• ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Reacties ·0 aandelen ·7K Views ·0 voorbeeld
  • "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள்.
    "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான்.

    அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள்.
    சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை.
    அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்...

    சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....?

    நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான்.
    வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை.
    என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான்.

    சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன?

    அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட.

    முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார்.
    சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார்.

    சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்".

    அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம்.
    அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?"
    என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்..
    குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.

    "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள். "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான். அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள். சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை. அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்... சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....? நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான். வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை. என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான். சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன? அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட. முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார். சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார். சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்". அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம். அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?" என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்.. குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.
    0 Reacties ·0 aandelen ·3K Views ·0 voorbeeld
  • தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..
    1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

    2. எந்த மொழியை சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

    3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.

    4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

    5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

    6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

    7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

    8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
    மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம். ..

    தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்.. 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழியை சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை. 5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது. 6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள். 7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள். 8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம். ..
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • 🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்)

    கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய்.
    பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும்.

    👉 முக்கிய சிக்கல் என்னவென்றால்
    ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
    அல்லது
    👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம்.

    அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.

    ---

    🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி)

    👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
    👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை

    👉 சில நாட்கள் மலச்சிக்கல்
    👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு
    ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம்

    ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை
    ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து

    ---

    🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல்

    👉 மெல்லிய / பென்சில் போல மலம்
    ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும்

    👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல்
    ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை

    ---

    🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி)

    👉 பிரகாசமான சிவப்பு ரத்தம்

    டாய்லெட் பேப்பரில்

    மலத்தின் மீது

    கமோட்டில்

    👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள்
    ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம்

    👉 கருப்பு / அடர் நிற மலம்
    ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம்

    👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு
    ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia)
    ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை

    ---

    🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம்

    👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு
    👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி

    👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு
    👉 அதிக வாயு, உப்புசம்

    ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும்

    ---

    🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு

    👉 டாய்லெட் சென்ற பிறகும்
    👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு

    👉 குறிப்பாக மலத்துடன்

    ரத்தம்

    சளி (mucus)
    இருந்தால் முக்கிய அறிகுறி

    ---

    🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல்

    👉 டயட் இல்லாமல் எடை குறைதல்
    👉 சாப்பிட விருப்பம் குறைதல்
    👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு

    ---

    🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம்

    👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது
    👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல்
    👉 தலைசுற்றல், வெளிறிய தோல்

    ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும்

    ---

    🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை)

    👉 ஆண்கள்
    👉 மெனோபாஸ் கடந்த பெண்கள்

    ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால்
    ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும்

    ---

    🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள்

    👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம்
    👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை

    🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்

    ---

    🟣 10) மலத்தில் சளி (Mucus)

    👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால்
    👉 அதோடு ரத்தம், வலி இருந்தால்
    ⚠️ பரிசோதனை அவசியம்

    ---

    🟣 யாருக்கு ஆபத்து அதிகம்?

    👉 வயது 45க்கு மேல்
    👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு
    👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள்
    👉 நீண்ட கால குடல் அழற்சி நோய்
    👉 அதிக உடல் எடை
    👉 புகை, மது
    👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு

    ---

    🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம்

    👉 மீண்டும் மீண்டும் ரத்தம்
    👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல்
    👉 வயிற்று வலி + எடை குறைதல்
    👉 காரணமில்லாத அனீமியா
    👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள்

    ---

    ⭐ முக்கிய செய்தி

    👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில்
    சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம்

    👉 ஆனால்
    மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா
    🚩 மிக முக்கிய எச்சரிக்கை

    👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்

    ---

    ⚠️ மருத்துவ அறிவிப்பு
    இந்த தகவல் கல்விக்காக மட்டுமே.
    ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால்
    👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்) கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய். பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும். 👉 முக்கிய சிக்கல் என்னவென்றால் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். அல்லது 👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம். அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம். --- 🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி) 👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு 👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை 👉 சில நாட்கள் மலச்சிக்கல் 👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம் ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து --- 🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல் 👉 மெல்லிய / பென்சில் போல மலம் ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும் 👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல் ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை --- 🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி) 👉 பிரகாசமான சிவப்பு ரத்தம் டாய்லெட் பேப்பரில் மலத்தின் மீது கமோட்டில் 👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள் ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம் 👉 கருப்பு / அடர் நிற மலம் ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம் 👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia) ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை --- 🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம் 👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு 👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி 👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு 👉 அதிக வாயு, உப்புசம் ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும் --- 🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு 👉 டாய்லெட் சென்ற பிறகும் 👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு 👉 குறிப்பாக மலத்துடன் ரத்தம் சளி (mucus) இருந்தால் முக்கிய அறிகுறி --- 🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல் 👉 டயட் இல்லாமல் எடை குறைதல் 👉 சாப்பிட விருப்பம் குறைதல் 👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு --- 🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம் 👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது 👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல் 👉 தலைசுற்றல், வெளிறிய தோல் ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும் --- 🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை) 👉 ஆண்கள் 👉 மெனோபாஸ் கடந்த பெண்கள் ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால் ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும் --- 🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள் 👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம் 👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை 🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும் --- 🟣 10) மலத்தில் சளி (Mucus) 👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால் 👉 அதோடு ரத்தம், வலி இருந்தால் ⚠️ பரிசோதனை அவசியம் --- 🟣 யாருக்கு ஆபத்து அதிகம்? 👉 வயது 45க்கு மேல் 👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு 👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள் 👉 நீண்ட கால குடல் அழற்சி நோய் 👉 அதிக உடல் எடை 👉 புகை, மது 👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு --- 🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் 👉 மீண்டும் மீண்டும் ரத்தம் 👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல் 👉 வயிற்று வலி + எடை குறைதல் 👉 காரணமில்லாத அனீமியா 👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள் --- ⭐ முக்கிய செய்தி 👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில் சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம் 👉 ஆனால் மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா 🚩 மிக முக்கிய எச்சரிக்கை 👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் --- ⚠️ மருத்துவ அறிவிப்பு இந்த தகவல் கல்விக்காக மட்டுமே. ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால் 👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    0 Reacties ·0 aandelen ·4K Views ·0 voorbeeld
  • அமெரிக்க போர்க்கப்பலை உரசி கொண்டு பறந்த ரஷ்யாவின் மூன்று குண்டு வீச்சு விமானங்கள்.

    இன்னொரு பக்கம் வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட ரஷ்ய எண்ணை டேங்கர் கப்பலை அமெரிக்க படைகள் கைப்பற்றி உள்ளன.

    ரஷ்யாவின் நீர் மூழ்கி கப்பல் ஒன்று அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட அந்த கப்பலை பின் தொடர்ந்து செல்வதாக தகவல்.
    அமெரிக்க போர்க்கப்பலை உரசி கொண்டு பறந்த ரஷ்யாவின் மூன்று குண்டு வீச்சு விமானங்கள். இன்னொரு பக்கம் வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட ரஷ்ய எண்ணை டேங்கர் கப்பலை அமெரிக்க படைகள் கைப்பற்றி உள்ளன. ரஷ்யாவின் நீர் மூழ்கி கப்பல் ஒன்று அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட அந்த கப்பலை பின் தொடர்ந்து செல்வதாக தகவல்.
    0 Reacties ·0 aandelen ·1K Views ·1 Plays ·0 voorbeeld
  • 🚨அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான கழிப்பதற்கான உன் உணர்வு பனிக்காலத்தில் அதிகமாக இருக்கும். இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு பனி காலத்தில் உண்டாகும்.
    🚨மற்ற காலங்களை ஒப்பிடும்போது பனி சமயங்களில் நாம் மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்போம். ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம். எத்தனை முறை தான் சிறுநீர் கழிப்பது என்று நினைத்து அடக்கி வைத்துக் கொள்வோம்
    🚨பனி காலத்தில் நம்முடைய உடலில் டையூரிசிஸ் என்னும் ஒரு செயல் தூண்டப்படும்.
    அது தான் நம்மை அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுகிறது.

    🚨பனி காலத்தில் மிகக் குறைவாக வெப்பநிலை, ரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. உடல் உறுப்புகளில் அதிக ரத்த ஓட்டத்தை எடுத்து வருகிறது.அதோடு மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

    🚨சிறுநீர் கழிக்காமல் சேமிக்கப்படும் முழு சிறுநீர்ப்பை என்பது உங்கள் உடல் வெப்பத்தைஇந்த ரத்த ஓட்டம் சிறுநீரகங்கள் உட்பட

    🚨அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் செல்கிறது. இந்த செயல்முறை வாசோகன்ஸ்டிரிக்ஷன் என்னும் ரத்த நாளச் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது.
    இழக்கும் மற்றொரு வழியாகும்.
    உடனடியாக சிறுநீர் கழிப்பது உங்கள் உடல் வெப்பத்தை பாதுகாக்க உதவுகிறது.

    🚨சிறுநீர் கழிப்பதை அடக்குவது உடலின் வெப்பநிலையில் சமநிலையின்மையை உண்டாக்குவதோடு, சிறுநீரகச் செயலிழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

    🚨நரம்புகள் அதிகஅழுத்தத்தை எதிர்கொள்ளும். உடல் அதிக அழுத்தத்தில் இருக்கும்போதும் இதே உணர்வு உண்டாகும்.

    பயனுள்ள தகவல்கள் ✍️✍️
    #சிந்தனை
    #Inspirationalquotes
    #Motivationalquotes
    #Facts
    #Factsintamil
    #Interestingfacts
    #Randomfacts
    #Unknownfacts
    #Tamilfacts
    #Healthfacts
    #Historyfacts
    #தெரிந்துகொள்வோம்
    #ஆச்சரியமானதகவல்கள்
    #Facts #mems #comedymemes #funnymemes
    🚨அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான கழிப்பதற்கான உன் உணர்வு பனிக்காலத்தில் அதிகமாக இருக்கும். இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு பனி காலத்தில் உண்டாகும். 🚨மற்ற காலங்களை ஒப்பிடும்போது பனி சமயங்களில் நாம் மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்போம். ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம். எத்தனை முறை தான் சிறுநீர் கழிப்பது என்று நினைத்து அடக்கி வைத்துக் கொள்வோம் 🚨பனி காலத்தில் நம்முடைய உடலில் டையூரிசிஸ் என்னும் ஒரு செயல் தூண்டப்படும். அது தான் நம்மை அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுகிறது. 🚨பனி காலத்தில் மிகக் குறைவாக வெப்பநிலை, ரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. உடல் உறுப்புகளில் அதிக ரத்த ஓட்டத்தை எடுத்து வருகிறது.அதோடு மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. 🚨சிறுநீர் கழிக்காமல் சேமிக்கப்படும் முழு சிறுநீர்ப்பை என்பது உங்கள் உடல் வெப்பத்தைஇந்த ரத்த ஓட்டம் சிறுநீரகங்கள் உட்பட 🚨அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் செல்கிறது. இந்த செயல்முறை வாசோகன்ஸ்டிரிக்ஷன் என்னும் ரத்த நாளச் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது. இழக்கும் மற்றொரு வழியாகும். உடனடியாக சிறுநீர் கழிப்பது உங்கள் உடல் வெப்பத்தை பாதுகாக்க உதவுகிறது. 🚨சிறுநீர் கழிப்பதை அடக்குவது உடலின் வெப்பநிலையில் சமநிலையின்மையை உண்டாக்குவதோடு, சிறுநீரகச் செயலிழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. 🚨நரம்புகள் அதிகஅழுத்தத்தை எதிர்கொள்ளும். உடல் அதிக அழுத்தத்தில் இருக்கும்போதும் இதே உணர்வு உண்டாகும். பயனுள்ள தகவல்கள் ✍️✍️ #சிந்தனை #Inspirationalquotes #Motivationalquotes #Facts #Factsintamil #Interestingfacts #Randomfacts #Unknownfacts #Tamilfacts #Healthfacts #Historyfacts #தெரிந்துகொள்வோம் #ஆச்சரியமானதகவல்கள் #Facts #mems #comedymemes #funnymemes
    0 Reacties ·0 aandelen ·3K Views ·0 voorbeeld
  • ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..!

    ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.

    எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது

    எத்தனை கறி செய்வது?

    பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா?
    யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது?

    கவலைக்குரிய விடயம் என்னவெனில்:-

    இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள்.

    அடுத்த பிரச்சினை:-

    ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள்.

    ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும்.

    பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.

    ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது.

    மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம்.

    வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்...

    ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

    ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

    ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

    இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.....

    சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..! ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள். எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது எத்தனை கறி செய்வது? பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா? யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது? கவலைக்குரிய விடயம் என்னவெனில்:- இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள். அடுத்த பிரச்சினை:- ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள். ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும். பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது. ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது. மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம். வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்... ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும். ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும். இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது..... சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • அண்டார்டிகாவில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ஒரு தன்னாட்சி கடல் ரோபோ
    எதிர்பாராத விதத்தில், விஞ்ஞான உலகையே அதிர வைத்த ஒரு கண்டுபிடிப்பை செய்து விட்டது.

    ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், Antarcticaவில் உள்ள Totten Glacier அருகே கடல் நீரின் இயக்கங்களை ஆய்வு செய்ய இந்த ரோபோவை அனுப்பினர்.
    ஆனால் இயற்கையின் சக்தி வேறு திட்டம் போட்டது.

    கடல் ஓட்டங்களில் சிக்கிய அந்த ரோபோ, திட்டமிட்ட இடத்தை விட்டு விலகி, இதுவரை மனிதர்கள் நேரடியாக ஆய்வு செய்யாத Denman Glacier-ன் அடியில் சென்று சிக்கிக் கொண்டது.

    ---

    ❄️ பனியின் அடியில்… பல மாதங்கள்

    தடித்த பனிக்கட்டின் கீழ்,
    ஒளியே இல்லாத சூழலில்,
    பல மாதங்கள் அந்த ரோபோ செயல்பட்டு வந்தது.

    அது நகரும் போது, பனிப்பாறையின் அடிப்பகுதியை மீண்டும் மீண்டும் தொட்டு சென்றது.
    இதன் மூலம், Denman Glacier-ன் பனி தடிமனை
    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமாக வரைபடம் தயாரிக்க முடிந்தது.

    ---

    🌊 மறைந்திருந்த அபாயம் வெளிச்சத்திற்கு

    ரோபோவில் உள்ள கருவிகள்,
    Denman Glacier-ன் அடிப்பகுதியில்
    சாதாரணத்தை விட வெப்பமான கடல் நீர்
    ஓடிக்கொண்டிருப்பதை கண்டறிந்தன.

    இந்த வெப்பமான நீர்,
    பனிப்பாறையை கீழ்புறத்திலிருந்து வேகமாக உருக்கி,
    மிகப் பெரிய பனி களஞ்சியத்தில்
    மறைந்திருந்த நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

    ---

    🌍 உலகிற்கு என்ன அர்த்தம்?

    Denman Glacier போன்ற பெரும் பனிப்பாறைகள்
    நிலைத்தன்மையை இழந்தால்,

    • கடல் மட்டம் உயர்வது வேகமாகும்
    • கடலோர நகரங்களுக்கு அபாயம் அதிகரிக்கும்
    • காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாகும்

    என்பதை இந்த ஆய்வு எச்சரிக்கையாக சொல்கிறது.

    ---

    🔬 விபத்தாக தொடங்கி… வரலாற்று கண்டுபிடிப்பு

    ஒரு தவறான பாதை,
    ஒரு எதிர்பாராத சிக்கல்,
    ஆனால் அதுவே
    மனிதகுலத்திற்கு மிக முக்கியமான அறிவை அளித்துள்ளது.

    அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் வெப்பம்,
    நாம் நினைப்பதை விட
    உலகின் எதிர்காலத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

    இந்த தகவல் முக்கியம் என்று நினைத்தால்,
    மற்றவர்களும் அறிய பகிருங்கள்.

    #antarctica #climatescience #sealevelrise #oceanresearch #earthchanges #fblifestyle
    அண்டார்டிகாவில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ஒரு தன்னாட்சி கடல் ரோபோ எதிர்பாராத விதத்தில், விஞ்ஞான உலகையே அதிர வைத்த ஒரு கண்டுபிடிப்பை செய்து விட்டது. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், Antarcticaவில் உள்ள Totten Glacier அருகே கடல் நீரின் இயக்கங்களை ஆய்வு செய்ய இந்த ரோபோவை அனுப்பினர். ஆனால் இயற்கையின் சக்தி வேறு திட்டம் போட்டது. கடல் ஓட்டங்களில் சிக்கிய அந்த ரோபோ, திட்டமிட்ட இடத்தை விட்டு விலகி, இதுவரை மனிதர்கள் நேரடியாக ஆய்வு செய்யாத Denman Glacier-ன் அடியில் சென்று சிக்கிக் கொண்டது. --- ❄️ பனியின் அடியில்… பல மாதங்கள் தடித்த பனிக்கட்டின் கீழ், ஒளியே இல்லாத சூழலில், பல மாதங்கள் அந்த ரோபோ செயல்பட்டு வந்தது. அது நகரும் போது, பனிப்பாறையின் அடிப்பகுதியை மீண்டும் மீண்டும் தொட்டு சென்றது. இதன் மூலம், Denman Glacier-ன் பனி தடிமனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமாக வரைபடம் தயாரிக்க முடிந்தது. --- 🌊 மறைந்திருந்த அபாயம் வெளிச்சத்திற்கு ரோபோவில் உள்ள கருவிகள், Denman Glacier-ன் அடிப்பகுதியில் சாதாரணத்தை விட வெப்பமான கடல் நீர் ஓடிக்கொண்டிருப்பதை கண்டறிந்தன. இந்த வெப்பமான நீர், பனிப்பாறையை கீழ்புறத்திலிருந்து வேகமாக உருக்கி, மிகப் பெரிய பனி களஞ்சியத்தில் மறைந்திருந்த நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. --- 🌍 உலகிற்கு என்ன அர்த்தம்? Denman Glacier போன்ற பெரும் பனிப்பாறைகள் நிலைத்தன்மையை இழந்தால், • கடல் மட்டம் உயர்வது வேகமாகும் • கடலோர நகரங்களுக்கு அபாயம் அதிகரிக்கும் • காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாகும் என்பதை இந்த ஆய்வு எச்சரிக்கையாக சொல்கிறது. --- 🔬 விபத்தாக தொடங்கி… வரலாற்று கண்டுபிடிப்பு ஒரு தவறான பாதை, ஒரு எதிர்பாராத சிக்கல், ஆனால் அதுவே மனிதகுலத்திற்கு மிக முக்கியமான அறிவை அளித்துள்ளது. அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் வெப்பம், நாம் நினைப்பதை விட உலகின் எதிர்காலத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் முக்கியம் என்று நினைத்தால், மற்றவர்களும் அறிய பகிருங்கள். #antarctica #climatescience #sealevelrise #oceanresearch #earthchanges #fblifestyle
    0 Reacties ·0 aandelen ·3K Views ·0 voorbeeld
  • அந்த எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேனைப் பார்த்தபோது, மருத்துவமனையின் ஏசி குளிரையும் மீறி என் முதுகுத்தண்டில் ஒரு நடுக்கம் பரவியது. அது கறுப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட ஒரு மரண சாசனம்.

    இந்த மருத்துவமனையில் என்னை ஒரு ஜாம்பவான் என்று சொல்வார்கள். என் பெயர் டாக்டர் சரவணன், ஓய்வு பெற்ற வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர். நாற்பது ஆண்டுகளை மனித உடல்களுக்குள்ளேயே கழித்தவன் நான். சென்னையின் தெருக்களை விட நம் உடலின் ரத்த நாளங்களின் வரைபடம் எனக்கு அத்தனை அக்குவேறாகத் தெரியும். துடிக்கும் இதயங்களை என் உள்ளங்கைகளில் தாங்கியிருக்கிறேன்; கூரை வரை பீய்ச்சி அடித்த ரத்தக் கசிவுகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறேன். ஆனால் அந்த ஸ்கேனைப் பார்த்தபோது, பல தசாப்தங்களில் முதல்முறையாக, நான் ஒரு மருத்துவனாக உணரவில்லை; ஒரு ஏமாற்றுக்காரனாக உணர்ந்தேன்.

    நோயாளி கௌரி. வயது இருபத்தி ஆறு. மின்சாரக் கட்டணம் செலுத்தவே இரண்டு ஷிப்டுகள் வேலை செய்யும் ஒரு தனித்து வாழும் தாய். காபி ஊற்றிக் கொண்டிருந்தபோது அப்படியே சரிந்து விழுந்திருக்கிறாள். அவள் மூளையில் இருந்த அந்த ரத்த நாள வீக்கம் (Aneurysm) வெறும் ஒரு நோய் அல்ல; அது ஒரு அரக்கன். ஒரு மலைப்பாம்பைப் போல அவளது மூளைத் தண்டின் மிக மென்மையான பகுதிகளை அது சுற்றியிருந்தது.

    "சரவணன், இது அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை," என்று நரம்பியல் துறைத் தலைவர் தலையை அசைத்தார். "நீ உள்ளே போனால், டேபிளிலேயே ரத்தக் கசிவு ஏற்பட்டு அவள் இறந்துவிடுவாள். அப்படியே விட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அது வெடித்துவிடும். எப்படிப் பார்த்தாலும் அவள் இறப்பது உறுதி."

    மருத்துவத் துறையில், அபாயங்களை எடைபோடவே நாங்கள் பழகியிருக்கிறோம். தோல்வி விகிதம் மற்றும் பொறுப்புகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். தர்க்கரீதியாகப் பார்த்தால்: இதைத் தொடாதே. அங்கிருந்து நகர்ந்துவிடு. இயற்கை அதன் வேலையைச் செய்யட்டும் என்றுதான் தோன்றியது.

    ஆனால் நான் கௌரியின் கண்களைப் பார்த்தேன். அங்கே அவளது நான்கு வயது சிறுமி, தேய்ந்து போன காலணிகளை அணிந்துகொண்டு, காத்திருப்பு அறையில் ஒரு புத்தகத்தில் வண்ணம் தீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். கௌரி இறந்தால், அந்தச் சிறுமி அனாதையாகிவிடுவாள். உடனே அறுவை சிகிச்சைக்கான நேரத்தை ஒதுக்கும்படி நிர்வாகத்திடம் சொன்னேன். நானே அந்த வழக்கைக் கையாளுவதாகக் கூறினேன். அனைவரும் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்தார்கள். ஒருவேளை நான் அப்படித் தான் இருந்தேனோ என்னவோ.

    அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு, என் அலுவலகத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். வெளியே நகரத்தின் விளக்குகள் மின்னின, ஆனால் உள்ளே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் பற்றி அந்த உலகம் கவலைப்படவில்லை. நான் பயந்திருந்தேன். பாறையைப் போல உறுதியாக இருக்கும் என் கைகள் லேசாக நடுங்கின. கடைசி முறையாக ஸ்கேன்களைப் பார்த்தேன். எந்த வழியும் தெரியவில்லை. எந்தப் பக்கம் தொடங்குவது என்று புரியவில்லை. அது ஒரு தற்கொலை முயற்சி போன்றது.

    நான் அறிவியலை நம்புபவன். கத்தரிக்கோலையும், தையல்களையும், ரத்த அழுத்தத்தையும் நம்புபவன். ஆனால் என் மேஜையில், மருத்துவ இதழ்களுக்குப் பின்னால், ஒரு சிறிய பழைய லேமினேட் செய்யப்பட்ட 'வைத்தீஸ்வரன்' படம் இருந்தது. நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது என் பாட்டி கொடுத்தது. "மருத்துவம் உடலைக் தான் குணப்படுத்தும், ஆனால் மனிதனை குணப்படுத்துவது அவன் மனதை குணப்படுத்துவது கடவுள் மட்டுமே" என்று அவர் சொல்வார்.

    நான் அந்தப் படத்தை எடுத்தேன். முறையான பிரார்த்தனை எதுவும் செய்யவில்லை. கௌரியின் ஃபைல் மீது என் கையை வைத்து, அந்தப் படத்தைப் பார்த்து இருட்டில் மெதுவாகப் பேசினேன்.

    "ஹே பிரபோ," என் குரல் தழுதழுத்தது. "இந்த ஒரு முறைக்கு என் கைகள் மட்டும் போதாது. நான் கீழே வேலை செய்யும் ஒரு மெக்கானிக் மட்டுமே. நாளை காலை, நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். என் கைகளை நான் உங்களுக்குத் தருகிறேன், ஆனால் உங்கள் ஞானத்தை எனக்குத் தாருங்கள். நீங்களே அந்த அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வேண்டும்."

    அடுத்த நாள் காலை, அறுவை சிகிச்சை அறை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அங்கு நிலவிய பதற்றம் காற்றில் கனத்தது. செவிலியர்கள் அமைதியாக நகர்ந்தார்கள்; மயக்க மருந்து நிபுணர் என் கண்களைப் பார்க்கத் தயங்கினார். நாங்கள் ஒரு மரணப் போராட்டத்திற்குள் நுழைகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.

    நாங்கள் அறுவை சிகிச்சையைத் தொடங்கினோம்.

    ஸ்கேனில் பார்த்ததை விட நிலைமை மோசமாக இருந்தது. ரத்த நாளத்தின் சுவர் காகிதத்தைப் போல மெல்லியதாக, ஆக்ரோஷமாகத் துடித்துக் கொண்டிருந்தது. ஒரு சிறிய தவறான மூச்சு அல்லது ஒரு மைக்ரோஸ்கோபிக் நடுக்கம் ஏற்பட்டால் கூட அது வெடித்துவிடும்.

    நான் மைக்ரோ-சிஸர்ஸை எடுத்தேன். அதுதான் அந்த முக்கியமான தருணம்.

    திடீரென்று, அந்த அறையே நிசப்தமானது. அமைதி மட்டுமல்ல, ஒரு முழுமையான வெற்றிடம் போன்ற நிசப்தம். மானிட்டர்களின் பீப் சத்தங்கள் பின்னணியில் மறைந்தன.

    ஒரு விசித்திரமான கதகதப்பு என் தோள்களில் பரவி, என் கைகள் வழியாக விரல் நுனிகளுக்குச் சென்றது. அது அட்ரினலின் (Adrenaline) அல்ல - எனக்கு அட்ரினலின் பற்றித் தெரியும், அது வேகமானது. இதுவோ... ஒரு முழுமையான, கனமான அமைதி.

    என் கைகள் மிக வேகமாக நகரத் தொடங்கின.

    ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன்: நான் அவற்றை இயக்கவில்லை. அவை நகர்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    நான் ஒருபோதும் பயிற்சி செய்யாத நுணுக்கமான முறைகளைச் செய்தேன். எழுபது வயது முதியவரால் முடியாத வேகம் மற்றும் துல்லியத்துடன் என் விரல்கள் நடனமாடின. மூளைத் தண்டிலிருந்து மில்லிமீட்டர் தொலைவில் இருக்கும் திசுக்களைச் சற்றும் தயக்கமின்றிப் பிரித்தேன். கண்ணுக்குத் தெரியாத இடங்களில் கூட, ஒரு உள்ளுணர்வு என்னை வழிநடத்த, கிளிப்புகளைப் பொருத்தினேன்.

    "பிபி (BP) சீராக இருக்கிறது," என்று மயக்க மருந்து நிபுணர் அதிர்ச்சியுடன் கிசுகிசுத்தார்.

    நான் பதில் சொல்லவில்லை. என்னால் முடியவில்லை. நான் ஒரு ஆழ்ந்த நிலையில் இருந்தேன். யாரோ ஒருவன் எனக்குப் பின்னால் நின்று, என் முழங்கைகளை வழிநடத்தி, என் மணிக்கட்டுகளை நிலைப்படுத்துவது போல உணர்ந்தேன்.

    வேறொரு மருத்துவர் அந்த இடத்திற்கு வந்துவிட்டது போன்ற ஒரு வலிமையான இருப்பை நான் உணர்ந்தேன்.

    நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு, கடைசி கருவியை தட்டில் போட்டேன்.

    "ரத்த நாள வீக்கம் நீக்கப்பட்டது," என்றேன். என் குரல் எனக்குத் தூரமாகக் கேட்டது. "தையல் போடுங்கள்."

    அந்த அறையே ஆர்ப்பரித்தது. செவிலியர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அங்கிருந்த மற்ற மருத்துவர்கள் மானிட்டர்களை நம்ப முடியாமல் பார்த்தார்கள். ஒரு சொட்டு ரத்தம் கூட வீணாகவில்லை. அது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகச் சரியாக இருந்தது.

    நான் என் அங்கிகளைத் துடைத்துவிட்டு, கைகழுவும் இடத்திற்குச் சென்றேன். கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். வழக்கமாக இது போன்ற ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் சோர்வடைந்து, வியர்வையில் நனைந்து, முதுகு வலியால் துடிப்பேன்.

    ஆனால் இப்போது நான் வியர்க்கவில்லை. அமைதியாக இருந்தேன். எனக்குச் சோர்வே தெரியவில்லை.

    என் சுருங்கிய, வயதான கைகளைப் பார்த்தேன். அவை இன்று ஒரு தாயைக் காப்பாற்றியிருக்கின்றன. ஒரு சிறுமி அனாதையாவதைத் தடுத்திருக்கின்றன. ஆனால் எனக்கு உண்மை தெரியும்.

    நான் என் அலுவலகத்திற்குச் சென்று, அந்த வைத்தீஸ்வரன் படத்தை எடுத்து மீண்டும் என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

    ஒரு வாரம் கழித்து கௌரியின் டிஸ்சார்ஜ் பேப்பர்களில் கையெழுத்திட்டேன். கௌரி தன் மகளின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தாள். கண்கள் பனிக்க அவள் எனக்கு நன்றி சொன்னாள், என்னை ஒரு 'கடவுள்' என்று அழைத்தாள்.

    நான் புன்னகைத்துத் தலையசைத்தேன். "நான் இதைத் தனியாகச் செய்யவில்லை," என்று அவளிடம் சொன்னேன்.

    நான் செவிலியர் குழுவைக் குறிப்பிடுவதாக அவள் நினைத்தாள். ஆனால் அந்த நாளில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் யார் என்று எனக்குத் தெரியும்.

    அறிவியலால் 'எப்படி' என்பதை விளக்க முடியும். ரத்த ஓட்டத்தையும் நரம்புகளையும் விளக்க முடியும். ஆனால் 'ஏன்' என்பதை அதனால் விளக்கவே முடியாது. ஒரு மனிதன், சாத்தியமற்ற ஒன்றை எதிர்கொள்ளும்போது, வழி இல்லாத இடத்தில் எப்படி ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான் என்பதை அறிவியலால் விளக்க முடியாது.

    சில நேரங்களில், நீங்கள் வெறும் ஒரு கருவிதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்தச் செவ்வாய்க்கிழமை, அறுவை சிகிச்சை அறை எண் 4-ல், 'மகா மருத்துவர்' பணியில் இருந்தார்.

    எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஸ்கேன் இருட்டாக இருந்தாலும், உலகம் முடிந்துவிட்டது என்று சொன்னாலும் சரியே. அற்புதங்கள் எப்போதும் மின்னலுடனும் இடியுடனும் வருவதில்லை. சில நேரங்களில், அவை ஒரு ஜோடி நிதானமான கைகள் மற்றும் ஒரு மௌனமான பிரார்த்தனையுடன் வருகின்றன.

    -மொழிபெயர்ப்பு பதிவு

    Karthikeyan selvaraj
    அந்த எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேனைப் பார்த்தபோது, மருத்துவமனையின் ஏசி குளிரையும் மீறி என் முதுகுத்தண்டில் ஒரு நடுக்கம் பரவியது. அது கறுப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட ஒரு மரண சாசனம். இந்த மருத்துவமனையில் என்னை ஒரு ஜாம்பவான் என்று சொல்வார்கள். என் பெயர் டாக்டர் சரவணன், ஓய்வு பெற்ற வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர். நாற்பது ஆண்டுகளை மனித உடல்களுக்குள்ளேயே கழித்தவன் நான். சென்னையின் தெருக்களை விட நம் உடலின் ரத்த நாளங்களின் வரைபடம் எனக்கு அத்தனை அக்குவேறாகத் தெரியும். துடிக்கும் இதயங்களை என் உள்ளங்கைகளில் தாங்கியிருக்கிறேன்; கூரை வரை பீய்ச்சி அடித்த ரத்தக் கசிவுகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறேன். ஆனால் அந்த ஸ்கேனைப் பார்த்தபோது, பல தசாப்தங்களில் முதல்முறையாக, நான் ஒரு மருத்துவனாக உணரவில்லை; ஒரு ஏமாற்றுக்காரனாக உணர்ந்தேன். நோயாளி கௌரி. வயது இருபத்தி ஆறு. மின்சாரக் கட்டணம் செலுத்தவே இரண்டு ஷிப்டுகள் வேலை செய்யும் ஒரு தனித்து வாழும் தாய். காபி ஊற்றிக் கொண்டிருந்தபோது அப்படியே சரிந்து விழுந்திருக்கிறாள். அவள் மூளையில் இருந்த அந்த ரத்த நாள வீக்கம் (Aneurysm) வெறும் ஒரு நோய் அல்ல; அது ஒரு அரக்கன். ஒரு மலைப்பாம்பைப் போல அவளது மூளைத் தண்டின் மிக மென்மையான பகுதிகளை அது சுற்றியிருந்தது. "சரவணன், இது அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை," என்று நரம்பியல் துறைத் தலைவர் தலையை அசைத்தார். "நீ உள்ளே போனால், டேபிளிலேயே ரத்தக் கசிவு ஏற்பட்டு அவள் இறந்துவிடுவாள். அப்படியே விட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அது வெடித்துவிடும். எப்படிப் பார்த்தாலும் அவள் இறப்பது உறுதி." மருத்துவத் துறையில், அபாயங்களை எடைபோடவே நாங்கள் பழகியிருக்கிறோம். தோல்வி விகிதம் மற்றும் பொறுப்புகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். தர்க்கரீதியாகப் பார்த்தால்: இதைத் தொடாதே. அங்கிருந்து நகர்ந்துவிடு. இயற்கை அதன் வேலையைச் செய்யட்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் நான் கௌரியின் கண்களைப் பார்த்தேன். அங்கே அவளது நான்கு வயது சிறுமி, தேய்ந்து போன காலணிகளை அணிந்துகொண்டு, காத்திருப்பு அறையில் ஒரு புத்தகத்தில் வண்ணம் தீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். கௌரி இறந்தால், அந்தச் சிறுமி அனாதையாகிவிடுவாள். உடனே அறுவை சிகிச்சைக்கான நேரத்தை ஒதுக்கும்படி நிர்வாகத்திடம் சொன்னேன். நானே அந்த வழக்கைக் கையாளுவதாகக் கூறினேன். அனைவரும் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்தார்கள். ஒருவேளை நான் அப்படித் தான் இருந்தேனோ என்னவோ. அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு, என் அலுவலகத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். வெளியே நகரத்தின் விளக்குகள் மின்னின, ஆனால் உள்ளே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் பற்றி அந்த உலகம் கவலைப்படவில்லை. நான் பயந்திருந்தேன். பாறையைப் போல உறுதியாக இருக்கும் என் கைகள் லேசாக நடுங்கின. கடைசி முறையாக ஸ்கேன்களைப் பார்த்தேன். எந்த வழியும் தெரியவில்லை. எந்தப் பக்கம் தொடங்குவது என்று புரியவில்லை. அது ஒரு தற்கொலை முயற்சி போன்றது. நான் அறிவியலை நம்புபவன். கத்தரிக்கோலையும், தையல்களையும், ரத்த அழுத்தத்தையும் நம்புபவன். ஆனால் என் மேஜையில், மருத்துவ இதழ்களுக்குப் பின்னால், ஒரு சிறிய பழைய லேமினேட் செய்யப்பட்ட 'வைத்தீஸ்வரன்' படம் இருந்தது. நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது என் பாட்டி கொடுத்தது. "மருத்துவம் உடலைக் தான் குணப்படுத்தும், ஆனால் மனிதனை குணப்படுத்துவது அவன் மனதை குணப்படுத்துவது கடவுள் மட்டுமே" என்று அவர் சொல்வார். நான் அந்தப் படத்தை எடுத்தேன். முறையான பிரார்த்தனை எதுவும் செய்யவில்லை. கௌரியின் ஃபைல் மீது என் கையை வைத்து, அந்தப் படத்தைப் பார்த்து இருட்டில் மெதுவாகப் பேசினேன். "ஹே பிரபோ," என் குரல் தழுதழுத்தது. "இந்த ஒரு முறைக்கு என் கைகள் மட்டும் போதாது. நான் கீழே வேலை செய்யும் ஒரு மெக்கானிக் மட்டுமே. நாளை காலை, நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். என் கைகளை நான் உங்களுக்குத் தருகிறேன், ஆனால் உங்கள் ஞானத்தை எனக்குத் தாருங்கள். நீங்களே அந்த அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வேண்டும்." அடுத்த நாள் காலை, அறுவை சிகிச்சை அறை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அங்கு நிலவிய பதற்றம் காற்றில் கனத்தது. செவிலியர்கள் அமைதியாக நகர்ந்தார்கள்; மயக்க மருந்து நிபுணர் என் கண்களைப் பார்க்கத் தயங்கினார். நாங்கள் ஒரு மரணப் போராட்டத்திற்குள் நுழைகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. நாங்கள் அறுவை சிகிச்சையைத் தொடங்கினோம். ஸ்கேனில் பார்த்ததை விட நிலைமை மோசமாக இருந்தது. ரத்த நாளத்தின் சுவர் காகிதத்தைப் போல மெல்லியதாக, ஆக்ரோஷமாகத் துடித்துக் கொண்டிருந்தது. ஒரு சிறிய தவறான மூச்சு அல்லது ஒரு மைக்ரோஸ்கோபிக் நடுக்கம் ஏற்பட்டால் கூட அது வெடித்துவிடும். நான் மைக்ரோ-சிஸர்ஸை எடுத்தேன். அதுதான் அந்த முக்கியமான தருணம். திடீரென்று, அந்த அறையே நிசப்தமானது. அமைதி மட்டுமல்ல, ஒரு முழுமையான வெற்றிடம் போன்ற நிசப்தம். மானிட்டர்களின் பீப் சத்தங்கள் பின்னணியில் மறைந்தன. ஒரு விசித்திரமான கதகதப்பு என் தோள்களில் பரவி, என் கைகள் வழியாக விரல் நுனிகளுக்குச் சென்றது. அது அட்ரினலின் (Adrenaline) அல்ல - எனக்கு அட்ரினலின் பற்றித் தெரியும், அது வேகமானது. இதுவோ... ஒரு முழுமையான, கனமான அமைதி. என் கைகள் மிக வேகமாக நகரத் தொடங்கின. ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன்: நான் அவற்றை இயக்கவில்லை. அவை நகர்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஒருபோதும் பயிற்சி செய்யாத நுணுக்கமான முறைகளைச் செய்தேன். எழுபது வயது முதியவரால் முடியாத வேகம் மற்றும் துல்லியத்துடன் என் விரல்கள் நடனமாடின. மூளைத் தண்டிலிருந்து மில்லிமீட்டர் தொலைவில் இருக்கும் திசுக்களைச் சற்றும் தயக்கமின்றிப் பிரித்தேன். கண்ணுக்குத் தெரியாத இடங்களில் கூட, ஒரு உள்ளுணர்வு என்னை வழிநடத்த, கிளிப்புகளைப் பொருத்தினேன். "பிபி (BP) சீராக இருக்கிறது," என்று மயக்க மருந்து நிபுணர் அதிர்ச்சியுடன் கிசுகிசுத்தார். நான் பதில் சொல்லவில்லை. என்னால் முடியவில்லை. நான் ஒரு ஆழ்ந்த நிலையில் இருந்தேன். யாரோ ஒருவன் எனக்குப் பின்னால் நின்று, என் முழங்கைகளை வழிநடத்தி, என் மணிக்கட்டுகளை நிலைப்படுத்துவது போல உணர்ந்தேன். வேறொரு மருத்துவர் அந்த இடத்திற்கு வந்துவிட்டது போன்ற ஒரு வலிமையான இருப்பை நான் உணர்ந்தேன். நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு, கடைசி கருவியை தட்டில் போட்டேன். "ரத்த நாள வீக்கம் நீக்கப்பட்டது," என்றேன். என் குரல் எனக்குத் தூரமாகக் கேட்டது. "தையல் போடுங்கள்." அந்த அறையே ஆர்ப்பரித்தது. செவிலியர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அங்கிருந்த மற்ற மருத்துவர்கள் மானிட்டர்களை நம்ப முடியாமல் பார்த்தார்கள். ஒரு சொட்டு ரத்தம் கூட வீணாகவில்லை. அது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகச் சரியாக இருந்தது. நான் என் அங்கிகளைத் துடைத்துவிட்டு, கைகழுவும் இடத்திற்குச் சென்றேன். கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். வழக்கமாக இது போன்ற ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் சோர்வடைந்து, வியர்வையில் நனைந்து, முதுகு வலியால் துடிப்பேன். ஆனால் இப்போது நான் வியர்க்கவில்லை. அமைதியாக இருந்தேன். எனக்குச் சோர்வே தெரியவில்லை. என் சுருங்கிய, வயதான கைகளைப் பார்த்தேன். அவை இன்று ஒரு தாயைக் காப்பாற்றியிருக்கின்றன. ஒரு சிறுமி அனாதையாவதைத் தடுத்திருக்கின்றன. ஆனால் எனக்கு உண்மை தெரியும். நான் என் அலுவலகத்திற்குச் சென்று, அந்த வைத்தீஸ்வரன் படத்தை எடுத்து மீண்டும் என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ஒரு வாரம் கழித்து கௌரியின் டிஸ்சார்ஜ் பேப்பர்களில் கையெழுத்திட்டேன். கௌரி தன் மகளின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தாள். கண்கள் பனிக்க அவள் எனக்கு நன்றி சொன்னாள், என்னை ஒரு 'கடவுள்' என்று அழைத்தாள். நான் புன்னகைத்துத் தலையசைத்தேன். "நான் இதைத் தனியாகச் செய்யவில்லை," என்று அவளிடம் சொன்னேன். நான் செவிலியர் குழுவைக் குறிப்பிடுவதாக அவள் நினைத்தாள். ஆனால் அந்த நாளில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் யார் என்று எனக்குத் தெரியும். அறிவியலால் 'எப்படி' என்பதை விளக்க முடியும். ரத்த ஓட்டத்தையும் நரம்புகளையும் விளக்க முடியும். ஆனால் 'ஏன்' என்பதை அதனால் விளக்கவே முடியாது. ஒரு மனிதன், சாத்தியமற்ற ஒன்றை எதிர்கொள்ளும்போது, வழி இல்லாத இடத்தில் எப்படி ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான் என்பதை அறிவியலால் விளக்க முடியாது. சில நேரங்களில், நீங்கள் வெறும் ஒரு கருவிதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்தச் செவ்வாய்க்கிழமை, அறுவை சிகிச்சை அறை எண் 4-ல், 'மகா மருத்துவர்' பணியில் இருந்தார். எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஸ்கேன் இருட்டாக இருந்தாலும், உலகம் முடிந்துவிட்டது என்று சொன்னாலும் சரியே. அற்புதங்கள் எப்போதும் மின்னலுடனும் இடியுடனும் வருவதில்லை. சில நேரங்களில், அவை ஒரு ஜோடி நிதானமான கைகள் மற்றும் ஒரு மௌனமான பிரார்த்தனையுடன் வருகின்றன. -மொழிபெயர்ப்பு பதிவு Karthikeyan selvaraj
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • உலகெங்கும் "ஆண் குழந்தைகளே வேண்டும்" என்ற எண்ணம் மாறி, "ஆண் குழந்தைகள் வேண்டாம், பெண் குழந்தைகளே வேண்டும்" என்ற மனப்போக்கு வளர்ந்து வருவதாக 'தி எகனாமிஸ்ட்' (The Economist) இதழ் கூறுகிறது.

    மனித இன வரலாற்றில் முதன்முறையாக இந்தச் சமன்பாடு தலைகீழாக மாறியுள்ளது. பல நாடுகளில் இப்போது ஆண் குழந்தைகளே சுமையாகவும், பெண் குழந்தைகளே வரமாகவும் பார்க்கப்படுவதைப் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

    இந்தத் தலைகீழ் மாற்றம் குறிப்பாக மூன்று முக்கியப் பகுதிகளில் மிகத் தெளிவாகத் தெரிகிறது என்கிறது 'தி எகனாமிஸ்ட்':

    1. முன்னேறிய நாடுகள் (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா):

    அமெரிக்கா போன்ற நாடுகளில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளில் 80% பேர் பெண் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். ஜப்பானில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், "ஒரே ஒரு குழந்தை போதும்" என்று நினைக்கும் தம்பதிகளில் 75% பேர், அது பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

    2. சீனா மற்றும் இந்தியா:

    உலகின் மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட இவ்விரு நாடுகளிலும் இந்த மாற்றம் தலைகீழாக நிகழ்ந்துள்ளது. சீனாவில் 2004-ஆம் ஆண்டில் 100 பெண் குழந்தைகளுக்கு 121 ஆண் குழந்தைகள் என்ற உச்சத்தில் இருந்த பாலின விகிதம், சமீபத்தில் சுமார் 109.8 ஆகக் குறைந்துள்ளது.

    இதேபோல் இந்தியாவிலும் இந்த விகிதம் முன்னேற்றமடைந்து, தற்போது 100 பெண் குழந்தைகளுக்குச் சுமார் 106.8 ஆண் குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.

    3. தென்கிழக்கு ஆசியா மற்றும் காக்கேசிய நாடுகள்:

    வியட்நாம், வங்கதேசம் மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகளிலும் ஆண் குழந்தைகளுக்கான மோகம் குறைந்து வருகிறது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளதாக 'தி எகனாமிஸ்ட்' குறிப்பிடுகிறது.

    ஏன் இந்தத் தலைகீழ் மாற்றம்?

    ஒரு மகன் திருமணமாகிச் சென்றபின் தன் பெற்றோரைப் கவனிப்பதை விட, ஒரு மகள் தன் வாழ்நாள் முழுவதும் பெற்றோரின் உடல்நலம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளில் அதிக அக்கறை காட்டுகிறார் என்ற எண்ணம் உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது. "மருமகள் வந்தபின் மகன், மருமகளின் கணவனாக மாறிவிடுகிறான். ஆனால், மகள் சாகும் வரை நம் மகளாகவே இருக்கிறாள்" என்பதே பெற்றோரின் கருத்தாக இருக்கிறது.

    தவிர, இன்று உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் பட்டம் பெறுகிறார்கள். இதனால் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்கும் திறன் பெண்களிடம் அதிகம் இருப்பதாகப் பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

    இன்றைய கார்ப்பரேட் உலகில் உடல் உழைப்பை விட மென்திறன்கள் (Soft Skills), பொறுமை மற்றும் தகவல் தொடர்புத் திறன்களுக்கே (communication) அதிக மதிப்பு கிடைக்கிறது. இந்தப் பண்புகளில் பெண்கள் இயல்பாகவே சிறந்து விளங்குவதால், அவர்கள் சிறந்த வருமானம் ஈட்டுபவர்களாக மாறுகிறார்கள்.

    ஒரு காலத்தில் "குலத்தைக் காப்பவன்" என்று போற்றப்பட்ட ஆண் குழந்தைகள், இன்று பல நாடுகளில் ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறார்கள் என்கிறது 'தி எகனாமிஸ்ட்'. இதற்குச் சில முக்கியக் காரணங்கள்:

    * ஆண் குழந்தைகள் கல்வியில் பின்தங்குவது (The Male Crisis in Education).

    * போதைப் பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் சிக்கும் அபாயம் ஆண்களுக்கு அதிகம் இருப்பது.

    * வேலையில்லாத் திண்டாட்டத்தால் நீண்ட காலம் பெற்றோரைச் சார்ந்து இருப்பது.

    ஆக, பெண்களுக்கு எதிரான பாகுபாடு (Discrimination) மறைந்து வருவது மகிழ்ச்சி அளித்தாலும், "எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன? அக்குழந்தையைச் சிறந்த முறையில் வளர்ப்போம்" என்ற எண்ணம் வரும்போதுதான் மக்கள் மனதில் உண்மையான மாற்றம் ஏற்பட்டதாகக் கருத முடியும்.

    ~ நியாண்டர் செல்வன்
    உலகெங்கும் "ஆண் குழந்தைகளே வேண்டும்" என்ற எண்ணம் மாறி, "ஆண் குழந்தைகள் வேண்டாம், பெண் குழந்தைகளே வேண்டும்" என்ற மனப்போக்கு வளர்ந்து வருவதாக 'தி எகனாமிஸ்ட்' (The Economist) இதழ் கூறுகிறது. மனித இன வரலாற்றில் முதன்முறையாக இந்தச் சமன்பாடு தலைகீழாக மாறியுள்ளது. பல நாடுகளில் இப்போது ஆண் குழந்தைகளே சுமையாகவும், பெண் குழந்தைகளே வரமாகவும் பார்க்கப்படுவதைப் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தலைகீழ் மாற்றம் குறிப்பாக மூன்று முக்கியப் பகுதிகளில் மிகத் தெளிவாகத் தெரிகிறது என்கிறது 'தி எகனாமிஸ்ட்': 1. முன்னேறிய நாடுகள் (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா): அமெரிக்கா போன்ற நாடுகளில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளில் 80% பேர் பெண் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். ஜப்பானில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், "ஒரே ஒரு குழந்தை போதும்" என்று நினைக்கும் தம்பதிகளில் 75% பேர், அது பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். 2. சீனா மற்றும் இந்தியா: உலகின் மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட இவ்விரு நாடுகளிலும் இந்த மாற்றம் தலைகீழாக நிகழ்ந்துள்ளது. சீனாவில் 2004-ஆம் ஆண்டில் 100 பெண் குழந்தைகளுக்கு 121 ஆண் குழந்தைகள் என்ற உச்சத்தில் இருந்த பாலின விகிதம், சமீபத்தில் சுமார் 109.8 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல் இந்தியாவிலும் இந்த விகிதம் முன்னேற்றமடைந்து, தற்போது 100 பெண் குழந்தைகளுக்குச் சுமார் 106.8 ஆண் குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. 3. தென்கிழக்கு ஆசியா மற்றும் காக்கேசிய நாடுகள்: வியட்நாம், வங்கதேசம் மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகளிலும் ஆண் குழந்தைகளுக்கான மோகம் குறைந்து வருகிறது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளதாக 'தி எகனாமிஸ்ட்' குறிப்பிடுகிறது. ஏன் இந்தத் தலைகீழ் மாற்றம்? ஒரு மகன் திருமணமாகிச் சென்றபின் தன் பெற்றோரைப் கவனிப்பதை விட, ஒரு மகள் தன் வாழ்நாள் முழுவதும் பெற்றோரின் உடல்நலம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளில் அதிக அக்கறை காட்டுகிறார் என்ற எண்ணம் உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது. "மருமகள் வந்தபின் மகன், மருமகளின் கணவனாக மாறிவிடுகிறான். ஆனால், மகள் சாகும் வரை நம் மகளாகவே இருக்கிறாள்" என்பதே பெற்றோரின் கருத்தாக இருக்கிறது. தவிர, இன்று உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் பட்டம் பெறுகிறார்கள். இதனால் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்கும் திறன் பெண்களிடம் அதிகம் இருப்பதாகப் பெற்றோர்கள் நம்புகிறார்கள். இன்றைய கார்ப்பரேட் உலகில் உடல் உழைப்பை விட மென்திறன்கள் (Soft Skills), பொறுமை மற்றும் தகவல் தொடர்புத் திறன்களுக்கே (communication) அதிக மதிப்பு கிடைக்கிறது. இந்தப் பண்புகளில் பெண்கள் இயல்பாகவே சிறந்து விளங்குவதால், அவர்கள் சிறந்த வருமானம் ஈட்டுபவர்களாக மாறுகிறார்கள். ஒரு காலத்தில் "குலத்தைக் காப்பவன்" என்று போற்றப்பட்ட ஆண் குழந்தைகள், இன்று பல நாடுகளில் ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறார்கள் என்கிறது 'தி எகனாமிஸ்ட்'. இதற்குச் சில முக்கியக் காரணங்கள்: * ஆண் குழந்தைகள் கல்வியில் பின்தங்குவது (The Male Crisis in Education). * போதைப் பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் சிக்கும் அபாயம் ஆண்களுக்கு அதிகம் இருப்பது. * வேலையில்லாத் திண்டாட்டத்தால் நீண்ட காலம் பெற்றோரைச் சார்ந்து இருப்பது. ஆக, பெண்களுக்கு எதிரான பாகுபாடு (Discrimination) மறைந்து வருவது மகிழ்ச்சி அளித்தாலும், "எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன? அக்குழந்தையைச் சிறந்த முறையில் வளர்ப்போம்" என்ற எண்ணம் வரும்போதுதான் மக்கள் மனதில் உண்மையான மாற்றம் ஏற்பட்டதாகக் கருத முடியும். ~ நியாண்டர் செல்வன்
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • 🚶‍♂️ நீண்ட நடை = நீண்ட ஆயுள்! ❤️

    ஒரு நாளில் 5–10 நிமிடங்கள் நடந்து நிறுத்துவதை விட,
    ஒரே நேரத்தில் தொடர்ந்து நடப்பது தான்
    உங்கள் உடலுக்கு உண்மையான பலன் தருகிறது 💪

    🔹 தொடர்ந்து நடக்கும் போது
    • இதயம் சீராகவும் வலுவாகவும் வேலை செய்யும்
    • தசைகள் உறுதியாகும்
    • ரத்த ஓட்டம் மேம்படும்

    🔹 இடைவிடாத நடை
    👉 இதய நோய் அபாயத்தை குறைக்கும்
    👉 திடீர் மரண ஆபத்தை குறைக்கும்
    👉 உடலுக்கு உண்மையான கார்டியோ பயிற்சி கிடைக்கும்

    ⚠️ சின்ன சின்ன நடைகள் உடலை அசைக்குமே தவிர,
    உடலை மாற்றாது!

    👉 இன்று முதல்
    📌 30–40 நிமிடம்
    📌 இடைவிடாது
    📌 தொடர்ந்து நடக்க ஆரம்பிங்க

    உங்கள் நடை… உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கும்! 🌱

    இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்
    ❤️ Like | 🔁 Share | 💬 Comment
    — மற்றவர்களும் ஆரோக்கியம் பெறட்டும்!
    🚶‍♂️ நீண்ட நடை = நீண்ட ஆயுள்! ❤️ ஒரு நாளில் 5–10 நிமிடங்கள் நடந்து நிறுத்துவதை விட, ஒரே நேரத்தில் தொடர்ந்து நடப்பது தான் உங்கள் உடலுக்கு உண்மையான பலன் தருகிறது 💪 🔹 தொடர்ந்து நடக்கும் போது • இதயம் சீராகவும் வலுவாகவும் வேலை செய்யும் • தசைகள் உறுதியாகும் • ரத்த ஓட்டம் மேம்படும் 🔹 இடைவிடாத நடை 👉 இதய நோய் அபாயத்தை குறைக்கும் 👉 திடீர் மரண ஆபத்தை குறைக்கும் 👉 உடலுக்கு உண்மையான கார்டியோ பயிற்சி கிடைக்கும் ⚠️ சின்ன சின்ன நடைகள் உடலை அசைக்குமே தவிர, உடலை மாற்றாது! 👉 இன்று முதல் 📌 30–40 நிமிடம் 📌 இடைவிடாது 📌 தொடர்ந்து நடக்க ஆரம்பிங்க உங்கள் நடை… உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கும்! 🌱 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ❤️ Like | 🔁 Share | 💬 Comment — மற்றவர்களும் ஆரோக்கியம் பெறட்டும்!
    0 Reacties ·0 aandelen ·538 Views ·0 voorbeeld
  • தூக்கமின்மை உங்கள் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    குறைவான தூக்கம் உங்கள் மூளையை சோர்வடையச் செய்வது மட்டுமல்ல, அது மூளையின் கட்டமைப்பையே சிதைக்கத் தொடங்குகிறது.

    புதிய நரம்பியல் ஆய்வுகளின்படி, தொடர்ச்சியான தூக்கமின்மை மூளையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் ஒரு ஆபத்தான மாற்றத்தைத் தூண்டுகிறது.

    நாம் தொடர்ந்து தூக்கத்தைத் தவிர்க்கும்போது, மூளையில் உள்ள கழிவுகளை அகற்றும் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் அஸ்ட்ரோசைட்டுகள் (Astrocytes) மற்றும் மைக்ரோகிளியா (Microglia) செல்கள் அதிகப்படியான சுறுசுறுப்பு அடைகின்றன.

    சாதாரணமாக, இந்த அஸ்ட்ரோசைட்டுகள் தேவையற்ற நரம்பு இணைப்புகளைச் சீரமைத்து மூளையைத் திறம்படச் செயல்பட வைக்கும். ஆனால் தூக்கமில்லாத நேரங்களில் இவை அதீத வேகத்தில் செயல்பட்டு, ஆரோக்கியமான நரம்பு இணைப்புகளையே அழிக்கத் தொடங்குகின்றன.

    எளிமையாகச் சொன்னால், மூளை தனது சொந்த தகவல் தொடர்பு நெட்வொர்க்கையே "சாப்பிட" ஆரம்பிக்கிறது. அதே வேளையில், மைக்ரோகிளியா செல்கள் மூளையில் வீக்கத்தை (Inflammation) உண்டாக்குகின்றன. இது பிற்காலத்தில் நரம்பியல் நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது.

    இதன் விளைவுகள் வெறும் கவனச்சிதறலோடு நின்றுவிடுவதில்லை. தொடர்ச்சியான தூக்கமின்மை என்பது:

    புதிய நினைவாற்றல் உருவாவதைத் தடுக்கிறது.

    உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனைச் சிதைக்கிறது.

    ஹார்மோன் சமநிலையை மாற்றுகிறது.

    அல்சைமர் (Alzheimer’s) போன்ற நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    தூக்கம் என்பது வெறும் ஓய்வு நேரம் மட்டுமல்ல; அது உங்கள் மூளையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும் ஒரு அத்தியாவசிய உயிரியல் பழுதுபார்ப்புப் பணியாகும். தூக்கத்தைத் தொடர்ந்து தவிர்ப்பது உங்கள் மூளையின் நீண்டகால ஆரோக்கியத்தையே சீர்குலைக்கும்.

    #sleepscience #brainhealth #neuroscience #sleepdeprivation #CognitiveHealth #alzheimersresearch #mentalhealth #ScienceExplained #neurobiology
    தூக்கமின்மை உங்கள் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல் குறைவான தூக்கம் உங்கள் மூளையை சோர்வடையச் செய்வது மட்டுமல்ல, அது மூளையின் கட்டமைப்பையே சிதைக்கத் தொடங்குகிறது. புதிய நரம்பியல் ஆய்வுகளின்படி, தொடர்ச்சியான தூக்கமின்மை மூளையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் ஒரு ஆபத்தான மாற்றத்தைத் தூண்டுகிறது. நாம் தொடர்ந்து தூக்கத்தைத் தவிர்க்கும்போது, மூளையில் உள்ள கழிவுகளை அகற்றும் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் அஸ்ட்ரோசைட்டுகள் (Astrocytes) மற்றும் மைக்ரோகிளியா (Microglia) செல்கள் அதிகப்படியான சுறுசுறுப்பு அடைகின்றன. சாதாரணமாக, இந்த அஸ்ட்ரோசைட்டுகள் தேவையற்ற நரம்பு இணைப்புகளைச் சீரமைத்து மூளையைத் திறம்படச் செயல்பட வைக்கும். ஆனால் தூக்கமில்லாத நேரங்களில் இவை அதீத வேகத்தில் செயல்பட்டு, ஆரோக்கியமான நரம்பு இணைப்புகளையே அழிக்கத் தொடங்குகின்றன. எளிமையாகச் சொன்னால், மூளை தனது சொந்த தகவல் தொடர்பு நெட்வொர்க்கையே "சாப்பிட" ஆரம்பிக்கிறது. அதே வேளையில், மைக்ரோகிளியா செல்கள் மூளையில் வீக்கத்தை (Inflammation) உண்டாக்குகின்றன. இது பிற்காலத்தில் நரம்பியல் நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. இதன் விளைவுகள் வெறும் கவனச்சிதறலோடு நின்றுவிடுவதில்லை. தொடர்ச்சியான தூக்கமின்மை என்பது: புதிய நினைவாற்றல் உருவாவதைத் தடுக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனைச் சிதைக்கிறது. ஹார்மோன் சமநிலையை மாற்றுகிறது. அல்சைமர் (Alzheimer’s) போன்ற நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது. தூக்கம் என்பது வெறும் ஓய்வு நேரம் மட்டுமல்ல; அது உங்கள் மூளையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும் ஒரு அத்தியாவசிய உயிரியல் பழுதுபார்ப்புப் பணியாகும். தூக்கத்தைத் தொடர்ந்து தவிர்ப்பது உங்கள் மூளையின் நீண்டகால ஆரோக்கியத்தையே சீர்குலைக்கும். #sleepscience #brainhealth #neuroscience #sleepdeprivation #CognitiveHealth #alzheimersresearch #mentalhealth #ScienceExplained #neurobiology
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
Zoekresultaten
Idaivelai.com https://idaivelai.com