செய்தி வதந்தியில்லை என்றான் தூதுவன். கூட்டம் கலைந்தது. நடுங்கும் குளிரில் நடந்து செல்லும் மக்களை மாடத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஜூலியட். கரம் பிடித்தவனின் உடல் சூடு இன்னும் உள்ளங்கையில் மிச்சமிருந்தது. முக்காடிட்ட முகம் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை எப்போது முழு நிலவாகும் என்னும்போது அவள் நெஞ்சு ஏறி இறங்கியது. இரவு தூக்கத்தின் மஞ்சம் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. வெரோனாவின் ஏதோவொரு தெருவில் அவன் தனக்காக நின்று கொண்டிருப்பான் என்ற ஜூலியட்டின் எண்ணத்தைப் பொய்யாக்கக் கூடாது என்பதற்காகவே தூரத்து இருளில் நின்று உப்பிரிகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ரோமியோ. கைகளை தந்தவளின் கன்னத்தை தடவாமல் வந்தது அவனை வாட்டியது. இத்தாலியக் குளிரிலும் இவனுக்கு வேர்த்தது. அங்கே சீனத்துப் பட்டு மெத்தையில் தலையணையோடு போர் புரிந்தாள் புனிதி. இருவரும் தூக்கத்தைத் தொலைத்தார்கள். வலிய மனிதர்களின் கட்டளைக்கு காதல் என்றுமே கதவு திறந்ததில்லை. உள்ளங்கள் இடம் மாறுவதற்கு முகங்களே அவசியம் இல்லாதபோது முகவரி எதற்கு? காபுலத்தின் பரம வைரியான மாண்டேகுவின் மகன் ரோமியோ கனவுகளின் வழியே புது உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜூலியட்டின் உதட்டோரச் சிரிப்பில் வாழ்க்கை முழுவதும் சிறையிருக்கத் தயாரானான். வரலாறு முழுவதும் காதல் இப்படியான வினோத முடிச்சுகளைப் போட்டவண்ணமே பயணித்திருக்கிறது. எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கும். நெருங்க முடியாத நெருப்பு வளையத்திற்குள் இருப்பவளைத்தான் இந்தக் காதலர்கள் தேடியிருக்கிறார்கள். கடினம் தான் காதலின் முதல் படி. அதுதான் உயிரைக் கொழுத்திக் காதல் வளர்க்கிறது. கையில் சிக்காத தங்கப்பதுமை ஒன்று தனதென்று ஆகிவிட்டால் குரங்கிடம் புத்தியை கடன் வாங்குகிறான் மனிதன். சமாதானத்திற்காக ஏங்கும் சண்டைகளும், சமாதனம் தரும் சலுகைகளுக்காக தூண்டப்படும் சண்டைகளுமே காதல். கடந்து போகும் ஆயிரம் முகங்களில் அவள் முகத்தினை மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்துவிட வைக்கிறது காதல். அடுத்தநாள் இரவு பல்லாண்டுகளுக்குப் பின்னர் வந்ததாகத் தோனியது ரோமியோவிற்கு. காற்றினும் கடுகி நடந்தான் கயல்விழியாள் வீடு தேடி. வானத்து நிலவொன்று உப்பிரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கானவனின் வருகை அவளுடைய சிந்தையை வதைத்தது. சுவரோரம் பதுங்கி வந்த ரோமியோவைப் பார்த்து பூக்களின் மொழியில் புன்னகைத்தாள் ஜூலியட். காட்டுக்கொடி ஒன்றின் மீது கைவைத்தே மேலேறினான் காதலன். பதட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது உதடுகளுக்கு தன் உதட்டால் ஆறுதல் சொன்னான். இரவு ஆயிரம் கால்களுடன் இத்தாலியை விட்டு நீங்குவதாக இயற்கையை வாசைபாடினார்கள். காதுகளுக்கு ரகசியம் சொல்லச் சென்ற அவனுடைய உதடுகள் கன்னத்தில் கால்பதித்து நின்றன. இந்த ரகசிய பரிமாற்றங்கள் நாள்தோறும் நடந்தன. பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் இருட்டை வெளுத்தார்கள் இருவரும். எத்தனை நாள் இந்த வேஷம் என்று மார்பில் முகம்புதைத்து அழுதாள் ஜூலியட். கொலைகார ஊரில் ஒரே நல்லவரான லாரன்ஸ் பாதிரியாரிடம் காதலைப் போட்டுடைத்தான். இரு குடும்பத்திற்கும் உள்ள பகையைத் தீர்க்க பகடை உருட்டினார் பாதிரியார். அடுத்த நாள் இரவில், நிலவும் தூங்கும் பொழுதில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார் லாரன்ஸ். அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய மணமக்களைப் பார்த்து விதி சிரித்தது. இரவிற்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் காபுலத் பிரபுவின் காதுகளை எட்டியிருந்தது. காபுலத் விசுவாசி ஒருவன் ரோமியோவை வாளால் வழிமறித்தான். உயிர் அவளிடம் இருக்கும் தைரியத்தில் வாள் வீசினான் ரோமியோ. காற்றைக் கிழித்து சுற்றிச் சுழன்ற வாள் எதிராளியின் தலையை தரையில் இறக்கி வைத்ததிற்குப் பின்னரே ரோமியோவின் உறைக்குத் திரும்பியது. கலவரக் காற்று பலமாக வீசியது. ரோமியோவை நாடு கடத்த உத்தரவிட்டான் காபுலத். காலம் கனியும் வரைக் காத்திரு என லாரன்சும் கண்ணசைக்கவே உடலின் பிரிவை ஒப்புக்கொண்டான். தீவு ஒன்றில் ஜூலியட்டின் நினைவுகளோடு தனித்து விடப்பட்டான் ரோமியோ. வீட்டில் சிறைபட்டாள் ஜூலியட். கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்தான் காபுலத். பாரிஸ் என்னும் ஆண்மகனை ஊருக்கு அழைத்து வந்தான். உண்மை ஓய்வெடுக்கச் செல்லும்போது சூழ்ச்சி விழித்துக் கொள்கிறது. பரபரக்கும் கல்யாண ஏற்பாடுகளை கண்ணீரோடு பாதிரியாரிடம் விவரித்தாள் ஜூலியட். சிக்கலைத் தீர்க்க தன்னிடம் மருந்து இருக்கிறதென்றார் அவர். பாட்டிலில் பத்திரப்படுத்திய விசேஷ விஷம் ஒன்றினை அவள் கையில் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு மட்டுமே மரணத்தைத் தரும் அற்புதத்தை மேலாடையில் மறைத்துக்கொண்டாள் ஜூலியட். விழாகோலம் பூண்டது காபுலத் வீடு. விடிந்தால் கல்யாணம். வான வேடிக்கைகள் சந்திரனுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. யுகங்களாய் நீண்ட இரவின் விளிம்பில் கண்திறந்தான் கதிரவன். ஜூலியட்டின் தூக்கம் நிரந்தரமானது என்று காலையில் அலறினாள் தோழி ஒருத்தி. வெரோனா வெறிச்சோடியது. பூங்கொத்துகளை அவிழ்த்து மலர்வளையம் தயாரித்தார்கள். ஜூலியட்டின் மரணத்திற்குக் காரணம் காபுலத்தின் பாவப்பட்ட பகைதான் என வேரோனாவின் வாய்கள் முணுமுணுத்தன. அங்கே தீவில் பாறைகளில் அவளை ஓவியமாக வரைந்தால் ஒருவேளை வலிக்குமோ என தன்னுடம்பில் கிறுக்கினான் ரோமியோ. இன்பத்தை மட்டுமே அளித்த இரவுகள் இப்போது தூரதேசம் போயிருப்பதாகத் துடித்தான். முழு விவரத்தையும் ரோமியோவிடம் சொல்ல பாதிரியார் பயணித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரோமியோவின் நண்பன் ஒருவன் ஜூலியட் மண்ணுலகைத் துறந்தாள் என அரைகுறை சேதியிட்டான் ரோமியோவிடம். வாழ்வதற்கான தகுதி நேற்றிரவே தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த ரோமியோ குதிரையில் புறப்பட்டான். தேவதையின் திருக்கால்களில் தன்னுயிர் போகவேண்டும் என கொடும் விஷம் ஒன்றினை வாங்கினான் வழியில். குதிரையின் குளம்பில் தீப்பொறி பறக்க வேரோனாவிற்கு வந்துசேர்ந்தான். கல்லறைத் தோட்டத்தில் விதைக்கப்பட இருந்த ஜூலியட்டின் உடலைக் கண்டான். தடுக்கவந்த வீரர்களின் விலா எலும்புகளை உடைத்தெறிந்தான். வெண்ணிற உடையில் இருந்தவளின் உடலெங்கும் முத்தமிட்டான். அவள் கன்னத்தை கண்ணீரால் நனைத்தான். துக்கம் அறிவிற்குத் திரை போட்டது. பதுக்கிவைத்த விஷத்தை ஒரே மிடறில் குடித்தான். அவள் இனி எப்போதும் தனக்கில்லை என்பது எத்தனை பெரிய துயரம். நேற்றுவரை நினைவில் இனித்த நியாபகங்கள் நாளை உயிரை வாட்டும் என்று தெளிந்த பின்னர் எடுக்கப்படும் சாதாரண முடிவைத்தான் ரோமியோவும் எடுத்தான். ஆயுள் அதிகமிருந்தும் வாழ்க்கை கசப்பது எத்தனை கொடுமை? மரணத்தின் நிழலிலாவது அவள் மடியில் இளைப்பாறலாம் என நினைத்திருப்பான் ரோமியோ. சற்று நேரத்திற்கெல்லாம் தற்காலிக விடுப்பில் விண்வெளி சென்றிருந்த ஜூலியட் உடல் திரும்பினாள். எழுப்ப முடியாத தொலைவு சென்றுவிட்ட ரோமியோவை தன் பங்கிற்கு எழுப்பிப் பார்த்தாள். இமைக்காமல் தன்னைப் பார்க்கும் ரோமியோவின் கண்களில் கடந்த காலத்தைத் தெரிந்துகொண்டாள். குற்றவுணர்ச்சி பெரும் வேகத்துடன் பிரவகித்தது. அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு எச்சிலில் இருக்கும் விஷத்தை இரவல் கேட்டாள். ஒருதுளி மிச்சமில்லாமல் உண்டிருந்தான் ரோமியோ. தாளாத அழுகையிலும் தன்னருகே கிடந்த வாளினை எடுத்தாள். நெஞ்சில் குறிவைத்தவள் ஏனோ தயங்கி வயிற்றில் பாய்ச்சினாள் வாளை. அற்ப மனிதர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத காதல் கோட்டைக்கு குடியேறியது இந்த இளம் ஜோடி. இன்றும் எத்தனையோ ரோமியோவும் ஜூலியட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகில் காபுலத்திற்கும், மாண்டேகுவிற்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. காதலர்களைப் பிரித்து விட்டதாய் அவர்கள் நினைத்தாலும் காலம் அந்தக் காதலர்களை பெயரளவில் கூட பிரிப்பதில்லை. இன்றும் ரோமியோ தனியாகவோ ஜூலியட் தனியாகவோ அழைக்கப்பட்டதில்லை. நேற்று அல்ல, இன்று அல்ல, என்றும் அவர்கள் ரோமியோ – ஜூலியட் தான்.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். அது உண்மைதான்.. ஒருவருக்கு அளவுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்றால் அது கூட ஆபத்தாக போய்விடுவதுண்டு.
    பழங்காலத்திலெல்லாம் கிரேக்க தேசத்தில் ஒரு பழக்கம் காணப்பட்டது. அதாவது யாரையாவது நாடு கடத்த வேண்டும் என்று அந்த மக்கள் விரும்பினால் அவருடைய பெயரை ஒரு மட்பாண்டத்தில் எழுதி அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் போட்டுவிடுவார்கள். அவ்வளவுதான் இது மாதிரி பல பேர் போட்டுக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் குவிந்த உடன் அந்த சில்லுகளில் யாருடைய பெயர் அதிகமாக இருக்கிறதோ அந்த நபரை ஒரு பத்து ஆண்டுகள் நாடு கடத்தி விடுவார்கள். அது அங்கே உள்ள வழக்கம்.

    ஒரு நாள் அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ஆள் நின்றுக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு சில்லு வைத்துக் கொண்டிருந்தான். யாருடைய பெயரையாவது எழுதி அந்த இடத்தில் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் படிக்காதவன். அதனால் எழுத தெரியவில்லை. யாராவது அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

    ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடினான் கையிலிருந்த மட்பாண்ட சில்லை கொடுத்தான். "ஐயா.. இதிலே ஒரு பெயர் எழுதி கொடுங்கள்" என்றார். அந்தப் பெரியவர் அதை கையில் வாங்கிக் கொண்டார்.

    " யாருடைய பெயரை எழுத வேண்டும்?" என்றார்.

    இவன் "அரிஸ்டோட்டில் என்று எழுதுங்கள்" என்றான். அதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு அதிர்ச்சி.? ஏன் தெரியுமா அவர்தான் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். இருந்தாலும் தான் தான் அது என்பதை காட்டிக் கொள்ளாமல் அந்த நபரிடம் கேட்டார்.

    "அதுசரி.. அரிஸ்டோட்டில் உனக்கு என்ன கெடுதல் செய்தார்? அவர் பெயரை எழுதச் சொல்கிறாய்?" என்று கேட்டார் .

    "அவர் எனக்கு எந்தக் கெடுதலும் செய்ய வில்லை. அவரை நான் பார்த்ததுகூட இல்லை" என்றான்.

    "எதற்காக அவரை நாடு கடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?" என்று கேட்டார்.

    "அரிஸ்டோட்டில் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.. அவர் ரொம்ப நல்லவர். அவர் ஒரு பெரிய அறிவாளி. அவர் ஒரு பெரிய வள்ளல். பேரறிஞர். இப்படி எல்லோரும் சொல்வதை கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது.. அதனால் அவரை வெறுக்கிறேன்" என்று கூறினான்.

    இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நாம் நல்லவனாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை. எந்த தொல்லையும் இல்லை. ஆனால் நம்மை நல்லவன் நல்லவன் என்று அடுத்தவர்கள் எப்போது சொல்ல ஆரம்பிக்கிறார்களோ அன்றிலிருந்து தான் நமக்கு இடைஞ்சல் ஆரம்பமாகிறது. எனவே எதுவுமே அளவுக்கு மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். அது உண்மைதான்.. ஒருவருக்கு அளவுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்றால் அது கூட ஆபத்தாக போய்விடுவதுண்டு. பழங்காலத்திலெல்லாம் கிரேக்க தேசத்தில் ஒரு பழக்கம் காணப்பட்டது. அதாவது யாரையாவது நாடு கடத்த வேண்டும் என்று அந்த மக்கள் விரும்பினால் அவருடைய பெயரை ஒரு மட்பாண்டத்தில் எழுதி அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் போட்டுவிடுவார்கள். அவ்வளவுதான் இது மாதிரி பல பேர் போட்டுக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் குவிந்த உடன் அந்த சில்லுகளில் யாருடைய பெயர் அதிகமாக இருக்கிறதோ அந்த நபரை ஒரு பத்து ஆண்டுகள் நாடு கடத்தி விடுவார்கள். அது அங்கே உள்ள வழக்கம். ஒரு நாள் அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ஆள் நின்றுக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு சில்லு வைத்துக் கொண்டிருந்தான். யாருடைய பெயரையாவது எழுதி அந்த இடத்தில் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் படிக்காதவன். அதனால் எழுத தெரியவில்லை. யாராவது அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடினான் கையிலிருந்த மட்பாண்ட சில்லை கொடுத்தான். "ஐயா.. இதிலே ஒரு பெயர் எழுதி கொடுங்கள்" என்றார். அந்தப் பெரியவர் அதை கையில் வாங்கிக் கொண்டார். " யாருடைய பெயரை எழுத வேண்டும்?" என்றார். இவன் "அரிஸ்டோட்டில் என்று எழுதுங்கள்" என்றான். அதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு அதிர்ச்சி.? ஏன் தெரியுமா அவர்தான் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். இருந்தாலும் தான் தான் அது என்பதை காட்டிக் கொள்ளாமல் அந்த நபரிடம் கேட்டார். "அதுசரி.. அரிஸ்டோட்டில் உனக்கு என்ன கெடுதல் செய்தார்? அவர் பெயரை எழுதச் சொல்கிறாய்?" என்று கேட்டார் . "அவர் எனக்கு எந்தக் கெடுதலும் செய்ய வில்லை. அவரை நான் பார்த்ததுகூட இல்லை" என்றான். "எதற்காக அவரை நாடு கடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?" என்று கேட்டார். "அரிஸ்டோட்டில் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.. அவர் ரொம்ப நல்லவர். அவர் ஒரு பெரிய அறிவாளி. அவர் ஒரு பெரிய வள்ளல். பேரறிஞர். இப்படி எல்லோரும் சொல்வதை கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது.. அதனால் அவரை வெறுக்கிறேன்" என்று கூறினான். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நாம் நல்லவனாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை. எந்த தொல்லையும் இல்லை. ஆனால் நம்மை நல்லவன் நல்லவன் என்று அடுத்தவர்கள் எப்போது சொல்ல ஆரம்பிக்கிறார்களோ அன்றிலிருந்து தான் நமக்கு இடைஞ்சல் ஆரம்பமாகிறது. எனவே எதுவுமே அளவுக்கு மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.
    0 Comments ·0 Shares ·941 Views ·0 Reviews
  • ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.

    அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

    அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.
    ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

    அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.

    நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள்.
    பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன்.
    மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது.
    உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.

    தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.

    அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல.
    அதற்குத் திறமை வேண்டும்.
    நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.

    “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

    நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன்.
    நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

    “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம்.
    நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.

    இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர்.
    இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

    எங்கும் இருட்டாக இருந்தது.
    அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

    திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர்.
    அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

    திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

    ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு.
    அது கத்தாது என்று சொல்ல நினைத்தான்.
    கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.
    “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.

    இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன்.
    சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.

    ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான்.
    வலிமையாக ஊதினான்.

    சங்கோசை எங்கும் கேட்டது.

    அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

    பிறகு என்ன?
    பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

    இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.
    ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
More Results
Idaivelai.com https://idaivelai.com