திருகோணமலை கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் (Trinco-5) படு*கொ*லை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதும் இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார்

திருகோணமலையில் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர கடைமையாற்றிய போது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத்தின் ஏற்பாட்டில் திட்டமிட்டு இந்த படு*கொ*லைகளை நடத்தியிருந்தார்

இந்த சம்பவத்தில் கொ*ல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காலம் சென்ற டாக்டர் மனோகரன் வழங்கிய சத்தியக்கடதாசியில், சம்பவம் நடந்த அன்று மாலை காந்தி சிலைக்கு அருகே எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகரவின் பிக்கப் வாகனம் (pick- up truck) சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வாகனத்தில் முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் இருந்ததையும், அவர் கடந்து சென்ற பிறகு சோதனைச் சாவடிகளில் இருந்த கடற்படையினர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர சென்றுவிட்டார், இனி நாம் உள்ளே செல்லலாம் என்று பேசிக்கொண்டதையும் பதிவு செய்திருக்கின்றார்

சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, கடற்கரையில் பணியிலிருந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை அசம்பாவிதம் நடக்கப்போவதாகக் கூறி எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர வெளியேறியிருக்கின்றார் என்கின்ற தகவலையும் இந்த கொடூரம் ஒரு திட்டமிட்ட சம்பவம் என்பதற்கு ஆதாரமாக பதிவு செய்திருக்கின்றார்

அதே போல திருகோணமலை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டி, கொ*ல்லப்பட்டவர்கள் பு*லி உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கவும் எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர முயன்றிருந்தார்

இது போதாதென்று சம்பவ இடத்தில் து*ப்பாக்கிக் கா*யங்களை மறைத்து கு*ண்டு வெ*டிப்பினால் மரணம் நிகழ்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கவும் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர முயற்சி செய்திருந்தார்

இது மாத்திரமின்றி ஜனவரி 10, 2006 அன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்த பிறகு டாக்டர் மனோகரன் வீடு திரும்பியபோது, ​​முகமூடி அணிந்த இராணுவத்தினர் சகிதம் எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவின் வாகனம் அவரது வீட்டிற்கு வெளியே அச்சுறுத்தும் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அதே இரவில், டாக்டர் மனோகரன் வீடடின் கூரையின் மீது கற்கள் வீசப்பட்டதோடு தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலம் திருகோணமலையை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டனர்

இவ்வாறு வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத அட்டூழியங்களை தொடர்ச்சியாக செய்த கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவிற்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்த போதிலும் நீதியின் முன் நிறுத்தாமல் பதவி உயர்வுகள் வழங்கி கெளரவித்தார்கள்

அதாவது 1982 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டமைப்பில் சப் இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் சம்பவத்தின் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி கொண்டிருந்தார்

தற்போது இராணுவ ஒட்டுக்குழுக்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை ஏவி நாடகமாடும் ஜேவிபி ஆட்சியாளர்கள் கூட திருகோணமலை படுகொலை சூத்திரதாரி எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர மீதும் குண்டூசி கூட படாமல் பாதுகாக்கின்றார்கள்
திருகோணமலை கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் (Trinco-5) படு*கொ*லை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதும் இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார் திருகோணமலையில் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர கடைமையாற்றிய போது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத்தின் ஏற்பாட்டில் திட்டமிட்டு இந்த படு*கொ*லைகளை நடத்தியிருந்தார் இந்த சம்பவத்தில் கொ*ல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காலம் சென்ற டாக்டர் மனோகரன் வழங்கிய சத்தியக்கடதாசியில், சம்பவம் நடந்த அன்று மாலை காந்தி சிலைக்கு அருகே எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகரவின் பிக்கப் வாகனம் (pick- up truck) சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வாகனத்தில் முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் இருந்ததையும், அவர் கடந்து சென்ற பிறகு சோதனைச் சாவடிகளில் இருந்த கடற்படையினர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர சென்றுவிட்டார், இனி நாம் உள்ளே செல்லலாம் என்று பேசிக்கொண்டதையும் பதிவு செய்திருக்கின்றார் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, கடற்கரையில் பணியிலிருந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை அசம்பாவிதம் நடக்கப்போவதாகக் கூறி எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர வெளியேறியிருக்கின்றார் என்கின்ற தகவலையும் இந்த கொடூரம் ஒரு திட்டமிட்ட சம்பவம் என்பதற்கு ஆதாரமாக பதிவு செய்திருக்கின்றார் அதே போல திருகோணமலை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டி, கொ*ல்லப்பட்டவர்கள் பு*லி உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கவும் எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர முயன்றிருந்தார் இது போதாதென்று சம்பவ இடத்தில் து*ப்பாக்கிக் கா*யங்களை மறைத்து கு*ண்டு வெ*டிப்பினால் மரணம் நிகழ்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கவும் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர முயற்சி செய்திருந்தார் இது மாத்திரமின்றி ஜனவரி 10, 2006 அன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்த பிறகு டாக்டர் மனோகரன் வீடு திரும்பியபோது, ​​முகமூடி அணிந்த இராணுவத்தினர் சகிதம் எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவின் வாகனம் அவரது வீட்டிற்கு வெளியே அச்சுறுத்தும் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே இரவில், டாக்டர் மனோகரன் வீடடின் கூரையின் மீது கற்கள் வீசப்பட்டதோடு தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலம் திருகோணமலையை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டனர் இவ்வாறு வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத அட்டூழியங்களை தொடர்ச்சியாக செய்த கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவிற்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்த போதிலும் நீதியின் முன் நிறுத்தாமல் பதவி உயர்வுகள் வழங்கி கெளரவித்தார்கள் அதாவது 1982 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டமைப்பில் சப் இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் சம்பவத்தின் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி கொண்டிருந்தார் தற்போது இராணுவ ஒட்டுக்குழுக்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை ஏவி நாடகமாடும் ஜேவிபி ஆட்சியாளர்கள் கூட திருகோணமலை படுகொலை சூத்திரதாரி எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர மீதும் குண்டூசி கூட படாமல் பாதுகாக்கின்றார்கள்
0 Comments ·0 Shares ·941 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com