**காந்தா'.. ஈகோவால் அழிந்து போன ஒரு சூப்பர் ஸ்டார்.**
துல்கர் சல்மான் நடித்து வெளிவந்துள்ள 'காந்தா' திரைப்படம், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்பட்ட எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்ற பேச்சுதான் திரை ரசிகர்கள் மத்தியில் இப்போது பரவலாக உள்ளது.
படக்குழுவினர் இதனை அதிகாரப்பூர்வமாக மறுத்து, இது 1950-களின் சினிமா உலகில் நடக்கும் ஒரு புனைவுக் கதை என்று கூறினாலும், கதையின் மையக்கரு, கதாநாயகனின் குணாதிசயங்கள், மற்றும் கதையில் வரும் ஒரு கொலைச் சம்பவம் ஆகியவை பாகவதரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில துரதிர்ஷ்டவசமான திருப்பங்களை நினைவுபடுத்துகின்றன.
இந்த யூகங்களின் பின்னணியில், 'காந்தா' திரைப்பட விமர்சனம் இதோ..
கதைக்களம் 1950-களின் தமிழ்த் திரையுலகில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு திரைப்படத்துக்கு கதையும் இயக்கமும்தான் ஆன்மா என நம்பும் மூத்த இயக்குநர், 'அய்யா' என அழைக்கப்படும் ஏ.பி. கோதண்டராமன் (சமுத்திரக்கனி).
ரசிகர்களால் கடவுளாகப் பார்க்கப்படும் அளவுக்கு உச்சத்தில் இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர், டி.கே. மகாதேவன் (துல்கர் சல்மான்).
அய்யா உருவாக்கிய சூப்பர்ஸ்டார்தான் மகாதேவன்.
ஆனால், புகழ் ஏற ஏற, 'கூட்டம் என்னைப் பார்க்கத்தான் கூடுகிறது' என்ற ஈகோ மகாதேவனுக்குள் எழுகிறது. தன் குருவான அய்யாவுடன் மோதல் கொள்கிறார்.
அய்யா இயக்கும் 'சாந்தா' என்ற கனவுப் படம் பாதியில் நிற்கிறது. சமரசத்திற்குப் பிறகு, அய்யாவின் விருப்பத்திற்கு மாறாக, மகாதேவனின் நிபந்தனைகளுடன் 'காந்தா' என்ற பெயரில் மீண்டும் படம் தொடங்குகிறது.
இந்தக் குரு-சிஷ்யன் மோதலுக்கு இடையில், படத்தின் நாயகி குமாரி (பாக்யஸ்ரீ போர்ஸ்)-க்கும் மகாதேவனுக்கும் காதல் மலர்கிறது. இந்தக் குழப்பமான சூழலில், படப்பிடிப்புத் தளத்தில் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் கொலை நிகழ்கிறது.
இந்தக் கொலையை யார் செய்தது? இந்தக் கொலை, ஈகோ மோதல் மற்றும் காதலுடன் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதே படத்தின் கதை.
துல்கர் ஏற்று நடித்திருக்கும் டி.கே. மகாதேவன் எனும் நட்சத்திர நடிகரின் கதாபாத்திரம், புகழின் உச்சியில் இருக்கும்போது, எதிர்பாராத ஒரு திருப்பத்தால் வீழ்ச்சியை சந்தித்த எம் கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைப் பாதையை ஒத்திருக்கிறது.
மேடை நாடகத்தில் இருந்து வந்து, இசை மற்றும் நடிப்புத் திறனால், திரை உலக சக்கரவர்த்தியாக உயர்ந்த ஒரு நட்சத்திரத்தின் தோற்றம் இதில் தென்படுகிறது.
உண்மைக் கதையில், பாகவதர் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கில்' சிக்கி சிறை சென்றார். இதன் காரணமாக, அவரது திரை வாழ்க்கை பெரும் சரிவைச் சந்தித்தது. 'காந்தா' படத்திலும், ஒரு நடிகரின் ஈகோ மோதலின் உச்சத்தில், படப்பிடிப்புத் தளத்தில் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் கொலை நடக்கிறது. இந்தக் கொலை, கதாநாயகனைச் சூழ்ந்து, அவரது வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே படத்தின் மையம். ஒரு காலத்தில் திரையுலகில் இருந்த நட்சத்திரங்களின் தனிப்பட்ட கர்வங்களையும், இயக்குநர்களின் கலைத் தாகத்தையும் பிரதிபலிப்பதாக இந்த படம் அமைந்துள்ளது .
1950-களின் சென்னை சினிமா உலகம், ஸ்டூடியோக்கள், நட்சத்திரங்களின் ஆடம்பர வாழ்க்கை, ரசிகர்களின் வழிபாடு என அனைத்தையும் அரவிந்த் எஸ். காஷ்யப்பின் ஒளிப்பதிவு நேர்த்தியாகக் கடத்துகிறது. அந்தப் பொற்காலச் சூழலை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதற்காகவே கலை இயக்குநரைப் பாராட்டலாம்.
துல்கர் சல்மான், டி.கே. மகாதேவன் எனும் பாத்திரத்தை உச்சபட்ச ஈகோவும், தனிப்பட்ட அன்பும் கொண்டவனாக நன்கு வெளிப்படுத்துகிறார். நடிப்பில் துல்கர் வெளிப்படுத்தும் மிடுக்கு, திமிர், காதல், மற்றும் குற்றவுணர்ச்சி ஆகியவை மிகச்சிறப்பு.
குறிப்பாக, கொலைக்குப் பின் வரும் அவருடைய நடிப்பும், கிளைமாக்ஸில் வெளிப்படுத்தும் உடல்மொழியும், ஒரு நட்சத்திரத்தின் அகங்காரத்தின் ஆழத்தை நம்மிடம் கடத்தி, நம்மைச் சிந்திக்க வைக்கிறது. சமுத்திரக்கனி தனது பாத்திரத்தில் அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் குரு-சிஷ்யன் மோதலே படத்தின் முதல் பாதியைச் சூடுபிடிக்க வைக்கிறது. இவர்களுக்கிடையேயான உரையாடல்களும், ஈகோ வெளிப்பாடுகளும் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் முதல் பாதியில் இருக்கும் கலை மீதான ஈகோ மோதலின் ஆழம், இரண்டாம் பாதியில் கொலை விசாரணையாக மாறும் போது நீர்த்துப்போகிறது. ஒரு கிரைம் த்ரில்லருக்குத் தேவையான விறுவிறுப்பும், எதிர்பாராத திருப்பங்களும் சற்றுக் குறைவாகவே உள்ளன.
கொலைக்கான பின்னணி மற்றும் தீர்வு, நாம் யூகிக்கக்கூடிய விதத்தில் எளிமையாக அமைந்திருப்பது, ஒரு மர்மப் படத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது. துல்கர் சல்மானின் பிரமிக்க வைக்கும் நடிப்புக்காகவும், மறக்கப்பட்ட ஒரு சகாப்தத்தின் நட்சத்திர மோதலைத் திரையில் பார்த்த சிலிர்ப்புக்காகவும் 'காந்தா'வைப் திரையில் தாராளமாக பார்க்கலாம்.
மொத்தத்தில் காந்தா"...
புகழின் உச்சியில் இருக்கும் ஒரு கலைஞனின் கோபமும், அந்தக் கோபத்தால் வரும் பெரும் சரிவையும் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்திரம்."
#kantha #dulkar #காந்தா #துல்கர்

0 Commenti
·0 condivisioni
·1K Views
·0 Anteprima