ஒருநாளைப் போல
எல்லா நாளும்
ஏதோ ஒரு காரணம்
உன்னிடமும்
என்னிடமும்..
..
எந்த பதிலிலும் எந்த
கேள்வியிலும்
இருவருக்குமே திருப்திப் படுத்த
இயலாதெனத் தெரிந்தும்
ஏதோ கேட்டாக வேண்டுமெனும்
என்பதற்கான சம்பிரதாயக்கேள்வியில்
பதிலை எதிர்பார்த்தே
தொக்கி நிற்போம்..
..
ஆம் இல்லை.. இரண்டுமே
பதிலாக இல்லாமல்
"ம்" என்ற ஒற்றை சொல்லே..
..
ஏகபதிலாக..
..
நிலுவையில் இருக்கும் கேள்விகள்
ஒவ்வொன்றும் தனக்கான
தருணத்திற்காக பூத்து கிடந்து
உதிர்ந்தே போகும்
கவனிக்கப்படாமலே..
..
கனத்த மௌனத்தின்
யாத்திரையில் கோபத்தின்
சுவடுகளாக அகத்திரையில்
ஒட்டப்பட்டிருக்கும்
..
என்றேனும் எவரிடமேனும்
என்னவள் பொறுமையானவள்..
எதையும் தாங்குபவள்
என்னையுமே .. என்று
பனிக்கட்டி மழை பொழியவைத்து
அசடு வழிவாய்..அள்ளி
அணைப்பாய்
அதில்..பட்டவர்த்தனமாக
கூடலுக்குள் நம்மிலான
ஊடலை முடித்துவைக்கும்
பிரம்ம ஆயுதமென
எனக்குமே தெரிந்தாலும்..
..
ப்போடா!ப்போ!
எங்கே போகப் போகிறாய்
என்னையே வளைய வரும்
உன் அசமந்து காதலுக்கு
நின்
அத்தனை சிலாவழித்தனமும்
செல்ல சமர்ப்பணமென
ஏந்திக் கொள்வேன்..
..
இரவும் நிலவும் சாட்சி..
என்
மூக்குத்தி ஒளியில்..
நீ உறங்குவதாக செய்யும்
பாசாங்கும்...!!
ஒருநாளைப் போல எல்லா நாளும் ஏதோ ஒரு காரணம் உன்னிடமும் என்னிடமும்.. .. எந்த பதிலிலும் எந்த கேள்வியிலும் இருவருக்குமே திருப்திப் படுத்த இயலாதெனத் தெரிந்தும் ஏதோ கேட்டாக வேண்டுமெனும் என்பதற்கான சம்பிரதாயக்கேள்வியில் பதிலை எதிர்பார்த்தே தொக்கி நிற்போம்.. .. ஆம் இல்லை.. இரண்டுமே பதிலாக இல்லாமல் "ம்" என்ற ஒற்றை சொல்லே.. .. ஏகபதிலாக.. .. நிலுவையில் இருக்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் தனக்கான தருணத்திற்காக பூத்து கிடந்து உதிர்ந்தே போகும் கவனிக்கப்படாமலே.. .. கனத்த மௌனத்தின் யாத்திரையில் கோபத்தின் சுவடுகளாக அகத்திரையில் ஒட்டப்பட்டிருக்கும் .. என்றேனும் எவரிடமேனும் என்னவள் பொறுமையானவள்.. எதையும் தாங்குபவள் என்னையுமே .. என்று பனிக்கட்டி மழை பொழியவைத்து அசடு வழிவாய்..அள்ளி அணைப்பாய் அதில்..பட்டவர்த்தனமாக கூடலுக்குள் நம்மிலான ஊடலை முடித்துவைக்கும் பிரம்ம ஆயுதமென எனக்குமே தெரிந்தாலும்.. .. ப்போடா!ப்போ! எங்கே போகப் போகிறாய் என்னையே வளைய வரும் உன் அசமந்து காதலுக்கு நின் அத்தனை சிலாவழித்தனமும் செல்ல சமர்ப்பணமென ஏந்திக் கொள்வேன்.. .. இரவும் நிலவும் சாட்சி.. என் மூக்குத்தி ஒளியில்.. நீ உறங்குவதாக செய்யும் பாசாங்கும்...!!
0 Comments ·0 Shares ·339 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com