சமீபத்தில் கணவன் இறந்து போன ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசும் போது அவர் கூறிய சில வார்த்தைகள் அப்படியே என் நெஞ்சில் படிந்துவிட்டது...
"அவர் போனது வருத்தமாத்தான் இருக்கு... வீடு வெறிச்சுனு இருக்குதான் இருக்கு.. ஆனா கூடவே ஒரு ஆசுவாசமும் இருக்கும்மா.... இனிமே நான் கடைக்கு போக, சொந்தங்கள பார்க்க போக, தோழிகளோட வெளில போக யார்கிட்டயும் அனுமதி கேக்கவேணாம்.. சொல்லிவிட்டு வந்த நேரத்துக்குள்ள வீட்டுக்கு திரும்பணுமேங்கற பதட்டத்துலேயே போன இடத்துல கூட நிம்மதியா இருக்க முடியாம தவிக்க வேண்டாம்மா.. யாருக்கும் நான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்மா.. என் முடிவெல்லாம் நானே எடுத்துக்கலாம்"..

இது நிறையவே சிந்திக்க வைத்தது..

கணவன்-மனைவி உறவென்பது எத்தனை பெரிதாக மதிக்கப்படுகிறது நம் சமூகத்தில்.. வாழ்வின் ஒரு பாதி மறு பாதி என்றெல்லாம் வசனம் பேசுகிறோம். ஆனால் பார்த்தால் அந்த மறுபாதி போன துக்கம் ஒரு புறம் இருந்தாலும், இப்படி ஒரு ஆசுவாசம் ஒரு பெண்ணிற்கு வருகிறதெனில் இங்கு என்ன பிரச்சினை? ஒவ்வொரு தனிமனிதரின் தாகமும் சிறிதே சிறிதளவு சுதந்திரம். அது கூட தன்னுடன் இருக்கும் மனிதருக்கு கிடைக்கவிடாமல் செய்யும் வாழ்வை ஒருவர் வாழ்ந்திருக்கிறார் எனில் அவர் எதை சாதித்துவிட்டு சென்றார்? நம் மரணம் ஒருவருக்கு ஆசுவாசத்தை அளிக்கிறதென்றால் நாம் என்ன மாதிரி வாழ்வை வாழ்ந்திருக்கிறோம்?

என் அப்பாவிடம் அம்மா பயந்து பயந்து அனுமதி கேட்ட சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஒரு முறை அம்மா தோழியுடன் பக்கத்து தியேட்டருக்கு சினிமாவுக்கு சென்றார். போகும் அவசரத்தில் கேஸ் சிலிண்டர் நாப் மூட மறந்து விட்டார். அதை கவனித்த அப்பா தானே மூடியிருக்கலாம். வந்த பிறகு இனி பார்த்து செய் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நேராக கிளம்பி தியேட்டருக்கு சென்றார். உள்ளே போய் அம்மாவை அழைத்தார். பாதி படத்தில் வீட்டிற்கு வந்து சிலிண்டரை மூட வைத்தார். என்ன மனநிலையிது? அன்றே சிந்தித்தேன்.... வயது 8/9 கூட இருக்கலாம். எங்கிருந்து இத்தனை ஆணவம் வருகிறது மனிதர்களுக்கு? ஒரு நாள் அம்மா விவாகரத்து செய்தார். சிலர் மரணத்தில் ஆசுவாசம் அடைகின்றனர்..

ஏன் எல்லாவற்றிற்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் அனுமதி பெற வேண்டும்? என் பதினாறு வயதிலிருந்து நானே எடுத்த முடிவு எங்கு செல்வதாக இருந்தாலும் தகவல் மட்டுமே சொல்வேன் வீட்டில் இருப்பவர்களிடம். அதே போல் என் பிள்ளைகளும் 16 வயதிலிருந்து தகவல் மட்டும் தான் சொல்வார்கள்.

நம் மரணத்தில் யாரையும் ஆசுவாசம் அடைய வைக்காத ஒரு வாழ்வை வாழ்வோம்...

#Vidhya Varadaraj பதிவில் இருந்து....

சமீபத்தில் கணவன் இறந்து போன ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசும் போது அவர் கூறிய சில வார்த்தைகள் அப்படியே என் நெஞ்சில் படிந்துவிட்டது... "அவர் போனது வருத்தமாத்தான் இருக்கு... வீடு வெறிச்சுனு இருக்குதான் இருக்கு.. ஆனா கூடவே ஒரு ஆசுவாசமும் இருக்கும்மா.... இனிமே நான் கடைக்கு போக, சொந்தங்கள பார்க்க போக, தோழிகளோட வெளில போக யார்கிட்டயும் அனுமதி கேக்கவேணாம்.. சொல்லிவிட்டு வந்த நேரத்துக்குள்ள வீட்டுக்கு திரும்பணுமேங்கற பதட்டத்துலேயே போன இடத்துல கூட நிம்மதியா இருக்க முடியாம தவிக்க வேண்டாம்மா.. யாருக்கும் நான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்மா.. என் முடிவெல்லாம் நானே எடுத்துக்கலாம்".. இது நிறையவே சிந்திக்க வைத்தது.. கணவன்-மனைவி உறவென்பது எத்தனை பெரிதாக மதிக்கப்படுகிறது நம் சமூகத்தில்.. வாழ்வின் ஒரு பாதி மறு பாதி என்றெல்லாம் வசனம் பேசுகிறோம். ஆனால் பார்த்தால் அந்த மறுபாதி போன துக்கம் ஒரு புறம் இருந்தாலும், இப்படி ஒரு ஆசுவாசம் ஒரு பெண்ணிற்கு வருகிறதெனில் இங்கு என்ன பிரச்சினை? ஒவ்வொரு தனிமனிதரின் தாகமும் சிறிதே சிறிதளவு சுதந்திரம். அது கூட தன்னுடன் இருக்கும் மனிதருக்கு கிடைக்கவிடாமல் செய்யும் வாழ்வை ஒருவர் வாழ்ந்திருக்கிறார் எனில் அவர் எதை சாதித்துவிட்டு சென்றார்? நம் மரணம் ஒருவருக்கு ஆசுவாசத்தை அளிக்கிறதென்றால் நாம் என்ன மாதிரி வாழ்வை வாழ்ந்திருக்கிறோம்? என் அப்பாவிடம் அம்மா பயந்து பயந்து அனுமதி கேட்ட சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஒரு முறை அம்மா தோழியுடன் பக்கத்து தியேட்டருக்கு சினிமாவுக்கு சென்றார். போகும் அவசரத்தில் கேஸ் சிலிண்டர் நாப் மூட மறந்து விட்டார். அதை கவனித்த அப்பா தானே மூடியிருக்கலாம். வந்த பிறகு இனி பார்த்து செய் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நேராக கிளம்பி தியேட்டருக்கு சென்றார். உள்ளே போய் அம்மாவை அழைத்தார். பாதி படத்தில் வீட்டிற்கு வந்து சிலிண்டரை மூட வைத்தார். என்ன மனநிலையிது? அன்றே சிந்தித்தேன்.... வயது 8/9 கூட இருக்கலாம். எங்கிருந்து இத்தனை ஆணவம் வருகிறது மனிதர்களுக்கு? ஒரு நாள் அம்மா விவாகரத்து செய்தார். சிலர் மரணத்தில் ஆசுவாசம் அடைகின்றனர்.. ஏன் எல்லாவற்றிற்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் அனுமதி பெற வேண்டும்? என் பதினாறு வயதிலிருந்து நானே எடுத்த முடிவு எங்கு செல்வதாக இருந்தாலும் தகவல் மட்டுமே சொல்வேன் வீட்டில் இருப்பவர்களிடம். அதே போல் என் பிள்ளைகளும் 16 வயதிலிருந்து தகவல் மட்டும் தான் சொல்வார்கள். நம் மரணத்தில் யாரையும் ஆசுவாசம் அடைய வைக்காத ஒரு வாழ்வை வாழ்வோம்... #Vidhya Varadaraj பதிவில் இருந்து....
0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
Idaivelai.com https://idaivelai.com