• ஆண்வர்க்கம் எவ்வளவு மோசமானது?
    மோசம்னா மோசம் அப்படி ஒரு மோசம்

    வருஷம் ரெண்டு செட் உள்ளாடைகளோடயே காலம் கழிக்கும் . ஜட்டி பனியனில் பாச்சா ,எலி பூனை போரளவுக்கு ஓட்டை இருந்தாலும் மாத்த நினைக்காது

    ஆனால் மனைவி குழந்தைகளுக்கு கணக்கு பாக்காது .வருஷம் ரெண்டு தடவை கட்டுற பட்டுசேலை பத்தாயிரத்துக்கு வாங்கி குடுக்கும்

    ஒரு நல்ல செருப்பு வாங்காது ஆனால் ஆறு மாசத்துக்கு மனைவி குழந்தைகள் கொலுசு மாத்தி கொடுக்கும்

    வாரம் மூணு நாளும் அஞ்சு நாளும் கூட வெளியே வேலை பார்த்துட்டு வார லீவுல கறிக்கஞ்சி சாப்பிட்டுட்டு தூங்கி திங்கள் கிழமை காலையிலே பிள்ளைகள்ட்ட கூட சொல்லிக்காம வேலைக்கு ஓடும் ஜென்மம்

    ரெண்டாயிரம் ,மூவாயிரத்துக்கு சின்ன குஞ்சுகளுக்கு டிரஸ் எடுத்துட்டு மூணு பேண்ட் 1000 ரூபாய்க்கும் ,150 ரூபாய் பனியன் மூணும் எடுத்து நிக்கும் .

    காலேஜ் போற பொண்ணுக்கு ஸ்கூட்டர் 1 லட்சம் ,பையனுக்கு 2 லட்சம் பைக் வாங்கி கொடுத்து பெட்ரோலுக்கும் கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு மாத பாஸ் வாங்குறதுக்கு கார்ப்பரேஷன் டிப்போல நிக்கும் .

    35 000 ரூபாய்க்கு பிள்ளைங்களுக்கும் ,சமையல் நிகழ்ச்சி பாக்க மனைவிக்கு 15 000 ரூபாய்க்கு போன் வாங்கி குடுத்துட்டு 1000 ஓவா பட்டன் செல் தேஞ்சு போனதை உத்து பாத்து நம்பர் அமுக்கும் .

    கடையிலே போயி கட்டிங் ஷேவிங் பண்ணினா மாசம் 400 ரூபாய் போகும்னு சின்ன கத்திரிக்கோலும் 35 ரூபாய் டையும் வாங்கி வீட்டிலே வச்சே டை அடிக்கும்.முன்னாடி பளிச்சுன்னும் பின்னாடி புளிச்சுன்னும் இருக்கும் .மீசையிலே அடிச்சு அனுமார் வாயாட்டம் இருக்கும் .

    நல்லவேளை மாஸ்க் காப்பாத்துது

    .6 ரூபாய் ப்ளேடை வச்சு தோல் பிஞ்சு போரளவுக்கு 10 தடவைக்கு வறட்டு வரட்டுன்னு ஷேவிங் பண்ணும் .

    அஞ்சு ரூபாய் டீக்கடையா தேடி பார்த்து டீ குடிக்கும் .ரெண்டு ரூபாய் சில்லரைக்கும் சண்டை போடும் .20 ரூபாய் சில்லறை எந்நேரமும் வச்சுருக்கும்

    இதெல்லாம் என்ன ஜென்மமோ ?இந்த ஆம்பளைங்களே சுத்த மோசம் .

    என்ன சொல்றிங்க ?

    ஆண்வர்க்கம் எவ்வளவு மோசமானது? மோசம்னா மோசம் அப்படி ஒரு மோசம் வருஷம் ரெண்டு செட் உள்ளாடைகளோடயே காலம் கழிக்கும் . ஜட்டி பனியனில் பாச்சா ,எலி பூனை போரளவுக்கு ஓட்டை இருந்தாலும் மாத்த நினைக்காது ஆனால் மனைவி குழந்தைகளுக்கு கணக்கு பாக்காது .வருஷம் ரெண்டு தடவை கட்டுற பட்டுசேலை பத்தாயிரத்துக்கு வாங்கி குடுக்கும் ஒரு நல்ல செருப்பு வாங்காது ஆனால் ஆறு மாசத்துக்கு மனைவி குழந்தைகள் கொலுசு மாத்தி கொடுக்கும் வாரம் மூணு நாளும் அஞ்சு நாளும் கூட வெளியே வேலை பார்த்துட்டு வார லீவுல கறிக்கஞ்சி சாப்பிட்டுட்டு தூங்கி திங்கள் கிழமை காலையிலே பிள்ளைகள்ட்ட கூட சொல்லிக்காம வேலைக்கு ஓடும் ஜென்மம் ரெண்டாயிரம் ,மூவாயிரத்துக்கு சின்ன குஞ்சுகளுக்கு டிரஸ் எடுத்துட்டு மூணு பேண்ட் 1000 ரூபாய்க்கும் ,150 ரூபாய் பனியன் மூணும் எடுத்து நிக்கும் . காலேஜ் போற பொண்ணுக்கு ஸ்கூட்டர் 1 லட்சம் ,பையனுக்கு 2 லட்சம் பைக் வாங்கி கொடுத்து பெட்ரோலுக்கும் கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு மாத பாஸ் வாங்குறதுக்கு கார்ப்பரேஷன் டிப்போல நிக்கும் . 35 000 ரூபாய்க்கு பிள்ளைங்களுக்கும் ,சமையல் நிகழ்ச்சி பாக்க மனைவிக்கு 15 000 ரூபாய்க்கு போன் வாங்கி குடுத்துட்டு 1000 ஓவா பட்டன் செல் தேஞ்சு போனதை உத்து பாத்து நம்பர் அமுக்கும் . கடையிலே போயி கட்டிங் ஷேவிங் பண்ணினா மாசம் 400 ரூபாய் போகும்னு சின்ன கத்திரிக்கோலும் 35 ரூபாய் டையும் வாங்கி வீட்டிலே வச்சே டை அடிக்கும்.முன்னாடி பளிச்சுன்னும் பின்னாடி புளிச்சுன்னும் இருக்கும் .மீசையிலே அடிச்சு அனுமார் வாயாட்டம் இருக்கும் . நல்லவேளை மாஸ்க் காப்பாத்துது .6 ரூபாய் ப்ளேடை வச்சு தோல் பிஞ்சு போரளவுக்கு 10 தடவைக்கு வறட்டு வரட்டுன்னு ஷேவிங் பண்ணும் . அஞ்சு ரூபாய் டீக்கடையா தேடி பார்த்து டீ குடிக்கும் .ரெண்டு ரூபாய் சில்லரைக்கும் சண்டை போடும் .20 ரூபாய் சில்லறை எந்நேரமும் வச்சுருக்கும் இதெல்லாம் என்ன ஜென்மமோ ?இந்த ஆம்பளைங்களே சுத்த மோசம் . என்ன சொல்றிங்க ?
    0 Kommentare ·0 Geteilt ·4KB Ansichten ·0 Bewertungen
  • 🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்)

    கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய்.
    பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும்.

    👉 முக்கிய சிக்கல் என்னவென்றால்
    ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
    அல்லது
    👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம்.

    அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.

    ---

    🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி)

    👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
    👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை

    👉 சில நாட்கள் மலச்சிக்கல்
    👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு
    ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம்

    ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை
    ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து

    ---

    🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல்

    👉 மெல்லிய / பென்சில் போல மலம்
    ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும்

    👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல்
    ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை

    ---

    🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி)

    👉 பிரகாசமான சிவப்பு ரத்தம்

    டாய்லெட் பேப்பரில்

    மலத்தின் மீது

    கமோட்டில்

    👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள்
    ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம்

    👉 கருப்பு / அடர் நிற மலம்
    ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம்

    👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு
    ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia)
    ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை

    ---

    🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம்

    👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு
    👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி

    👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு
    👉 அதிக வாயு, உப்புசம்

    ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும்

    ---

    🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு

    👉 டாய்லெட் சென்ற பிறகும்
    👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு

    👉 குறிப்பாக மலத்துடன்

    ரத்தம்

    சளி (mucus)
    இருந்தால் முக்கிய அறிகுறி

    ---

    🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல்

    👉 டயட் இல்லாமல் எடை குறைதல்
    👉 சாப்பிட விருப்பம் குறைதல்
    👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு

    ---

    🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம்

    👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது
    👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல்
    👉 தலைசுற்றல், வெளிறிய தோல்

    ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும்

    ---

    🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை)

    👉 ஆண்கள்
    👉 மெனோபாஸ் கடந்த பெண்கள்

    ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால்
    ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும்

    ---

    🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள்

    👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம்
    👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை

    🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்

    ---

    🟣 10) மலத்தில் சளி (Mucus)

    👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால்
    👉 அதோடு ரத்தம், வலி இருந்தால்
    ⚠️ பரிசோதனை அவசியம்

    ---

    🟣 யாருக்கு ஆபத்து அதிகம்?

    👉 வயது 45க்கு மேல்
    👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு
    👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள்
    👉 நீண்ட கால குடல் அழற்சி நோய்
    👉 அதிக உடல் எடை
    👉 புகை, மது
    👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு

    ---

    🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம்

    👉 மீண்டும் மீண்டும் ரத்தம்
    👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல்
    👉 வயிற்று வலி + எடை குறைதல்
    👉 காரணமில்லாத அனீமியா
    👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள்

    ---

    ⭐ முக்கிய செய்தி

    👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில்
    சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம்

    👉 ஆனால்
    மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா
    🚩 மிக முக்கிய எச்சரிக்கை

    👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்

    ---

    ⚠️ மருத்துவ அறிவிப்பு
    இந்த தகவல் கல்விக்காக மட்டுமே.
    ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால்
    👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்) கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய். பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும். 👉 முக்கிய சிக்கல் என்னவென்றால் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். அல்லது 👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம். அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம். --- 🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி) 👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு 👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை 👉 சில நாட்கள் மலச்சிக்கல் 👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம் ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து --- 🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல் 👉 மெல்லிய / பென்சில் போல மலம் ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும் 👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல் ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை --- 🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி) 👉 பிரகாசமான சிவப்பு ரத்தம் டாய்லெட் பேப்பரில் மலத்தின் மீது கமோட்டில் 👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள் ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம் 👉 கருப்பு / அடர் நிற மலம் ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம் 👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia) ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை --- 🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம் 👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு 👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி 👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு 👉 அதிக வாயு, உப்புசம் ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும் --- 🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு 👉 டாய்லெட் சென்ற பிறகும் 👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு 👉 குறிப்பாக மலத்துடன் ரத்தம் சளி (mucus) இருந்தால் முக்கிய அறிகுறி --- 🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல் 👉 டயட் இல்லாமல் எடை குறைதல் 👉 சாப்பிட விருப்பம் குறைதல் 👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு --- 🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம் 👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது 👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல் 👉 தலைசுற்றல், வெளிறிய தோல் ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும் --- 🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை) 👉 ஆண்கள் 👉 மெனோபாஸ் கடந்த பெண்கள் ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால் ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும் --- 🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள் 👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம் 👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை 🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும் --- 🟣 10) மலத்தில் சளி (Mucus) 👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால் 👉 அதோடு ரத்தம், வலி இருந்தால் ⚠️ பரிசோதனை அவசியம் --- 🟣 யாருக்கு ஆபத்து அதிகம்? 👉 வயது 45க்கு மேல் 👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு 👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள் 👉 நீண்ட கால குடல் அழற்சி நோய் 👉 அதிக உடல் எடை 👉 புகை, மது 👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு --- 🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் 👉 மீண்டும் மீண்டும் ரத்தம் 👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல் 👉 வயிற்று வலி + எடை குறைதல் 👉 காரணமில்லாத அனீமியா 👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள் --- ⭐ முக்கிய செய்தி 👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில் சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம் 👉 ஆனால் மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா 🚩 மிக முக்கிய எச்சரிக்கை 👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் --- ⚠️ மருத்துவ அறிவிப்பு இந்த தகவல் கல்விக்காக மட்டுமே. ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால் 👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    0 Kommentare ·0 Geteilt ·4KB Ansichten ·0 Bewertungen
  • ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..!

    ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.

    எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது

    எத்தனை கறி செய்வது?

    பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா?
    யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது?

    கவலைக்குரிய விடயம் என்னவெனில்:-

    இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள்.

    அடுத்த பிரச்சினை:-

    ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள்.

    ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும்.

    பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.

    ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது.

    மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம்.

    வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்...

    ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

    ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

    ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

    இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.....

    சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..! ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள். எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது எத்தனை கறி செய்வது? பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா? யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது? கவலைக்குரிய விடயம் என்னவெனில்:- இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள். அடுத்த பிரச்சினை:- ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள். ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும். பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது. ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது. மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம். வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்... ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும். ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும். இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது..... சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • பனிப் பாலைவனத்தின் கீழ் அமேசான் காடு... அண்டார்டிகாவில் 2 கி.மீ ஆழத்தில் காடுகள் கண்டுபிடிப்பு!

    அண்டார்டிகாவின் 2,000 மீட்டர் பனிப்படலத்திற்கு அடியில் 34 மில்லியன் ஆண்டுகள் பழமையான காடுகளின் தடயங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித வரலாற்றையே மாற்றியமைக்கப்போகும் ஒரு ரகசியத்தை தன்னுள் ஒளித்து வைத்திருந்தது.

    அண்டார்டிகாவின் கடும் குளிர்... ஜெட் விமானத்தின் இஞ்சின் சத்தம்போல சுழன்றடிக்கும் ஊதைக் காற்று... மைனஸ் டிகிரியில் உறைந்து போகும் விரல்கள். இந்தச் சூழலில், விஞ்ஞானிகள் குழு ஒன்று 2,000 மீட்டர் ஆழத்திற்குப் பனியைத் துளைத்துக் கொண்டிருந்தது. திடீரென, இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் துளையிடும் கருவி ஏதோ ஒன்றின் மீது மோதியது. வெளியே எடுக்கப்பட்டபோது, அது பனிக்கட்டி அல்ல; காபித் தூள் நிறத்தில் இருந்த ஈரமான சேறு. அந்த ஒரு துண்டுச் சேறு, மனித வரலாற்றையே மாற்றியமைக்கப்போகும் ஒரு ரகசியத்தை தன்னுள் ஒளித்து வைத்திருந்தது.

    அந்தச் சேற்றை மைக்ரோஸ்கோப்பில் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ந்துபோனார்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மகரந்தத் துகள்கள், இலைகளின் சிதைவுகள் மற்றும் விசித்திரமான நுண்ணுயிரிகள் இருந்தன. இதன் மூலம் தெரியவரும் உண்மை என்னவென்றால் சுமார் 3.4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அண்டார்டிகா இப்போது இருப்பதுபோல வெறும் வெள்ளை நிறப் பாலைவனம் அல்ல. அங்கே ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன; சதுப்பு நிலங்கள் இருந்தன; பசுமையான அடர்ந்த காடுகள் செழித்து வளர்ந்திருந்தன. சுருக்கமாகச் சொன்னால், இன்று நாம் பார்க்கும் வெப்பமண்டலக் காடுகளைப் போலவே அண்டார்டிகாவும் ஒரு காலத்தில் பசுமையாக இருந்திருக்கிறது!

    விஞ்ஞானிகள் இந்த நிகழ்வை ஒரு சுவாரசியமான உதாரணத்துடன் விளக்குகிறார்கள். ஒரு செழிப்பான காட்டை அப்படியே ‘பாஸ்’ செய்து, அதன் மேல் 2,000 மீட்டர் தடிமனான பனிக்கட்டியைப் போர்த்தி மறைத்து வைத்தது போல இது இருக்கிறது. இந்தச் சேற்றில் உள்ள ‘வேதியியல் கைரேகைகளை’ ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதி நீண்ட காலம் ஒரு நிலையான உயிர்ச்சமூகமாக இருந்திருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்தக் கண்டுபிடிப்பு வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல, நமக்கான ஒரு எச்சரிக்கையும் கூட. பூமி ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை எட்டியபோது, பசுமையாக இருந்த அண்டார்டிகா மிக வேகமாகப் பனிக்கட்டியாக மாறத் தொடங்கியது. அன்று பூமி குளிர்ந்ததால் காடுகள் பனியாகின. இன்று நாம் பூமியை வேகமாக வெப்பப்படுத்தி வருகிறோம். இதன் விளைவாக, இந்தப் பனிப்பாறைகள் உருகினால், கடல் மட்டம் பல மீட்டர்கள் உயர்ந்து உலக வரைபடத்தையே மாற்றிவிடும் அபாயம் உள்ளது. அண்டார்டிகா நம்மிடம் பல விஷயங்களைச் சொல்லக் காத்திருக்கிறது. ஒவ்வொரு புதிய மண் மாதிரியும் நமது தவறான கணிப்புகளைத் திருத்தி உண்மையை உணர்த்துகிறது என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள்.

    பனியைத் துளைத்து அந்தச் சேற்றை எடுப்பது சாதாரணமான காரியம் அல்ல. ராட்சத சூடான நீர் பீய்ச்சியடிக்கும் கருவி (Hot-water drill) மூலம் கண்ணாடியைப் போன்ற நேர்த்தியான துளை போடப்பட்டது. பிறகு, எந்தக் கிருமிகளும் அண்டாதவாறு மிகவும் பாதுகாப்பாக அந்த மண் மாதிரிகள் மேலே கொண்டு வரப்பட்டன. இது ஒரு கிரகத்தின் மீது செய்யப்படும் ‘அறுவை சிகிச்சை’ போலவே இருந்தது.

    மனிதர்கள் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு உலகம் இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறது. அந்தப் பழைய காடுகள் இன்று சேறாக மாறி, நமது எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கின்றன. நாம் இன்று உருவாக்கும் பிளாஸ்டிக்குகளும், நகரங்களும் இன்னும் பல கோடி ஆண்டுகள் கழித்து இது போன்ற ஒரு மண் அடுக்காக மாறும் போது, எதிர்கால விஞ்ஞானிகள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

    Meenakshi Sundaram S
    பனிப் பாலைவனத்தின் கீழ் அமேசான் காடு... அண்டார்டிகாவில் 2 கி.மீ ஆழத்தில் காடுகள் கண்டுபிடிப்பு! அண்டார்டிகாவின் 2,000 மீட்டர் பனிப்படலத்திற்கு அடியில் 34 மில்லியன் ஆண்டுகள் பழமையான காடுகளின் தடயங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித வரலாற்றையே மாற்றியமைக்கப்போகும் ஒரு ரகசியத்தை தன்னுள் ஒளித்து வைத்திருந்தது. அண்டார்டிகாவின் கடும் குளிர்... ஜெட் விமானத்தின் இஞ்சின் சத்தம்போல சுழன்றடிக்கும் ஊதைக் காற்று... மைனஸ் டிகிரியில் உறைந்து போகும் விரல்கள். இந்தச் சூழலில், விஞ்ஞானிகள் குழு ஒன்று 2,000 மீட்டர் ஆழத்திற்குப் பனியைத் துளைத்துக் கொண்டிருந்தது. திடீரென, இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் துளையிடும் கருவி ஏதோ ஒன்றின் மீது மோதியது. வெளியே எடுக்கப்பட்டபோது, அது பனிக்கட்டி அல்ல; காபித் தூள் நிறத்தில் இருந்த ஈரமான சேறு. அந்த ஒரு துண்டுச் சேறு, மனித வரலாற்றையே மாற்றியமைக்கப்போகும் ஒரு ரகசியத்தை தன்னுள் ஒளித்து வைத்திருந்தது. அந்தச் சேற்றை மைக்ரோஸ்கோப்பில் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ந்துபோனார்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மகரந்தத் துகள்கள், இலைகளின் சிதைவுகள் மற்றும் விசித்திரமான நுண்ணுயிரிகள் இருந்தன. இதன் மூலம் தெரியவரும் உண்மை என்னவென்றால் சுமார் 3.4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அண்டார்டிகா இப்போது இருப்பதுபோல வெறும் வெள்ளை நிறப் பாலைவனம் அல்ல. அங்கே ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன; சதுப்பு நிலங்கள் இருந்தன; பசுமையான அடர்ந்த காடுகள் செழித்து வளர்ந்திருந்தன. சுருக்கமாகச் சொன்னால், இன்று நாம் பார்க்கும் வெப்பமண்டலக் காடுகளைப் போலவே அண்டார்டிகாவும் ஒரு காலத்தில் பசுமையாக இருந்திருக்கிறது! விஞ்ஞானிகள் இந்த நிகழ்வை ஒரு சுவாரசியமான உதாரணத்துடன் விளக்குகிறார்கள். ஒரு செழிப்பான காட்டை அப்படியே ‘பாஸ்’ செய்து, அதன் மேல் 2,000 மீட்டர் தடிமனான பனிக்கட்டியைப் போர்த்தி மறைத்து வைத்தது போல இது இருக்கிறது. இந்தச் சேற்றில் உள்ள ‘வேதியியல் கைரேகைகளை’ ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதி நீண்ட காலம் ஒரு நிலையான உயிர்ச்சமூகமாக இருந்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல, நமக்கான ஒரு எச்சரிக்கையும் கூட. பூமி ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை எட்டியபோது, பசுமையாக இருந்த அண்டார்டிகா மிக வேகமாகப் பனிக்கட்டியாக மாறத் தொடங்கியது. அன்று பூமி குளிர்ந்ததால் காடுகள் பனியாகின. இன்று நாம் பூமியை வேகமாக வெப்பப்படுத்தி வருகிறோம். இதன் விளைவாக, இந்தப் பனிப்பாறைகள் உருகினால், கடல் மட்டம் பல மீட்டர்கள் உயர்ந்து உலக வரைபடத்தையே மாற்றிவிடும் அபாயம் உள்ளது. அண்டார்டிகா நம்மிடம் பல விஷயங்களைச் சொல்லக் காத்திருக்கிறது. ஒவ்வொரு புதிய மண் மாதிரியும் நமது தவறான கணிப்புகளைத் திருத்தி உண்மையை உணர்த்துகிறது என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள். பனியைத் துளைத்து அந்தச் சேற்றை எடுப்பது சாதாரணமான காரியம் அல்ல. ராட்சத சூடான நீர் பீய்ச்சியடிக்கும் கருவி (Hot-water drill) மூலம் கண்ணாடியைப் போன்ற நேர்த்தியான துளை போடப்பட்டது. பிறகு, எந்தக் கிருமிகளும் அண்டாதவாறு மிகவும் பாதுகாப்பாக அந்த மண் மாதிரிகள் மேலே கொண்டு வரப்பட்டன. இது ஒரு கிரகத்தின் மீது செய்யப்படும் ‘அறுவை சிகிச்சை’ போலவே இருந்தது. மனிதர்கள் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு உலகம் இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறது. அந்தப் பழைய காடுகள் இன்று சேறாக மாறி, நமது எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கின்றன. நாம் இன்று உருவாக்கும் பிளாஸ்டிக்குகளும், நகரங்களும் இன்னும் பல கோடி ஆண்டுகள் கழித்து இது போன்ற ஒரு மண் அடுக்காக மாறும் போது, எதிர்கால விஞ்ஞானிகள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? Meenakshi Sundaram S
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
  • தரைல இருக்குற ரோட்டயே ஒழுங்கா போட மாட்டேங்குறாங்க 🤦🏽

    இந்த மாதிரி idea லாம் இவிங்களுக்கு யாரு குடுக்குறா??? 🤔
    தரைல இருக்குற ரோட்டயே ஒழுங்கா போட மாட்டேங்குறாங்க 🤦🏽 இந்த மாதிரி idea லாம் இவிங்களுக்கு யாரு குடுக்குறா??? 🤔
    0 Kommentare ·0 Geteilt ·896 Ansichten ·0 Bewertungen
  • சமீபத்தில் கணவன் இறந்து போன ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசும் போது அவர் கூறிய சில வார்த்தைகள் அப்படியே என் நெஞ்சில் படிந்துவிட்டது...
    "அவர் போனது வருத்தமாத்தான் இருக்கு... வீடு வெறிச்சுனு இருக்குதான் இருக்கு.. ஆனா கூடவே ஒரு ஆசுவாசமும் இருக்கும்மா.... இனிமே நான் கடைக்கு போக, சொந்தங்கள பார்க்க போக, தோழிகளோட வெளில போக யார்கிட்டயும் அனுமதி கேக்கவேணாம்.. சொல்லிவிட்டு வந்த நேரத்துக்குள்ள வீட்டுக்கு திரும்பணுமேங்கற பதட்டத்துலேயே போன இடத்துல கூட நிம்மதியா இருக்க முடியாம தவிக்க வேண்டாம்மா.. யாருக்கும் நான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்மா.. என் முடிவெல்லாம் நானே எடுத்துக்கலாம்"..

    இது நிறையவே சிந்திக்க வைத்தது..

    கணவன்-மனைவி உறவென்பது எத்தனை பெரிதாக மதிக்கப்படுகிறது நம் சமூகத்தில்.. வாழ்வின் ஒரு பாதி மறு பாதி என்றெல்லாம் வசனம் பேசுகிறோம். ஆனால் பார்த்தால் அந்த மறுபாதி போன துக்கம் ஒரு புறம் இருந்தாலும், இப்படி ஒரு ஆசுவாசம் ஒரு பெண்ணிற்கு வருகிறதெனில் இங்கு என்ன பிரச்சினை? ஒவ்வொரு தனிமனிதரின் தாகமும் சிறிதே சிறிதளவு சுதந்திரம். அது கூட தன்னுடன் இருக்கும் மனிதருக்கு கிடைக்கவிடாமல் செய்யும் வாழ்வை ஒருவர் வாழ்ந்திருக்கிறார் எனில் அவர் எதை சாதித்துவிட்டு சென்றார்? நம் மரணம் ஒருவருக்கு ஆசுவாசத்தை அளிக்கிறதென்றால் நாம் என்ன மாதிரி வாழ்வை வாழ்ந்திருக்கிறோம்?

    என் அப்பாவிடம் அம்மா பயந்து பயந்து அனுமதி கேட்ட சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஒரு முறை அம்மா தோழியுடன் பக்கத்து தியேட்டருக்கு சினிமாவுக்கு சென்றார். போகும் அவசரத்தில் கேஸ் சிலிண்டர் நாப் மூட மறந்து விட்டார். அதை கவனித்த அப்பா தானே மூடியிருக்கலாம். வந்த பிறகு இனி பார்த்து செய் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நேராக கிளம்பி தியேட்டருக்கு சென்றார். உள்ளே போய் அம்மாவை அழைத்தார். பாதி படத்தில் வீட்டிற்கு வந்து சிலிண்டரை மூட வைத்தார். என்ன மனநிலையிது? அன்றே சிந்தித்தேன்.... வயது 8/9 கூட இருக்கலாம். எங்கிருந்து இத்தனை ஆணவம் வருகிறது மனிதர்களுக்கு? ஒரு நாள் அம்மா விவாகரத்து செய்தார். சிலர் மரணத்தில் ஆசுவாசம் அடைகின்றனர்..

    ஏன் எல்லாவற்றிற்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் அனுமதி பெற வேண்டும்? என் பதினாறு வயதிலிருந்து நானே எடுத்த முடிவு எங்கு செல்வதாக இருந்தாலும் தகவல் மட்டுமே சொல்வேன் வீட்டில் இருப்பவர்களிடம். அதே போல் என் பிள்ளைகளும் 16 வயதிலிருந்து தகவல் மட்டும் தான் சொல்வார்கள்.

    நம் மரணத்தில் யாரையும் ஆசுவாசம் அடைய வைக்காத ஒரு வாழ்வை வாழ்வோம்...

    #Vidhya Varadaraj பதிவில் இருந்து....

    சமீபத்தில் கணவன் இறந்து போன ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசும் போது அவர் கூறிய சில வார்த்தைகள் அப்படியே என் நெஞ்சில் படிந்துவிட்டது... "அவர் போனது வருத்தமாத்தான் இருக்கு... வீடு வெறிச்சுனு இருக்குதான் இருக்கு.. ஆனா கூடவே ஒரு ஆசுவாசமும் இருக்கும்மா.... இனிமே நான் கடைக்கு போக, சொந்தங்கள பார்க்க போக, தோழிகளோட வெளில போக யார்கிட்டயும் அனுமதி கேக்கவேணாம்.. சொல்லிவிட்டு வந்த நேரத்துக்குள்ள வீட்டுக்கு திரும்பணுமேங்கற பதட்டத்துலேயே போன இடத்துல கூட நிம்மதியா இருக்க முடியாம தவிக்க வேண்டாம்மா.. யாருக்கும் நான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்மா.. என் முடிவெல்லாம் நானே எடுத்துக்கலாம்".. இது நிறையவே சிந்திக்க வைத்தது.. கணவன்-மனைவி உறவென்பது எத்தனை பெரிதாக மதிக்கப்படுகிறது நம் சமூகத்தில்.. வாழ்வின் ஒரு பாதி மறு பாதி என்றெல்லாம் வசனம் பேசுகிறோம். ஆனால் பார்த்தால் அந்த மறுபாதி போன துக்கம் ஒரு புறம் இருந்தாலும், இப்படி ஒரு ஆசுவாசம் ஒரு பெண்ணிற்கு வருகிறதெனில் இங்கு என்ன பிரச்சினை? ஒவ்வொரு தனிமனிதரின் தாகமும் சிறிதே சிறிதளவு சுதந்திரம். அது கூட தன்னுடன் இருக்கும் மனிதருக்கு கிடைக்கவிடாமல் செய்யும் வாழ்வை ஒருவர் வாழ்ந்திருக்கிறார் எனில் அவர் எதை சாதித்துவிட்டு சென்றார்? நம் மரணம் ஒருவருக்கு ஆசுவாசத்தை அளிக்கிறதென்றால் நாம் என்ன மாதிரி வாழ்வை வாழ்ந்திருக்கிறோம்? என் அப்பாவிடம் அம்மா பயந்து பயந்து அனுமதி கேட்ட சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஒரு முறை அம்மா தோழியுடன் பக்கத்து தியேட்டருக்கு சினிமாவுக்கு சென்றார். போகும் அவசரத்தில் கேஸ் சிலிண்டர் நாப் மூட மறந்து விட்டார். அதை கவனித்த அப்பா தானே மூடியிருக்கலாம். வந்த பிறகு இனி பார்த்து செய் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நேராக கிளம்பி தியேட்டருக்கு சென்றார். உள்ளே போய் அம்மாவை அழைத்தார். பாதி படத்தில் வீட்டிற்கு வந்து சிலிண்டரை மூட வைத்தார். என்ன மனநிலையிது? அன்றே சிந்தித்தேன்.... வயது 8/9 கூட இருக்கலாம். எங்கிருந்து இத்தனை ஆணவம் வருகிறது மனிதர்களுக்கு? ஒரு நாள் அம்மா விவாகரத்து செய்தார். சிலர் மரணத்தில் ஆசுவாசம் அடைகின்றனர்.. ஏன் எல்லாவற்றிற்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் அனுமதி பெற வேண்டும்? என் பதினாறு வயதிலிருந்து நானே எடுத்த முடிவு எங்கு செல்வதாக இருந்தாலும் தகவல் மட்டுமே சொல்வேன் வீட்டில் இருப்பவர்களிடம். அதே போல் என் பிள்ளைகளும் 16 வயதிலிருந்து தகவல் மட்டும் தான் சொல்வார்கள். நம் மரணத்தில் யாரையும் ஆசுவாசம் அடைய வைக்காத ஒரு வாழ்வை வாழ்வோம்... #Vidhya Varadaraj பதிவில் இருந்து....
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • புகைப்படம் எடுத்து முடித்துவிட்டு அருகில் வந்தவரிடம் "என்னமா சிலிண்டர் இல்லையா என்றதும்?

    சிரித்துக் கொண்டே "நம்ம என்ன அப்படி சமைக்க போறோம் பிரியாணியா, கறி சோறா? என்ன ரெண்டு மிலைக்காய் தக்காளிய பிச்சி போட்டு கஞ்சிக்கு காரக் குழம்பு, மீன் குழம்பு வைக்க போறோம், வெச்ச குழம்ப ரெண்டு நாளைக்கு வெச்சிக்க போறோம், அதுக்கு எதுக்கு சாமி சிலிண்டர்? காடு கொடுக்குது அது இல்லாதவங்க எடுத்து வயித்துக்கு பயன்படுத்திக்குறோம்,

    ஆடு மேய்க்குறோம், எதோ ஆடு வளர்ந்தா அது வித்து வயித்த கழுவிக்குறோம், இருப்பு இல்லாத வாழ்கை தான் ஆனா அதுக்காக கவலை பட மாட்டோம் சாமி, ஏன்னா என் வயசுல ஆஸ்பத்தரிக்கு நடக்குறவங்க நிறைய பேரு ஊர்ல இருக்காங்க, நான் ஆரோக்கியத்தோடு காடு மேடு ஏறி கல்லு மாதிரி போயிட்டு வரேன் பாத்தீங்களா அதுவே கடவுள் புண்ணியத்துல பெரிய பாக்கியம், ஒண்டிக்க சொந்த குடிசை, உசுருக்கு திங்க கஞ்சி, உழைக்க உடல் ஆரோக்கியம் இது இருந்தா போதும் சாமி, பெருசா கார் பங்களாவுக்கெல்லாம் ஆசை படல, நிம்மதி ஆரோக்கியம் இருக்கோமா அது போதும் சாமி என்று அவர் சுருக்காக முடித்ததும்

    பேச ஏதும் வார்த்தைகள் ஏதும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை எனது வாழ்க்கையோடு பொறுத்தி பார்த்து யோசித்த படி மௌனமாக நின்றிருக் கொண்டிருந்தேன்

    உடனே அவர் "என்னங்கய்யா பேச மாட்றீங்க? எதாவது தப்பா சொல்லிட்டேனா என்றதும்

    இல்லைங்கம்மா , நீங்க சொன்னது உண்மை தான், காசு இல்லாட்டாலும், நிம்மதி ஆரோக்கியம் போதும் மா, உலகத்திலேயே மிகப்பெரிய சொத்து நம்முடைய ஆரோக்கியமும், உடம்பும் தான் மா

    என்னுடைய மனைவி இறந்து 10 வருஷம் ஆகுது, எனக்கு ஒரேயொரு பொண்ணு, இப்போ என்னுடைய பொண்ணுக்கு நான் தான் அப்பா அம்மா எல்லாமே, மறுமணம் பண்ணிக்கல, காரணம் என்னோட மனைவிய 14 வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணேன், புள்ளைக்கு ஒன்றை வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க, டெங்கு காய்ச்சல், சரியா டைம்க்கு சாப்பிட மாட்டாங்க, நோய் எதிப்பு சக்தி இல்ல, எனக்குண்ணு அம்மா அப்பா சொந்தம் பந்தம் இந்த உலகத்துல யாருமே கிடையாது,

    நேரத்துக்கு ஒரு ஆண சாப்படியா? எங்க இருக்கண்ணு கேக்குற உலகத்துல இருக்க ரெண்டே உறவு அம்மா, மனைவி மட்டும் தான், இந்த ரெண்டு வார்த்தையும் நான் கேட்டு பத்து வருஷம் ஆகுது, இனி என் பொண்ணு பெருசாகி கேட்டாதான்

    ஆனா நெஞ்சுலையும், உடம்புலையும் தில்லு இருக்கு, எந்த சூழ்நிலையிலும் நம்ம தைரியத்தையும் நம்பிக்கையும் விட்டுற கூடாது, இந்த பத்து வருஷத்த சாதாரணமா கடந்து வரல, எனக்கு வயசு சின்னது தான், ஆனா மனிதனோட நூறு வருஷத்துக்கு அனுபவம் என் மனசுல இருக்கு, கடைசி சொட்டு உயிர் இருக்க வரைக்கும் மீசை முறுக்கிவிட்டு துணிச்சலா தன்னம்பிக்கையா வாழனும், இப்போ நீங்க சொன்னீங்களே நிம்மதியா ஆரோக்கியமா இருந்தா போதும்ண்ணு, அந்த ஆரோக்கியம் இல்லாததால தான் இன்னைக்கு நான் என்னுடைய மனைவிய இழந்தும், என் பொண்ணு அம்மாவ இழந்தும் ஒவ்வொரு நாளும் கஷ்ட்டபடுறோம்

    உண்மை மா, நம்முடைய முதல் சொத்து நம்ம உடம்பு தான், உடம்ப பாத்துக்காம பாதிலே போயிடுறவங்க அவங்க நிம்மதியா போயிடுவாங்க, ஆனா அவங்களோட வாழ்ந்த நாட்கள நினைச்சும், அவங்க கூட இருந்த நினைவுகள நினைச்சும் தினம் தினம் நாம் கவலைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சாகணும், அந்த வேதனையும் சாவையும் நம்ம நமக்கு வர சந்ததிகளுக்கு கொடுத்தர கூடாது, அவங்க கடைசி வரைக்கும் கரையேத்தி வாழவெச்சிட்டு போறது தான் மனிதனா பொறந்ததுக்கு நம்ம பிறவிக்கு செய்யுற கைமாறு, நான் பாண்டிலே பொறந்தவன் பாத்தீங்களா எனக்கு டீ, காப்பி சாப்பிடுற பழக்கம் கூட கிடையாது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாம என் உடம்ப ஆரோக்கியமா பாத்துகறதுனால தான் நான் என் புள்ளைய ஒரு அம்மாவா இருந்து பாதுகாப்பா பாசமா வளர்க்க முடியுது, அப்போ கிரிக்கெட், இப்போ ஃபோட்டோ கிராஃபி, வேலை போக மத்த நேரத்துல இந்த மாதிரி கிராமம், உங்கள மாதிரி கிராமவாசிங்க, விவசாயிங்க, பறவைங்க, குளம், ஏறி, பூக்கள், பட்டாம்பூச்சி, ஆடு, மாடு, கோழி, இவங்க தான் என்னோட சொந்தம் பந்தம் எல்லாமே, இப்படி கிராமத்து பக்கம் வந்து நாளு நல்ல மனுஷங்கள பாத்து பேசுனா நம்ம கவலை பாரம் எல்லாம் பறந்துடும், என்று நான் சிரித்தபடி முடித்ததும்

    எதும் பேசாமல் மௌனமாக நின்றுக் கொண்டிருந்ததார்

    அந்த மௌனத்திற்கான அர்த்தம் என்ன என்பது தெரியும்

    சரிமா தலையில சுமை இருக்கு, நீங்க கிளம்புங்க அப்பறம் வந்து உங்கள பாக்குறேன்

    அம்மா இங்க பாருங்க இங்க பாருங்க மா என்று அவரை எனது கண்ணை நோக்கி நிமிர வைத்து

    இதுவரைக்கும் என்னோட புகைப்பட வாழ்கையில கிராமவாசிங்க விவசாயிங்கண்ணு
    பல்லாயிரம் பேர் கிட்ட பேசிருக்கேன், ஆனா அதுல ஒரு சில பேர் தான் தன்னம்பிக்கையா துணிச்சலா பாசிட்டிவா பேசுவாங்க, எனக்கு நெகடிவா சோகமா பேசுறவங்கள எப்பவும் பிடிக்காது, நீங்க எதுவும் இல்லாட்டாலும் துணிச்சலா தன்னம்பிக்கையா பேசுனீங்க பாத்தீங்களா அது தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு, அதனால தான் அதிகமா யாருகிட்டயும் சொல்லாத என்னுடைய வாழ்கைய உங்ககிட்ட சொன்னேன், தைரியமா இருங்கம்மா, உடம்ப பாத்துக்கோங்க, எதை காதலிக்குறோமோ இல்லையோ நமம உடம்ப காதலிக்கணும், அந்த உடம்ப நமக்காக இல்லாட்டாலும் இந்த உலகத்துல நம்மல கொடுத்தவங்களுக்காவும், நம்மல நம்பி வந்தவங்களுக்காகவும், நம்மல நம்பி பிறந்தவங்களுக்காகவும் நம்ம உடம்ப நம்ப ஆரோக்கியமா பத்தரமா பாத்துக்கணும்

    ஒருத்தர இழந்துட்டு அவர் நினைவோடவே வாழ்நாள் வரை வாழுற வலி தான் உலகத்திலே மிக பெரிய கொடுமையானது, இது என்ன தவிர இந்த உலகத்துல வேற யாருக்கும் நடக்கா கூடாது என்றுதான் என்னுடைய தினந்தோற பிராத்தன, நீங்க எப்படி ஆரம்பத்துல என்கிட்ட தன்னம்பிக்கையா சந்தோஷமா பேசுனீங்களோ, அதே போல நீங்க கடைசி வரைக்கும் தன்னம்பிக்கையா ஆரோக்கியமா இருக்கணும் மா என்று நான் முடித்ததும்

    "நீ நல்லா இருப்ப சாமி" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு தனது முந்தானையை எடுத்து கண்களை துடைத்துவிட்டு எதுவும் பேசாமல் என்னிடமிருந்து விடைபெற்று மெதுவாய் நடந்து சென்று வளைந்து எனது கண்களிலிருந்து முழுவதுமாய் மறைந்தார்

    அவர் கண்களிலிருந்து மறைந்த பின்பே வீட்டில் தனியாக இருக்கும் மகள் ஞாபகத்திற்க்கு வந்தார்

    வண்டியை திருப்பி நேராக வீட்டிற்கு விட்டு வீட்டை அடைந்து கதவை தட்டியதும், ஜன்னல் ஓரத்திலிருந்து முக அடையாளம் உறுதி செய்துவிட்டு கதவு திறக்கப்பட்டது

    உள்ளே நுழைந்ததும் மகள் ஓடிவந்து!அப்பா என கட்டியணைத்தார்

    இன்று இரவு உறக்கத்தின் போது மகளுக்கான ஒரு நிகழ்ந்த உண்மை கதை ரெடி என கை கால்களை அலம்பி விட்டு

    சமைக்க சமையலறைக்குள் நுழைந்தேன்.

    படித்ததில் பகிர்ந்தது
    புகைப்படம் எடுத்து முடித்துவிட்டு அருகில் வந்தவரிடம் "என்னமா சிலிண்டர் இல்லையா என்றதும்? சிரித்துக் கொண்டே "நம்ம என்ன அப்படி சமைக்க போறோம் பிரியாணியா, கறி சோறா? என்ன ரெண்டு மிலைக்காய் தக்காளிய பிச்சி போட்டு கஞ்சிக்கு காரக் குழம்பு, மீன் குழம்பு வைக்க போறோம், வெச்ச குழம்ப ரெண்டு நாளைக்கு வெச்சிக்க போறோம், அதுக்கு எதுக்கு சாமி சிலிண்டர்? காடு கொடுக்குது அது இல்லாதவங்க எடுத்து வயித்துக்கு பயன்படுத்திக்குறோம், ஆடு மேய்க்குறோம், எதோ ஆடு வளர்ந்தா அது வித்து வயித்த கழுவிக்குறோம், இருப்பு இல்லாத வாழ்கை தான் ஆனா அதுக்காக கவலை பட மாட்டோம் சாமி, ஏன்னா என் வயசுல ஆஸ்பத்தரிக்கு நடக்குறவங்க நிறைய பேரு ஊர்ல இருக்காங்க, நான் ஆரோக்கியத்தோடு காடு மேடு ஏறி கல்லு மாதிரி போயிட்டு வரேன் பாத்தீங்களா அதுவே கடவுள் புண்ணியத்துல பெரிய பாக்கியம், ஒண்டிக்க சொந்த குடிசை, உசுருக்கு திங்க கஞ்சி, உழைக்க உடல் ஆரோக்கியம் இது இருந்தா போதும் சாமி, பெருசா கார் பங்களாவுக்கெல்லாம் ஆசை படல, நிம்மதி ஆரோக்கியம் இருக்கோமா அது போதும் சாமி என்று அவர் சுருக்காக முடித்ததும் பேச ஏதும் வார்த்தைகள் ஏதும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை எனது வாழ்க்கையோடு பொறுத்தி பார்த்து யோசித்த படி மௌனமாக நின்றிருக் கொண்டிருந்தேன் உடனே அவர் "என்னங்கய்யா பேச மாட்றீங்க? எதாவது தப்பா சொல்லிட்டேனா என்றதும் இல்லைங்கம்மா , நீங்க சொன்னது உண்மை தான், காசு இல்லாட்டாலும், நிம்மதி ஆரோக்கியம் போதும் மா, உலகத்திலேயே மிகப்பெரிய சொத்து நம்முடைய ஆரோக்கியமும், உடம்பும் தான் மா என்னுடைய மனைவி இறந்து 10 வருஷம் ஆகுது, எனக்கு ஒரேயொரு பொண்ணு, இப்போ என்னுடைய பொண்ணுக்கு நான் தான் அப்பா அம்மா எல்லாமே, மறுமணம் பண்ணிக்கல, காரணம் என்னோட மனைவிய 14 வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணேன், புள்ளைக்கு ஒன்றை வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க, டெங்கு காய்ச்சல், சரியா டைம்க்கு சாப்பிட மாட்டாங்க, நோய் எதிப்பு சக்தி இல்ல, எனக்குண்ணு அம்மா அப்பா சொந்தம் பந்தம் இந்த உலகத்துல யாருமே கிடையாது, நேரத்துக்கு ஒரு ஆண சாப்படியா? எங்க இருக்கண்ணு கேக்குற உலகத்துல இருக்க ரெண்டே உறவு அம்மா, மனைவி மட்டும் தான், இந்த ரெண்டு வார்த்தையும் நான் கேட்டு பத்து வருஷம் ஆகுது, இனி என் பொண்ணு பெருசாகி கேட்டாதான் ஆனா நெஞ்சுலையும், உடம்புலையும் தில்லு இருக்கு, எந்த சூழ்நிலையிலும் நம்ம தைரியத்தையும் நம்பிக்கையும் விட்டுற கூடாது, இந்த பத்து வருஷத்த சாதாரணமா கடந்து வரல, எனக்கு வயசு சின்னது தான், ஆனா மனிதனோட நூறு வருஷத்துக்கு அனுபவம் என் மனசுல இருக்கு, கடைசி சொட்டு உயிர் இருக்க வரைக்கும் மீசை முறுக்கிவிட்டு துணிச்சலா தன்னம்பிக்கையா வாழனும், இப்போ நீங்க சொன்னீங்களே நிம்மதியா ஆரோக்கியமா இருந்தா போதும்ண்ணு, அந்த ஆரோக்கியம் இல்லாததால தான் இன்னைக்கு நான் என்னுடைய மனைவிய இழந்தும், என் பொண்ணு அம்மாவ இழந்தும் ஒவ்வொரு நாளும் கஷ்ட்டபடுறோம் உண்மை மா, நம்முடைய முதல் சொத்து நம்ம உடம்பு தான், உடம்ப பாத்துக்காம பாதிலே போயிடுறவங்க அவங்க நிம்மதியா போயிடுவாங்க, ஆனா அவங்களோட வாழ்ந்த நாட்கள நினைச்சும், அவங்க கூட இருந்த நினைவுகள நினைச்சும் தினம் தினம் நாம் கவலைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சாகணும், அந்த வேதனையும் சாவையும் நம்ம நமக்கு வர சந்ததிகளுக்கு கொடுத்தர கூடாது, அவங்க கடைசி வரைக்கும் கரையேத்தி வாழவெச்சிட்டு போறது தான் மனிதனா பொறந்ததுக்கு நம்ம பிறவிக்கு செய்யுற கைமாறு, நான் பாண்டிலே பொறந்தவன் பாத்தீங்களா எனக்கு டீ, காப்பி சாப்பிடுற பழக்கம் கூட கிடையாது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாம என் உடம்ப ஆரோக்கியமா பாத்துகறதுனால தான் நான் என் புள்ளைய ஒரு அம்மாவா இருந்து பாதுகாப்பா பாசமா வளர்க்க முடியுது, அப்போ கிரிக்கெட், இப்போ ஃபோட்டோ கிராஃபி, வேலை போக மத்த நேரத்துல இந்த மாதிரி கிராமம், உங்கள மாதிரி கிராமவாசிங்க, விவசாயிங்க, பறவைங்க, குளம், ஏறி, பூக்கள், பட்டாம்பூச்சி, ஆடு, மாடு, கோழி, இவங்க தான் என்னோட சொந்தம் பந்தம் எல்லாமே, இப்படி கிராமத்து பக்கம் வந்து நாளு நல்ல மனுஷங்கள பாத்து பேசுனா நம்ம கவலை பாரம் எல்லாம் பறந்துடும், என்று நான் சிரித்தபடி முடித்ததும் எதும் பேசாமல் மௌனமாக நின்றுக் கொண்டிருந்ததார் அந்த மௌனத்திற்கான அர்த்தம் என்ன என்பது தெரியும் சரிமா தலையில சுமை இருக்கு, நீங்க கிளம்புங்க அப்பறம் வந்து உங்கள பாக்குறேன் அம்மா இங்க பாருங்க இங்க பாருங்க மா என்று அவரை எனது கண்ணை நோக்கி நிமிர வைத்து இதுவரைக்கும் என்னோட புகைப்பட வாழ்கையில கிராமவாசிங்க விவசாயிங்கண்ணு பல்லாயிரம் பேர் கிட்ட பேசிருக்கேன், ஆனா அதுல ஒரு சில பேர் தான் தன்னம்பிக்கையா துணிச்சலா பாசிட்டிவா பேசுவாங்க, எனக்கு நெகடிவா சோகமா பேசுறவங்கள எப்பவும் பிடிக்காது, நீங்க எதுவும் இல்லாட்டாலும் துணிச்சலா தன்னம்பிக்கையா பேசுனீங்க பாத்தீங்களா அது தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு, அதனால தான் அதிகமா யாருகிட்டயும் சொல்லாத என்னுடைய வாழ்கைய உங்ககிட்ட சொன்னேன், தைரியமா இருங்கம்மா, உடம்ப பாத்துக்கோங்க, எதை காதலிக்குறோமோ இல்லையோ நமம உடம்ப காதலிக்கணும், அந்த உடம்ப நமக்காக இல்லாட்டாலும் இந்த உலகத்துல நம்மல கொடுத்தவங்களுக்காவும், நம்மல நம்பி வந்தவங்களுக்காகவும், நம்மல நம்பி பிறந்தவங்களுக்காகவும் நம்ம உடம்ப நம்ப ஆரோக்கியமா பத்தரமா பாத்துக்கணும் ஒருத்தர இழந்துட்டு அவர் நினைவோடவே வாழ்நாள் வரை வாழுற வலி தான் உலகத்திலே மிக பெரிய கொடுமையானது, இது என்ன தவிர இந்த உலகத்துல வேற யாருக்கும் நடக்கா கூடாது என்றுதான் என்னுடைய தினந்தோற பிராத்தன, நீங்க எப்படி ஆரம்பத்துல என்கிட்ட தன்னம்பிக்கையா சந்தோஷமா பேசுனீங்களோ, அதே போல நீங்க கடைசி வரைக்கும் தன்னம்பிக்கையா ஆரோக்கியமா இருக்கணும் மா என்று நான் முடித்ததும் "நீ நல்லா இருப்ப சாமி" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு தனது முந்தானையை எடுத்து கண்களை துடைத்துவிட்டு எதுவும் பேசாமல் என்னிடமிருந்து விடைபெற்று மெதுவாய் நடந்து சென்று வளைந்து எனது கண்களிலிருந்து முழுவதுமாய் மறைந்தார் அவர் கண்களிலிருந்து மறைந்த பின்பே வீட்டில் தனியாக இருக்கும் மகள் ஞாபகத்திற்க்கு வந்தார் வண்டியை திருப்பி நேராக வீட்டிற்கு விட்டு வீட்டை அடைந்து கதவை தட்டியதும், ஜன்னல் ஓரத்திலிருந்து முக அடையாளம் உறுதி செய்துவிட்டு கதவு திறக்கப்பட்டது உள்ளே நுழைந்ததும் மகள் ஓடிவந்து!அப்பா என கட்டியணைத்தார் இன்று இரவு உறக்கத்தின் போது மகளுக்கான ஒரு நிகழ்ந்த உண்மை கதை ரெடி என கை கால்களை அலம்பி விட்டு சமைக்க சமையலறைக்குள் நுழைந்தேன். படித்ததில் பகிர்ந்தது
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • "வீட்ல எலி பொறி இருக்கா..?"

    வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் அலுவலக அக்கவுண்டன்ட் ஒருவர் தன் பக்கத்து டேபிள் நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

    அவர் ரொம்பவும் சீரியஸாய் என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.

    "வீட்ல எலி பொறி இருக்கா..?"

    "இருக்கு..."

    "அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"

    "நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."

    "ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."

    "மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."

    "சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."

    "கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."

    "அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."

    அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"

    மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த அக்கவுண்டன்டிடம் கேட்டார்.

    "கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல....

    அப்புறம் அந்தப் பாழாப்போன எலி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".

    Ctr+c Facebook
    "வீட்ல எலி பொறி இருக்கா..?" வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் அலுவலக அக்கவுண்டன்ட் ஒருவர் தன் பக்கத்து டேபிள் நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் ரொம்பவும் சீரியஸாய் என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார். "வீட்ல எலி பொறி இருக்கா..?" "இருக்கு..." "அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!" "நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..." "ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..." "மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..." "சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..." "கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..." "அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..." அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!" மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த அக்கவுண்டன்டிடம் கேட்டார். "கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல.... அப்புறம் அந்தப் பாழாப்போன எலி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?". Ctr+c Facebook
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
  • திருடனும் காது கேக்காத தாத்தாவும்!

    ஒரு நாள் ராத்திரி 2 மணி. ஊரே அமைதியா தூங்கிட்டு இருக்கு. "வண்டு முருகன்" அப்படின்னு ஒரு புது திருடன், முதல் முறையா திருடலாம்னு ஒரு பெரிய வீட்டுக்குள்ள சுவர் ஏறி குதிச்சான்.

    அந்த வீட்டு ஹால்ல ஒரு 80 வயசு தாத்தா ஈசி சேர்ல உக்காந்து தூங்கிட்டு இருந்தார். வண்டு முருகன் மெதுவா பூனை மாதிரி உள்ள போனான். திடீர்னு கால் தட்டி ஒரு பாத்திரத்தை உருட்டி விட்டுட்டான். "டொம்ம்ம்!" னு சத்தம் கேட்டு தாத்தா முழிச்சுட்டாரு.

    திருடன் பதறிப்போயி, கையில இருந்த கத்தியை எடுத்து தாத்தா கழுத்து கிட்ட வச்சு மிரட்டினான்.

    திருடன் (பயங்கரமான குரல்ல): "ஏய் பெரிசு! சத்தம் போடாதே! கத்தி குத்து வேணுமா? கத்தி!"

    தாத்தாவுக்கு காது சுத்தமா கேக்காது. அவர் திருடனைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே சொன்னாரு.

    தாத்தா: "என்னது... பக்தி பாட்டு பாடனுமா? இந்த ராத்திரில எதுக்குப்பா பக்தி பாட்டு? சிவராத்திரியா இன்னைக்கு?"

    திருடன் தலையில அடிச்சுகிட்டான்.

    திருடன்: "யோவ்! லூசு தாத்தா! நான் பாட வரல... நகை எங்க இருக்கு? நகை!"

    தாத்தா: "வடையா? அடப்பாவி! ராத்திரி ரெண்டு மணிக்கு வந்து வடை கேக்கற? காலையில பாட்டி சுட்டது வேணா ஃப்ரிட்ஜ்ல இருக்கு, எடுத்து தரவா?"

    திருடனுக்கு கோவம் தலைக்கு ஏறுச்சு. கத்தியை இன்னும் கிட்ட கொண்டு போனான்.

    திருடன்: "யோவ்... எனக்கு வடை வேணாம்! பணம்! பணம் எங்க இருக்குனு சொல்லு... இல்லன்னா உன்னை கொன்னுடுவேன்!"

    தாத்தா கூலா கண்ணாடியை கழட்டி துடைச்சுக்கிட்டே சொன்னாரு.

    தாத்தா: "ஓ... பிணமா? ஐயையோ! யாருப்பா செத்துப்போனா? எதிர் வீட்டு சுப்புவா? அவன் போன மாசமே போயிட்டானே!"

    திருடன் அப்படியே டயர்ட் ஆகி தரையில உக்காந்துட்டான். "இவன் நம்மள விட பெரிய ஆளா இருப்பான் போலயே"னு நினைச்சு, கடைசியா ஒரு முயற்சி பண்ணான்.

    திருடன் (கையெடுத்து கும்பிட்டு): "ஐயா சாமி! ஆளை விடுங்க... நான் திருட வந்தேன்!"

    தாத்தா: "என்னது? வருட வந்தியா? காலையில இருந்து எனக்கு கால் வலிக்குதுப்பா... கொஞ்சம் நல்லா அமுக்கி விடுப்பா... நல்லா இருப்பா நீ!" னு சொல்லிட்டு காலை நீட்டினார்.

    திருடன் அலறி அடிச்சுட்டு, "என்னை மன்னிச்சுருப்பா சாமி! நான் ஜெயிலுக்கே போறேன், அங்கயாச்சும் நிம்மதியா இருக்கலாம்!" னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சான்.

    அவன் ஓடுறத பாத்துட்டு தாத்தா சத்தமா கத்துனார்...

    தாத்தா: "ஏம்பா... தம்பி! போறது தான் போற... அந்த கேட்டை (Gate) பூட்டிட்டு போப்பா... எவனாச்சும் திருடன் உள்ள வந்துர போறான்!"

    திருடன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துட்டான்!

    கதை நீதி: சில சமயத்துல நம்ம பலவீனமே நமக்கு பெரிய பலமா மாறிடும்! (குறிப்பா திருடன் கிட்ட மாட்டும் போது).
    திருடனும் காது கேக்காத தாத்தாவும்! ஒரு நாள் ராத்திரி 2 மணி. ஊரே அமைதியா தூங்கிட்டு இருக்கு. "வண்டு முருகன்" அப்படின்னு ஒரு புது திருடன், முதல் முறையா திருடலாம்னு ஒரு பெரிய வீட்டுக்குள்ள சுவர் ஏறி குதிச்சான். அந்த வீட்டு ஹால்ல ஒரு 80 வயசு தாத்தா ஈசி சேர்ல உக்காந்து தூங்கிட்டு இருந்தார். வண்டு முருகன் மெதுவா பூனை மாதிரி உள்ள போனான். திடீர்னு கால் தட்டி ஒரு பாத்திரத்தை உருட்டி விட்டுட்டான். "டொம்ம்ம்!" னு சத்தம் கேட்டு தாத்தா முழிச்சுட்டாரு. திருடன் பதறிப்போயி, கையில இருந்த கத்தியை எடுத்து தாத்தா கழுத்து கிட்ட வச்சு மிரட்டினான். திருடன் (பயங்கரமான குரல்ல): "ஏய் பெரிசு! சத்தம் போடாதே! கத்தி குத்து வேணுமா? கத்தி!" தாத்தாவுக்கு காது சுத்தமா கேக்காது. அவர் திருடனைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. தாத்தா: "என்னது... பக்தி பாட்டு பாடனுமா? இந்த ராத்திரில எதுக்குப்பா பக்தி பாட்டு? சிவராத்திரியா இன்னைக்கு?" திருடன் தலையில அடிச்சுகிட்டான். திருடன்: "யோவ்! லூசு தாத்தா! நான் பாட வரல... நகை எங்க இருக்கு? நகை!" தாத்தா: "வடையா? அடப்பாவி! ராத்திரி ரெண்டு மணிக்கு வந்து வடை கேக்கற? காலையில பாட்டி சுட்டது வேணா ஃப்ரிட்ஜ்ல இருக்கு, எடுத்து தரவா?" திருடனுக்கு கோவம் தலைக்கு ஏறுச்சு. கத்தியை இன்னும் கிட்ட கொண்டு போனான். திருடன்: "யோவ்... எனக்கு வடை வேணாம்! பணம்! பணம் எங்க இருக்குனு சொல்லு... இல்லன்னா உன்னை கொன்னுடுவேன்!" தாத்தா கூலா கண்ணாடியை கழட்டி துடைச்சுக்கிட்டே சொன்னாரு. தாத்தா: "ஓ... பிணமா? ஐயையோ! யாருப்பா செத்துப்போனா? எதிர் வீட்டு சுப்புவா? அவன் போன மாசமே போயிட்டானே!" திருடன் அப்படியே டயர்ட் ஆகி தரையில உக்காந்துட்டான். "இவன் நம்மள விட பெரிய ஆளா இருப்பான் போலயே"னு நினைச்சு, கடைசியா ஒரு முயற்சி பண்ணான். திருடன் (கையெடுத்து கும்பிட்டு): "ஐயா சாமி! ஆளை விடுங்க... நான் திருட வந்தேன்!" தாத்தா: "என்னது? வருட வந்தியா? காலையில இருந்து எனக்கு கால் வலிக்குதுப்பா... கொஞ்சம் நல்லா அமுக்கி விடுப்பா... நல்லா இருப்பா நீ!" னு சொல்லிட்டு காலை நீட்டினார். திருடன் அலறி அடிச்சுட்டு, "என்னை மன்னிச்சுருப்பா சாமி! நான் ஜெயிலுக்கே போறேன், அங்கயாச்சும் நிம்மதியா இருக்கலாம்!" னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சான். அவன் ஓடுறத பாத்துட்டு தாத்தா சத்தமா கத்துனார்... தாத்தா: "ஏம்பா... தம்பி! போறது தான் போற... அந்த கேட்டை (Gate) பூட்டிட்டு போப்பா... எவனாச்சும் திருடன் உள்ள வந்துர போறான்!" திருடன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துட்டான்! கதை நீதி: சில சமயத்துல நம்ம பலவீனமே நமக்கு பெரிய பலமா மாறிடும்! (குறிப்பா திருடன் கிட்ட மாட்டும் போது).
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • ஒரு #டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்!

    அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500 ரூபாய் பீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்தவில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000 ரூபாய் தந்து விடுவதாக விளம்பரம் செய்தார்.

    விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000 ரூபாய் ஆட்டய போடனும் என்ற நினைப்பில் அவரை சந்தித்தார்!

    டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க, அதற்கு அவர், டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்!

    நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல !

    பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது!

    நர்ஸ் இவரிடம் 500 ரூபாய் பீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குணபடுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்!

    வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல !

    பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார்.

    இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000 ரூபாய் வாங்கி விடனும் என்று முடிவு செய்தார்.

    இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்து

    விட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குணப்படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000 ரூபாய் என்று நோட்டை நீட்டினார்!

    பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம், என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000 ரூபாய் தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்று சொல்ல!

    டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது.

    நர்ஸ் இவர் கிட்ட 500 ரூபாய் வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம்.

    “ஏமாற்ற நினைப்பவன், தானே ஏமாந்து விடுவான்.”
    ஒரு #டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்! அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500 ரூபாய் பீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்தவில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000 ரூபாய் தந்து விடுவதாக விளம்பரம் செய்தார். விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000 ரூபாய் ஆட்டய போடனும் என்ற நினைப்பில் அவரை சந்தித்தார்! டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க, அதற்கு அவர், டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்! நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல ! பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது! நர்ஸ் இவரிடம் 500 ரூபாய் பீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குணபடுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்! வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல ! பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார். இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000 ரூபாய் வாங்கி விடனும் என்று முடிவு செய்தார். இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்து விட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குணப்படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000 ரூபாய் என்று நோட்டை நீட்டினார்! பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம், என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000 ரூபாய் தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்று சொல்ல! டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது. நர்ஸ் இவர் கிட்ட 500 ரூபாய் வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம். “ஏமாற்ற நினைப்பவன், தானே ஏமாந்து விடுவான்.”
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
  • பீட்சாவை ஆர்டர் செய்ய ஒரு நபர் பீட்சா ஹட்டுக்கு போனில் அழைக்கிறார்...

    ஆண் : இது பீட்சா ஹட்டா?

    கூகுள்: இல்லை சார், இது கூகுள் பீட்சா.

    ஆண்: நான் தவறான எண்ணை டயல் செய்திருக்க வேண்டும், மன்னிக்கவும்.

    கூகுள்: இல்லை சார், கூகுள் பீட்சா ஹட்டை கடந்த மாதம் வாங்கிவிட்டது.

    ஆண்: சரி. நான் பீட்சா ஆர்டர் செய்ய விரும்புகிறேன்.

    கூகிள் : நீங்கள் வழக்கமா சாப்பிடும் பீட்ஸா வேண்டுமா, சார்?

    ஆண்: வழக்கமா சாப்பிடும் பீட்ஸா என்ன என்று தெரியுமா?

    கூகிள் : உங்கள் ஐடி ஐடி தரவுகளின்படி, கடந்த 12 முறை நீங்கள் அழைத்தபோது, ​​ஹார்ட் க்ரஸ்ட் , எக்ஸ்ட்ரா மூன்று சீஸ்கள், சாசேஜ் , பெப்பரோனி, காளான்கள் மற்றும் மீட் பால்ஸ்கள் கொண்ட எக்ஸ்ட்ரா லார்ஜ் பீட்சாவை ஆர்டர் செய்தீர்கள்.

    ஆண்: சூப்பர்! அதுதான் நான் எப்பவும் ஆர்டர் செய்வேன் !

    கூகிள் : ஆனால் இந்த முறை நீங்கள் ஒரு முழு கோதுமையில் க்ளூட்டன் கொழுப்பு குறைந்த ரிக்கோட்டா, அருகுலா, சீஸ் , வெயிலில் உலர்த்திய தக்காளி மற்றும் ஆலிவ்கள் கொண்ட பீட்சாவை ஆர்டர் செய்ய பரிந்துரைக்கலாமா?

    ஆண்: என்ன இது ? எனக்கு சைவ பீட்சா வேண்டாம்!

    கூகிள் : உங்க கொலஸ்ட்ரால் சரியில்லை சார்.

    ஆண்: அது உங்களுக்கு எப்படித் தெரியும்?

    கூகிள் : சார், உங்கள் மருத்துவப் பதிவுகளுடன் உங்கள் வீட்டு ஃபோன் எண்ணையும் ஒப்பீடு செய்துள்ளோம். கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் செய்த இரத்தப் பரிசோதனையின் முடிவுகள் எங்களிடம் உள்ளன.

    ஆண்: சரி, ஆனால் உங்கள் அழுகிய சைவ பீட்சா எனக்கு வேண்டாம்! நான் ஏற்கனவே கொலஸ்ட்ராலுக்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன்.

    கூகிள் : மன்னிக்கவும் ஐயா, ஆனால் நீங்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்ளவில்லை. எங்கள் கிட்ட இருக்கும் ரெக்கார்டஸ் என்ன சொல்லுது என்றால் , 4 மாதங்களுக்கு முன்பு லாயிட்ஸ் மருந்தகத்தில் ஒருமுறை 30 கொலஸ்ட்ரால் மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியை மட்டுமே வாங்கியுள்ளீர்கள்.

    ஆண்: நான் வேறொரு மருந்தகத்தில் இருந்து அதே மாத்திரையை அதிகம் வாங்கியுள்ளேன்;

    கூகிள் : அது உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையில் காட்டப்பட வில்லை சார்.

    ஆண்: நான் பணமாக செலுத்தி மாத்திரை வாங்கினேன் .

    கூகிள் : ஆனால் உங்கள் வங்கி ஸ்டாட்ட்மென்ட் படி அதற்கு நீங்கள் தேவையான பணத்தை எடுக்கவில்லை.

    ஆண்: என்னிடம் வேறு பணம் இருந்ததது.

    கூகிள் : சட்டத்திற்கு முரணான, அறிவிக்கப்படாத வருமானத்தைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கியிருந்தால் தவிர, உங்கள் சமீபத்திய வரிக் கணக்குகளில் அது காட்டப்படவில்லை !

    ஆண்: வாட் தி ஹெல் இஸ் திஸ் !

    கூகிள் : மன்னிக்கவும் சார், உங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்துகிறோம்.

    ஆண்: இனி இந்த கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உபயோகபப்டுத்த மாட்டேன் போதும்! போதும் ! இன்டர்நெட், டி.வி., போன் சர்வீஸ் இல்லாத, என்னை உளவு பார்க்கவோ யாரும் இல்லாத தீவுக்குப் போகிறேன்.

    கூகிள் : எனக்கு புரிகிறது சார், ஆனால் முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். அது 6 வாரங்களுக்கு முன்பு காலாவதியாகி விட்டது ...😜😜😜😜😜😜
    பீட்சாவை ஆர்டர் செய்ய ஒரு நபர் பீட்சா ஹட்டுக்கு போனில் அழைக்கிறார்... ஆண் : இது பீட்சா ஹட்டா? கூகுள்: இல்லை சார், இது கூகுள் பீட்சா. ஆண்: நான் தவறான எண்ணை டயல் செய்திருக்க வேண்டும், மன்னிக்கவும். கூகுள்: இல்லை சார், கூகுள் பீட்சா ஹட்டை கடந்த மாதம் வாங்கிவிட்டது. ஆண்: சரி. நான் பீட்சா ஆர்டர் செய்ய விரும்புகிறேன். கூகிள் : நீங்கள் வழக்கமா சாப்பிடும் பீட்ஸா வேண்டுமா, சார்? ஆண்: வழக்கமா சாப்பிடும் பீட்ஸா என்ன என்று தெரியுமா? கூகிள் : உங்கள் ஐடி ஐடி தரவுகளின்படி, கடந்த 12 முறை நீங்கள் அழைத்தபோது, ​​ஹார்ட் க்ரஸ்ட் , எக்ஸ்ட்ரா மூன்று சீஸ்கள், சாசேஜ் , பெப்பரோனி, காளான்கள் மற்றும் மீட் பால்ஸ்கள் கொண்ட எக்ஸ்ட்ரா லார்ஜ் பீட்சாவை ஆர்டர் செய்தீர்கள். ஆண்: சூப்பர்! அதுதான் நான் எப்பவும் ஆர்டர் செய்வேன் ! கூகிள் : ஆனால் இந்த முறை நீங்கள் ஒரு முழு கோதுமையில் க்ளூட்டன் கொழுப்பு குறைந்த ரிக்கோட்டா, அருகுலா, சீஸ் , வெயிலில் உலர்த்திய தக்காளி மற்றும் ஆலிவ்கள் கொண்ட பீட்சாவை ஆர்டர் செய்ய பரிந்துரைக்கலாமா? ஆண்: என்ன இது ? எனக்கு சைவ பீட்சா வேண்டாம்! கூகிள் : உங்க கொலஸ்ட்ரால் சரியில்லை சார். ஆண்: அது உங்களுக்கு எப்படித் தெரியும்? கூகிள் : சார், உங்கள் மருத்துவப் பதிவுகளுடன் உங்கள் வீட்டு ஃபோன் எண்ணையும் ஒப்பீடு செய்துள்ளோம். கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் செய்த இரத்தப் பரிசோதனையின் முடிவுகள் எங்களிடம் உள்ளன. ஆண்: சரி, ஆனால் உங்கள் அழுகிய சைவ பீட்சா எனக்கு வேண்டாம்! நான் ஏற்கனவே கொலஸ்ட்ராலுக்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன். கூகிள் : மன்னிக்கவும் ஐயா, ஆனால் நீங்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்ளவில்லை. எங்கள் கிட்ட இருக்கும் ரெக்கார்டஸ் என்ன சொல்லுது என்றால் , 4 மாதங்களுக்கு முன்பு லாயிட்ஸ் மருந்தகத்தில் ஒருமுறை 30 கொலஸ்ட்ரால் மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியை மட்டுமே வாங்கியுள்ளீர்கள். ஆண்: நான் வேறொரு மருந்தகத்தில் இருந்து அதே மாத்திரையை அதிகம் வாங்கியுள்ளேன்; கூகிள் : அது உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையில் காட்டப்பட வில்லை சார். ஆண்: நான் பணமாக செலுத்தி மாத்திரை வாங்கினேன் . கூகிள் : ஆனால் உங்கள் வங்கி ஸ்டாட்ட்மென்ட் படி அதற்கு நீங்கள் தேவையான பணத்தை எடுக்கவில்லை. ஆண்: என்னிடம் வேறு பணம் இருந்ததது. கூகிள் : சட்டத்திற்கு முரணான, அறிவிக்கப்படாத வருமானத்தைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கியிருந்தால் தவிர, உங்கள் சமீபத்திய வரிக் கணக்குகளில் அது காட்டப்படவில்லை ! ஆண்: வாட் தி ஹெல் இஸ் திஸ் ! கூகிள் : மன்னிக்கவும் சார், உங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்துகிறோம். ஆண்: இனி இந்த கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உபயோகபப்டுத்த மாட்டேன் போதும்! போதும் ! இன்டர்நெட், டி.வி., போன் சர்வீஸ் இல்லாத, என்னை உளவு பார்க்கவோ யாரும் இல்லாத தீவுக்குப் போகிறேன். கூகிள் : எனக்கு புரிகிறது சார், ஆனால் முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். அது 6 வாரங்களுக்கு முன்பு காலாவதியாகி விட்டது ...😜😜😜😜😜😜
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
  • வரிக்குதிரை பற்றிய அரிய தகவல்கள் ஏதேனும் பகிர முடியுமா?

    அரிய தகவல்கள்:

    இதெல்லாம் அரிய தகவல்களான்னு தெரில. ஆனா நான் படிச்சு தெரிஞ்சிகிட்ட விடயங்கள். கண்டிப்பா உங்களுக்கும் உபயோகப்படும்.

    வரிக்குதிரைகளோட உடல்ல இருக்குற வரிகள், நம்மோட கைக்கோடு மாதிரி தனித்துவமானது. ஒவ்வொன்னுக்கும் வேறுபாடு இருக்கும்.
    இதோட உடல்ல கறுப்பு வெள்ளை வரியெல்லாம் மேல், கீழா நெடுக்கு கோடாவும், கால்கள்ல பக்கவாட்டு இல்லன கிடைமட்ட கோடாவும் இருக்கும். (படத்தைப் பார்க்கவும்)

    இதோட வரிகளுக்கான காரணமா சொல்லப்படுறது என்னன்னா, வேட்டைக்கார விலங்குகள்ட இருந்து தப்பிக்குறதுக்காகத் தான் இப்படி வரி இருக்குதாம்.
    இந்த வரி இருந்தா எப்படி தப்பிக்கும்?

    இதோட பூர்வீகம்னு எடுத்துகிட்டா ஆப்பிரிக்கா. அங்க உள்ள காடுகள்ல பெரும்பாலும் புல்வெளிகள் அதிகமா இருக்கும்.
    அந்த காட்டுப்பகுதிகள்ல இருக்குற புல்லோட இது இருக்கும்போது மத்த விலங்குகளால அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.
    அது எப்படி, வரிக்குதிரை எங்க இருந்து பாத்தாலும் தெளிவா தெரியும். அப்படி இருக்கும் போது பச்சை புல்வெளிகள்ல இதோட நிறம் காட்டிகுடுத்துடும்ல?

    நாம பாக்குற மாதிரியே விலங்குகளும் பார்க்காது. நம்மோட கண்கள்ல குச்சி, கூம்பு செல்கள்லாம் இருக்குது. அது தான் தெளிவான வண்ணங்களை பிரிச்சி பார்க்க நமக்கு உதவி செய்யுது. ஆனால் வேட்டை விலங்குகள் அல்லது பெரும்பாலான விலங்குகள்ல அப்படி ஏதும் இல்ல. சில விலங்குல இருந்தாலும்(சிங்கம், புலி) அதோட செயல்பாடு கம்மியா தான் இருக்கும். தெளிவா பார்க்க முடியாது. இதை நிறக்குருடுன்னும் சொல்வாங்க.
    இந்த வரிக்குதிரைகள்ல 3 வகை இருக்குது. இம்பீரியல் வரிக்குதிரை, மலை வரிக்குதிரை, சாதாரண வரிக்குதிரை.
    வரிக்குதிரைல இருக்குற ரெண்டு நிறத்துல, கருப்பு நிறத்துல அமைந்துள்ள பகுதியோட மயிர்கள் மட்டுந்தான் அதிகமா அசையுமாம். சில நேரங்கள்ல இந்த மயிரெல்லாம் சிலிர்ப்பான எப்டி இருக்குமோ அப்படி நேரா நட்டுகிட்டு நிக்குமாம்.
    வெள்ளை நிற மயிர்களை அதிகமா பயன்படுத்துறதில்ல. இது வெப்பத்தை கட்டுப்படுத்துறதுக்காக அப்டின்னு விலங்கியலாளர்கள் சொல்றாங்க.
    (இயல்பாவே கருப்பு வெப்பத்தை உறிஞ்சும், வெள்ளைய விட. அதனால வெப்ப வேறுபாடு இருக்கும்னு நினைக்குறேன்)

    வரிக்குதிரைகள் மேயும்போது, எல்லாம் ஒரே திசையில் திரும்பியபடி இருக்கும். ஆனால், அவற்றில் ஒன்றுமட்டும் எதிர்திசையில் திரும்பி, பின்பக்கமாக ஏதாவது ஆபத்து வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும்.
    காட்டில் தனியாக ஒரு வரிக்குதிரைமட்டும் மேய வேண்டியிருந்தால், அது தனக்குத் துணையாக ‘காங்கோனிஸ்’ என்னும் மானைச் சேர்த்துக்கொள்ளும்.
    வரிக்குதிரை ஓய்வெடுக்கும்போது, அந்த மான் நின்றபடியே சுற்றுமுற்றும் கவனித்துக்கொண்டிருக்கும். ஆபத்து வரும்போல் தெரிந்தால், எச்சரிக்கை செய்து, வரிக்குதிரையை எழுப்பிவிடும்.
    வரிக்குதிரையின் உடல்ல ஒரு பக்கம் இருக்குற வரி, கொஞ்சமும் மாறாம அப்டியே அடுத்த பக்கமும் இருக்கும்.
    இதோட தலைக்கு பின்னாடில இருந்து வால் வரைக்கும் “தூரிகை” மாதிரி அமைப்பு இருக்குது. இதுவும் வெப்ப கட்டுப்பாட்டுல உதவுதுன்னு சொல்றாங்க.
    இது குதிரைய விட வேகமா ஓடாது. ஆனா தேவைப்பட்டுச்சுன்னா 80கி.மீ வேகத்துல ஓடுமாம்.
    வேட்டை விலங்குகள்ட இருந்து தப்பிக்க Zig-Zag முறைல ஓடுமாம். (Zig zag Zebra நல்லா இருக்குதுல்ல 😂) .
    வரிக்குதிரை சூழ்நிலைக்கேத்த மாதிரி சில நேரங்கள்ல நாய் மாதிரி குரைக்குமாம், கழுதை மாதிரியும் கத்துமாம்.
    வரிக்குதிரையோட காதுகள வச்சே அதுங்க என்ன மனநிலைல இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். அமைதியா, நல்ல மனநிலையில இருக்கும்போது காது நேராக இருக்கும்.
    பயப்படும்போது முன்னோக்கியும், கோபப்படும் போது பின்னோக்கியும் காதை வச்சிருக்கும்.
    மத்த விலங்கப்போல இதுக்குன்னு இனப்பெருக்க காலம்லாம் இல்ல.
    டிசம்பர்ல இருந்து மார்ச் மாசத்து தான் அதிகமா இனப்பெருக்கம் செய்யுது. அதனால இதை வேனா இனப்பெருக்க காலம்னு சொல்லலாம்.
    இதோட கர்ப்பகாலம் 350-390 நாள்.
    இந்த வரிக்குதிரைக்கு முக்கிய எதிரின்னு பாத்தா ஆப்பிரிக்க சிங்கம், சிறுத்தைகள், சிறுத்தைப் புலிகள், முதலை இதெல்லாம் தான்.
    வரிக்குதிரைய பத்தி முக்கியமான இன்னொன்னு அதை சாதாரண குதிரை மாதிரி பழக்கப்படுத்த முடியாது. இதுக்கு முன்னாடி நிறைய முறை முயற்சி பண்ணி தோல்வி தான் பரிசா கிடச்சுது. (நன்றி: ராஜகோபாலன் ஐயா)
    படிமம்: கூகிள்(விக்கிபீடியா)

    தொகுப்பு வெளியீடு: விலங்கியல் மாணவன் சாமுவேல் ஜோசப் ராஜ். வே
    வரிக்குதிரை பற்றிய அரிய தகவல்கள் ஏதேனும் பகிர முடியுமா? அரிய தகவல்கள்: இதெல்லாம் அரிய தகவல்களான்னு தெரில. ஆனா நான் படிச்சு தெரிஞ்சிகிட்ட விடயங்கள். கண்டிப்பா உங்களுக்கும் உபயோகப்படும். வரிக்குதிரைகளோட உடல்ல இருக்குற வரிகள், நம்மோட கைக்கோடு மாதிரி தனித்துவமானது. ஒவ்வொன்னுக்கும் வேறுபாடு இருக்கும். இதோட உடல்ல கறுப்பு வெள்ளை வரியெல்லாம் மேல், கீழா நெடுக்கு கோடாவும், கால்கள்ல பக்கவாட்டு இல்லன கிடைமட்ட கோடாவும் இருக்கும். (படத்தைப் பார்க்கவும்) இதோட வரிகளுக்கான காரணமா சொல்லப்படுறது என்னன்னா, வேட்டைக்கார விலங்குகள்ட இருந்து தப்பிக்குறதுக்காகத் தான் இப்படி வரி இருக்குதாம். இந்த வரி இருந்தா எப்படி தப்பிக்கும்? இதோட பூர்வீகம்னு எடுத்துகிட்டா ஆப்பிரிக்கா. அங்க உள்ள காடுகள்ல பெரும்பாலும் புல்வெளிகள் அதிகமா இருக்கும். அந்த காட்டுப்பகுதிகள்ல இருக்குற புல்லோட இது இருக்கும்போது மத்த விலங்குகளால அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அது எப்படி, வரிக்குதிரை எங்க இருந்து பாத்தாலும் தெளிவா தெரியும். அப்படி இருக்கும் போது பச்சை புல்வெளிகள்ல இதோட நிறம் காட்டிகுடுத்துடும்ல? நாம பாக்குற மாதிரியே விலங்குகளும் பார்க்காது. நம்மோட கண்கள்ல குச்சி, கூம்பு செல்கள்லாம் இருக்குது. அது தான் தெளிவான வண்ணங்களை பிரிச்சி பார்க்க நமக்கு உதவி செய்யுது. ஆனால் வேட்டை விலங்குகள் அல்லது பெரும்பாலான விலங்குகள்ல அப்படி ஏதும் இல்ல. சில விலங்குல இருந்தாலும்(சிங்கம், புலி) அதோட செயல்பாடு கம்மியா தான் இருக்கும். தெளிவா பார்க்க முடியாது. இதை நிறக்குருடுன்னும் சொல்வாங்க. இந்த வரிக்குதிரைகள்ல 3 வகை இருக்குது. இம்பீரியல் வரிக்குதிரை, மலை வரிக்குதிரை, சாதாரண வரிக்குதிரை. வரிக்குதிரைல இருக்குற ரெண்டு நிறத்துல, கருப்பு நிறத்துல அமைந்துள்ள பகுதியோட மயிர்கள் மட்டுந்தான் அதிகமா அசையுமாம். சில நேரங்கள்ல இந்த மயிரெல்லாம் சிலிர்ப்பான எப்டி இருக்குமோ அப்படி நேரா நட்டுகிட்டு நிக்குமாம். வெள்ளை நிற மயிர்களை அதிகமா பயன்படுத்துறதில்ல. இது வெப்பத்தை கட்டுப்படுத்துறதுக்காக அப்டின்னு விலங்கியலாளர்கள் சொல்றாங்க. (இயல்பாவே கருப்பு வெப்பத்தை உறிஞ்சும், வெள்ளைய விட. அதனால வெப்ப வேறுபாடு இருக்கும்னு நினைக்குறேன்) வரிக்குதிரைகள் மேயும்போது, எல்லாம் ஒரே திசையில் திரும்பியபடி இருக்கும். ஆனால், அவற்றில் ஒன்றுமட்டும் எதிர்திசையில் திரும்பி, பின்பக்கமாக ஏதாவது ஆபத்து வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும். காட்டில் தனியாக ஒரு வரிக்குதிரைமட்டும் மேய வேண்டியிருந்தால், அது தனக்குத் துணையாக ‘காங்கோனிஸ்’ என்னும் மானைச் சேர்த்துக்கொள்ளும். வரிக்குதிரை ஓய்வெடுக்கும்போது, அந்த மான் நின்றபடியே சுற்றுமுற்றும் கவனித்துக்கொண்டிருக்கும். ஆபத்து வரும்போல் தெரிந்தால், எச்சரிக்கை செய்து, வரிக்குதிரையை எழுப்பிவிடும். வரிக்குதிரையின் உடல்ல ஒரு பக்கம் இருக்குற வரி, கொஞ்சமும் மாறாம அப்டியே அடுத்த பக்கமும் இருக்கும். இதோட தலைக்கு பின்னாடில இருந்து வால் வரைக்கும் “தூரிகை” மாதிரி அமைப்பு இருக்குது. இதுவும் வெப்ப கட்டுப்பாட்டுல உதவுதுன்னு சொல்றாங்க. இது குதிரைய விட வேகமா ஓடாது. ஆனா தேவைப்பட்டுச்சுன்னா 80கி.மீ வேகத்துல ஓடுமாம். வேட்டை விலங்குகள்ட இருந்து தப்பிக்க Zig-Zag முறைல ஓடுமாம். (Zig zag Zebra நல்லா இருக்குதுல்ல 😂) . வரிக்குதிரை சூழ்நிலைக்கேத்த மாதிரி சில நேரங்கள்ல நாய் மாதிரி குரைக்குமாம், கழுதை மாதிரியும் கத்துமாம். வரிக்குதிரையோட காதுகள வச்சே அதுங்க என்ன மனநிலைல இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். அமைதியா, நல்ல மனநிலையில இருக்கும்போது காது நேராக இருக்கும். பயப்படும்போது முன்னோக்கியும், கோபப்படும் போது பின்னோக்கியும் காதை வச்சிருக்கும். மத்த விலங்கப்போல இதுக்குன்னு இனப்பெருக்க காலம்லாம் இல்ல. டிசம்பர்ல இருந்து மார்ச் மாசத்து தான் அதிகமா இனப்பெருக்கம் செய்யுது. அதனால இதை வேனா இனப்பெருக்க காலம்னு சொல்லலாம். இதோட கர்ப்பகாலம் 350-390 நாள். இந்த வரிக்குதிரைக்கு முக்கிய எதிரின்னு பாத்தா ஆப்பிரிக்க சிங்கம், சிறுத்தைகள், சிறுத்தைப் புலிகள், முதலை இதெல்லாம் தான். வரிக்குதிரைய பத்தி முக்கியமான இன்னொன்னு அதை சாதாரண குதிரை மாதிரி பழக்கப்படுத்த முடியாது. இதுக்கு முன்னாடி நிறைய முறை முயற்சி பண்ணி தோல்வி தான் பரிசா கிடச்சுது. (நன்றி: ராஜகோபாலன் ஐயா) படிமம்: கூகிள்(விக்கிபீடியா) தொகுப்பு வெளியீடு: விலங்கியல் மாணவன் சாமுவேல் ஜோசப் ராஜ். வே
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
Weitere Ergebnisse
Idaivelai.com https://idaivelai.com